ஸ்ரீலஸ்ரீ கனிமொழிஜி மஹராஜி மகாத்மியம்

12/11/2011

அல்லது… கனிமொழிக்கு, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?

நான் வெறுப்பில் இருக்கிறேன்.

ஏன்?

… நேற்று முந்தின மாலை எம் பள்ளிக் குழந்தை ஒன்று என்னிடம் வந்து, “டிவில சொன்னாங்கண்ணா, நாளிக்கி ஐஸ்வரியாராயிக்குக் குழந்தை பிறக்கப் போகுதாம், தெரியுமா” (இது நம் கடைந்தெடுத்த அயோக்கியர் கருணாநிதி அவர்கள் நம் தமிழ் மக்களுக்கு, நம் அடுத்த தலைமுறையினருக்குச் செய்த உபயம் – அரசு தொலைக் காட்சிப் பெட்டி – நம் மக்களின் வீட்டிற்குள் இலவசமாக வந்து ஜம்மென்று உட்கார்ந்து கொண்டு நம் மூளைகளை தொடர்ந்து வன்புணர்ச்சி செய்து கொண்டிருக்கும், வெறுக்கத்தக்க, கயமை மிகுந்த உபகரணம்)

ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறப்பது அற்புதமான விஷயம் தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்கு குழந்தை பிறக்கப் போவது, உலகத்தை, நம் குழந்தைகளின் மண்டைகளை ஆக்கிரமிக்கும் அளவுக்கு மகாமகோன்னதமான விஷயம் இல்லை.

அதே போல், எனக்குத் தெரிந்து எவ்வளவோ பெண்களுக்கு (என் மனைவி உட்பட) சுமார் ஒன்பது வயதுக் குழந்தைகள் உள்ளனர். அப்பெண்கள் (சில சமயங்களில் தகப்பன்களின் உதவி கொண்டும்), அவர்களைப் பொறுப்புணர்ச்சியுடன்  நன்றாக வளர்த்துக் கொண்டும் உள்ளனர். இது பேசப்படும் விஷயமோ அல்லது அய்யோ பாவம், எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று பரிதாபப் படத் தக்கதோ அல்லது வியக்கத் தக்கதோ இல்லை. இம்மாதிரி பெற்றோர் தம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது எங்கும் நடப்பது தான். நடக்க வேண்டியதும் கூட. இது தான் உலக நியதி…

இதில் ஒரு  ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இப்பெண்மணிகள் கருமமே கண்ணாக இருந்து ஊழல் செய்யவில்லை.  அதேபோல், நம் கனிமொழி அவர்கள் தன் குழந்தையோடு சந்தோஷமாக இருந்து, மலையளவு ஊழலில் பெருத்த கவனம் செலுத்தாமல், திளைக்காமல் இருந்திருந்தால் – புடலங்காய்க் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருந்தால், அவருக்கு ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது. ஆனால் அப்போது தன் மகன் மீது அன்பு செலுத்தாமல், இப்போது நீதி மன்றங்களில், அய்யோ, எனக்கு 9 வயது மகன் இருக்கிறான், அவனுக்கு அன்பு கொடுக்க முடியவில்லை, ஆகவே எனக்கு ஜாமீன் கொடுங்கள் என்கிறார்… என்ன நகைச்சுவை உணர்ச்சி இவருக்கு? அப்பாவுக்குப் பெண் தப்பாமல் பிறந்திருக்கிறார், வேறென்ன சொல்வது.

ஆனால் ‘ஒரு தாயின் கண்ணீர்’ என்கிற ரீதியில் பல பத்திரிக்கைகள் ‘கனிமொழியின் தாயுள்ளம்… தாயைப் பார்க்க முடியாத 9 வயது குழந்தையின் ஏக்கம்’ என்கிறது போல் எழுதுவது நாராசமாக இருக்கிறது.

இப்போது, நமக்குத் தெரியும், புத்திசாலி அயோக்கியர்கள் (smart scoundrels என்பார்களே…) பலரின் உறைவிடம் போலி ஆன்மிகம். ஆகவே, கனிமொழியும் இப்பக்கம் வந்திருக்கிறார். வடநாட்டுப் பரதேசிப் பண்டாரங்களின் (அவர் தகப்பனார் கருணாநிதி  அவர்களின்  வெறுப்புமிழும் வார்த்தைகளில்) உதவி பெற்று, மன அமைதி பெற முயல்கிறார்.

பகுத்தறிவுப் ‘பகலவி’ அவர்களின் பரிணாம வளர்ச்சி அனைவரையும் புல்லரிக்க வைக்கும்.

=-=-=-=

நிற்க…  தனிப்பட்ட முறையிலும் பொதுச் சபைகளிலும் மிகப் பல குற்றங்கள் புரிந்தவன் எண்ணிறந்த பிழைகள் புரிந்தவன் நான் – என்கிற முறையில் சொல்கிறேன்: குற்றம் புரிந்தவள், வாழ்க்கையில், நிம்மதி கிடையா ஆ ஆ தூ…

மூச்சிரைக்க, வியர்வை சொட்டச் சொட்ட, திரைகடலோடி,  உழை உழை என்று உழைத்து, பல தலைகால் முறைகளுக்கு பணங்காசு சேமித்த பின் (சும்மானாச்சிக்கும் தான் சொல்கிறேன் – கனிமொழியின் பணம் அனைத்தும் திருட்டுப் பணமே!), கூடு விட்டிங்கு ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம், என்று அம்மணி அவர்களுக்குத் தோன்றுவது இயல்பானதே…

திமுக தலைவர்களின் பொதுவான அடிப்படை வரைமுறைகளில் ஒன்றான ‘ மாதத்திற்கு ரூபாய் நூறு கோடி ஊழல் செய்யலாம்’  என்கிற அறவுணர்வு சார்ந்த புரிந்துணர்வை மீறி ஆயிரக் கணக்கான கோடிகளில் சுருட்டல் செய்து, இப்போது பாதுகாப்பான திஹார் சிறையில் வசித்து, நம் வரிப் பணத்தில்  ‘அமைதியாகக்’ காலம் கழித்துக் கொண்டிருக்கும் இவர் மன அமைதிக்காக தியானம் உள்ளிட்ட யோகப் பயிற்சிகள் செய்கிறாராம் – திவ்ய ஜ்யோதி ஜக்ரதி சன்ஸ்தான் என்ற அமைப்பின் மூலம்!

திவ்ய ஜ்யோதி ஜக்ரதி சன்ஸ்தான் என்ற அமைப்பின்அஷுதோஷ் மகாராஜ் ஜி அவர்களும் (இவர் ஒரு மெய்ஞானியாக இருக்கலாம், எனக்குத் தெரியாது), நம் மாதரசியும்...

Every saint has a past. Every sinner has a future. என்று  முன்னமேயே ஆஸ்கர் வைல்ட் சொன்னதை, தமிழகத்து முழுமுதற் கடவுள், பிலிம் ரஜினி அவர்கள் வழி மொழிந்து – ஆனால் பிற்காலங்களில், முக்கியமாகத் தற்காலத்தில், சாட்ச்சாத்  பிலிம் ரஜினி அவர்களே இவ்வாறு திருவாய் மலர்ந்தருளியதாக கருதப் படுவது போல, ஒருவேளை தமிழகத்தை உய்விக்க அம்மணி அவர்கள் பிற்காலத்தில் முயலக் கூடுமோ என்னவோ!

ஆனால், எனக்குத் தோன்றுகிறது, திவ்ய ஜ்யோதி ஜக்ரதி சன்ஸ்தான் அமைப்பைச் சார்ந்தவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்; ஏனெனில், கொஞ்சம் ஏமாந்தாலும், நம் கனிமொழி அவர்கள், அதனை விழுங்கி  ஏப்பம் விடக்கூடிய உறுதியும், திறமையும் வாய்ந்தவர்…

எது எப்படியோ, ஸ்ரீலஸ்ரீ கனிமொழிஜி மஹராஜிக்கு ஜாமீன் ‘வாங்கப்’ பட்டு, அவர்களின் ஆசி மறுபடியும் தமிழகத்துக்கு கிடைத்து, மதராஸ் மங்கமம் கூடிய விரைவில் நடக்க வாழ்த்துக்கள்…

=-=-=-=

குறிப்பு: ஒரு தனி மனிதரின் – அவர் சார்ந்த நம்பிக்கைகளை பற்றிப் பேசுவதற்கு ஒருவருக்கும் உரிமை கிடையாது தான்.  ஆனால் நம் மாதரசிஜி  நமக்கு இந்த கோட்பாட்டுப் பிரச்சினை எதுவும் / எதனையும் வைக்கவில்லை.

ஏனெனில், நம் பகலவி அவர்கள் தம் பகுத்தறிவுப் பாசறை பராக்கிரமங்களைப் (அக்கிரமங்களைப்?) பற்றி விலாவாரியாகப் பேசி, ‘சனாதன’ நம்பிக்கைகளை விளாசியிருப்பவர். ஆரிய-பார்ப்பன சதிகளைப் பற்றி, அவைகளுக்கு எதிராக ஆவேசம் கொண்டு, சதிராட்டம் ஆடும் திராவிடக் கொழுந்து அவர். இவர் தமிழ்க் கலாச்சாரத்தை உய்விக்க வந்த திராவிடச் சிசு. ஆகவே இவரே இம்மாதிரி வடநாட்டான் + ஆரிய சதிகளுக்குத் துணை போவது, ஆச்சரியம் அளிக்கக் கூடியது தானே?

=-=-=-=

நான் முன்னமே சொன்னது போல, நான் வெறுப்பில் இருக்கிறேன்

ஆகவே, இந்த இடுகைக்காக என்னை மன்னிக்கவும்…

 

Advertisements

2 Responses to “ஸ்ரீலஸ்ரீ கனிமொழிஜி மஹராஜி மகாத்மியம்”

  1. Anonymous Says:

    அடியேன் சொல்ல நினைத்ததை சொல்லிவிட்டீர்கள். முடியாட்சி போய், குடும்ப ஆட்சி அதனிடத்தில் வந்துவிட்டது. உங்கள் வலைப்பூ வாடாப்பூ.

  2. விக்கி Says:

    இவருக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு இவரை இன்னும் குற்றம் செய் என தூண்டுவதாக இருந்தது!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: