காந்தி எனும் கக்கூஸ்காரர்… (பாகம் 3 / 3)

31/05/2012

“பஹுருபி காந்தி”  (காந்தியின் பன்முகங்கள் அல்லது பல வடிவங்கள்)  என்கிற அனு பண்டோபாத்யாய் அவர்களால் எழுதப் பட்ட,  1964ல் வெளியிடப் பட்ட புத்தகத்தின்  ஆறாம் அத்தியாயம்: ஸ்கேவென்ஜர்.

’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்று பகுதிகளில், மூன்றாம், கடைசிப் பகுதி கீழே. (முதல் பகுதி, இரண்டாம் பகுதி)

=-=-=-=

1946 – டெல்லியில் இருந்த ஒரு தோட்டிகள் குடியிருப்புக்குச் சென்று அவர்களிடம் அளவளாவிய காந்தி…

உள்ளாட்சி / நகராட்சிக் கூட்டங்களில் ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளை விவரித்த பின், காந்தி அடிக்கடிச் சொல்லும், பேசும் விஷயம்:

“உங்களை, விசாலமான சாலைகளுக்காகவும், அற்புதமான விளக்கு வெளிச்சங்களுக்காகவும், அழகான பூங்காக்களுக்காகவும் பாராட்டுகிறேன். ஆனால், முன்மாதிரிக் கழிப்பறைகளும், இரவும் பகலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் சாலைகளும் தெருக்களும் – இல்லாத ஒரு நகராட்சி, அதன் நிர்வாகம் – அவை இருப்பதற்கே தகுதியற்றவை அல்லவா?

… நம் நகராட்சிகள் அவசியமாக தீர்க்க வேண்டிய ஒரு பெரிய, முக்கியமான பிரச்சினை சுகாதாரமின்மைதான்..

… நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா, எப்படி, எந்த விதமான சூழ்நிலைகளில் நமது பெருக்குனர்களும், தோட்டிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று?”

குடிமக்களுக்கு அவர் சொன்னது:

“நீங்கள் உங்கள் கைகளில் வாளிகளையும், துடைப்பங்களையும் எடுத்துக் கொண்டு உழைக்காதவரை, உங்கள் வீடுகளையும், நகரங்களையும் சுத்தமாக்க – சுத்தமாக வைத்துக் கொள்ள, முடியவே முடியாது.”

ஒரு, மாதிரிப்-பள்ளிக்கு (model school) அவர் சென்றிருந்த போது, அங்குள்ள ஆசிரியர்களுக்கு அவர் சொன்னார்:

“உங்கள் பள்ளியை ஒரு தரம் வாய்ந்த முன்மாதிரியாக வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், நீங்கள், உங்கள் மாணவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்கு அப்பாற்பட்டு – அவர்களை, தரம் வாய்ந்த சமையல்காரர்களாகவும்,செய்நேர்த்தி மிக்க தோட்டிகளாகவும் கூட ஆக்கவேண்டும்.”

பள்ளி மாணவர்களுக்கு, அவருடைய அறிவுரை:

“உங்களுக்கு நீங்களே தோட்டிகளாக முடிந்தால், நீங்கள் உங்கள் சுற்றுப் புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வீர்கள்.

… விக்டோரியா சிலுவைப் பதக்கம் [victoria cross] வாங்குவதற்கு வேண்டிய தைரியத்தை விடச் சற்றும் குறைந்ததல்ல – செய்நேர்த்தி மிக்க தோட்டியாவதற்குள்ள தைரியம்…”

=-=-=-=

அவரது ஆசிரமத்துக்குப் பக்கத்தில் வசித்த கிராமவாசிகள் அவர்களுடைய மலத்தை, மண் போட்டு மூடிவிட மறுத்தனர். அவர்கள் சொன்னார்கள், “இது தோட்டிகளின் வேலை. மலத்தை கண்ணால் பார்ப்பது ஒரு பாவமான (sin) செயல், அதைவிடவும் கொடிய பாவம் – அதன் மேல் மண் போட்டு மூடுவது”

காந்தி நேரடியாக, சுற்றுப்புறக் கிராமங்களில் நடக்கும் துப்புரவுப் பணிகளை மேற்பார்வை பார்த்தார். அவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ, அவரே சில மாதங்களுக்கு பக்கத்திலுள்ள கிராமங்களுக்கு, ஒரு வாளியுடனும், துடைப்பத்துடனும் அனுதினமும் சென்றார், வேலை செய்தார். கூடவே அவருடைய நண்பர்களும், விருந்தாளிகளும் அவருடன் சென்றனர்.

அவர்கள் திருப்பிக் கொண்டு வந்த, குப்பையும் மலமும் நிறைந்த வாளிகளை, அதற்கென வெட்டப்பட்ட குழிகளில் கொட்டினர்.

காந்திக்கு, சரியான முறையில் கழிவுகளை அகற்றுவதும் அறிவியல் தான்; அவரைப் பொறுத்தவரை – அதுவும், எதுவும் அறிவியல் சார்ந்திருக்க வேண்டும்…

=-=-=-=

அவருடைய ஆசிரமங்களில், கழிவுகளை அப்புறப் படுத்தும் வேலையை ஆசிரமவாசிகள் அனைவரும் செய்ய வேண்டும். காந்தி அவர்களுக்கு, அதற்குத் தேவையான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார்.

பல இன, மத, நிற  – பின்னணி சார்ந்த பலவித பழக்கங்களுடைய மக்கள் அவர் ஆசிரங்களில் வாழ்ந்தாலும், ஒரு விதமான குப்பையோ, துளிக் கழிவையோ அங்கு பார்க்கவே முடியாது. அனைத்துக் கழிவுகளும் குழிகளில் புதைக்கப் பட்டன. காய்கறிக் கழிவுகள், தோல்கள், சாப்பாட்டு மிச்சங்கள் போன்றவை, அதற்கென தோண்டப் பட்ட எருக் குழிகளில் போட்டு மூடப்பட்டன.

மனித மலமும் புதைக்கப் பட்டுப் பின் உயர்ந்தரக எருவாக மாற்றப் பட்டு, உபயோகிக்கப் பட்டது.

உபயோகித்த நீர், கழிவு நீர் – தோட்டங்களில் பாய்ச்சப் பட்டது.

அவருடைய பண்ணைகள் / ஆசிரமங்களில் நவநாகரீக பாதாள சாக்கடை போன்ற வசதிகள் இல்லாவிட்டாலும் மிக சுத்தமாக இருந்த காரணத்தால், துர் நாற்றமோ, ஈத்தொல்லையோ இருக்கவே இல்லை.

காந்தியும் அவருடைய சகோதரப் பணியாளர்களும், முறை வைத்துக் கொண்டு, ஆசிரமத்துக்குத் தேவையான தோட்டி வேலைகளைச் செய்தனர்.

காந்தி அந்த ஆசிரமங்களில், வாளிக் கழிப்பறைகளையும், மலமும் நீரும் தனித்தனியே சேகரம் செய்யக் கூடிய இரட்டைக்குழி முறையையும் – அறிமுகப் படுத்தினார். அவர் ஆசிரமங்களுக்கு வருகை தந்த எல்லா விருந்தாளிகளிடமும், அங்கிருந்த நூதனக் கழிவு மேலாண்மை முறைகளை, பெருமிதத்துடன் காட்டி மகிழ்ந்தார்.

பணக்காரர்களோ ஏழைகளோ, தலைவர்களோ தொண்டர்களோ, இந்தியர்களோ வெளி நாட்டார்களோ – எவர் அவர் ஆசிரமங்களுக்கு / பண்ணைகளுக்கு வந்தாலும், அவர்கள் இம்மாதிரிக் கழிப்பறைகளைத்தான் உபயோகிக்க வேண்டியிருந்தது.

இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளால், முறைகளால் – ஆசாரவாதிகளிடமும், பெண்களிடமும் இருந்த, கழிவுகள் மீதான அருவருப்பை – அவரால் கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற முடிந்தது.

=-=-=-=

எப்போது அவருக்குச் சிறிது சுத்தப் படுத்தும் வேலை கிடைத்தாலும், காந்தி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரைப் பொருத்தவரை, ஒருவருடைய சுத்தம் பற்றிய உணர்வு என்பது, அவருடைய கழிப்பறையை அவர் எப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதிலேயே தெரிந்துவிடும்.

அவருக்கு 76 வயது ஆகும்போது அவர் பெருமையுடன் சொன்னார்,

“ஒரு சிறிய அழுக்கோ, அல்லது நாற்றமோ, சிறு வாடையோகூட  நான் உபயோகிக்கும் கழிப்பானில் இருக்காது; ஏனெனில் நானே அதனைச் சுத்தம் செய்கிறேன்.”

பல சமயங்களில் அவர் தன்னை ஒரு தோட்டியாகவே விவரித்துக் கொண்டார் – அவர் ஒரு தோட்டியாகவே இறக்க முடியுமானால் அதுவே அவருக்குப் போதுமானது எனச் சொன்னார். மேலும் அவர், இந்துக்களில், மெளடீக-ஆசாரசீலர்களான இருந்தவர்களிடம் – தீண்டத்தகாதவர்களுடன் சேர்த்து தன்னையும் பகிஷ்கரிக்கும்படிச் சொன்னார்.

அவர், தோட்டிகள் குடியிருப்புக்குச் சென்று [பெரும்பாலும் எங்கு அவர் சென்றாலும், தோட்டிகளுடனேதான் தங்குவதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார்] அவர்களுடன் அளவளாவிக் கொண்டு இருக்கும் போது, அவர்கள் தங்களுடைய துயரக் கதையைச் சொல்வர். அவரும், அவர்களுக்குச் சொல்வார் – அவர்களுடைய தொழில் இழிவானதொன்றல்ல; மேலும், அவர்கள் குடிப்பழக்கத்தையும், இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்பதையும் விட்டுவிடவேண்டுமென்றும்.

அவர் என்றுமே தோட்டிகள் வேலை நிறுத்தம் செய்வதை ஆதரிக்க முயன்றதில்லை; அது மட்டுமல்ல, அவர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யலாமென்றும் கூடச் சொன்னதில்லை. [அவர் பணிகளை, நமது கர்மங்களைப் பார்த்தவிதம் அப்படி. தனக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு இன்னொரு நீதி என்று நினைத்தவரல்லர் அவர்]

அவருடைய ’ஹரிஜன்’ பத்திரிக்கையில், ஒரு தோட்டி என்பவர் எப்படி இருக்கவேண்டுமென விவரித்தார்:

“அவருக்கு சுற்றுச்சூழலுக்கு, தேவைக்கு ஏற்றவாறு எப்படி, ஒரு கழிப்பறையைக் கட்டவேண்டுமெனத் தெரிய வேண்டும்; அதனைச் சரியான வழியில் சுத்தம் செய்வது எப்படி எனவும் தெரிய வேண்டும். அவருக்கு, மலத்தினுடைய வாடை இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அதனை மீறி, எப்படி அதன் துர்நாற்றத்தைப் போக்குவது என்பது தெரிய வேண்டும். மேலும் அவர் எம்மாதிரிக் கிருமிநாசினிகளை உபயோகித்து மலத்தை ஆபத்தற்றதாக மாற்ற வேண்டும் என்பதை அறியவும் வேண்டும்.

இவற்றுக்கெல்லாம் அப்பால், எப்படி மலத்தையும் சிறுநீரையும், எருவாக மாற்றுவது என்பதன் முறைகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.”

காந்தி என்ன செய்ய முயன்றாரென்றால்: தோட்டி வேலை, ஒரு திணிக்கப் பட்ட,  ஒரு சாராரால் மட்டுமே தொடர்ந்து செய்யப் பட்ட வேலையாக இருந்ததிலிருந்து மாற்றப் பட்டு – அதனை ஒரு இன்றியமையாத சமூகப்பணியாகக் கருதப்படும் தளத்திற்கு உயர்த்துவது தான்.

=-=-=-=

காந்தியுடைய ‘காதி’ சுற்றுப் பயணங்களின்போது ஒரு சமயம் – அவர் பேச இருந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க, தோட்டிகள் அனுமதிக்கப் படவில்லை.

அவருக்கு இந்த விஷயம் தெரியவந்த போது, அவர் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் சொன்னார்,

“நீங்கள் உங்களுடைய பணவெகுமதிகளையும், உங்கள் மேடைப்பேச்சுக்களையும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நான் தீண்டத்தகாதவர்களோடு மட்டுமே பேசப் போகிறேன். உங்களில் எவருக்கு அக்கூட்டத்திற்கு வரத் தோன்றுகிறதோ அவர்கள் அங்கு வரலாம்.”

=-=-=-=

அவருக்கு 77 வயதாக இருக்கும்போது (இறப்பிற்கு இரு வருடங்கள் முன்னால்)  காந்தி மும்பயிலும், டெல்லியிலும் இருந்த தோட்டிகளின் குடியிருப்பில்,  வழக்கம் போல, சில நாட்கள் தங்கியிருந்தார். ஆனால் அச்சமயம், அவர் விரும்பினாலும், அவருடைய வயது காரணமாக அவரால் அக்குடியிருப்பிலேயே தங்கி அங்கு சமைக்கப் பட்ட உணவையே சாப்பிட முடியவில்லை. அக்குடியிருப்பிலேயே தங்க முடிந்தாலும், அவர் மேல் உள்ள அபிமானத்தால் அவருக்கு பலச் சலுகைகள் அளிக்கப் படுவதையும் அவர் விரும்பவில்லை.

=-=-=-=

காந்தி, ஒருசமயம் வைஸ்ராயைப் பார்ப்பதற்காக ஷிம்லா சென்றிருந்தபோது, தன்னுடன் பணிபுரிபவர் ஒருவரை அங்கிருந்த தோட்டிகளின் குடியிருப்புக்கு அனுப்பி அதனைப் பார்வையிடப் பணித்தார். அவர் திரும்பி வந்து, அந்தத் தோட்டிகளின் குடியிருப்பு, படு மோசமான நிலைமையில், விலங்குகள் கூட வாழமுடியாத நிலையில் இருப்பதைச் சொன்னவுடன் காந்தி மிகுந்த மனவருத்தமுற்றுச் சொன்னார்,

“இப்படி நாம் நம் தோட்டிகளை மிருகங்களை விடக் கேவலமான நிலைமைக்குத் தள்ளியிருக்கிறோம்…

… ஏதோ அவர்கள் இப்படிக் கொஞ்சம் காசு சம்பாதித்தாலும், அது அவர்களின் மனிதத்தையும் கண்ணியத்தையும் சிதைத்துத் தானே வருகிறது? அந்தத் தோட்டி, மலத்துக்கு நடுவில், கழிப்பறை சுவற்றின் நிழலில் பயந்து பதுங்கியபடி,  தன் உணவை உண்பதைப் பாருங்கள். நம் இதயத்தைப் பிளக்கும் சோகமில்லையா இது?”

தோட்டிகள், மலம் நிரம்பிய வாளிகளைத் தங்கள் தலையில் சுமந்து செல்லும் காட்சி அவரை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்தது.

=-=-=-=

அவர் சொன்னார்,  தகுந்த உபகரணங்களின் உதவியுடன் வேலை செய்தால், நிச்சயம் வெகு லகுவாகவும், சுத்தமாகவும் தோட்டிப் பணியை முடிக்கமுடியுமென்று; தோட்டி வேலை ஒரு உயர்ந்த கலை என்று அவர் கருதினார்.

மேலும் அவர், அந்தக் கலையை, தன்னை அசுத்தப் படுத்திக் கொள்ளாமல் பலமுறை செய் நேர்த்தியுடன் செய்து காட்டினார் – அவர் வெறும் பேச்சுக்களோடு நிற்கவில்லை.

1942 என நினைக்கிறேன்; மலம், குப்பை கூளங்களைத் துப்புரவு செய்ய, தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்ளும் காந்தி…

=-=-=-=

ஒரு சமயம், ஒரு அயல்நாட்டுக்காரர் காந்தியைக் கேட்டார், “உங்களை ஒரு நாளுக்கு மட்டும் இந்தியாவின் வைஸ்ராயாக இருக்கச் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?”

காந்தி சொன்னார், “ நான், வைஸ்ராயில் இல்லத்தருகே வசிக்கும் தோட்டிகளின் குப்பைக் கூடங்களாக இருக்கும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வேன்.”

“ஒருக்கால், உங்களுக்கு இன்னொரு நாளும் அப்படியே வைஸ்ராயாக இருக்க நீடிப்புச் செய்தால்?”

காந்தி பதிலளித்தார், “அதே வேலையை, நான் அந்த நாளும் செய்வேன்!”

=-=-=-=

அடுத்து… காந்தி எனும் சக்கிலியர்

காந்தியாயணம்…

4 Responses to “காந்தி எனும் கக்கூஸ்காரர்… (பாகம் 3 / 3)”

  1. Sakthivelu K Says:

    காந்தியாயணம் மாயைகளை நீக்குகிறது. மும்மலங்கள் எவையென்பதையும் சமுதாய நோக்கில் அகற்றும் வழியையும் அடிகளார் செய்துகாட்டினார்.

  2. jeyakumar72 Says:

    நான் படித்தது காந்திநிகேதனில், கல்லூரி காந்திகிராமத்தில். கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் காந்தியடிகளின் கட்டளைகளை அனைத்தையும் செய்திருக்கிறேன். பொது இடங்களை தூய்மையாக வைத்திருத்தல், எங்கள் கழிவறைகளை நாங்களே சுத்தம் செய்தல், ஆண்டிற்கு ஒரு கதராடையாவது வாங்குதல் ..இப்படி


  3. […] இராட்டை / 1 நிமிடம் ago ஓகஸ்ட் 27, 2015 ’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி . .. உள்ளாட்சி / நகராட்சிக் கூட்டங்களில் ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளை விவரித்த பின், காந்தி அடிக்கடிச் சொல்லும், பேசும் விஷயம்: “உங்களை, விசாலமான சாலைகளுக்காகவும், அற்புதமான விளக்கு வெளிச்சங்களுக்காகவும், அழகான பூங்காக்களுக்காகவும் பாராட்டுகிறேன். ஆனால், முன்மாதிரிக் கழிப்பறைகளும், இரவும் பகலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் சாலைகளும் தெருக்களும் – இல்லாத ஒரு நகராட்சி, அதன் நிர்வாகம் – அவை இருப்பதற்கே தகுதியற்றவை அல்லவா? … நம் நகராட்சிகள் அவசியமாக தீர்க்க வேண்டிய ஒரு பெரிய, முக்கியமான பிரச்சினை சுகாதாரமின்மைதான்.. … நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா, எப்படி, எந்த விதமான சூழ்நிலைகளில் நமது பெருக்குனர்களும், தோட்டிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று?” குடிமக்களுக்கு அவர் சொன்னது: “நீங்கள் உங்கள் கைகளில் வாளிகளையும், துடைப்பங்களையும் எடுத்துக் கொண்டு உழைக்காதவரை, உங்கள் வீடுகளையும், நகரங்களையும் சுத்தமாக்க – சுத்தமாக வைத்துக் கொள்ள, முடியவே முடியாது.” ஒரு, மாதிரிப்-பள்ளிக்கு (model school) அவர் சென்றிருந்த போது, அங்குள்ள ஆசிரியர்களுக்கு அவர் சொன்னார்: “உங்கள் பள்ளியை ஒரு தரம் வாய்ந்த முன்மாதிரியாக வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், நீங்கள், உங்கள் மாணவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்கு அப்பாற்பட்டு – அவர்களை, தரம் வாய்ந்த சமையல்காரர்களாகவும்,செய்நேர்த்தி மிக்க தோட்டிகளாகவும் கூட ஆக்கவேண்டும்.” பள்ளி மாணவர்களுக்கு, அவருடைய அறிவுரை: “உங்களுக்கு நீங்களே தோட்டிகளாக முடிந்தால், நீங்கள் உங்கள் சுற்றுப் புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வீர்கள். … விக்டோரியா சிலுவைப் பதக்கம் [victoria cross] வாங்குவதற்கு வேண்டிய தைரியத்தை விடச் சற்றும் குறைந்ததல்ல – செய்நேர்த்தி மிக்க தோட்டியாவதற்குள்ள தைரியம்…” =-=-=-= அவரது ஆசிரமத்துக்குப் பக்கத்தில் வசித்த கிராமவாசிகள் அவர்களுடைய மலத்தை, மண் போட்டு மூடிவிட மறுத்தனர். அவர்கள் சொன்னார்கள், “இது தோட்டிகளின் வேலை. மலத்தை கண்ணால் பார்ப்பது ஒரு பாவமான (sin) செயல், அதைவிடவும் கொடிய பாவம் – அதன் மேல் மண் போட்டு மூடுவது” காந்தி நேரடியாக, சுற்றுப்புறக் கிராமங்களில் நடக்கும் துப்புரவுப் பணிகளை மேற்பார்வை பார்த்தார். அவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ, அவரே சில மாதங்களுக்கு பக்கத்திலுள்ள கிராமங்களுக்கு, ஒரு வாளியுடனும், துடைப்பத்துடனும் அனுதினமும் சென்றார், வேலை செய்தார். கூடவே அவருடைய நண்பர்களும், விருந்தாளிகளும் அவருடன் சென்றனர். அவர்கள் திருப்பிக் கொண்டு வந்த, குப்பையும் மலமும் நிறைந்த வாளிகளை, அதற்கென வெட்டப்பட்ட குழிகளில் கொட்டினர். காந்திக்கு, சரியான முறையில் கழிவுகளை அகற்றுவதும் அறிவியல் தான்; அவரைப் பொறுத்தவரை – அதுவும், எதுவும் அறிவியல் சார்ந்திருக்க வேண்டும்… =-=-=-= அவருடைய ஆசிரமங்களில், கழிவுகளை அப்புறப் படுத்தும் வேலையை ஆசிரமவாசிகள் அனைவரும் செய்ய வேண்டும். காந்தி அவர்களுக்கு, அதற்குத் தேவையான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார். பல இன, மத, நிற  – பின்னணி சார்ந்த பலவித பழக்கங்களுடைய மக்கள் அவர் ஆசிரங்களில் வாழ்ந்தாலும், ஒரு விதமான குப்பையோ, துளிக் கழிவையோ அங்கு பார்க்கவே முடியாது. அனைத்துக் கழிவுகளும் குழிகளில் புதைக்கப் பட்டன. காய்கறிக் கழிவுகள், தோல்கள், சாப்பாட்டு மிச்சங்கள் போன்றவை, அதற்கென தோண்டப் பட்ட எருக் குழிகளில் போட்டு மூடப்பட்டன. மனித மலமும் புதைக்கப் பட்டுப் பின் உயர்ந்தரக எருவாக மாற்றப் பட்டு, உபயோகிக்கப் பட்டது. உபயோகித்த நீர், கழிவு நீர் – தோட்டங்களில் பாய்ச்சப் பட்டது. அவருடைய பண்ணைகள் / ஆசிரமங்களில் நவநாகரீக பாதாள சாக்கடை போன்ற வசதிகள் இல்லாவிட்டாலும் மிக சுத்தமாக இருந்த காரணத்தால், துர் நாற்றமோ, ஈத்தொல்லையோ இருக்கவே இல்லை. காந்தியும் அவருடைய சகோதரப் பணியாளர்களும், முறை வைத்துக் கொண்டு, ஆசிரமத்துக்குத் தேவையான தோட்டி வேலைகளைச் செய்தனர். காந்தி அந்த ஆசிரமங்களில், வாளிக் கழிப்பறைகளையும், மலமும் நீரும் தனித்தனியே சேகரம் செய்யக் கூடிய இரட்டைக்குழி முறையையும் – அறிமுகப் படுத்தினார். அவர் ஆசிரமங்களுக்கு வருகை தந்த எல்லா விருந்தாளிகளிடமும், அங்கிருந்த நூதனக் கழிவு மேலாண்மை முறைகளை, பெருமிதத்துடன் காட்டி மகிழ்ந்தார். பணக்காரர்களோ ஏழைகளோ, தலைவர்களோ தொண்டர்களோ, இந்தியர்களோ வெளி நாட்டார்களோ – எவர் அவர் ஆசிரமங்களுக்கு / பண்ணைகளுக்கு வந்தாலும், அவர்கள் இம்மாதிரிக் கழிப்பறைகளைத்தான் உபயோகிக்க வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளால், முறைகளால் – ஆசாரவாதிகளிடமும், பெண்களிடமும் இருந்த, கழிவுகள் மீதான அருவருப்பை – அவரால் கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற முடிந்தது. =-=-=-= எப்போது அவருக்குச் சிறிது சுத்தப் படுத்தும் வேலை கிடைத்தாலும், காந்தி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரைப் பொருத்தவரை, ஒருவருடைய சுத்தம் பற்றிய உணர்வு என்பது, அவருடைய கழிப்பறையை அவர் எப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதிலேயே தெரிந்துவிடும். அவருக்கு 76 வயது ஆகும்போது அவர் பெருமையுடன் சொன்னார், “ஒரு சிறிய அழுக்கோ, அல்லது நாற்றமோ, சிறு வாடையோகூட  நான் உபயோகிக்கும் கழிப்பானில் இருக்காது; ஏனெனில் நானே அதனைச் சுத்தம் செய்கிறேன்.” பல சமயங்களில் அவர் தன்னை ஒரு தோட்டியாகவே விவரித்துக் கொண்டார் – அவர் ஒரு தோட்டியாகவே இறக்க முடியுமானால் அதுவே அவருக்குப் போதுமானது எனச் சொன்னார். மேலும் அவர், இந்துக்களில், மெளடீக-ஆசாரசீலர்களான இருந்தவர்களிடம் – தீண்டத்தகாதவர்களுடன் சேர்த்து தன்னையும் பகிஷ்கரிக்கும்படிச் சொன்னார். அவர், தோட்டிகள் குடியிருப்புக்குச் சென்று [பெரும்பாலும் எங்கு அவர் சென்றாலும், தோட்டிகளுடனேதான் தங்குவதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார்] அவர்களுடன் அளவளாவிக் கொண்டு இருக்கும் போது, அவர்கள் தங்களுடைய துயரக் கதையைச் சொல்வர். அவரும், அவர்களுக்குச் சொல்வார் – அவர்களுடைய தொழில் இழிவானதொன்றல்ல; மேலும், அவர்கள் குடிப்பழக்கத்தையும், இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்பதையும் விட்டுவிடவேண்டுமென்றும். அவர் என்றுமே தோட்டிகள் வேலை நிறுத்தம் செய்வதை ஆதரிக்க முயன்றதில்லை; அது மட்டுமல்ல, அவர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யலாமென்றும் கூடச் சொன்னதில்லை. [அவர் பணிகளை, நமது கர்மங்களைப் பார்த்தவிதம் அப்படி. தனக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு இன்னொரு நீதி என்று நினைத்தவரல்லர் அவர்] அவருடைய ’ஹரிஜன்’ பத்திரிக்கையில், ஒரு தோட்டி என்பவர் எப்படி இருக்கவேண்டுமென விவரித்தார்: “அவருக்கு சுற்றுச்சூழலுக்கு, தேவைக்கு ஏற்றவாறு எப்படி, ஒரு கழிப்பறையைக் கட்டவேண்டுமெனத் தெரிய வேண்டும்; அதனைச் சரியான வழியில் சுத்தம் செய்வது எப்படி எனவும் தெரிய வேண்டும். அவருக்கு, மலத்தினுடைய வாடை இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அதனை மீறி, எப்படி அதன் துர்நாற்றத்தைப் போக்குவது என்பது தெரிய வேண்டும். மேலும் அவர் எம்மாதிரிக் கிருமிநாசினிகளை உபயோகித்து மலத்தை ஆபத்தற்றதாக மாற்ற வேண்டும் என்பதை அறியவும் வேண்டும். இவற்றுக்கெல்லாம் அப்பால், எப்படி மலத்தையும் சிறுநீரையும், எருவாக மாற்றுவது என்பதன் முறைகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.” காந்தி என்ன செய்ய முயன்றாரென்றால்: தோட்டி வேலை, ஒரு திணிக்கப் பட்ட,  ஒரு சாராரால் மட்டுமே தொடர்ந்து செய்யப் பட்ட வேலையாக இருந்ததிலிருந்து மாற்றப் பட்டு – அதனை ஒரு இன்றியமையாத சமூகப்பணியாகக் கருதப்படும் தளத்திற்கு உயர்த்துவது தான். =-=-=-= காந்தியுடைய ‘காதி’ சுற்றுப் பயணங்களின்போது ஒரு சமயம் – அவர் பேச இருந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க, தோட்டிகள் அனுமதிக்கப் படவில்லை. அவருக்கு இந்த விஷயம் தெரியவந்த போது, அவர் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் சொன்னார், “நீங்கள் உங்களுடைய பணவெகுமதிகளையும், உங்கள் மேடைப்பேச்சுக்களையும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நான் தீண்டத்தகாதவர்களோடு மட்டுமே பேசப் போகிறேன். உங்களில் எவருக்கு அக்கூட்டத்திற்கு வரத் தோன்றுகிறதோ அவர்கள் அங்கு வரலாம்.” =-=-=-= அவருக்கு 77 வயதாக இருக்கும்போது (இறப்பிற்கு இரு வருடங்கள் முன்னால்) காந்தி மும்பயிலும், டெல்லியிலும் இருந்த தோட்டிகளின் குடியிருப்பில், வழக்கம் போல, சில நாட்கள் தங்கியிருந்தார். ஆனால் அச்சமயம், அவர் விரும்பினாலும், அவருடைய வயது காரணமாக அவரால் அக்குடியிருப்பிலேயே தங்கி அங்கு சமைக்கப் பட்ட உணவையே சாப்பிட முடியவில்லை. அக்குடியிருப்பிலேயே தங்க முடிந்தாலும், அவர் மேல் உள்ள அபிமானத்தால் அவருக்கு பலச் சலுகைகள் அளிக்கப் படுவதையும் அவர் விரும்பவில்லை. =-=-=-= காந்தி, ஒருசமயம் வைஸ்ராயைப் பார்ப்பதற்காக ஷிம்லா சென்றிருந்தபோது, தன்னுடன் பணிபுரிபவர் ஒருவரை அங்கிருந்த தோட்டிகளின் குடியிருப்புக்கு அனுப்பி அதனைப் பார்வையிடப் பணித்தார். அவர் திரும்பி வந்து, அந்தத் தோட்டிகளின் குடியிருப்பு, படு மோசமான நிலைமையில், விலங்குகள் கூட வாழமுடியாத நிலையில் இருப்பதைச் சொன்னவுடன் காந்தி மிகுந்த மனவருத்தமுற்றுச் சொன்னார், “இப்படி நாம் நம் தோட்டிகளை மிருகங்களை விடக் கேவலமான நிலைமைக்குத் தள்ளியிருக்கிறோம்… … ஏதோ அவர்கள் இப்படிக் கொஞ்சம் காசு சம்பாதித்தாலும், அது அவர்களின் மனிதத்தையும் கண்ணியத்தையும் சிதைத்துத் தானே வருகிறது? அந்தத் தோட்டி, மலத்துக்கு நடுவில், கழிப்பறை சுவற்றின் நிழலில் பயந்து பதுங்கியபடி,  தன் உணவை உண்பதைப் பாருங்கள். நம் இதயத்தைப் பிளக்கும் சோகமில்லையா இது?” தோட்டிகள், மலம் நிரம்பிய வாளிகளைத் தங்கள் தலையில் சுமந்து செல்லும் காட்சி அவரை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்தது. =-=-=-= அவர் சொன்னார்,  தகுந்த உபகரணங்களின் உதவியுடன் வேலை செய்தால், நிச்சயம் வெகு லகுவாகவும், சுத்தமாகவும் தோட்டிப் பணியை முடிக்கமுடியுமென்று; தோட்டி வேலை ஒரு உயர்ந்த கலை என்று அவர் கருதினார். மேலும் அவர், அந்தக் கலையை, தன்னை அசுத்தப் படுத்திக் கொள்ளாமல் பலமுறை செய் நேர்த்தியுடன் செய்து காட்டினார் – அவர் வெறும் பேச்சுக்களோடு நிற்கவில்லை. ஒரு சமயம், ஒரு அயல்நாட்டுக்காரர் காந்தியைக் கேட்டார், “உங்களை ஒரு நாளுக்கு மட்டும் இந்தியாவின் வைஸ்ராயாக இருக்கச் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” காந்தி சொன்னார், “ நான், வைஸ்ராயில் இல்லத்தருகே வசிக்கும் தோட்டிகளின் குப்பைக் கூடங்களாக இருக்கும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வேன்.” “ஒருக்கால், உங்களுக்கு இன்னொரு நாளும் அப்படியே வைஸ்ராயாக இருக்க நீடிப்புச் செய்தால்?” காந்தி பதிலளித்தார், “அதே வேலையை, நான் அந்த நாளும் செய்வேன்!” நன்றி :: ஒத்திசைவு ராமசாமி  […]


  4. […] இராட்டை / 4 நிமிடங்கள் ago ஓகஸ்ட் 27, 2015 ’காந்தி எனும் கக்கூஸ்காரர்’ அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி . .. உள்ளாட்சி / நகராட்சிக் கூட்டங்களில் ஆட்சியாளர்கள் தங்கள் சாதனைகளை விவரித்த பின், காந்தி அடிக்கடிச் சொல்லும், பேசும் விஷயம்: “உங்களை, விசாலமான சாலைகளுக்காகவும், அற்புதமான விளக்கு வெளிச்சங்களுக்காகவும், அழகான பூங்காக்களுக்காகவும் பாராட்டுகிறேன். ஆனால், முன்மாதிரிக் கழிப்பறைகளும், இரவும் பகலும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் சாலைகளும் தெருக்களும் – இல்லாத ஒரு நகராட்சி, அதன் நிர்வாகம் – அவை இருப்பதற்கே தகுதியற்றவை அல்லவா? … நம் நகராட்சிகள் அவசியமாக தீர்க்க வேண்டிய ஒரு பெரிய, முக்கியமான பிரச்சினை சுகாதாரமின்மைதான்.. … நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா, எப்படி, எந்த விதமான சூழ்நிலைகளில் நமது பெருக்குனர்களும், தோட்டிகளும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று?” குடிமக்களுக்கு அவர் சொன்னது: “நீங்கள் உங்கள் கைகளில் வாளிகளையும், துடைப்பங்களையும் எடுத்துக் கொண்டு உழைக்காதவரை, உங்கள் வீடுகளையும், நகரங்களையும் சுத்தமாக்க – சுத்தமாக வைத்துக் கொள்ள, முடியவே முடியாது.” ஒரு, மாதிரிப்-பள்ளிக்கு (model school) அவர் சென்றிருந்த போது, அங்குள்ள ஆசிரியர்களுக்கு அவர் சொன்னார்: “உங்கள் பள்ளியை ஒரு தரம் வாய்ந்த முன்மாதிரியாக வளர்த்தெடுக்க வேண்டுமென்றால், நீங்கள், உங்கள் மாணவர்களுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்கு அப்பாற்பட்டு – அவர்களை, தரம் வாய்ந்த சமையல்காரர்களாகவும்,செய்நேர்த்தி மிக்க தோட்டிகளாகவும் கூட ஆக்கவேண்டும்.” பள்ளி மாணவர்களுக்கு, அவருடைய அறிவுரை: “உங்களுக்கு நீங்களே தோட்டிகளாக முடிந்தால், நீங்கள் உங்கள் சுற்றுப் புறங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வீர்கள். … விக்டோரியா சிலுவைப் பதக்கம் [victoria cross] வாங்குவதற்கு வேண்டிய தைரியத்தை விடச் சற்றும் குறைந்ததல்ல – செய்நேர்த்தி மிக்க தோட்டியாவதற்குள்ள தைரியம்…” =-=-=-= அவரது ஆசிரமத்துக்குப் பக்கத்தில் வசித்த கிராமவாசிகள் அவர்களுடைய மலத்தை, மண் போட்டு மூடிவிட மறுத்தனர். அவர்கள் சொன்னார்கள், “இது தோட்டிகளின் வேலை. மலத்தை கண்ணால் பார்ப்பது ஒரு பாவமான (sin) செயல், அதைவிடவும் கொடிய பாவம் – அதன் மேல் மண் போட்டு மூடுவது” காந்தி நேரடியாக, சுற்றுப்புறக் கிராமங்களில் நடக்கும் துப்புரவுப் பணிகளை மேற்பார்வை பார்த்தார். அவர்களுக்கு முன் மாதிரியாகத் திகழ, அவரே சில மாதங்களுக்கு பக்கத்திலுள்ள கிராமங்களுக்கு, ஒரு வாளியுடனும், துடைப்பத்துடனும் அனுதினமும் சென்றார், வேலை செய்தார். கூடவே அவருடைய நண்பர்களும், விருந்தாளிகளும் அவருடன் சென்றனர். அவர்கள் திருப்பிக் கொண்டு வந்த, குப்பையும் மலமும் நிறைந்த வாளிகளை, அதற்கென வெட்டப்பட்ட குழிகளில் கொட்டினர். காந்திக்கு, சரியான முறையில் கழிவுகளை அகற்றுவதும் அறிவியல் தான்; அவரைப் பொறுத்தவரை – அதுவும், எதுவும் அறிவியல் சார்ந்திருக்க வேண்டும்… =-=-=-= அவருடைய ஆசிரமங்களில், கழிவுகளை அப்புறப் படுத்தும் வேலையை ஆசிரமவாசிகள் அனைவரும் செய்ய வேண்டும். காந்தி அவர்களுக்கு, அதற்குத் தேவையான வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தார். பல இன, மத, நிற  – பின்னணி சார்ந்த பலவித பழக்கங்களுடைய மக்கள் அவர் ஆசிரங்களில் வாழ்ந்தாலும், ஒரு விதமான குப்பையோ, துளிக் கழிவையோ அங்கு பார்க்கவே முடியாது. அனைத்துக் கழிவுகளும் குழிகளில் புதைக்கப் பட்டன. காய்கறிக் கழிவுகள், தோல்கள், சாப்பாட்டு மிச்சங்கள் போன்றவை, அதற்கென தோண்டப் பட்ட