சர்வதேச ’சாம்பார்’ கோடு

15/11/2012

… in other words, ‘International Sambar Line.’

நம்முலகில் அட்சரேகை-தீர்க்கரேகை என்றும், மேக்மொஹன் கோடு மாஷினொ கோடு என்றும், லக்‌ஷ்மணரேகை என்றும், ஐஸோக்லின், ஐஸோபார் என்றும் பலப்பல கற்பனைக் கோடுகள் உள்ளன. இவை நாடுகளை, மொழிவாரிப் பகுதிகளை, புவிக்கோளத்தை,  இதிகாசங்களை நமது வசதிக்காகப் பிரிக்கின்றன, நடத்திச் செல்கின்றன.

அல்லது,  ஒரேயளவு மழையளவு, தட்பவெப்ப நிலை, காற்றழுத்தம் போன்ற விகுதிகளின் அடிப்படையில் பல இடங்களைக் கோடுகளால் பூகோளவரைபடங்களில்,  இணைக்கின்றன. இக்கற்பனைக் கோடுகளால் நம் புரிதல்கள் லகுவாகின்றன. அவற்றால் சாத்தியமான தொடர்புச் சங்கிலிகளால், கோட்பாட்டு இணைப்புகளால், நம் உலகினை நாம் ஆழ்ந்து அறிந்து, நம் சூழலின் காரணகாரியங்களைப்  புரிந்துகொள்ள முடிகிறது.

எல்லாம் சரிதான். ஆனால்…

சர்வதேச ’சாம்பார்’ கோடு – மேலதிக விவரங்கள் அடுத்த பதிவில் (அடிப்படை வரைபடத்துக்கு ’மேப்ஸ் ஆஃப் இந்தியா’ தளத்துக்கு நன்றி)

ஆனால், அநியாயமாக, நம் தமிழர்களின் இரண்டாம் உயிர்மூச்சான (கையாலாகாத தமிழ் ஈழப்பு தான் முதல் மூச்!) சாம்பாருக்கும் இப்படி ஒரு கறாரான கோடு ஒன்று, நம் நற்றமிழ் நாட்டில் உருவாகிக் கொண்டு இருக்கிறது என்பதனை நான் அறிந்து கொண்டபோது கொண்டபோது (கொண்டபோது (கொண்டபோது (கொண்டபோது (கொண்டபோது…)))) துக்கம் தாங்கமுடியவில்லையே! (தாங்கமுடியவில்லையே! (தாங்கமுடியவில்லையே! (தாங்கமுடியவில்லையே! (தாங்கமுடியவில்லையே! ))))

OOOOOoooooh mMMMy GAAAaaaadddd, pleeeeeeessss ansarrrr myp preyarrrrrr…..

வெங்காயங்கள் குவிந்தன! பருப்பு வந்தது! தேங்காய் துருவிடச் சேஏஏஏஏவகர் ஆயிரம்…ம் ம் ம்…

Buttttt… nNoooh smell of saambaaaaaar…

… என்று சிவாஜி கணேசன் அவர்கள் உதடு துடிக்க, புருவம் முடிச்சிட, நரம்புகள் புடைக்க, மீசை அலைபாய, பற்கள் பளிச்சிட, கைகள் பிசைந்திட, குரல் நடுங்கிட கத்தி சொல்லி – பதிலுக்குப் பார்வையாளர்கள் வீறிட்டு விம்மி அழுதிடச் – செய்யக்கூடும்தான்.

ஆயிரம் இருந்தும் அழகுகள் இருந்தும் – தும்  தும் தும்ம்ம்ம் … nnNNNNOOOO peeeeeace offff mindtamarind!!’ என்றும் சொல்லக் கூடுமோ?

ஆனால். அவர் விட்டு விடுதலையாகிச் சாம்பாரிடம் நிற்க அவரிடம் விடுதலைப் புளி இல்லையே என்பதை அவர் அறியாததை நினைத்தால்…  அடிப்படையில் அரசியலில் விருப்பமற்ற அவர் விஷயத்தையே ஊறப் போட்டிருப்பார் அல்லவா?

=-=-=-=-=

தமிழர்கள் ஏமாளிகள்

இதில் எனக்குத் துளிக்கூடச் சந்தேகமே இல்லை.

உங்களிடம் சொல்லிக்கொள்ள ஏன் வெட்கப் படவேண்டும். நானும் கூடத்தான் ஏமாளியாகத்தான் இருந்து வந்திருக்கிறேன் இதுவரை.

’தமிழன் இழந்த மண்,’ ’தமிழன் இழந்த நிலம்’  என்கிற ரீதியில் நெடுமாறன் அவர்கள், வைகோ அவர்கள், சீமார் போன்றவர்களெல்லாம் பிரச்சாரம் செய்யும் போது நான் என்னை ஆசுவாசப் படுத்திக் கொள்வேன்… என்ன இருந்தாலும் நான் அடிப்படையில் ஒரு கருணாநிதி அவர்களின் அடிவருடியாதலால், எனக்கு ஒரு மகத்தான நம்பிக்கை – எப்படியும் மேதகு கலைஞர் அவர்கள் இதனைப் பொறுத்துக் கொள்வாரா? பொறுத்தது போதும், பொங்கியழி மவனே என்று ஆர்பரித்து எழ மாட்டாரா?

ஆனால், நீங்கள் திரிசமமாகக் கேட்கலாம் – அவர் முதுமையினால் தளர்ந்திருக்கிறாரே என்று.  கெக்கலி கொட்டிச் சிரிக்கலாம்.

சரி, நமது போர்வாட்கவிஞர் கனிமொழி (எம்பி) அவர்கள், நண்பர்களான மணல் கடத்துபவர்கள் (எம்பாமல்) இருக்கிறார்கள்; அவர்களிடம்  கருணாநிதி அவர்கள் ஒரு கோடு காட்டினால், ஒரு ஆணை இட்டால் (பெண்ணை அல்ல) அவர்கள் தங்கள் இமாலயஅளவு டம்பர் லாரிகளில் – பக்கத்து மாநிலங்களில் இருந்து மண்ணையும் கனிம வளங்களையும் அள்ளி வந்து விடமாட்டார்களா!

அண்ணன் டி ஆர் பாலுவும்தான் தான் அல்வாவாக அள்ளிய சேது சமுத்திரப் பகுதியில் இருந்து மேலும் மண்ணை அள்ளி வரமாட்டாரா?

… ஹ்ம்ம்ம்… இம்மாதிரி பகல் கனவுகளில் தான் நானும் திளைத்துக் கொண்டிருந்தேன்…

ஆனால், நிலைமை இப்படியாகும் என்றோ, கன்னடியர்களின் தமிழனை மலடனாக ஆக்கும் இன்னொரு மகாசதி (முதல் சதி: ’ஈரோட்டின்  இறை’) இப்படி சாம்பார் உருவத்தில் நம்மை பேபீதி கொள்ள வைக்கும் என்றோ நான்  நனவில் கூட கனைக்கவில்லை…

சாம்பாரை முன்வைத்துத் தமிழகத்தை வளைக்க சதித் திட்டம்

எப்படி நான் இச்சதி பற்றிக் கண்டுபிடித்தேன்?

அண்மையில் வேலை(யற்ற) நிமித்தம் அடிக்கடி, நான் பெங்களுருக்குச் செல்லவேண்டி வருகிறது, நானிருக்கும் புதுச்சேரிப் பக்கத்திலிருந்து.

நான் செல்லும் பேருந்துகள், அவை தமிழகத்தினுடையவையாகவோ அல்லது தனியாருடையவையாகவோ இருந்தால், அவை ஹோசூர் தாண்டும் வரை நிற்கும் எந்தச் சாலையோர உணவகத்திலும் நம்மூர் சாம்பார் கிடைக்கும்.

இப்பொழுது நான் சிலசமயம் கர்னாடகப் பேருந்துகளில் செல்லும் போது, அவை கிருஷ்ணகிரிக்கும் ஹொசூருக்கும் நடுவே உள்ள ‘காமத் யாத்ரி நிவாஸில்’ நிற்கின்றன.

இது கர்னாடக எல்லையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர். இருப்பினும் அதில் கிடைப்பது கர்னாடக சாம்பார் தான்!!!

முதலில் பெங்களூர் கையேந்திபவஙளில் மையம் கொண்டிருந்த இந்தச் சாம்பார், பின் வலுவடைந்து அத்திப் பள்ளிக்கு வந்து, தமிழக ஹோசூருக்கும் வந்து பின் மேலும் வலுவடைந்து கிருஷ்ணகிரிக்குப் பக்கத்திலேயே வந்து விட்டதே!! சில வருடங்களில் நம் தமிழகத்தையே தடுத்தாட்கொண்டு விடுமோ!

ஐயகோ! எங்கே போயிற்று நம் சங்ககால சாம்பார் பாரம்பரியம்?

கொஞ்சம் யோசித்தவுடன் தான் எனக்கு இதன் பின்னாலுள்ள மாபெரும் சதிவலை புரிந்தது…  (மன்னிக்கவும். இதில் உள்ள, பின்புலத்தில் இருக்கக்கூடிய, நாசகார சிஐஏ, இஸ்ரேலிய மொஸ்ஸாத், உலக வங்கி-பன்னாட்டு நிதி நிறுவனங்கள்,  ஊடக அமைப்புகள், பார்ப்பன-பனியா வலைப்பின்னல்கள், ஆர்எஸ்எஸ் நச்சுப்பாம்புகள், மதமாற்ற நிறுவனங்கள், உடுப்பி ஹோட்டல்கள் குழுமங்கள், காங்கிரஸ்-பாஜக ரகசியக் கூட்டணிகள், குமாஸ்தா நக்ஸலைட்டுகள் இன்னபிற –  பற்றி, இருக்கையை விட்டு நகராமல் ஆற அமர யோசித்தால், நிறைய பலப்பலான திடுக்கிடும் விஷயங்கள் கிடைக்கும்தான், ஆனால், மன்னிக்கவும்… நாம் இப்போது சாம்பார் பற்றி மட்டும் தான் யோசிக்க முடியும்… எனக்குப் பசிக்கிறது வேறு)

