பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… (அய்யோ!)

20/02/2012

சில நாட்கள் முன், எங்கள் பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவர்களை, தமிழக அரசு நடத்தும் ‘செய்முறைத் தேர்வு’க்காக, ஒரளவு பெரிய பரிசோதனை-ஆய்வகம் உள்ள, விழுப்புரத்தில் இருக்கும் இன்னொரு பள்ளிக்கு அழைத்துச் சென்றிருந்தேன்; என்னிடம் பி.எட் போன்ற ‘கல்வியியல்’ தொடர்பான தகுதிகள் எதுவும் இல்லாததால், நம்முடைய அரசின் பார்வையில் நான், சில விஷயங்கள் படிப்பிக்க லாயக்கில்லாதவன்.
(… இதனை நான் ஒரளவுக்கு ஒப்புக் கொள்கிறேன்.கூட)

ஆகவே, நான் ’பாவமாக’  நீளமான தாடியுடனும், பஞ்சடைத்த கண்ணுடனும் அப்பள்ளிக்கு வெளியில் ஒரு டீக்கடையின் அருகில் காத்துக் கொண்டிருக்கும் போது – ஒரு குடிமகனுடன் (இவர் என் மாணவர் ஒருவரின் மாமா, திமுக உறுப்பினர்)  சிறிது அளவளாவ நேரிட்டது — தமிழக அரசியல்வாதிகள் சொல்வது போல ‘மரியாதை நிமித்தமாக.’

ஆனால் மிகவும் பொறுக்கமுடியாத விதத்தில், இம்மனிதர் ஒரு முழு நேர மகாமகோ புலம்பல்வாதியாக இருந்தது என் ஊழ்வினைப்பயன் என்பதைத் தவிர வேறென்ன சொல்ல – ’என்னத்த… பண்ணி… என்னத்த செஞ்சு’ என்பது தான் அவர் பல்லவி அனுபல்லவி சரணம் எல்லாமே – ஒரு சில ஒதுக்கப்பட வேண்டிய (கருணாநிதி. திருமாவளவன், சீமான் போன்ற) விஷயங்களைத் தவிர.

நான் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை அனைத்து முயற்சிகளும் செய்தேன், மெய்யாலுமே! ஆனால், அவர் மாபெரும் அவநம்பிக்கை வாதியாக இருந்தார்,
(…இதனை நான் ஒப்புக் கொள்ளவே முடியவில்லை; தவிர எனக்கு மூத்திரம் முட்டிக் கொண்டு வேறு இருந்தது!).

இவர் மாதிரி, வாழ்க்கையை அணுகும் முறை, போதை மட்டும் தொடர்பானதாக எனக்குத் தோன்றவில்லை. எனக்குத் தெரிந்து மிகப் பலர் இப்படித் தான் இருக்கிறார்கள், என் செய்வது. இம்மாதிரியினர் ஒரு ஈர்க்குச்சியையும் நகர்த்த மாட்டார்கள். ஆனால் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, எல்லாவற்றைப் பற்றியும் புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

எது எப்படியொ, நான் அவரைக் கொலை செய்திருக்க வேண்டியதற்குப் பதிலாக… இதோ ஒரு விசன துபுக் கிவிதை.

=-=-=-=

என்னத்த செஞ்சு…

ஸார், ஸார், ராம்ஸாமி டீச்ர் ஸார்
வாங் ஸார், எப்டி கீறீங்
(அண்ணாச்சி, ஸாரு நம்ம பள்ளிக்கொட வாத்யாரு)
எங்க ஸார் இங்
இம்மா ந்தூரம் வந்துக்றீங்
(ஸாருக்கு ஸூடா ஒர் பெஸல் டீ கொட்பா)
ஒ பஸங் க்ளுக்கு பர்ச்சைங்ளா
(பேப்ர் கப்ல கொட்பா, ஸார்க்கு களுவாத் க்ளாஸ் வோணாம்)

ஸூடா ஃப்ரெஸ் மீன் பஜ்ஜி ஸாப்ட்றீங்ளா ஸார்
(டேய், அய்யாவுக்கு பேப்ர்ல வெச்சி கொட்றா)
ஏங் ஸார் வோணாமா, நல்லார்கும், ஸும்மா சாப்டுங்
(அப்போ அண்ணே, அத்தை எங் கிட்ட கொடுங்)
நீங்க ல்லாம் பெர்ய பட்ப்பு பட்சுக் றீங்
பெர்ய தாடி வுட்டுக் றீங்
என்னமோ ஒங்ளுக்கு கெட்ட காலம்
இப்டி நம் விளுப்ரம்ல லோல் பட்ணும்னிட்டு
(அட, ஸாருக்கு ஒரு பட்ர் பிஸ்கீட்டு கொடுங் பா)
ஒங் மொகத்ல ஒர் ஒளி கீது ஸார்…

அட போங்க ஸார். ஒண்மையத் தான் ஸார் ஸொல்றேன். குடிக்ல ஸார்.

