இசுடாலின்: விடாது கருப்பு!

31/03/2012

இசுடாலின் என வினோதமாக, ஆனால் தமிழ் இலக்கணசுத்தமாக அறியப் படவேண்டிய, கருணாநிதியின் மகனான ஸ்டாலின் அவர்கள், யாராவது தமக்கு எதிரில் கருப்புச் சட்டை போட்டுக் கொண்டு வந்தாலே, அந்த நிகழ்வை தமக்கு அவமானமாகக் கருதுகிறார்,

[அதிமுக-வினர்] … கருப்பு சட்டை அணிந்து வந்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள்.

ஐயகோ! இம்மனப்பான்மையினால் இவருக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் ஏற்படப் போகின்றன என்பதை இவர் அறிவாரா? கைப்புள்ள இசுடாலினை நினைத்தாலே பாவமாக இருக்கிறது…

எது எப்படியோ, அவருக்குக் தக்க அறிவுரை வழங்குவது நம் கடமையாதலால்… (அதாவது, எனக்கு, தற்போதைக்கு, வேறு உபயோககரமான வேலைவெட்டியில்லை எனப் பொருள் காண்க)

=-=-=-=

அய்யோ! இந்த ஒரிஜினல் அக்மார்க் ஸ்டாலினுமா, நம்முடைய காப்பி இசுடாலினை அவமானப் படுத்துகிறார் – இந்தக் கருப்பு உடையும் கருப்பு மீசையையும் அணிந்துகொண்டு? அதுவும் அவர் நம்முடைய அண்ணாதுரை அவர்களைக் காப்பி செய்து ஆள்காட்டி விரலைத் தூக்குவது என்ன கீழ்த்தரமான கிண்டல்!


பெரியார் ஈவெரா அவர்களாவது அண்ணா குழுவினரின் ‘கண்ணீர்த்துளிகள்’ பற்றி மிகவும் கிண்டலாகப் பேசியவர் – ஆக அவராவது கருப்பு உடை அணிந்து இசுடாலினை அவமதிப்பதைப் பொறுத்துக் கொள்ளலாம்.


ஆனால், இந்த அண்ணாதுரை அவர்களுமா இப்படி?


இந்த அம்பேட்கர் அவர்களுக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி கருப்புடை அணிந்துகொண்டு, இசுடாலினை அவமானப் படுத்துகிறார்?

ஜெயலலிதா, இசுடாலினை அவமானப் படுத்துவதற்குத் தயங்கமாட்டார் – தூக்குத் தண்டனை கொடுப்பதற்கும் அவர் தயார் தான். இதெல்லாம் நமக்கும் தெரியும்தான்!


ஆனால், பெரும் நிதிச் சகோதரர்கள், அவருடைய சொந்தக்-கட்சிக்-கொள்ளைக்காரர்கள் இப்படி கருப்பு உடை அணிந்து அவமானம் செய்வதை எப்படி இசுடாலினால் பொறுக்க முடியும்? அதுவும் இந்த கட்அவுட் கலாநிதி அவர்களின் முகத்தில் பேஸ்தடித்த மலச்சிக்கலுணர்ச்சி வேறு அவரை உறுத்துமே!

பிலிம் ரஜினிகாந்த், பிலிம் கமல்ஹாசன் போன்றவர்கள் அவமானப் படுத்துவதைப் பொறுத்துக் கொள்ளலாம் இசுடாலின்; ஏனெனில் அவர்களின் விசிலடிச்சான் குஞ்சுகளின் ஆதரவு, அவருக்கு எப்பொழுதாவது தேவைப்படும் என்பதினால்.

மேலும், நான் ஒப்புக் கொள்கிறேன் – இவர்கள் இருவரும் ஹாலிவுட் வெட்டி ரவுடி-குண்டர்கள் போலத் தெரிகிறார்கள் – ஆகவே ‘துஷ்டர்களைக் கண்டால் தூர விலகு’ என்று விலகினாலும் விலகலாம். அல்லது, தூய டமிளில்,  ‘துட்டர்களைக் கண்டால் மிரட்டித் துட்டு பிடுங்கு’ என்று அலையவும் செய்யலாம். இசுடாலின் அவர்கள் எப்படிச் செய்தாலும் சரியே!

ஆனால், அய்யோ இந்த ‘சிவகாசி சரவெடி விஜய்’ (அப்படித்தான் எங்கள் கிராம விஜய் நற்பிணி மன்ற வெட்டிஅட்டை சொல்கிறது!) வேறு இப்படி நடராஜக் கோமாளி நர்த்தனம் ஆடுவதை, அதுவும் இப்படி ஒரு கண்றாவிக் கருப்பு உடை அணிந்து கொண்டு அவமானப் படுத்துவதை எப்படிப் பொறுக்க முடிகிறது இசுடாலினால்?

அதையாவது விடுங்கள். இந்த நயன்தாரா,  முமைத்கான் அம்மையார்களுக்கு என்ன ஆயிற்று?  அவர்கள் டுப்பாக்கிக்கு பயந்து கொண்டு அம்மையார்கள் செய்யும் அவமானத்தைத் தாங்கிக் கொள்வாரா இசுடாலின்?

நம்மூர் ரஹ்மான் கருப்பு உடை அணிந்து டைட்டானிக் பிலிம் போலக் கையை விரித்துக் கொண்டு பறப்பதைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம், நம் இசுடாலின் அவர்கள் – டொங்குடொக்குப் பாடல்களை விட இந்த கருப்பு உடை அவமானப்படுத்தப் படல் மோசமில்லை என்கிற ரீதியில்…

ஆனால், அய்யய்யோ, இந்தக் கேடுகெட்ட மைக்கேல் ஜாக்ஸனுமா இப்படி? ஐயகோ, நம் இசுடாலின் அவர்களை நாம் எப்படிக் காப்பாற்றக் கூடும்!

தம் தந்தையார் கருணாநிதி அவர்களை, மல்லிகா ஷெராவத் அம்மையார் அவமானம் செய்வதாக இசுடாலின் எண்ணலாம். ஆனால், உற்றுப் பார்த்தால், தந்தையார் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருப்பது போலத் தானே தோன்றுகிறது?

எது என்னவோ, இவற்றையெல்லாம் விடுங்கள். மேற்கண்டவர்கள் அனைவரையும் மன்னித்து விடலாம். மறக்கலாம்.

ஆனால், நம் வீரமணி அவர்களே இப்படிச் செய்தால், நம்முடைய மேதகு இசுடாலின் அவர்கள் என்னதான் செய்யமுடியும்?

ஆக நமக்கு என்ன தோன்றுகிறது என்றால், இசுடாலினை விடாது கருப்பு!

QED.

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Advertisements

One Response to “இசுடாலின்: விடாது கருப்பு!”

  1. Sakthivelu K Says:

    கருப்பு வண்ணம் ஒளியை உறிஞ்சிக் கொள்ளும். நம் உடைகளும் நம்மைப்பற்றிச் சொல்லுகின்றன. ஒல்லியாக இருப்பவர் தாம் அணியும் உடையால் குண்டாக காண்பிக்கலாம். அதேபோல் குள்ளமாக இருப்பவர்கள் உயரமாக தோற்றத்தை மாற்றிக்காட்டலாம். இப்படியே தூங்கும் அறைக்கு இன்ன வண்ணம், வேலை செய்யுமிடம் இந்தவண்ணமென்று அறிவியல் சுட்டுகிறது. ஆனால் தாங்கள் செய்யும் எழுத்து ஜாலம் கருப்பை – கருப்பை புகாமல் காக்குமா?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: