ஒரு குறிப்பு

01/09/2012

பல நாட்களாகி விட்டன பதிவுகள /இணையம் பக்கம் வந்தே. பலர் தொடர்பு கொண்டீர்கள். உங்கள் மின்னஞ்சல்களுக்கு நன்றி. நான் உங்களை தனித் தனியாகவும், முன்னமேயும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.   மன்னிக்கவும். என் அசட்டை தான் காரணம்.

ஒரிருவருக்குப் பதில் எழுதினேன் – ஆனால் நேரமின்மை காரணமாக அனைவருக்கும் பதிலெழுதவில்லை – ஆக, இந்தக் குறிப்பை பதிலாக எடுத்துக் கொள்ளவும.

-0-0-0-

பள்ளியில் ஒரு கணினி மையம் அமைத்துக் கொண்டிருக்கிறேன். அது தொடர்பான அலைச்சல்களும் ஓட்டங்களும் அதிகமாகி விட்டன. முழுநேர ஆசிரியப்’பணி'() வேறு.

இதைத் தவிர கிராம மக்களுடன் (எங்கள் பள்ளிக்குழந்தைகளின் பெற்றோர்) குடி(+பொறுக்கித்தனம்), சுகாதாரம், ராட்சத ஒலிபெருக்கிகள், குழந்தைகள் சம்பந்தமான பல விதமான பிரச்னைகள்; பள்ளிக்கெதிரான தேவையில்லாத விஷமங்கள், வன்முறைகள்… உண்மையில், சில சமயம் தோன்றுகிறது – இக்காலங்களில் களப்பணி(பிணி?)யாளனாக இருப்பது மிகவும் மோசமான அவ நம்பிக்கையைத்தரும் விஷயம்.

தளர்ந்த. அலுப்பூட்டும் தருணங்களில், நமக்கும் குழந்தைகள் இருக்கின்றன, குடும்பம் இருக்கிறது – தானுண்டு தன் வேலையுண்டு என இருக்காமல் – வாழ்க்கை வியர்த்தம் ஆகிக் கொண்டிருக்கிறதோ என எண்ணங்கள். குழப்பங்கள்; ஆனாலும், எம் பள்ளிக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவாவது முடிந்ததை செய்யவேண்டுமெனவும் தோன்றுகிறது.

இன்னொரு கோணத்தில் பார்த்தால், யாரும் என்னைக் களப்பணியாளனாக இருக்க நிர்பந்திக்கவில்லை. ஆக தேவையற்ற பெட்டைப் புலம்பல் வேண்டாமென்பதும் சரியே. எல்லாம் ஸ்வயம் க்ருத அனர்த்தம் தான்.

But, life goes on rather merrily, if one can muster sufficient sense of humour, I suppose – and of course I have oodles of it… :-)

சில ’ஆஹா’ என்று சந்தோஷப்படத்தக்க விஷயங்களும் அவ்வப்போது இருக்கத்தான், நடக்கத்தான் செய்கின்றன – முட்டிமோதி எழுந்தால் சில நேரங்களில் – சமீபத்தில் ஹிக்ஸ்-போஸான் பற்றி 8-9 வகுப்பு மாணவர்களுடன் அளவளாவியது போன்று, ரீமன் ஜியோமெட்ரி நடத்தும் போது; அனைத்தும் நிச்சயம் விரக்தி அடையக் கூடிய அளவுக்கு இல்லை தான். இதைப் பற்றியெல்லாம்கூட எழுதவேண்டும் – சமயம் கிடைக்கும்போது.

हम होंगे कामियाब? … एक दिन ?
हो सकता है क्या??

… ஆக, தற்சமயம், பத்து நாட்களுக்கு ஒருமுறை இணையதரிசனம் கிடைத்தால் அதுவே அதிகம். ஒரு வேளை எனக்கு காலத்தைச் சரியாக உபயோகிக்கத் தெரியவில்லையோ என்ன இழவோ…

எது எப்படியோ, இன்னும் 2-3 வாரங்களில் கொஞ்சம் அவகாசம் கிடைக்குமென நினைக்கிறேன்.  அவசியம், (குறைந்த பட்சம் எனக்காவது) நம்பிக்கையைத் தரும் விஷயமான ‘பஹுருபி காந்தி’ மொழிபெயர்ப்பையும் முடிக்கிறேன்.  தற்போது, கிட்டத்தட்ட 20 பதிவுகள் அரைகால்குறையாக என்னைப் பார்த்து முழித்துக் கொண்டிருக்கின்றன! நானும் அவற்றைப் பார்த்து மலங்க மலங்க முழித்துக் கொண்டிருக்கிறேன்.

… இன்னும் கொ ஞ் ச   நா  ட்   க    ள் …

3 Responses to “ஒரு குறிப்பு”

  1. sathi62 Says:

    துணிச்சல் பளிச்சிடுகிறது தங்கள் எண்ணங்களில், எழுத்துகளில். வருங்கால சமுதாயம் பயனுள்ளதாக மாற்றும் அரும்பணியை அறப்பணியாக ஆற்றிவருவது மெச்சத்தகுந்தது. “அறத்தால் உயிர்க்குக் காவல்”

  2. Muthuswamy ravichandaran Says:

    perfectaly understandable. do all your work ‘with unhurried pace’ . it is important the translaation also appears ,may be , in its own time. but cime it must ravichandran

  3. ஆதி வேல் Says:

    எம் பள்ளிக்குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவாவது முடிந்ததை செய்யவேண்டுமெனவும் தோன்றுகிறது.—-சரியான கருத்து, வாழ்க உற்சாகத்துடன்… நன்றி!


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s