நன்றி: “காழ்புணர்ச்சி பிடித்த பொறுக்கி”

26/02/2012

மன்னிப்பீர்களா? :-)

பொறுக்கி நடைத் தமிழ்’ என்ற என் கிண்டலாராய்ச்சிப் பதிவுக்கு, அண்மையில் இடப்பட்ட ஒரு சுவையான பின்னூட்டம் கீழே; வழக்கமாக இப்படி வருபவையை நான் பொருட்படுத்தாமல் புறந்தள்ளி விடுவேன்.

ஆனால், இது நகைச்சுவையாக இருப்பதினால், மேலும் மிகக் குறைந்த அளவு வசவு மட்டுமே கொண்டிருப்பதினால் மறுபிரசுரிக்கப் படுகிறது. (எவ்வளவோ, பிற, நல்ல விஷயங்கள் இருக்கின்றன அவசியம் எழுதவதற்கு, நம் வாழ் நாளில் குப்பைகளுக்குக் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நேரம் ஒதுக்குவது முட்டாள்தனம்தான் – உண்மைதான்; நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், மனிதன் வாய் விட்டு, அபத்தத்தைப் பார்த்துச் சிரிப்பதுவும் முக்கியமல்லவா?)

பொன்வேந்தன்
கோல்டென்கிங்1955@ஜிமெய்ல்.காம்  
 
கலைஞர் மீதும்.திராவிட இயக்கங்கள் மீதும் காழ்புணர்ச்சி பிடித்த பொறுக்கி

அன்புள்ள பொன்வேந்தன் (அல்லது) கோல்டென்கிங்1955 (அல்லது) தங்கராஜ் – இந்தக் கடைசிப் பெயர்தான் உங்களுடைய பெற்றோர் வைத்ததாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன், அழகாகத்தானே இருக்கிறது; ஏன் மாற்றிக் கொண்டீர்கள் அய்யா?

0. உங்களுக்கும் ஏறத்தாழ என் வயதுதான். உங்கள் மின்னஞ்சல் முகவரிப்படிப் பார்த்தால், நீங்கள் 1955-ல் பிறந்தவராக இருக்கலாம் போலத் தோன்றுகிறது; ஆகவே, இவ்வளவு வயதாகியும், இவ்வளவு பாவமாக, அறியாப் பருவத்தினராக இருக்கிறீர்களே என்று எனக்கு உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததிலிருந்து ஒரே வேதனையாக இருக்கிறது.

1. அய்யா, நான் உங்களைத் தன்னிலை விளக்கம் கேட்கவில்லை. பின் ஏன் நீங்கள் உங்களைத் தன்னிச்சையாகத் தாழ்மைப் படுத்திக் கொள்கிறீர்கள்? உங்களுக்கு ஏன் பொறாமை இருக்க வேண்டும் திருவாளர் கருணாநிதியின் மீதோ அல்லது திராவிட இயக்கங்கள் மீதோ?  பல வருடங்களாக அவர்கள் நிலை, கேடு கெட்ட ஒன்று அன்றோ? நாம் அவர்கள் மீது பரிதாபப் படமுடியும் அல்லது அவர்களை எள்ளி நகையாடத்தான் முடியுமன்றோ?

2. தவிர, நீங்கள் காழ்ப்புணர்ச்சி என்று தானே சொல்ல வருகிறீர்கள்? அதில் இருக்க வேண்டிய ’ப்’ எங்கே போயிற்று? நீங்கள் – ஒன்று, சரியாகக் கணினி-தட்டச்சு செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும் – அல்லது சரியாகத் தமிழ் எழுதக் கற்றுக் கொள்ளவேண்டும். உங்கள் தானைத் தலீவரின், சிறுமைப்படுத்தப் பட்ட கொடுந்தமிழை விட்டு அறவே விலகி நல்ல தமிழைக் கற்றுக் கொள்ள முயற்சித்தால் நலம்.

3. தவிர, ’காழ்புணர்ச்சி’ என்று நீங்கள் ரசாபாசமாக எழுதுவது – ஏதோ நீங்கள் கழுதையைப் புணர்பவர் என்கிறது போன்ற சித்திரம் விரிகிறது போலத் தோன்றுகிறது.  நீங்கள் அப்படியே எண்ணம் கொண்டவரானாலும் கூட (உங்களைச் சொல்லிக் குற்றமில்லை – உங்கள் தலைவர்கள் அப்படி), தயவு செய்து கழுதைகளை விட்டு விடவும். அவை பரிதாபமான வாயில்லாப் பிராணிகள் அன்றோ? மேலும், பதிலுக்கு, காமவயப்பட்ட கழுதைகள் உங்களைப் புணர்ந்தால், உங்கள் குதம் ஒரு ஆழ்துளைக் கிணறு போலாகிவிடும் என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ? தேவையா இது உங்களுக்கு? அதுவும் நம் வயதில்!

