ஸ்டாலின் தனக்குத் தானே ‘தூக்கு தண்டனை’ (!) கொடுத்துக் கொள்ள (நாம்) தயார்!

08/12/2011

குற்றம் நிரூபிக்கப்பட்டால் தனக்குத் தானே தண்டனை: மு.க.ஸ்டாலின்

சிரிப்புத்தான் வருகுதய்யா…

கடந்த அதிமுக ஆட்சியில் எங்கள் மீது மேம்பால ஊழல் வழக்குப் போடப்பட்டது. அப்போது என் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், நீதிமன்றம் தண்டனை தரவேண்டாம். நானே தூக்குத் தண்டனை கொடுத்துக் கொள்கிறேன் என்றேன். 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார்கள். குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை.

யாராவது, எந்தத் தேசத்திலாவது, அது சீனாவாக இருந்தாலொழிய பண ஊழலுக்கு தூக்கு தண்டனை பெற்றதாக சரித்திரம் உண்டா? சரி,  இதனை வேண்டுமென்றால், ஒரு தடாலடி நகைச்சுவைப் பேச்சு என்றுவிட்டுவிடலாம்.

ஆனால் இசுடாலின் அவர்களே, அதே மேம்பால மற்றும் பல ஊழல்களில் உங்களுக்கு ‘உதவி’ பல செய்த உங்கள் நண்பர் (அல்லது பாவப் பட்ட பினாமி) அண்ணா நகர் ரமேஷ், மிகுந்த சந்தேகிக்கத் தக்க வகையில், அவர் நீதி மன்றத்தில் ‘அப்ருவராக’ ஆஜராக இருந்த நிலையில்,  தனக்குத் தானே தூக்குத் தண்டனை கொடுத்துக் கொண்டது மட்டுமல்லாமல் தன் குடும்பத்தை – மூன்று குழந்தைகளையும் மனைவியையும்  – விஷம் வைத்துக் கொன்று கொண்டார் அல்லவா – அதுவும் அதே 5 ஆண்டுகள் ஆட்சியின் போது?

சும்மா சொல்லக் கூடாது, .நீங்கள் பளிச்சிடும் நேர்மையுடனும், மன அவலத்துடனும் எள்ளென்று  தூக்குத் தண்டனை பெற்றுக் கொள்ள விழைந்ததை, பாவம் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான பினாமி, எண்ணெயாக நிறைவேற்றினார் அல்லவா?

அல்லது நீங்கள் உங்களுக்குத் தூக்குத் தண்டனை என்பதை (உங்கள் தகப்பனாரின் குடமுருட்டி நகைச்சுவை குண்டு போல) கையில் ஒரு தூக்கை (இது முன்னொரு காலத்தில் – ஒரு மூடியுள்ள, பாத்திரம் – நீண்ட கம்பிக் கைப்பிடி கொண்டது; நாம் பால் வாங்குவதற்கு, தின் பண்டங்களை வைப்பதற்கு, பிரயாணங்களில் கொண்டு செல்வதற்கு உபயோகப் படுத்தப் பட்ட பாத்திரம்; நம் கிராமப் புறங்களில் இன்னமும் பழக்கத்தில் இருக்கிறது)  – எடுத்துக் கொண்டு, அதனை உங்கள் கழுத்தில் போட்டுக் கொள்ளப் போகிறீர்களா?

இப்படம் ஒரு ரசக் குறைவான நகைச்சுவை; மன்னிக்கவும். இந்து நாளிதழில் வந்த படம் (http://www.hindu.com/2005/01/11/images/2005011110920101.jpg) மேல் நான் ஒரு தூக்கைக் கவிழ்த்துள்ளேன்.

எது எப்படியோ, உங்களுக்கும் சரி, அம்மாவுக்கும் சரி இந்தத் தூக்குத் தண்டனையையாவது அவருக்கு, உங்களைப் போல அதி விஞ்ஞான வழி ஊழல் தொழில்நுட்பத்தை அறிந்து தெளிந்தவரின் –  மேல் செலுத்தமுடிந்தால் நல்லது…

… உங்கள் நகைச்சுவை உணர்ச்சிக்கு, நம் தமிழகமே மிக்க கடன் பட்டுள்ளது. ஏதோ நாங்கள் எல்லாம் உங்கள் நம்பிக்கைக்கு இன்னொரு பாத்திரமானால் சரி…

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Advertisements

5 Responses to “ஸ்டாலின் தனக்குத் தானே ‘தூக்கு தண்டனை’ (!) கொடுத்துக் கொள்ள (நாம்) தயார்!”

 1. Anonymous Says:

  குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்கிற எண்ணத்தில் சொல்லப்பட்டதாக நாங்கள் கருதியிருந்நோம். ஆனால் உங்கள் பார்வை வேறு ஒரு கோணத்தில் செல்கிறதே! ஏழை மக்களின் வரிப்பணம் யாரையும் சும்மாவிடாது என்று சொல்லுவது நிதரிசனம்.

 2. krishna Says:

  அய்யா உங்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன், உங்களது தமிழ் நடை சற்று வித்யாசமாக நன்றாக உள்ளது… அதிலும் திமுக வின் கருணாநிதியை பற்றி பகடி செய்யும் போது அருமையாக கையாள்கிறீர்கள்… தொடர்ந்து எழுதுங்கள்…வாழ்த்துக்கள்..

 3. Anonymous Says:

  அராஜகத்திற்கு வழிகோலியவரார்? கிராமப் பொருளாதாரம் விளைநிலங்கள் சுருங்கியிருக்கிறது. கண்ணில் பட்டால் கரிக்குமா? புருவத்தில் பட்டால் கரிக்குமா? அரசியல்வாதிகளின் அராஜக பணம் ஒரு சாரர் மட்டிலும் கலப்பா? நம் மக்களுக்குத் தாங்கள் கூறுமறவுரைகள்தானென்ன?

 4. ராஜா Says:

  ஹா ஹா ஹா!!செம கிராபிக்ஸ்!சிரிப்பை அடக்க முடியல!

 5. Anonymous Says:

  en koduma sir!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: