அறிவியலிலிருந்தும் ’விடுதலை!’

28/07/2012

கடந்தபல வாரங்களாகத் தொடர்ந்து எதிர்மறையான, புத்தியைச் செயலிழக்கச் செய்துவிட்ட பல நிகழ்வுகள், அலைச்சல்கள். அடிப்படைக் கேள்விகள் எழுந்தபடியிருந்தன. ஒரே அயர்வு.

ஆக, ஓடினேன், ஒடினேன் வாழ்க்கையின் விளிம்புக்கே ஓடினேன், மன அமைதியைத் தேடி, நகைச்சுவையைத் தேடி.

ஆனால், நகைச்சுவை என்றால் எனக்கு வீரமணி அவர்களின் விடுதலை (”உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு” – அவர்களே போட்டுக் கொண்டுள்ளார்கள்!) தான் அடைக்கலம் தரும்.

இம்முறையும் தப்பவில்லை…


பெட்ரோலுக்கு பதில் தண்ணீரில் ஓடும் கார்: பாகிஸ்தான் பொறியாளர் சாதனை

அய்யோ! இது ஒரு தலைப்புச் செய்தி!!

இஸ்லாமாபாத், ஜூலை 28- உலகம் முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதன் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

எனவே பெட்ரோலுக்கு பதில் வாகனங்கள் தண்ணீரில் ஓடினால் எப்படி இருக்கும் என்று அனைவரும் விளையாட்டாக சொல்வது உண்டு. அதை உண்மையாக்கும் வகையில் தண்ணீரில் கார் ஓட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் இதனைத் தவறாக தண்ணீரை உபயோகித்து என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விடுதலைகளுக்கு யாராவது நம் தமிழில் நாலு வார்த்தை, சரியாகக், கோர்வையாக எழுதுவதற்கு யாராகவது கற்றுக் கொடுப்பார்களா?

அனைவரின் கனவையும் நனவாக்கி அபார சாதனை படைத்தவர் பெயர் வாக்கர் அகமது. பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர். பொதுவாக வாகனங்களை பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் மூலம் இயக்க முடியும்.

இந்த ஆகா வாஃர் அஹமத் அவர்கள் (இவருடைய நம்மூர் முந்தைய அவதாரம் தாம், ராமர் பிள்ளை அவர்கள் என  நினைக்கிறேன்) தன் தாடிக்குப் பின்னால் மறைந்துகொண்டு படு சீரியஸாகக் கொடுக்கும் ஒரு பேட்டி (உங்களுக்கு வேறு உபயோகமாக வேலை எதுவும் இல்லையென்றால் இங்கே!

ஆனால், அவற்றை தண்ணீர் மூலம் இயங்க வைக்க வாக்கர் அகமது தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன்படி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார் ஒன்றை தயாரித்தார்.

அய்யய்யோ!!

அதை பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் முன்னிலையில் வெற்றிகரமாக ஓட்டி காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

இம்மாதிரி அமைச்சர்களை பெறுவதற்கா, பாகிஸ்தான் நம்மிடமிருந்து பிரிந்தது? பாவம்.

இவர் வடிவமைத்த அந்த கார் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்க கூடியது. அதற்கு தகுந்தபடி கார் என்ஜினை மாற்றி அமைத்துள்ளார். அதற்குள் ஊற்றப்படும் தண்ணீர் கொதித்து அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் வாயு மூலம் கார் இயங்குகிறது.

அல்லது, இவர் தன் பின்புறமாக விடும் வாயுவினால், முன் பக்கமாக நகர்கிறார் என ந்யூட்டனின் மூன்றாம் விதி வழி  அறிந்து இறும்பூதடைக…

ஐயகோ! தொழில் நுட்பத்தை இப்படி அறுசுவை சமையல் குறிப்பு மாதிரி நகைச்சுவையாக்கி விட்டார்களே! பாவிகள்.

கூடு விட்டிங்கு ஹைட்ரஜன் தான் போயினபின் எஞ்சினே அனுபவிக்கும் எனர்ஜியை. வோக்கே சரி, பாவிகாள் அந்த பாவப் பட்ட ஆக்ஸிஜன் என்ன செய்தது?