பஸங் நல்லா படிக்றாங்ளா? மெய்யாவா?

அந்தக் காலம் மாத்றீ இல்ல ஸார்… படிக்வே மாட்றாங் பஸங்

அந்தக் காலம் வேற, இந்தக் காலம் வேற ஸார், பேரளிவு வேற 2012ல வர்ரப்போவுத் ஸார்

என்ன ஸார், முப்பத் அஞ் வயஸ், ஏன் கேக்றீங்

ஆங் ஸார், நான் அந்தக் கால மூணாங்லாஸ் ஸார்

அப்பாரு கிட்ட முந்த்ரிக்காட் ஸார். ஒக்காந்த் ஸாப்ட்லாம் ஸார்.

அத்த ஏன் ஸார் கேக்றீங்

இப்போ எங்கிட்ட அடியில் கண்ட ஸொத்து தான் ஸார். பொண்டாட்டி வேல செய்து.- ஆனா குட்க பணம் கேட்டாக்க ராங் பண்து ஸார். பணத்திமிர் ஸார்.

நமக்கு கச்சி வேல இருக்து ஸார், ஏதோ ஓட்த்து ஸார் வண்டி.

நாட்ல அல்லாரும் அயோக்கியன் ஸார் (அண்ணே, டவுட் தனபால் பட்கிறீங்ளா?)

அதெல்லாம் வேலைக் காவாது ஸார்!

இன்னா ஸார் சொல்றீங்க

நான் சொல்றேன்னிட்டு தெப்பா நெனக்காதீங்க (தலைவா, ஆண்டிப்பண்டாரம் என்ன பாட்றார் இண்ணிக்கு?)

த பார்றா ஸார் ஜோக்கு அடிக்றார், அடியில் கண்ட ஸொத்த விக்க முட்யுமா (என்ன அண்ணாச்சி?)

அல்லாரையும் நிக்வெச்சு சுட்ணும் ஸார்

இந்த் நாட் உர்ப்டாத் ஸார், இன்னிக்கு நான் ஸொல்றேன் (அண்ணாச்சீ த பாருங்க, ‘விபச்சார வளக்கில் நடிகை’ – நாட் எங் போற்து? அட, இந்தப் பொண்ணை எங்யோ பாத்தாப்ல கீதே! நம்ம பாண்டீ மினிஸ்டர் கூட)

எங்க பாத்தாலும் ஊளல் ஸார்.

அர்ஸியல்வாதீங்ள திர்த்தவே முட்யாத் ஸார்

அத ஏன் கேக்றீங்க

கலைஞ்சர் பெர்ய ஆள் தான் ஸார். இந்த வயஸ்ல எம்மா ஸினிமாப்டம் கதெ வஸ்னம் எள்தறார்! என்னா ஒளப்பு ஸார்!

ஆனா வெள்ளைக்கார்னுவ ஆச்சீல இர்ந்திருக்ணும் ஸார்.

நூர் காந்தி வந்தாளும் திர்த்த முட்யாத் ஸார்

அதுக் நான் என்ன செய்றேனா? ஏன் ஸார் இப்டி கேட்டுப் டீங்க!  கோச்சுகாதீங் ஸார், (தம்பி, தினகரன் கொட்பா)

என்னா ஸார், எங்கிட்ட நல்ல நியூஸ்கூட இருக்து ஸார்…

லங்க ப்ரச்னை கடோஸீல ஸால்வ்ட். திர்மாவளவன் பப்ளிக்கா திட்னார், ராஜபச்சை நடுங்க்ட்டார். கட்லூர் கூட்டம்ல திர்மா எவ்ளோ ஆவேஸமா பேஸ்னார் தெர்யுமா! என்னமா மீஸை முறுக்றார் ஸார் அவ்ரு! அவ்ரு தான் ஸார் ஒர்ஜ்னல் தமிளர் தளைவர்… ஸர்யா ஸார்?
(அட, ஸார் கோவமா இருந்தாரு, இப்பொ வாய் வுட்டு ஸிரிக்றார் பார்ரா, ஸார்க்கு இன்னொண்ணு டீ கொட்றா)

