வினவு = புரட்சி கர (நகைச்சுவை, அபுரிதல், அபத்தம், மைதுனம்)

23/06/2012

ஈ வே ராமசாமிப் பெரியார், ஒரு சமயம் ஆங்கிலத்தில் சொன்னார்:

“I can even tolerate that ‘onion‘ free speech, but I can never, NEVER, even in my worst nightmares – dream of supporting free fart, dravidastan included. The fart as you know, in fact, stinks; and anyone who has a nose, knows that!”

ஆனால் பாவம்,  நமது வினவு தளத் தோள்வலி காணா தோளர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் தான் இவர்கள் சகட்டு மேனிக்கு தொடர்ந்து விட்டுக் கொண்டே இருக்கின்றனர்!

=-=-=-=

ஹ்ம்ம்ம்… எப்படியும் மாதத்திற்கு ஒருமுறை போல வினவு இணையத்தளத்திற்கு – என் ‘கிடந்து உழலும்’ வாழ்க்கையினூடே, குடிகாரத் தகப்பன்களுடன்  என் பள்ளிக் குழந்தைகள் எதிர்காலம் சார்பாகப் பேசப்போய் அவர்தம்  இடிகளைத் தாங்கி நொந்து கொண்டிருக்கும் தருணங்களில்,  பதினாறு-பதினேழு வயதிலேயே எம் கிராமப் பெண்பிள்ளைகள்  மணவாழ்க்கைக்குள் தள்ளப் படுவதைத் தடுக்க முடியாத போது –  வாழ்க்கையின் அர்த்தமின்மையைப் புரிந்துகொள்ள வேண்டி, வெறுத்துப்  போய் மாரடைப்புக்குப் பலியாகாமலிருக்க – நகைச்சுவையைத் தேடிப்  போவதுண்டு.

பொதுவாகப், பல சமயங்களில், வினவு தள  இடுகைகளின் (விடுகைகளின்?)  தலைப்புகளைப் படிப்பதே போதுமானதாக இருக்கும், சிரித்துச் சிரித்து  வயிறு வலிக்கும்; சிலபல எடுத்துக் காட்டுக்கள்:

(இச்சமயம் – சில நண்பர்கள் வசவு என்று  இத்தளத்தைக் குறிப்பிடுவதை நான் ஏற்கவில்லை என்பதை இங்கு  புரட்சிகரமாகப் பதிவு செய்ய நான் கடமைப் பட்டிருக்கிறேன்)

… நிற்க. சில சமயம், நான் தேவையான அளவு புளகாங்கிதம் அடையக் கூடுமா என்கிற சந்தேகமிருப்பின் சில அதிபுரட்சிகரச் சாட்டையைச்  சுழற்றும் பின்னூட்டங்களையும் படிப்பதுண்டு. இவை படிக்கும் போது  புட்டத்தில் சொறிந்து கொண்டே லாகிரியில் மிதப்பது, ஏதோ புரட்சிக்கு என்னால் ஆன உபயம். (எதிர்காலத்தில், புர்ச்சிக்குப் பின் காமிசார்கள், புர்ச்சிக்கான என் பங்கை இவ்வாறு நான் ஆற்றியமை குறித்து அறிந்து  கொண்டு என்னை ‘தண்ணியில்லாத காட்டுக்கு’ குலக் கொழுந்தாக  அனுப்பாமலிருக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன் கூட)

… புரட்சிகர இந்துநேசனின் சமூக அவலங்களைச் சாடும் பாணியை, அதன் பொறுக்கமுடியாத வீராவேசத்தை, உரத்த குரலில்  பிலாக்கணமிடும் பெட்டைப் புலம்பலை, பின் நவீனத்துவ புரட்சிகரச் செங்கொடி பட்டொளி வீசிப் பறப்பதை – யார் தாம் மெச்சாமல் இருக்க  முடியும்?

 =-=-=-=

என் பத்தாம் வகுப்பு மாணவியை, மிக நன்றாகப் படிப்பவளை, அவள் வீட்டில் மேலே படிக்க விடாமல் ‘நிறுத்தி’ விட்டனர். மேல பட்ச்சா மாப்ள கெடைக்க மாட்டானாம்! இன்னிக்கில்லாக்காட்டீ நாளக்யி மாம்யார் வூட்டுக்குப் போறவ தான, ஏன் வெட்டிச் செலவு!

அவர்கள்  வீட்டிற்குப் போய்ப் பேசி நானும், என் நண்பர்கள் மூலமாகவும் பணம்  மற்றும் அனைத்து உதவிகளும் செய்வதாகச் சொன்னாலும் – அந்தச் சிறுமியை விட்டே, “சார், எனக்கு மேல படிக்க இஷ்டமில்ல, நீங்க ஒங்க வூட்டுக்கு போங்க சார், ப்ளீஸ்” என அவள் கண்ணில் நீர் தளும்பச், சினிமா போலச் சொல்ல வைத்தார்கள், பாவிகள்! வயிறு பற்றி எரிகிறது எனக்கு.

ஆக இன்று, நடப்புக் கல்வி வருடத்துக்கான முதல் நாள், என் பள்ளியில் கோலாகலமாக ஆரம்பித்தது. (ஐயகோ!)

இப்படிப்பட்ட எளிதில் தூங்க முடியாத முன்னிரவில்,  இப்படியாகத்தானே நான் இன்றும் வினவாமல் வினவு வந்து சேர்ந்தேன்…

ஐயகோ, என் கையறு நிலையைப் பாரீர்!

 =-=-=-=

 இன்றைய நகைச்சுவை:

இணையம் உருவாக்கியது: முதலாளிகளா, மக்களா?  in அமெரிக்கா, அறிவியல், பன்னாட்டு நிறுவனங்கள் by வினவு, June 23, 2012

http://www.vinavu.com/2012/06/23/internet-belongs-to-us/

அடப் பாவிகளா! நிலப்பிரபுக்களை அடித்து, முதலாளிகளைக் கடித்துப் பின்னர் புரட்சியைத் துப்பினது போதாது என்று தொழில்நுட்பங்கள் மீதும் உங்கள் பளிச்சிடும் அறியாமைச் சிறுநீரைப் பீய்ச்சுகிறீர்களே! இது நியாயமா?

மக்களில் எவரும் முதலாளி இல்லையா? முதலாளிகள் மக்களில்லையா? உங்களுடைய வினவு.காம் தளமே உங்களுக்குச் சொந்தம் தானே, அது ஜப்பானில் உள்ள நாகனோ நகரத்தில் உள்ள ஒரு கணினியிலிருந்து இயங்கினாலும்? நீங்களும் முதலாளிகள் தானே?

உங்கள் பேராசான் இந்தியாவைப் பற்றி மிகக் குறைந்த பட்சப் புரிதலுடன், ஆனால் வண்டை வண்டையாக எழுதிய மேதாவித் தனம் ததும்பும் கட்டுரைகளைப் படித்ததால் தான் உங்களுக்கு இவ்வளவு துடுக்குத் தனமா?

எல்லாவற்றுக்கும் பின், சுட்டியையே இப்படி “Internet belongs to US” என்பது போல் கொடுக்கும் அறியாப் பிள்ளைத்தனம் வேறு!

கண்டமேனிக்கும் கட்-பேஸ்ட்-ட்ரான்ஸ்லேட் செய்து, தொழில்நுட்ப ரீதியாகவோ அல்லது தொழில்முனைவு ரீதியாகவோ கூட ஒரு இழவையும் புரிந்து கொள்ளாமல், ஏன், அதற்கு முயற்சி கூடச் செய்யாமல், உளறிக் கொட்டி, மேதாவித் தனமாக ஒன்றிரண்டு ‘சுட்ட’ படங்களும் இணைத்தால் (இதில் கூடச் செய்நேர்த்தியில்லை!), இது ஒரு நுணுக்கமான அறிதலும் புரிதலும் கொண்ட ஒரு தொழில் நுட்பம் சார் கறார் கட்டுரையாகி விடுமா?

இம்மாதிரி புரட்சிகர உளறலிடுகையிடுவதற்கு உங்களுக்கு என்ன, எல்லாம் வல்ல கருணாநிதி என்கிற நினைப்பா? (பார்க்க: ‘கலைஞர்’ என்றால் சகட்டுமேனிக்கு உளறுபவர் என்று அறிக…)

இன்டர்னெட் வலைப் பின்னலுக்கு அப்பால், அப்போதும் இருந்தது, இப்போதும் இருப்பது அமெரிக்காவின் ராணுவமே.

DARPA என்கிற அமெரிக்க ராணுவ முயற்சியால் தான். இதன் முன்னாலும் பின்னாலும் இருந்த பெரும் முதலாளிகளால் தான் இன்டர்நெட் என்கிறது ஏற்பட்டது என்பது வினவுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த  இன்டர்நெட்டின் ஒரு பகுதி தான் நாம் வலைப்பின்னல், இணையம் என்று பலவாறு அழைக்கின்ற / சொல்கிற World Wide Web  என்பதாவது தெரியுமா? 1960களிலேயே இதற்கான முத்தாய்ப்புக்கள், முயற்சிகள் தொடங்கி  விட்டது தெரியுமா?

உலகளாவிய, பரந்துபட்ட, சங்கிலித் தொடர்வில் – இணையதள முகவரி தரும் சேவையின் (இது ஒரு இன்றியமையாத சேவை) உச்சாணிக் கொம்பில் யார் இருக்கிறார்கள் தெரியுமா?

ஐஈடிஎப் (இணைய பொறியியல் செயற் குழு) போன்ற குழுக்களில் யார் இருக்கிறார்கள், யார் அதற்கு நிதி வழங்குகிறார்கள் என்றாவது தெரியுமா?தற்போது ஒரு பெரும் ‘முதலாளிய’ நிறுவனமும், அமெரிக்காவின் NSA – தேசியக் காப்பு ஆணையமும் தான்!

வலை, தேடுதல், அட்டவணைப் படுத்தல்கள் – பார்த்தால், 1940களிலிருந்தே தொடங்கி விட்டன தெரியுமா? வான்னவர் புஷ் (Vannevar Bush) என்ற தீர்க்கதரிசியைக் கேள்விப் பட்டதுண்டா? இவரையே தெரியவில்லை என்றால், பாவம் வினவுக்கு, டெட் நெல்ஸன் பற்றியோ, ஜெரார்ட் ஸால்டன் பற்றியோ தெரிந்திருக்க  முகாந்திரமே இல்லை!

யாஹூவுக்கு முன்னாலேயே இருந்த ஆயிரத்தெட்டு தேடும் பொறிகளைப் பற்றி அறியுமா வினவு? யாஹூவும் கூட, மனித உழைப்பை மட்டும் வைத்து தன்னுடைய அட்டவணைப் படுத்தலை நிகழ்த்தவில்லை என்பது தெரியுமா? அதுவும் மென்பொருள் சிலந்திகளை வைத்துக் கொண்டு தான் பணி செய்தது, செய்வது தெரியுமா? இது பற்றி ஒரு மண்ணும் அறியாமல் கூக்ள்-ன் மகாத்மியம், சமூக வலை வீஈசல்களின் பராக்கிரமம் இன்னபிற வேறு!

இக்குப்பைக் கட்டுரையைப் படிக்கப் படிக்க வெறுப்பு தலைக்கேறுகிறது. வினவு வினவு என்று இந்த விசிலடிச்சான் குஞ்சுகள், பரக் பரக்கென்று தினவெடுத்துச் சொறிந்து கொண்டால் போதுமா?