என்ன உளறல் செய்தி! விடுதலைக்கு ஆன்மிகம் தத்துவம் பற்றியெல்லாம் ஒரு இழவும் தெரியாது. பரவாயில்லை. ஆனால், இந்த அடிப்படை அரிச்சுவடி அறிவியலிலுமா இப்ப்டி ஒரு கேனத்தனம்? நல்லவேளை, ஈவெரா முன்னமே இறந்துவிட்டார் – இல்லையென்றால் அவர் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு செத்திருப்பார், இந்த கலவரம் தரக்கூடிய அறியாமையை வைத்துக் கொண்டு இவர்கள் வீரமாக நடை பயிலுவதைப் பார்த்து!
இந்த நெஞ்சடைக்கவைக்கும் நகைச்சுவையினால் தட்டுத் தடுமாறி உண்மை இதழ் பக்கம் போனால், அய்யோ, கேட்பாரில்லையா இந்த அநியாயத்தை… பாவிகள், என்னைத் தூங்கவிடாமல் உளறிக் கொட்டி வதைத்தெடுத்து கிச்சுக்கிச்சு மூட்டியே என்னைக் கொலை செய்ய முயல்கின்றனர்…

பல ஊடகங்களில் இந்த ஹிக்ஸ் போஸானை ‘கடவுள் துகள்’ என திகைக்க வைக்கும் அறியாமையுடன் குறிப்பிட்டதால் / எழுதியதனால் வந்த வினை – கிளம்பிற்று காண் இந்தக் குறுமதி விடுதலை+உண்மையாளர் கூட்டம்! இவர்கள் வரிந்து கட்டிக் கொண்டு அற்புதமான ப்ரபஞ்ச தத்துவங்களையும் விட்டு வைக்காமல் கொச்சைப் படுத்த ஆரம்பித்துவிட்டார்கள்!

சென்னை வேளச்சேரி முருகானந்தம் என்பவரை நேர்காணல் செய்து – உடுமலை வடிவேல் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் – உண்மையில்: ஹிக்ஸ் போசான் கண்டறிந்தது எப்படி?

இதன் தலைப்பினை – ’பெரிய வெங்காயம்’ என மாற்றிப் படிக்கவும்…. படிக்க நேர்ந்தால் :சூரியனுக்குள் நாம் வாழும் பூமியைத் தூக்கிப் போட்டால் ஒரு நொடியில் சாம்பாலாகிப் போய்விடும்” போன்ற விஷயங்களைத் திருப்பித்திருப்பிப் படித்துத் துணுக்குறவும்.

இது போதாதென்று க அறிவுக்கரசு என்பவர் ஒரு கட்டுடை (கட்டுரை அல்ல) எழுதியிருக்கிறார்: தூள்… தூளான கடவுள், கடவுளை அழிக்கும் துகள்

இதன் தலைப்பினை – சாம்பார் (அ) ’சின்ன வெங்காயம்’ என மாற்றிப் படிக்கவும்… இதிலும் “கடவுள் உண்டாகட்டும் எனக் கூறியதும் எல்லாம் உண்டாகின என்று மூன்று மதங்கள் முனகிக் கொண்டிருப்பது முட்டாளின் முனகல் என்று மதத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்திருக்கிறது அறிவியல்.” என்பது போன்ற ’ஆணித்தரமான’ அறிவியல் செய்திகள் உள்ளன.

வடிகட்டிய பொய்களும் உள்ளன: “ஆனால் இங்கே? விண்வெளியில் யூரி காகரின் பறந்த நிகழ்ச்சியைப் பத்திரிகையில் படித்த இந்திய விஞ்ஞானி ஒருவர் இதெல்லாம் சுத்த தப்புங்க! விண்வெளி கடவுளின் சாம்ராஜ்யம். அங்கெல்லாம் மனுசாள் போகப்படாது எனக் கூறினார். அவர் சி.வெங்கட்டராமன் எனும் அய்யங்கார். சர் பட்டம் பெற்றவர். நோபல் பரிசும் பெற்றவர். ஆம், சர்.சி.வி.ராமன்தான்! ஆயிரம்தான் அறிவியலாளராக இருந்தாலும், இந்துமதப் புத்தி அவரைவிட்டுப் போகவில்லை! ஆனால் அங்கே அப்படி இல்லை!”

இந்த இரண்டு கட்டுடைகளிலும் அறிவியல் தான், ஒரு முடிக்கும் இல்லை – ஆனால் நிறையவே நகைச்சுவை!

விடுதலைக்கும் உண்மைக்கும் நன்றி பல!

2 Responses to “அறிவியலிலிருந்தும் ’விடுதலை!’”

  1. ramasamy Iyengar Says:

    சர் பட்டம் என்ன எந்த பட்டம் வாங்கினாலும் நீங்கள் முட்டாள் தனமான இந்து சனாதான குப்பையைதான் தூக்கிபிடிப்பீர்கள் என்பது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும்.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s