புதுமைப்பித்தன் அவர்கள் என்னை மன்னிப்பாரா?

(அல்லது)

ஆஹா, இவர்கள்தாம் இளைஞர்கள்! இதுதாண்டா தமிழ் இளைஞர்கள் அல்ல!

சுமார் இரண்டு மூன்று வருடங்கட்கு முன்பு என எண்ணம். எங்கள் பள்ளியில் இரண்டுமணி நேரம்  சில இளம் ஐஏஎஸ் (கற்றுக் குட்டி) அதிகாரிகளுடன் பேசிக்கொண்டிருக்கும் வாய்ப்பு கிடைத்தது.

கர்னாடகா, தமிழ்நாடு கேடர் (ஆங்கிலக் கேடர். தமிழ் அல்ல) சார்ந்தவர்கள், இந்த முப்பது வயதுக்குள் இருந்திருக்கக் கூடிய இளைஞர்கள். இவர்கள் மைக்கேல் ஃபெர்னாண்டஸ் அவர்கள் கூட, சொந்த ஆர்வத்தினால் வந்திருந்தனர் என நினைவு. Read the rest of this entry »

சென்ற வாரம் சென்னையில் அலைந்துகொண்டிருந்தபோது  (புதிய) நண்பர் ஒருவருடன் கொஞ்சம் அளவளாவ வாய்ப்பு கிடைத்தது. குடிப் பிரச்சினை பற்றியும் (நிறைய ‘கல்வி’ பற்றி) பேசி, கேட்டுக் கொண்டிருந்தேன்.

படித்த, தொடர்ந்து படிக்கும், யோசிக்கும், பணி செய்து கிடக்கும், எண்ணங்களைக் கோர்வையாகவும், தர்க்கபூர்வமாகவும் தொடுத்து, தொகுத்தளிக்கும் மனிதர்களைப் பார்ப்பது எனக்கு இப்போதெல்லாம் அபூர்வமாக இருக்கிறது. ஆகவே இந்த நண்பருடன் பேசியது ஒரு சந்தோஷமான விஷயம் தான்.

… அதன் தொடர்பாக, கிண்டிவிடப்பட்ட எண்ணக்கோவைகளினால்  கடந்த மூன்று இரவுகளாக, உணவு சமயத்தில் என் 13 வயது மகளுடன் ஒரு நீண்ட உரையாடல் … குடி பற்றி,  சமூகம், கொலைகள் பற்றி,  நீதி-மரணதண்டனை பற்றி… (மனைவி: என்ன இந்தமாதிரி கோரத்தையெல்லாம் சின்னப்பொண்ணு கிட்ட பேசற… உனக்கு மூளையே இல்லை!) .

Read the rest of this entry »

கை நமநமத்து ட்வீட் கீச்சும் வேளை
கைகள் பிணைத்துக் கட்ட
66A உண்டு உன் கையில்.

பின்பற்றுபவர்களுண்டு என் கையில்
அர்த்தமற்ற வெளியில் நின்று
RTக்களை விழுங்கிக் கீச் இடும்
பினாத்தலுமுண்டு.

ஓய்ந்தேன் என மகிழாதே
குறட்டையல்ல கீச்
பின் வாங்கல் அல்ல, குண்டூசி.

எனது கீச்சின் கீச்சலில்
கிழிபடக் காத்துக் கிடக்கின்றன
உனக்கு நரையேற்றும் ஓலங்கள்.

எங் கோ மணம் பறக்கிறது
அடிவானத்துக்கு அப்பால்.

– –  காளையம்மா (என்கிற) அசுந்தர ராமசாமி.

=-=-=-=

மன்னிப்பீர்களா? ;-)

தொடர்புள்ள பதிவுகள்:

(அல்லது) டன்னிங் – க்ரூகர் விளைவு

என்னுடைய அனுபவத்தில் – இக்கால இளைஞர்களில், ஒருசில விதிவிலக்குகளையே, பார்த்து, அறிந்து பெருமையும் சந்தோஷமும் பட்டிருக்கிறேன், அவர்கள் மீது மிகவும் மதிப்புக் கொண்டிருக்கிறேன் என்றாலும், பொதுவிதி சார்ந்த பெரும்பான்மையான இக்கால இளைஞர்களை, நான் அவநம்பிக்கையுடனும் சலிப்புடனும், சில சமயம் வெறுப்புடன் தான் பார்க்கிறேன்.

இந்த இரண்டாம் வகையினரான இளைஞர்களைப் பற்றித் தான் இந்த இடுகை.

நான் ஐம்பது வயதினை எட்டிக் கொண்டிருந்தாலும், என் எண்ணங்களுக்கு,  ஒரு ’தலைமுறை இடைவெளி’ மட்டுமே காரணமாக இருக்க முடியாது, என நினைக்கிறேன். ஏனெனில் நான் இளைஞனாக இருந்த போதும் எனக்கு இதே எண்ணம் தான். கர்வம் என்று கூட இதனைச் சொல்லலாம். நிதர்சனம் என்றும் இதனைப் பார்க்கலாம்.

ஆனால், இந்த, குப்பையாக்கப் பட்ட, குப்பையில் சந்தோஷமாகப் புரளும், குப்பைத்தனமான இளைஞர்கள் தாம் நம் சகல சீரழிவுகளின் அடிப்படை என்பது என் துணிபு,

Read the rest of this entry »

சாம்பாரே! உன்னை நாங்கள் ஆராதிக்கிறோம்.

நீ ஜீவாத்மா
நீயுமே பரமாத்மா
நீ எங்கள் ஊழ்
நீ ப்ரபஞ்சம்
நீயே ப்ரம்மன்
நீ வாழி

சாம்பாரே! நாங்கள் உன்னை ஆராதித்து
உன்னையே படையல் செய்து
உனக்கே படைத்து
பின் உண்கிறோம் உன்னை எடுத்து

நீ   நீடூழி வாழி!

சாம்பாரே!
உன்னில் நான்
என்னில் நீ
அஹம் ப்ரம்மாஸ்மீ

=-=-=-=-=

இதற்கு முந்தைய பதிவான சர்வதேச ’சாம்பார்’ கோடு படித்தபின் இதனைப் படித்தால் நலம்.

ஆன்மிகத்திலிருந்து (திடீரென்று) லௌகீகம்

சர்வ வல்லமை மிக்க, சுத்த சன்மார்க்க சத்திய சாம்பாரினால் தீர்க்கமுடியாத பிரச்சினையே இல்லை!

ஏன், அதன் மூலம் திமுக கூட அதன் ஆதாரசுருதி இடியாப்பச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள முடியும். (இதனைப் பின் காணலாம்)

Read the rest of this entry »

… in other words, ‘International Sambar Line.’

நம்முலகில் அட்சரேகை-தீர்க்கரேகை என்றும், மேக்மொஹன் கோடு மாஷினொ கோடு என்றும், லக்‌ஷ்மணரேகை என்றும், ஐஸோக்லின், ஐஸோபார் என்றும் பலப்பல கற்பனைக் கோடுகள் உள்ளன. இவை நாடுகளை, மொழிவாரிப் பகுதிகளை, புவிக்கோளத்தை,  இதிகாசங்களை நமது வசதிக்காகப் பிரிக்கின்றன, நடத்திச் செல்கின்றன.

அல்லது,  ஒரேயளவு மழையளவு, தட்பவெப்ப நிலை, காற்றழுத்தம் போன்ற விகுதிகளின் அடிப்படையில் பல இடங்களைக் கோடுகளால் பூகோளவரைபடங்களில்,  இணைக்கின்றன. இக்கற்பனைக் கோடுகளால் நம் புரிதல்கள் லகுவாகின்றன. அவற்றால் சாத்தியமான தொடர்புச் சங்கிலிகளால், கோட்பாட்டு இணைப்புகளால், நம் உலகினை நாம் ஆழ்ந்து அறிந்து, நம் சூழலின் காரணகாரியங்களைப்  புரிந்துகொள்ள முடிகிறது.

எல்லாம் சரிதான். ஆனால்…

சர்வதேச ’சாம்பார்’ கோடு – மேலதிக விவரங்கள் அடுத்த பதிவில் (அடிப்படை வரைபடத்துக்கு ’மேப்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்துக்கு நன்றி)

ஆனால், அநியாயமாக, நம் தமிழர்களின் இரண்டாம் உயிர்மூச்சான (கையாலாகாத தமிழ் ஈழப்பு தான் முதல் மூச்!) சாம்பாருக்கும் இப்படி ஒரு கறாரான கோடு ஒன்று, நம் நற்றமிழ் நாட்டில் உருவாகிக் கொண்டு இருக்கிறது என்பதனை நான் அறிந்து கொண்டபோது கொண்டபோது (கொண்டபோது (கொண்டபோது (கொண்டபோது (கொண்டபோது…)))) துக்கம் தாங்கமுடியவில்லையே! (தாங்கமுடியவில்லையே! (தாங்கமுடியவில்லையே! (தாங்கமுடியவில்லையே! (தாங்கமுடியவில்லையே! ))))

Read the rest of this entry »

“நான் ஒரு பதினான்கு சிறுவனாக இருந்த போது, என் தந்தை எந்த அளவுக்கு முட்டாளாக, அறியாமையில் மூழ்கி இருந்தாரென்றால், அவர் என்னருகே வந்தாலே எனக்குப் பற்றிக் கொண்டு வரும்; சகிக்க முடியாது அவரை.

ஆனால் எனக்கு இருபத்தி ஒன்று வயதில் அவரைப் பார்க்கும்போது, ஏழே ஆண்டுகளில் மனிதர் எவ்வளவு கற்றுக் கொண்டு விட்டார் என ஆச்சரியமாகவே இருந்தது…”

— மார்க் ட்வெய்ன் (Mark Twain, “Old Times on the  Mississippi” – Atlantic Monthly, 1874)

அது 1982 என நினைவு. அப்போது நான் ஒரு முதிரா இளைஞன் (இப்போது ஒரு முதிரா நடுத்தரவயதினன் அல்லது முதிரா 48 வயது அரைக் கிழவன் – இதுதான் வித்தியாசம்).

ஆழ்ந்த, பரவலான படிப்பும், சமகால அரசியல் அறிவும் நுண்மான் நுழைபுலம் அறியும் பக்குவமும் எனக்கு இருப்பதாகவும், தொழில் நுட்பப் படிப்பில் சிறந்து விளங்குவதாகவும் பலப்பல புல்லரிப்புப் பிம்பங்கள், மனப் பிரமைகள், பிறழ்வுகள்…

Read the rest of this entry »