4. இன்னொன்று: உங்களுக்கு ‘காழ்புணர்ச்சி’ இருந்தால், நீங்கள் ’பொறுக்கி’ ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நீங்கள் ’பொறுக்கி’ ஆக இருக்கக் கூடிய பட்சத்தில், உங்களுக்குப் பிடித்தால், ‘காழ்புணர்ச்சி’ கொள்ளலாம். இந்த முக்கியமான வித்தியாசத்தைத் தாங்கள் உணர வேண்டும்.

5. தொடர்ந்து நல்ல தமிழில் எழுதப் பழகவும். முதலில் ஆவேசப் பின்னூட்டங்கள் இடலாம். பின், பரிணாம வளர்ச்சி பெற்று ப்ராசக்தி என்று கூட நாயுடுஹால் சமாச்சாரங்களுக்கு விளம்பரங்கள் எழுதி, பின்னர் பொலிந்து, மயிர்க்கூச்செரிந்து, ஆக உங்கள் தலைமுடி உதிர்ந்து,, பின்மண்டையில் முழுநிலாச்சூடி பொன்னர்-சங்கர், தென்பாண்டிச்சிங்கர்-வடஹொய்சாளகிங்கர், டக்கர்-மக்கர் என எழுத ஆரம்பித்து பின் உங்கள் உடன்-இறப்புகளுக்குக் கடிதம் கூட குறட்டையொலியில் தொடர்ந்து எழுதலாம். உங்கள் போன்றவர்களுக்கு உதவியாகத்தான், ஏதோ என்னால் முடிந்தது, நான் பொறுக்கி நடைத்தமிழ் என்ற, விளக்கக் கையேடு எழுதினேன். உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் சொல்லுங்கள் – இன்னமும் நிறைய இப்படியே எழுதுகிறேன்.

6. தொடர்ந்து தைரியமாக எழுதவும். சுயபச்சாத்தாபம் ததும்பும், ஓவென்று படிப்பவர்களை ஒப்பாரி இட வைக்கும், சுயவிமர்சனங்களைத் கண்டிப்பாகத் தவிர்க்கவும். இவை படிப்பதற்கு நாராசமாக இருக்கின்றன. (உங்கள் தலீவரிடமும் இதனைச் சொல்லவும்; பெட்டைப் புலம்பல் வேண்டா.)

7. வாழ்க்கையில், தவறுகள் சகஜம். நீங்கள் சோர்வடையத் தேவையே இல்லை. எனக்கும் தவறுகள் பல செய்துதான் எதனையுமே கற்றுக் கொள்ள முடிகிறது. ஏன்,  நம் அனைவருக்குமே அப்படித்தான், வேறு வழியே இல்லை. வெட்கம் மானம் சூடு சொரணை போன்ற விஷயங்கள் தவிர்க்கப் பட வேண்டும், நாம் வாழ்வில் தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்க வேண்டுமானால். (ஆனால் யோசிக்கிறேன், நீங்கள் கலைங்கரின் அடிப்பொடியாதலால், மேற்கண்ட விஷயங்கள் உங்களை எப்படியும் உபத்திரவப் படுத்தமாட்டா அல்லவா?)

8. ஆக, கூடிய விரைவில், ஐயன்மீர் தாங்கள் தலைமுடி வெட்டிக்கொள்ளக் கூட நேரமில்லாமல் உழையோஉழையென்று உழைத்து, ரோமாபுரி ராஜனாகி – மன்னிக்கவும், ’பொன்பேரரசர்’ ஆகி, நம் தமிழைக் கூர்போட்டு விற்கும் நல்லுலகத்துக்கு அருள் பொலிய, வாழ்த்துக்கள். அப்படி ஆகும் பட்சத்தில், அய்யோ, உங்கள் தலீவரின் மாவட்டத்துக்கு மாவட்டம் உள்ள எண்ணிறந்த வாரிசுகளால், உங்களுக்கு மிகப் பல பிரச்னைகள் எழக் கூடும்; அப்போது,  நீங்கள், உங்கள் நீளமான தலைமுடியைப் பிய்த்துக் கொண்டு பின்னங்கால் பிடறியில் பட, கபாடபுரத்துக் கபோதி போல ஓட நேரிட்டால் – நீங்கள் உங்களை ‘நெடுமுடிக் கிள்ளி’ என்று அழைத்துக் கொள்ளவும் வாழ்த்துக்கள் மிகப் பல.

