ஐயா = ஐயோ என்றால், அய்யா = ஐயய்யோ?

13/04/2012

பொதுவாக மொழிகள் (மொழியியல், ஒப்பீட்டு மொழியியல் இன்னபிற) பற்றிப் படிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தரக் கூடிய விஷயம்.

மேலும், என்னால் இலக்கணசுத்தமாக எழுத எப்போதுமே முடியாவிட்டாலும், எனக்குத் தமிழ் இலக்கணமும் மிகவும் பிடிக்கும் – ஒரு மாதிரியாகப் பார்க்காதீர்கள், என்னை!

எனது பள்ளிக்கூடத் தமிழாசிரியர்கள் பெரும்பாலானோரின் தாக்கத்தையும், மடமையயும், பாதிப்பையும் மீறி எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த ஆவல், என் பழவினைப் பயன் தான்.

இச்சமயம் எனக்கு இலகு தமிழை போதித்த திரு. தெய்வச்செயல் (கார்லி உயர் நிலைப்பள்ளி, தாம்பரம்) அவர்களையும், சிறு வயதில் எனக்குச் சில அடிப்படைத் தமிழ் புத்தகங்களையும் தந்துதவிய பெரியவர் திரு க குணசேகரன் (இவர் பக்கா திராவிடர் கழகத்தவராக இருந்தார்;  நங்கநல்லூர்க்காரர். பின், நாற்பது வருட திக தேய்மைக்கும், தேக்கத்துக்கும் பின்னர், ஆலயம் ஆலயமாகச் சென்று  நெக்குருகி வெண்பாக்கள் புனைந்தார், பாடினார் – சில வருடங்கள் முன் பார்த்தபோது சொன்னார் – ‘ நான் செருப்பால் அடிப்போம், பீரங்கியால் பிளப்போம் என்பது போல, பல ஆலய-வாயில்களில் பேசியிருக்கிறேன்; இப்போது அந்த அத்தனை கோவில்களுக்கும் சென்று வெண்பா பாடி விட்டேன். பிராயச்சித்தம் செய்து விட்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது’) அவர்களையும் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.

அண்மையில் ‘சிங்கப்பூர் சித்தார்த்தன்’ என்பவர் எழுதிய ஒரு குண்டு தமிழிலக்கண புத்தகத்தைக் கூடப் படித்தேன். (இது பற்றி பின்னொரு சமயம்)

=-=-=-=

ஏன் இவ்வளவு விலாவாரியாக இதனைப் பற்றி எழுதுகிறேன் என்றால், நேரம் சிறிது இருக்கிறதே, கொஞ்சம் வாய்விட்டுச் சிரித்து விட்டு விடுதலையாகலாமே என்று சிட்டுக்குருவியைப் போல சிறகடித்துப் பறந்து விடுதலை வலைப்பூவைப் பார்த்தேன்.

எனக்கு இவ்வயதில் இது தேவையா?

இவ்வலைப்பூவில், பேராசிரியர் ந.வெற்றியழகன் என்பவர் ’அய்யா?  ஐயா’ என்கிற தலைப்பில் ’தின(தமிழ்)மணிக் கட்டுரைக்கு மறுப்பு’ எழுதியிருக்கிறார்.

நீங்களும் அதனைப்படித்து இறும்பூதடைய வேண்டுகிறேன்.

இக்கட்டுரையின் சாராம்சம்: ஐயா சரியில்லை. அய்யா தான் சரி. அவ்வளவு தான். (யோசித்தால் அனைத்து திகவினரும் இனிமேலிருந்து அய்யாவழி செல்வார்களோ என்று திகிலாகவே இருக்கிறது)

=-=-=-=

சுழற்றிச் சுழற்றி அப்படியொரு சாட்டையடி. படிக்கும்போதே அவ்வளவு வலித்தது. பொறி கலங்குகிறது.இப்படி சிலம்பமாட பிலிம் எம்ஜிஆரால் கூட முடியாது என்பது வெள்ளிடைமலை!

  • பழமையைப் போற்றும் போதே, அதனைத் தூற்றல். புதுமையை வரவேற்பது போல அதனைச் சாடல்.
  • உங்கள் பழமையை விட, எங்கள் பழமை பழமையானது. உங்கள் புதுமையை விட எங்களது புத்தம் புதிது.
  • உன்னுடையது பழமை. எங்களது புதுமை. ஆகவே  நீங்கள் பழம்பெருமை பேசும் மௌடீகர்கள், பெருச்சாளிகள். ஆனால் நாங்கள் உயர்ந்தவர்கள், முன்னேறியவர்கள், நவநாகரீகமானவர்கள்.
  • உன்னுடையது புதுமை, எங்களது பழமை. ஆகவே  நீங்கள் நேற்றைய மழையில் இன்று முளைத்த காளான்கள். ஆனால், நாங்கள் பழம் பாரம்பரியமிக்கவர்கள்.
  • இம்மாதிரியான அதிர்ச்சி தரும் தர்க்க, ஆவண சாட்சி, வெட்டிச் சொல்லாடல்களின் நடுவே, அவ்வப்போது மாற்றம் என்பது இயல்பு, ‘பழையன கழிதலும்…’ போன்ற இரைச்சல்கள் வேறு.

நல்ல நகைச்சுவை. (தொட்டுக் கொள்ள ஆரியம், திராவிடம் என்கிற காலாவதிச் செல்லரிப்புத் தாளிப்பு வேறு!)

=-=-=-=

விட்டால்,  போகிறபோக்கில், வடிவேலுவைக் கூட, அவிங்க்ய சொல்றாங்ய அடிக்யறாய்ங்க என்று சொல்ல விடமாட்டார்களோ இந்த திக-காரர்கள்?

பின், நம் தங்கத் தமிழகம் நகைச்சுவைக்கு எங்கேதான் போக முடியும்?

எது எப்படியோ, ஹரன் ப்ரசன்னா அவிங்க்ய, வடிவேலுவைக் காப்பாற்றுவாராக!!

ஆமென்.

”வடிவேலு – திராவிட அரசியலின் உரைகல்” (அய்யய்யோ!!)

திராவிட இயக்கம், நடிகர்கள், அறிய சில அரிய புகைப்படங்கள்…

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Advertisements

One Response to “ஐயா = ஐயோ என்றால், அய்யா = ஐயய்யோ?”

  1. Anonymous Says:

    எழுத்துச் சீர்திருத்தத்திலும் அரசியலாக்கி கணிணிவழி முன்னேற்றத்தைத தடுக்கிறார்கள். அதிக எண்ணிக்கை எழுத்துகளுடைய சீனமொழியே இணையத்தில் நன்கு பிரகாசிக்கும் போது தமிழ் வளர்ச்சியிலும் வராமல் தடுப்பது…கட்சி. அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் தமிழ். “என்று தணியும் இந்த அடிமையின் மோகம்”


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: