”வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்” (அய்யய்யோ!!)

10/03/2012

அல்லது

’ஹரன் ப்ரசன்னா கட்டுரை: தமிழ்பேப்பர்.நெட் தளத்தின் உரைகல்’

மன்னிக்கவும் – எல்லாம் என்னுடைய கூறு கெட்ட ‘நண்பரால்’ வந்த வினை,

சில நாட்கள் முன்புதான் நான்  ஆர். முத்துக்குமார் என்பவர் – மு.க.ஸ்டாலின் : அது ஒரு மிசா காலம்! என்கிற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்துத் துயறுற்றேன்/ மனக் கிலேசமடைந்த நான், வேறு ஏதாவது நகைச்சுவையாக ஏதாவது படிக்கலாமே என்று அதே தமிழ்பேப்பர்.நெட் தளத்தில் பார்த்தால்…அடக் கடவுளே…

ஆர். முத்துக்குமார் அவர்களை விடச் சோகமாக ஹரன் ப்ரசன்னா என்பவரின் சம்பந்தமே இல்லாத தலைப்பின் (’வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்”) கீழே மாய்ந்து மாய்ந்து எழுதியுள்ள வடிவேலு மஹாத்மியம்!

ஹரன் ப்ரசன்னா என்பவரையும் எனக்கு யாரென்று தெரியாது – அது முக்கியமில்லை என்றாலும். என்னுடைய பிரச்சினை என்னவென்றால், இவர் ஏன் இப்படி எழுதுகிறார்?  இணையத்தில் கட்டுரைகள் எழுதுவற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை (என் போல) என்பதாலா? அல்லது, மானுடசமூகவியல் சார்ந்த, தேய்ந்துபோன கவைக்குதவாத கலைச் சொற்களை உபயோகித்து விரக்தி மனோபாவத்துடன் எழுதினால், எவரும் பொருட்படுத்த மாட்டார்களென்றா?  அல்லது பயந்து ஓடிப்போய்விடுவரென்றா?

அதில் உள்ள பொன்மொழிகள், சிந்தனைகள், நம் சிந்தனைக்கும் விருந்தாகி நம்மை மூச்சுமுட்டச் செய்கின்றன.

 • வடிவேலு ஒரு உன்னதக் கலைஞன்,
 • ஒப்பற்ற கலைஞன்,
 • [வடிவேலு] தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான கலைஞர்களில்ஒருவராகப் பரிமளித்தவர்
 • 2011ல் காமெடியின் உச்ச நடிகர்,
 • நல்ல நடிகன்

இப்படியும் மொண்ணையாக ஒருவர் எழுதி அதனை ஒரு இணைய தளம் பிரசுரிக்கவும் செய்யும் என்பதே ஒரு ஆயாசம் தரும் விஷயம்…

எது எப்படியோ – இவை எல்லாவற்றையும் புறம் தள்ளி விட்டு ஞாநி அவர்களின் பின்னூட்டமிட்ட ‘வடிவேலு தமிழகத்தின் பொதுச்சொத்து’ போன்ற மாரடைப்புத்தரும் நகைச்சுவை வேறு நம்மை மிகவும் இம்சிக்கிறது!…

இவர்தானா அந்தக் கால பரீக்‌ஷா ஞாநி? அவரா சொன்னார்? இருக்காது! இருக்கவும் கூடாது… நம்ப முடியவில்லை…  வில்லை… இல்லை…

=-=-=-=

ஹரன் ப்ரசன்னா அவர்களுக்குச் சில கேள்விகள்:

 • தமிழக வரலாறு, சமூகவியல், அரசியல்  – இவற்றையே விடுங்கள் – சமகால வரலாறு என்றால் என்ன என்று அறிந்து கொள்வதையும் விடுங்கள் – தெரிந்தாவது கொண்டிருக்கிறீர்களா?
 • உரைகல் என்றால் என்ன, நரகல் எனப் படுவது யாது – வித்தியாசம் என்னவென்று அறிவீர்களா?
 • பொத்தாம்பொதுவாக எழுதி – அதனுடன், உணர்ச்சிக் குவியல்களை மட்டும் கோர்த்தெடுத்து அவற்றைக் கஷ்டப் பட்டு எழுதிய கட்டுரைகளாக பவனி வரச் செய்தால், அது உங்களது எழுத்தாள வளர்ச்சிக்குப் போதுமானது என்று யார் சொன்னது?
 • திராவிட இயக்கம் (அப்படி ஒரு கட்டுக் கோப்பான ஒரே ஒரு இயக்கமாக அது இருந்திருக்கக் கூடும் என எண்ண முடியுமானால் கூட) – யார் உங்களுக்குச் சொன்னது – இந்த இயக்கத் தலைவர்கள் மட்டும் தான் நடிகர்களைக் கேவலமாக நடத்தினார்கள் என்பது போல?
 • நடிகர்களும் தான், பல இயக்கத் தலைவர்களைக் கேவலமாக நடத்தினார்கள் – நீங்கள் பாவம், இவற்றைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள்; இருப்பினும் நீங்களும், பிற விசிலடிச்சான் குஞ்சுகுளுவான்களும் தெரிந்து கொள்வதற்காகச் சொல்கிறேன்: பல நடிகர்கள் பல்வேறு திராவிட இயக்கங்களின் பலவித போஷகர்களாக இருந்திருக்கிறார்கள் – அதன் காரணமாகவும் அவர்கள் அரசியல் வாதிகளை அசிங்கப் படுத்தியிருக்கிறார்கள் –  இதனைப் பற்றி, ஒரு தனி  (அடுத்த) இடுகையில் காணலாம்:  திராவிட இயக்கம், நடிகர்கள், அறிய சில அரிய புகைப்படங்கள்…
 • அய்யா, உண்மையிலேயே நீங்கள், படிக்க வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களும், செல்ல வேண்டிய தூரமும் மிக அதிகம், அதனால் என்ன – நீங்கள் ஒரு இளைஞராக இருக்கக் கூடிய பட்சத்தில், நிறைய நேரம் இருக்கிறது உங்களுக்கு. ஆனால், அதனை விரயம் செய்து, நீங்கள் தொடர்ந்து இப்படியே எழுத வேண்டுமானால், இதோ உங்களுக்குச் சில தலைப்புகள்:

விவேக்: ராமகிருஷ்ணரின் காமெடிக்கு ஒரு உரைகல்

செந்தில்: கவுண்டமணியின் காமெடி உரைகல்

பேருரைகல்: உரைகல்களுக்கான ஒரு உரைகல்

திராவிடாத இயக்கம்: முக்கிமுக்கி முன்னேற முயற்சிக்கும் முன்னேற்றக் கழகங்களின் உரைகல்

சுந்தர ராமசாமி: இவை என் உரைகல்

வெள்ளைக்கோட்டுக் கறுப்புக்கல்: ஒரு நரைகல்

… ஆனால் – நாமும்,  ஹரன் ப்ரசன்னா அவர்கள் – வர்ஜாவர்ஜமில்லாமல், பெரிய ஆராய்ச்சி செய்து எழுதியது போன்று அவர்தம் கட்டுரைக்குத் தலைப்பு வைத்தது போல் – இவர் ஒருவர் கட்டுரையை (!) வைத்து மட்டும், தமிழ்பேப்பர்.நெட் தளமே (என் பள்ளிச் சிறார்கள் சொல்வது போல) ஒரு ‘காமெடி பீஸ்’ – அதாவது ’ஹரன் ப்ரசன்னா கட்டுரை: தமிழ்பேப்பர்.நெட் தளத்தின் உரைகல்’ என்று எண்ணமுடியாது எனத்தான் நினைக்கிறேன்.

அத்தளத்தை ஒழுங்காகப் படித்து விட்டுத்தான் எந்த முடிவுக்கும் வர முடியுமல்லவா?

கொஞ்சம் யோசித்தால் இந்த ஹரன் ப்ரசன்னா, நா முத்துக்குமார் போன்றவர்களின் ஒரேயொரு கட்டுரையைப் படித்துவிட்டு அவர்களைக் கரித்துக் கொட்டுவதும் நியாயமில்லை என்றுதான் நினைக்கிறேன், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமென்றாலும்… (ஆனால், இவர்களை இன்னொரு முறை படிப்பதற்கு முன் நான் மிகவும் ஆலோசனை செய்ய வேண்டியிருக்கும்)

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

3 Responses to “”வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்” (அய்யய்யோ!!)”

 1. Sakthivelu K Says:

  (எனக்கு) ஆச்சரியத்தைதருவது ஆசிரியப்பணி ஆற்றிக்கொண்டு அரசியலில் இவ்வளவு தீவிரம் காட்டவியலுமா? குறிப்பாக தி.மு.க வின் எதிர்பக்கங்கள் கட்டுரைகள் கலங்கடிக்கின்றனவே. கற்பித்தல் தொழிலில் அடி நுனி தெரியாமல் அடியேன் அலமருங்கி ஆற்றாது கண்ணீர் விட்ட நாள்கள் ஏராளம். மக்கள்வரிப்பணத்தில் வாழ்கிறேன் என்கிற எண்ணம் தான் மேலோங்கி நின்றது. ….

  • ramasami Says:

   அன்புள்ள சக்திவேலு,

   நான் ஒரு காலத்தில் சிலவிதமான அரசியலில் நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்தேன் – ஆனால் தற்காலத்தில் அப்படி இல்லை.

   ஆசிரியர் பணி மகத்தானது, பெரிதும் மன நிறைவு அளிக்கக் கூடியது – நம்மை இளமையாக வைத்திருக்க வல்லது. ஆனால், அது மிகமும் சிரமமான ஒன்று. ஒரு விதமான புரிதலுமில்லாமல், பொத்தாம் பொதுவாகக் கல்லெடுத்து அடிப்பவர்கள் – நம் சுய விமர்சனம் கூட இம்மாதிரி தான் – அடிக்க மிகவும் ஏதுவானது இப்பணி. (ஆனால், மற்றெல்லா பணிகளையும் போல, இதிலும் சராசரிகள், மேலோர், கீழோர் உள்ளனர் – ஆக, பொதுமைப் படுத்தல்கள் செய்ய முடியாது தான்)

   பல நாட்கள் நானும் சுருங்கிப் போய் கண்ணீர் விட்ட காலங்களும் உண்டு – அவை சில சமயம் தொடர்கின்றன கூட.

   ஆனால் – நம்மிடம் வளர்ந்த ஒரு குழந்தை, சிறுவன், சிறுமி – மொட்டு விட்டு மலர்ந்து, சுகந்தம் பரப்பி – சந்தோஷமாக இருப்பதைப் பார்ப்பது போன்ற சுகம், வேறு எந்தப் பணியிலும் கிடைக்குமா என்பது சந்தேகமே.


 2. […] அல்ல. எனவே ஒத்திசைவு ராமசாமிகள் (https://othisaivu.wordpress.com/2012/03/10/post-100/) கொஞ்சம் விலகி நிற்கவும். இரண்டாம் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s