வீரமணி: எனக்கும் கருணாநிதிக்கும் நாணயமில்லை!

03/10/2012

என் நண்பர் வீரமணி அவர்கள் மிகவும் நேர்மையாகச் சில சமயம் பேசி விடுகிறார் – நம்பவேமுடியாதபடி! நேற்று முன் தினம் அவர் சொல்லியிருப்பதைப் படியுங்கள்:

ஒரு தலைவரின் பிறந்த நாளைக் கொண் டாடுவோர் எவராயினும் அவர் போதித்த கொள்கை, லட்சியங்கள், நடைமுறைகள் பற்றி சிறிதாவது சிந்தித்துச் செயல்பட முனைவதே உண்மையாக அவருக்கு மற்றவர் காட்டும் மரியாதையாகும்.

ஆனால் நம் நாட்டில் தலைவர்கள் பலருக்கும் பிறந்த நாள் விழாக்களில் படத்திற்கு மாலை, சிலைகளுக்கு மாலை – அவர்கள் போதித்த சீலங்களுக்கு விடை கொடுக்கும் ஓலை! இதுதான் இன்றைய யதார்த்தம் – (வரலாற்றுக் குறிப்புக்காகச் செய்யப்பட வேண்டியதுதான்).

அதே நேரத்தில் படங்களுக்கு மாலையிடு வதைவிட அவர்களிடமிருந்து கற்ற பாடங்களைக் கொண்டொழுகுவது அல்லவா சிறந்த அறிவு நாணயம்?

கி.வீரமணி அவர்களின் தன்னிலை விளக்கம்.

”அ‌ண்ணா‌ ‌பிற‌ந்தநாளையொ‌ட்டி அவரது‌க்கு ‌சிலை‌க்கு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி மாலை அ‌‌ணி‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தினா‌ர். திரா‌விட‌ர் கழக‌த் தலைவ‌ர் ‌கி.‌வீரம‌ணி, அ‌ண்ணா ‌சிலை‌க்கு மாலை அ‌ணி‌வி‌த்து ம‌ரியாதை செலு‌த்‌தினா‌ர்.” (செ‌ன்னை, புதன், 15 செப்டம்பர் 2010)

அவர் பாவம் காந்திஜெயந்தி பற்றித்தான் இப்படிப் பேசியிருக்கிறார் – ஆனால் என் பொல்லாத நினைவு என்னவோ அலைபாய்ந்து இவரும் இவர் தலைவரும் போட்ட பல மாலைகள் பக்கம் சென்று விட்டது, மன்னிக்கவும்.
இவர் அறிக்கையில், இன்னமும் பல நகைச்சுவைகள் உள்ளன:

காந்தியார் கொல்லப்பட்டது ஏன்?

இந்தியா சுதந்திரம் பெற்றது 15.8.1947இல் காந்தியார் கொல்லப்பட்டது – 30.1.1948இல் அதாவது சுதந்திரம் பெற்ற 168ஆம் நாள் கொல்லப்பட்டார்.

காந்தி, இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொன்னது. 7.12.1947-இல்; காந்தி கொல்லப்பட்டது 30.1.1948-இல். அதாவது அவர் நம் நாடு மதச் சார்பற்றது என்று சொன்ன 53ஆம் நாள் கொல்லப்பட்டார். காந்தி, இந்தியா சுதந்திரம் பெற்றவுடன் பார்ப்பனரின் நடத்தையைப் பார்த்து அவர் சுயமரியாதைக்காரராகிவிட்டார். அவர் கொல்லப்படாவிட்டால்,  இந்தியா சுயமரியாதைக் கொள்கை நாடாகி விடும் என்று பயந்தே அவரைக் கொன்றார்கள்.

– தந்தை பெரியார்

:-)

வாழ்க ஈவெரா அவர்களின் மகத்தான கற்பனை வளம்!

வளர்க அவருடைய விசிலடிச்சான் குஞ்சுகளின் நகைச்சுவை உணர்ச்சி!!

பொலிக அண்ணாவுக்கும் அவர்தம் சீலங்களுக்கும் இவர்கள் போடும் நாமம்!!!

ஜெய் சுயமரியாதைக் கொள்கை நாடு!!!!

One Response to “வீரமணி: எனக்கும் கருணாநிதிக்கும் நாணயமில்லை!”

  1. Anonymous Says:

    ஒரு சார்பான போக்கைக் கண்டித்த உள்ளக் குமுறலின் வெளிப்பாடு தெற்றனத் தெரிகிறது. தமிழனின் வினைப்பயன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s