எருக் குழிகளில் போட்டு மூடப்பட்டன. மனித மலமும் புதைக்கப் பட்டுப் பின் உயர்ந்தரக எருவாக மாற்றப் பட்டு, உபயோகிக்கப் பட்டது. உபயோகித்த நீர், கழிவு நீர் – தோட்டங்களில் பாய்ச்சப் பட்டது. அவருடைய பண்ணைகள் / ஆசிரமங்களில் நவநாகரீக பாதாள சாக்கடை போன்ற வசதிகள் இல்லாவிட்டாலும் மிக சுத்தமாக இருந்த காரணத்தால், துர் நாற்றமோ, ஈத்தொல்லையோ இருக்கவே இல்லை. காந்தியும் அவருடைய சகோதரப் பணியாளர்களும், முறை வைத்துக் கொண்டு, ஆசிரமத்துக்குத் தேவையான தோட்டி வேலைகளைச் செய்தனர். காந்தி அந்த ஆசிரமங்களில், வாளிக் கழிப்பறைகளையும், மலமும் நீரும் தனித்தனியே சேகரம் செய்யக் கூடிய இரட்டைக்குழி முறையையும் – அறிமுகப் படுத்தினார். அவர் ஆசிரமங்களுக்கு வருகை தந்த எல்லா விருந்தாளிகளிடமும், அங்கிருந்த நூதனக் கழிவு மேலாண்மை முறைகளை, பெருமிதத்துடன் காட்டி மகிழ்ந்தார். பணக்காரர்களோ ஏழைகளோ, தலைவர்களோ தொண்டர்களோ, இந்தியர்களோ வெளி நாட்டார்களோ – எவர் அவர் ஆசிரமங்களுக்கு / பண்ணைகளுக்கு வந்தாலும், அவர்கள் இம்மாதிரிக் கழிப்பறைகளைத்தான் உபயோகிக்க வேண்டியிருந்தது. இப்படிப்பட்ட ஆராய்ச்சிகளால், முறைகளால் – ஆசாரவாதிகளிடமும், பெண்களிடமும் இருந்த, கழிவுகள் மீதான அருவருப்பை – அவரால் கொஞ்சம் கொஞ்சமாக அகற்ற முடிந்தது. =-=-=-= எப்போது அவருக்குச் சிறிது சுத்தப் படுத்தும் வேலை கிடைத்தாலும், காந்தி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரைப் பொருத்தவரை, ஒருவருடைய சுத்தம் பற்றிய உணர்வு என்பது, அவருடைய கழிப்பறையை அவர் எப்படி வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதிலேயே தெரிந்துவிடும். அவருக்கு 76 வயது ஆகும்போது அவர் பெருமையுடன் சொன்னார், “ஒரு சிறிய அழுக்கோ, அல்லது நாற்றமோ, சிறு வாடையோகூட  நான் உபயோகிக்கும் கழிப்பானில் இருக்காது; ஏனெனில் நானே அதனைச் சுத்தம் செய்கிறேன்.” பல சமயங்களில் அவர் தன்னை ஒரு தோட்டியாகவே விவரித்துக் கொண்டார் – அவர் ஒரு தோட்டியாகவே இறக்க முடியுமானால் அதுவே அவருக்குப் போதுமானது எனச் சொன்னார். மேலும் அவர், இந்துக்களில், மெளடீக-ஆசாரசீலர்களான இருந்தவர்களிடம் – தீண்டத்தகாதவர்களுடன் சேர்த்து தன்னையும் பகிஷ்கரிக்கும்படிச் சொன்னார். அவர், தோட்டிகள் குடியிருப்புக்குச் சென்று [பெரும்பாலும் எங்கு அவர் சென்றாலும், தோட்டிகளுடனேதான் தங்குவதை ஒரு பழக்கமாகவே வைத்திருந்தார்] அவர்களுடன் அளவளாவிக் கொண்டு இருக்கும் போது, அவர்கள் தங்களுடைய துயரக் கதையைச் சொல்வர். அவரும், அவர்களுக்குச் சொல்வார் – அவர்களுடைய தொழில் இழிவானதொன்றல்ல; மேலும், அவர்கள் குடிப்பழக்கத்தையும், இறந்த மிருகங்களின் இறைச்சியை உண்பதையும் விட்டுவிடவேண்டுமென்றும். அவர் என்றுமே தோட்டிகள் வேலை நிறுத்தம் செய்வதை ஆதரிக்க முயன்றதில்லை; அது மட்டுமல்ல, அவர்கள், ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யலாமென்றும் கூடச் சொன்னதில்லை. [அவர் பணிகளை, நமது கர்மங்களைப் பார்த்தவிதம் அப்படி. தனக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு இன்னொரு நீதி என்று நினைத்தவரல்லர் அவர்] அவருடைய ’ஹரிஜன்’ பத்திரிக்கையில், ஒரு தோட்டி என்பவர் எப்படி இருக்கவேண்டுமென விவரித்தார்: “அவருக்கு சுற்றுச்சூழலுக்கு, தேவைக்கு ஏற்றவாறு எப்படி, ஒரு கழிப்பறையைக் கட்டவேண்டுமெனத் தெரிய வேண்டும்; அதனைச் சரியான வழியில் சுத்தம் செய்வது எப்படி எனவும் தெரிய வேண்டும். அவருக்கு, மலத்தினுடைய வாடை இருந்தாலும் அதனைப் பொருட்படுத்தாமல் அதனை மீறி, எப்படி அதன் துர்நாற்றத்தைப் போக்குவது என்பது தெரிய வேண்டும். மேலும் அவர் எம்மாதிரிக் கிருமிநாசினிகளை உபயோகித்து மலத்தை ஆபத்தற்றதாக மாற்ற வேண்டும் என்பதை அறியவும் வேண்டும். இவற்றுக்கெல்லாம் அப்பால், எப்படி மலத்தையும் சிறுநீரையும், எருவாக மாற்றுவது என்பதன் முறைகளையும் அறிந்திருத்தல் வேண்டும்.” காந்தி என்ன செய்ய முயன்றாரென்றால்: தோட்டி வேலை, ஒரு திணிக்கப் பட்ட,  ஒரு சாராரால் மட்டுமே தொடர்ந்து செய்யப் பட்ட வேலையாக இருந்ததிலிருந்து மாற்றப் பட்டு – அதனை ஒரு இன்றியமையாத சமூகப்பணியாகக் கருதப்படும் தளத்திற்கு உயர்த்துவது தான். =-=-=-= காந்தியுடைய ‘காதி’ சுற்றுப் பயணங்களின்போது ஒரு சமயம் – அவர் பேச இருந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்க, தோட்டிகள் அனுமதிக்கப் படவில்லை. அவருக்கு இந்த விஷயம் தெரியவந்த போது, அவர் அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் சொன்னார், “நீங்கள் உங்களுடைய பணவெகுமதிகளையும், உங்கள் மேடைப்பேச்சுக்களையும் உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள். நான் தீண்டத்தகாதவர்களோடு மட்டுமே பேசப் போகிறேன். உங்களில் எவருக்கு அக்கூட்டத்திற்கு வரத் தோன்றுகிறதோ அவர்கள் அங்கு வரலாம்.” =-=-=-= அவருக்கு 77 வயதாக இருக்கும்போது (இறப்பிற்கு இரு வருடங்கள் முன்னால்) காந்தி மும்பயிலும், டெல்லியிலும் இருந்த தோட்டிகளின் குடியிருப்பில், வழக்கம் போல, சில நாட்கள் தங்கியிருந்தார். ஆனால் அச்சமயம், அவர் விரும்பினாலும், அவருடைய வயது காரணமாக அவரால் அக்குடியிருப்பிலேயே தங்கி அங்கு சமைக்கப் பட்ட உணவையே சாப்பிட முடியவில்லை. அக்குடியிருப்பிலேயே தங்க முடிந்தாலும், அவர் மேல் உள்ள அபிமானத்தால் அவருக்கு பலச் சலுகைகள் அளிக்கப் படுவதையும் அவர் விரும்பவில்லை. =-=-=-= காந்தி, ஒருசமயம் வைஸ்ராயைப் பார்ப்பதற்காக ஷிம்லா சென்றிருந்தபோது, தன்னுடன் பணிபுரிபவர் ஒருவரை அங்கிருந்த தோட்டிகளின் குடியிருப்புக்கு அனுப்பி அதனைப் பார்வையிடப் பணித்தார். அவர் திரும்பி வந்து, அந்தத் தோட்டிகளின் குடியிருப்பு, படு மோசமான நிலைமையில், விலங்குகள் கூட வாழமுடியாத நிலையில் இருப்பதைச் சொன்னவுடன் காந்தி மிகுந்த மனவருத்தமுற்றுச் சொன்னார், “இப்படி நாம் நம் தோட்டிகளை மிருகங்களை விடக் கேவலமான நிலைமைக்குத் தள்ளியிருக்கிறோம்… … ஏதோ அவர்கள் இப்படிக் கொஞ்சம் காசு சம்பாதித்தாலும், அது அவர்களின் மனிதத்தையும் கண்ணியத்தையும் சிதைத்துத் தானே வருகிறது? அந்தத் தோட்டி, மலத்துக்கு நடுவில், கழிப்பறை சுவற்றின் நிழலில் பயந்து பதுங்கியபடி,  தன் உணவை உண்பதைப் பாருங்கள். நம் இதயத்தைப் பிளக்கும் சோகமில்லையா இது?” தோட்டிகள், மலம் நிரம்பிய வாளிகளைத் தங்கள் தலையில் சுமந்து செல்லும் காட்சி அவரை மிகவும் வருத்தம் கொள்ளச் செய்தது. =-=-=-= அவர் சொன்னார்,  தகுந்த உபகரணங்களின் உதவியுடன் வேலை செய்தால், நிச்சயம் வெகு லகுவாகவும், சுத்தமாகவும் தோட்டிப் பணியை முடிக்கமுடியுமென்று; தோட்டி வேலை ஒரு உயர்ந்த கலை என்று அவர் கருதினார். மேலும் அவர், அந்தக் கலையை, தன்னை அசுத்தப் படுத்திக் கொள்ளாமல் பலமுறை செய் நேர்த்தியுடன் செய்து காட்டினார் – அவர் வெறும் பேச்சுக்களோடு நிற்கவில்லை. ஒரு சமயம், ஒரு அயல்நாட்டுக்காரர் காந்தியைக் கேட்டார், “உங்களை ஒரு நாளுக்கு மட்டும் இந்தியாவின் வைஸ்ராயாக இருக்கச் செய்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்?” காந்தி சொன்னார், “ நான், வைஸ்ராயில் இல்லத்தருகே வசிக்கும் தோட்டிகளின் குப்பைக் கூடங்களாக இருக்கும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வேன்.” “ஒருக்கால், உங்களுக்கு இன்னொரு நாளும் அப்படியே வைஸ்ராயாக இருக்க நீடிப்புச் செய்தால்?” காந்தி பதிலளித்தார், “அதே வேலையை, நான் அந்த நாளும் செய்வேன்!” நன்றி :: ஒத்திசைவு ராமசாமி  […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s