9. ஆனால், ஒருவேளை இப்படியாகாமல் நீங்கள் தொடர்ந்து எல்லா திசைகளிலும் வளர்ந்து, நம்மூர் அக்மார்க் அசல் நயம் பிலிம் கமல்ஹாசனை(யும்) மிஞ்சி ஒரு ‘உலக நாயகன்’ ஆனால், தேவரீர் தயவு செய்து எனக்கும் ஒரு ’கலைமாமணி’ பட்டம் தர முடியுமா? (என்ன துறைக்கு என்பதை பிறகு யோசிப்போம், சரியா? ம்ம்ம் – யோசித்தால், நானே ஈரோட்டுப் பக்கமுள்ள – பெருந்துறையில் பிறந்தவன் தான் – இந்த அசைக்கமுடியாத ’துறை’ உண்மையே போதுமோ என்னவோ, இந்தக் கலைமாமா-ணி பட்டத்திற்கு?))

இங்ஙனம்::

கானமயிலாடக் கயிறேறிக் களிறுமேல் தாவி, மரத்தின் மேலாடும் ஆர்த்தெழுந்த புளியை வீர முறத்தால் அடித்து வீழ்த்திய, கஞ்சி குடித்து எஞ்சிய கேப்பைக்களிமீதமர்ந்து அது குண்டியில் அடைத்துக் கொண்டதால் வீறுகொண்டெழுந்த, புறாநானூறு வளர்த்து நாளொரு புறா-65 சாப்பிட்ட, சாலைசார் ஞமலிகள் கண்டாலே அஞ்சிய, தன்பாட்டன் துஞ்சிய, தலைகனம்கனத்து எரு தின்ற பாண்டிய, தோள்வலி கண்டு அயோடெக்ஸ் தடவிய, வேலையற்றுத் தினவெடுத்து வீரவாகை சூடி, உடல் சொறிந்ததால் வந்த விழுப்புண்களால் விழுப்புரம் பக்கம் மிஞ்சிய…

இரண்டாம் ராமசாமி நாயக்கன்.

பின்குறிப்பு: ஈரோட்டுதித்த கன்னடகவுட முதலாம் இராமசாமி நாயக்கன் பகர்ந்ததை (”தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை”) தயவு செய்து பொருட்படுத்த வேண்டா! அவர் உங்கள் தலீவர் எழுதிய அடுக்குமொழி-பொறுக்கிநடைச் சினிமாக் கழுதைவசனம் கேட்டுவிட்டுத்தான், மனம் பேதலித்து, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பாவம் இப்படி மனவேதனையில் புழுங்கினார் அன்றோ?

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

One Response to “நன்றி: “காழ்புணர்ச்சி பிடித்த பொறுக்கி””

  1. Anonymous Says:

    வலைப்பூ நடை புதியதாக உருவாவது நம் சமுதாயத்தை மேம்படுத்த உதவுமென்று நினைக்கிறேன். ஒரு பொருளை நன்கு உணர்ந்து அறிந்து வெளிப்படுத்த அதாவது புத்தகமாக வெளிவர பல நாட்கள் உழைப்புத் தேவைப்படுகின்றன. இன்றோ எண்ணங்கள் உணர்ச்சி வடிவில் எழுத்துக்களாக உடனடியாக வந்து விழுந்து விழுகின்றன. பின்னால் உறவைக் கெடுத்து ஆறாத நாவினால் சுட்ட வடுவாகி விடுகின்றன. ஆகவே தாங்கள் சொல்லிய கழுதை உதாரணம் புதுவகை தளத்திற்கு இட்டுச் செல்லுகிறது. இயக்க எழுத்து நடை உருவான(திராவிட) காலத்திலிருந்து சூழ்நிலைகளை உன்னிப்பாக கவனித்துவருகிறேன். அதே சமயம் உங்கள் விமரிசன ஆழத்தைக் கண்டும் வியந்திருக்கிறேன்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s