ஆங், ஜீமான் கூட அப்டித்தான் ஸார். அவ்ருக்கு எம்மாம் பெர்ய ப்ளக்ஸ் போர்டு வச்ருக்காங்; ஆனா உண்மை ஸொல்ணும்னாக்க அவ்ர்க்கு திர்மா மீஸை கிட்ட வர்முட்யாத் ஸார்…

அட ஸார், திர்ம்பி ஸிர்க்கிறீங்! எப்டியோ, ஸார் நம்ம கட்சிக்கு வந்த்டார்பா. (அண்ணாச்சீ ஸார்க்கு, இன்னோர் பஜ்ஜி?)

என்னா ஸார், ஸும்மா சாப்டுங் – வோணாம்க்றீங்ளா? என்ஜாய் பண்ங் ஸார்… ஒங் வூட்ல நாங் ஸொல்லிக்றேன்.

வாள்கைய அனுபவிக்ணும். நம்ம கலைஞ்சர் அய்யா பொளந்த் கட்டி எளுதினார் பார்ங் – ஓத்தாத்தான் கொளந்த, உஸுரு பொறக்கும்னிட்டு (என்ன ஸொல்றீங் அண்ணாச்சீ?)
..
அட இண்ணா ஸார் இப்டி கேட்டுப்டீங்? டாஸ்மாக்கு ரொம்ப் தூர்ம் ஸார்…

ஸெம்மொளீ மாநாட்ல ஸார் – விளுப்ரம்லெர்ந்து ப்ரீயா 50 பஸ் விட்டாங். எவ்ளோ ஜோரா பிர்யாணி போட்டாங் ஸார், கலைஞ்சர் அய்யா. அப்போதான் ஸொன்னார் அப்டீ – ப்ற்ப் ஓக்கும் அல்லா உஸுர்க்கும்னிட்டு – பஸ்ல எல்லாம் போட்ருக்காங், நீங்தான் படிக்ல – ஆனா ஸார்லாம் பைக்ல தான் போவீங் இல்யா… அப்போ பஜ்ஜி நான் எடுத்கட்டா ஸார்.  ஆறிக்னு கீது ஸார்… வேஸ்டாவக் டாத் பார்ங்க.

டீக்கட அண்ணாச்சி ஸும்மனாச்சிக்கும் ஸொல்றார். நான் ஒண்ணும் மப்ல இல்ல! ஆப்பு போட் ஒர் மணி நேர்மாய்டிச்…  நெஸம்மாத்தான்… நெனவோட் தான் கீறேன் ஸார்… ஊத்றேன் பார்ங்க, ப்ப்ப்பூ – நெடி வர்தா?

ஆமா. கலைஞ்சர் ஸொன்னா ஸெய்வார் தான், இப்பொ நீங்க் என்ன ஸொல்ல வர்றீங்?

ரொம்பக் குறும்ப் ஸார் ஒங்ளுக்கு.  அவ்ருக்கு அது தாஸ்தீதான் – அல்லாம் மச்சம்

அவ்ரு இல்லாகாட்டி அந்தம்மா தெனாவட் ரொம்ப் ஆய்டும் ஸார்.

இன்னா ஸார் நாஞ் ஸொல்றது? (அண்ணாச்சி, டீ துட், பஜ்ஜிக் அவ்ரு – ஸாரு கொடுத்ருவாரு, சர்யா கணக்?) என்னா ஸார் நாங் ஸொல்றத்…

(தொடரும்…) புலம்பல் முதல்வாதம் ஒழிக… (அல்லது) ஒரு பரிதாபத்துக்குரிய துபுக் கிவிதை…

One Response to “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்… (அய்யோ!)”

  1. Anonymous Says:

    “ஒரு ஈர்க்குச்சியையும் நகர்த்த மாட்டார்கள்” பிடித்த வாக்கியம். ஒத்திசைவு – இன் வெவ்வேறு முகங்கள். வெவ்வேறு காரியங்களைச் செய்கின்றன.
    மாயாவாதிகளின் சொற்களால்(எழுத்துக்களிலும்,ஒலிவடிவிலும்) ஆகர்ஷிக்கப்பட்டு ஆரம்பப்பள்ளியில் குழம்பிய வடிவில் பணியாற்றியவன்(39 ஆண்டுகள்)

    தங்கள் தெளிவையும், துணிவையும் பராட்டுவதை தவிர வேறெதுவும் எனக்கு எழுத முடியவில்லை.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s