குப்பைத் தனமாக, உழைப்போ நேர்மையோ இல்லாமல் அதி மேதாவித் தனமாக தொழில் நுட்ப உளறல்களுடன்,  புளுகுணி அரைகுறை வரலாற்றைச் சித்தரிப்பது ஒரு பக்கம்.

இந்த அழகில், இன்னொரு பக்கம் இணையத்துப் ‘பொருளாதார அடிப்படைகள்’ பற்றிய அரைவேக்காட்டுச் சித்திரங்கள் வேறு!

=-=-=-=

இந்தக் கடாசப் பட வேண்டிய கழிசடைக் கட்டுரையை எழுதியவர்(!) பெயர் அப்துல் – இதன் அரபிய அர்த்தம் – ‘பணிவுள்ள பணியாளன்’ என்பதாக மங்கலாக நினைவு…

ஆக, வினவு தளத்தின் பணியாளர்களின் மகத்தான நகைச்சுவைப் பணியும், பிணியும் தொடர என் ஆசிகள்.

=-=-=-=

நிச்சயம் இந்த இணையம் முதலாளித்துவத்தின் கொடை தான். அதற்கு, வினவு சார்பாகவும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன்!

=-=-=

… நாளை, ஞாயிற்றுக் கிழமை அச் சிறுமியின் ஒரு இளம் மாமனைப்  பார்த்துப் பேசப் போக வேண்டும்.

இந்த இளைஞர் மூலமாவது ஏதாவது நடக்கக் கூடுமா எனப் பார்க்கலாம். ஒரு சிக்கல் என்னவென்றால் அவர் எங்கள் கிராமத்தின் ‘சிவகாசி சரவெடி விஜய்’ ரசிகர் மன்றச் செயலாளர்!

இந்த விஜய் (சினிமாக் கவிதையாளர் பாவி ஜய் அல்ல!) எந்தப் படத்திலாவது சொன்னதை நான், ஒரு துருப்புச் சீட்டாக, அல்லது ‘பன்ச் டயலாக்’ ஆக உபயோகிக்க முடியுமா?

உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

… ஒருக்கால் இந்த முயற்சியும் தோல்வியடையக் கூடிய பட்சத்தில், தேவரீர் வினவு தளத்தினர் நாளை இரவுக்குள் தயவு செய்து, என்னை ஆசுவாசம் செய்து கொள்ள, இன்னொரு இடுகையை இடுவார்களா?

முக்கியமான பின் குறிப்பு: ஈ வே ராமசாமிப் பெரியார் = ஈது வேறு ராமசாமிப் பெரியார் = அதாவது, நான்.

‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’!

Advertisements

3 Responses to “வினவு = புரட்சி கர (நகைச்சுவை, அபுரிதல், அபத்தம், மைதுனம்)”

  1. sathi62 Says:

    ‘இழுக்கலுடையது இளமை’ விடலை பருவ மாணவர்களை படிக்க வைக்க முன்னுக்குக் கொண்டுவர முயல்வது பாராட்டுக்குரியது. எனக்குக்கூட போதிய கல்வியறிவுயின்றி போக்கிரிகளெல்லாம் ஏதோ கட்சி புரட்சி என்கிறார்களே என்று புளங்குவது உண்டு.

  2. வடக்குபட்டி ராமசாமி Says:

    மிக்க நன்றி அய்யா இது போன்ற குமாஸ்தா புரட்சியாளர்கள் பெரிய கார்பரேட் நிறுவனத்தில் வேளை செய்து கொண்டே இது போன்ற கிச்சு கிச்சு கட்டுரைகளை எழுதி தள்ளி வருகின்றனர்..இது அவர்களுக்கு ஒரு சம்மட்டி அடி(இருந்தாலும் அந்த எருமைகள் மழை தெரியாமல் வசை தொடரும் மான்புடையது)

  3. ராஜா Says:

    ஒரு வேண்டுகோள் ரசிய ஸ்டாலின் அவர்களின் அருமை பெருமைகளை தனி தொடராக நீங்கள் எழுத வேண்டும் என்பது என் வேண்டுகோள்…


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: