ஒரு காலத்தில் (1983 வாக்கில்?), நண்பர் ஒருவர் அமெச்சூர் ரேடியோ பேச்சுவாக்கில் உயர்வாகப் பரிந்துரைத்தாரே என்று – அம்மணி ஜெர்ட்ரூட் ஸ்டெய்ன் (Gertrude Stein) அவர்களின் ஒன்றிரண்டு புத்தகங்களை மிகவும் கஷ்டப்பட்டு, பொங்கும் கோபத்தை அடக்கிக் கொண்டு, அப்படி என்னதான் எழுதியிருக்கிறார் இந்த அம்மணி என்று வாசித்திருக்கிறேன். The Autobiography of Alice B. Toklas என்பது அவற்றில் ஒன்று என்று மங்கலாக நினைவு.

நண்பர் இதனை தளுக்கி மினுக்கிப் பிலுக்கிக்கொண்டு போலிப் பகட்டுடன் அலைவதற்காக (”உம்பர்தோ ஈகொ / இலியட் / பெக்கெட் / சோம்ஸ்கி /… என்னமா எழுதறான்யா – ஆனாக்க இவங்கெல்லாம் மக்கள அடைய ரொம்ப நாளாவும்” வகை) சிபாரிசு செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள எனக்குப் சிலகாலம் ஆகியது.

Read the rest of this entry »

… இன்னாங்கடா டாய்… ^% $ # @ ! &  (அல்லது) இணையத்தில் அ-அறிவியல், அ-சட்டுத்தனம், அ-யோக்கியம், அ-பத்தம், அ-புரிதல் – என்கிற சிறிது ரசக்குறைவான முந்தைய இடுகையைப் படித்தீர்களா?

எல்லாம் என் மாணவர்களால் வந்த வினை – அவர்களை பத்ரி சேஷாத்ரி, அருண் நரசிம்மன் தளங்கள் போன்ற சில வலை முகவரிகளுக்குச் சென்று அங்கு உள்ள, நாங்கள் விலாவாரியாகப் படித்து, அவதானித்திருந்த அறிவியல் பற்றி, தமிழில் இருந்த செய்திகளைப் படித்து (அணுவுலை உட்பட), தமிழில் கட்டுரைகள் எழுதுமாறு பணித்திருந்தேன்.

ஏன்?

எங்கள் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலவழிக் கல்விதான் லபித்திருக்கிறது – எனக்கோ, தமிழிலும் அறிவியல் பற்றி அழகாக எழுதுபவர்கள் இருக்கின்றனர் – அவர்களைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமென்ற ஆவல். தமிழிலும் அறிவியல் பற்றி, வாயோர நுரைதள்ளாத் தமிழில் தெளிவாக எழுதுவது முடியும் என்கிற அபிப்ராயம் / வெறி, எஸ் என் நாகராசனுக்கும், சுஜாதாவுக்கும், கி கஸ்தூரிரங்கனுக்கும் அப்பாலும் அறிவியல் பற்றி ஆழ்ந்த புரிதல்களுடன் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்கிற எண்ணம்… என் செய்வது!

ஹ்ம்ம். எல்லாம் பத்ரி சேஷாத்ரி அவர்களால் வந்த வினை.

Read the rest of this entry »

(அல்லது) இணையத்தில் அ-அறிவியல், அ-சட்டுத்தனம், அ-யோக்கியம், அ-பத்தம், அ-புரிதல்

இணையத்தில் உள்ள தகவல்களின், இடுகைகளில்,  கீச்கீச்களில், கிறுக்கல்களில் தலையாய பிரச்சினை என்னவென்றால், என்னவேண்டுமானாலும் எதைப்பற்றி வேண்டுமென்றாலும் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வண்டை வண்டையாக எழுதலாம். (என்னைப் போல)

கொஞ்சம் கூட எந்த இழவைப் பற்றியும் அடிப்படை புரிதல் கூட இல்லாமல், அறிவியலிலிருந்து அவியல் வரை, அறத்திலிருந்து முறம் வரை, அணுசக்தியிலிருந்து விந்துசக்தி வரை எழுதித் தள்ளலாம்; ஆக, ஒரு விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், ஒரு விதமான உழைப்பும் இல்லாமல், மிகவும் தைரியமாக, மகத்தான தன்னம்பிக்கையுடன், புன்னகையுடன் யார் வேண்டுமானாலும் வாந்தியைப் பீறிட்டு அடிக்கலாம், (என்னைப் போல)

அதுவும் இந்த எழுத்தாளன் ஒரு தமிழனாக இருந்து விட்டால், அதற்கும் மேல் ஒரு இலக்கியவாதிபேதியாக இருந்தால், தன்னிச்சையாக ஒரு அசட்டுத் தனமும், தன் அசட்டு அசட்டை பற்றிய ஒரு அதி புளகாங்கிதமும், தன்னுடைய முட்டாள்தனத்தை, தடித்தனத்தை – ஒரு பெரிய பெருமையாகக் கருதும் ’எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்’ மனப்பான்மையும் இருக்கவேண்டிய அவசியம் வேறு. (என்னைப் போல)

Read the rest of this entry »

என் நண்பர் வீரமணி அவர்கள் மிகவும் நேர்மையாகச் சில சமயம் பேசி விடுகிறார் – நம்பவேமுடியாதபடி! நேற்று முன் தினம் அவர் சொல்லியிருப்பதைப் படியுங்கள்:

ஒரு தலைவரின் பிறந்த நாளைக் கொண் டாடுவோர் எவராயினும் அவர் போதித்த கொள்கை, லட்சியங்கள், நடைமுறைகள் பற்றி சிறிதாவது சிந்தித்துச் செயல்பட முனைவதே உண்மையாக அவருக்கு மற்றவர் காட்டும் மரியாதையாகும்.

ஆனால் நம் நாட்டில் தலைவர்கள் பலருக்கும் பிறந்த நாள் விழாக்களில் படத்திற்கு மாலை, சிலைகளுக்கு மாலை – அவர்கள் போதித்த சீலங்களுக்கு விடை கொடுக்கும் ஓலை! இதுதான் இன்றைய யதார்த்தம் – (வரலாற்றுக் குறிப்புக்காகச் செய்யப்பட வேண்டியதுதான்).

Read the rest of this entry »

’டாக்டர்’ ஜேப்பியார் பற்றிய முதல் பகுதி / முந்தைய இடுகையைப் படித்தீர்களா?

எ வ வேலு, கு பிச்சாண்டி போன்ற கழகக் கல்விக் காவல் தெய்வங்கள் பற்றி இந்த இடுகையில்…

பல வருடங்களுக்கு முன் ஒரு கேலிச்சித்திரம் பார்த்த ஞாபகம் –  இது ’ஆனந்தவிகடன்’ மதன் அவர்களுடையதுதான் என நினைக்கிறேன் – வார்த்தைகள் எனக்கு சரியாக ஞாபகமில்லை…

ஒரு அரசியல்வாதி கல்லூரி / பள்ளி மாணவர்களிடம் ஒரு சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருக்கிறார்: ”மாணவர்களே, நீங்கள் படிப்பில் ஈடுபடவேண்டும்; அரசியலில் ஈடுபடக் கூடாது. நாங்கள் அரசியல்வாதிகள் – நாங்கள் எப்பொழுதாவது படிப்பில் ஈடுபட்டிருக்கிறோமா?

Read the rest of this entry »