எச்சரிக்கை மணி ஒலிக்கிறது…

சாம்பாரை வளைத்தால், நம் தமிழ் மானமே வளைக்கப் படுமென்றறிந்த அந்தச் சதிகாரப் படுபாவிகள், தமிழின எதிரிகள், குல்லுக பட்டர்கள் – என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

இந்தச் சாம்பாரை முன் வைத்து நம் தமிழர்களை, தமிழகத்தை அழித்தொழிக்கும் முயற்சியினை – சேர, ஹொய்ஸாள, பல்லவ, களப்பிரக் கூட்டுச் (மன்னிக்கவும்: சாம்பார்) சதியினை இனங்கண்டு கொள்வோம்…

இப்போதே நாம் முழித்துக் கொண்டால்தான் உண்டு.

வாழ்க சாம்பார்! வளர்க அதன் மணம். வாழிய சாம்பார் வெங்காயத் திருநாடு…

=-=-=-=

எது எப்படியோ.

நாம் முதற்கண், நம் தமிழகத்தைச் சுற்றி வியூகம் வகுக்கும் சாம்பார் சங்கதிகளை அறிந்து கொள்ளலாம்.

கன்னட சாம்பார் என்பதென்ன என அறிவீர்!

இது ஹொய்ஸாளர்களின் வினை…

கன்னடச் சாம்பார் செய்முறை: நல்ல சிவப்புத் தக்காளிகளை நசுக்கிக் குழைத்து, சிறிது வெங்காயம் (சிறிய வெங்காயம் இல்லை, எல்லாம் காரமற்ற நிறமற்ற ஒரு குணமுமற்ற பெள்ளாரி பெரிய்ய வெங்காயம் தான்) அரிந்து கோடி காட்டி, கொஞ்சம் மிளகாய்ப் பொடி போட்டு, நிறைய நீர்விட்டுக் கொதிக்க வைத்து, பச்சை வாசனை போனதும் கொஞ்சம் சீரகம் போட்டு தாளித்துக் கொட்டி அதன் மண்டையில் மணமற்ற கொத்தமல்லியை நறுக்கிப் போட்டால் ஒரு காரமான, புளிப்பான, சூடான திரவம் ஆயிற்று.

ஒரு புளி கிடையாது! ஒரு பருப்பு கிடையாது!! சில சமயம் பெருங்காயம் கூடக் கிடையாது!!!

இது சாம்பாராம்!!!  தமிழர்களே சிந்திப்பீர்!!!

நாம் என்ன ‘தேங்காய் அரைத்து விட்ட சாம்பாரா’ கேட்கிறோம்? வெறும் அடிப்படை சாம்பார் தானேய்யா கேட்கிறோம், கொங்கணவர்களே!

இத்திரவத்தில் இட்லிகளை (அதுவும் அரிசி மாவரைத்துச் செய்யாமல் ஊறப்போட்ட அரிசி ரவையை, உளுத்தமாவுடன் கலந்து செய்யப் படுவது) போட்டு அவைகளை மூழ்கடித்துக் கொன்று, நம் நற்றமிழ் இட்லிசாம்பாரின் ஆன்மாவையும், அது நமக்குள் உருவாக்கக்கூடிய வீரத்தையும், கம்பீரத்தையும்,ஏன் நம் அறவுணர்ச்சியையுமே கூடக் குலைத்து விடுவார்கள், கர்னாடகத்தில்…

அதனை சாப்பிடுவது வேறு, ஒரு கொத்துப் பரோட்டா ஸ்டைலில்…

இப்படியா நம் பாரம்பரியமிக்க இட்லியை அவமானம் செய்வது…

எவ்வளவு நாள் நாம் இதனைப் பொறுப்பது?

மலையாள சாம்பாரென்பதென்ன?

இது பெரும்பாலும் சேரர்களின் கைங்கர்யம்.

இவர்கள் இட்லி என்பது பெரும்பாலும் அரைகுறையாக வேகவைத்த, பழைய கற்காலக் கற்கள் என்பது நம்மால் புரிந்து கொள்ளக் கூடியது.

கற்காலக் கேரளச் சிற்பியின் கைவண்ணத்தில் மலையாள இட்லியின் முன்மாதிரி…நன்றி: http://img68.imageshack.us/img68/3364/kudakallu26fo.jpg

மலையாளச் சாம்பார் செய்வினை: 10 லிட்டர் மகாமகோ சூடான வெந்நீர். அரை கிலோ சிவப்பு மிளகாய்ப் பொடி. 1 கிலோ உப்பு. மேலே தூவ 100 கிராம் கடுகு. அவ்வளவு தான்.

பருப்பு இல்லையே சாரே என்றால், நல்ல சிவந்த, செங்கல் பொடியை மேற்கண்டச் சாம்பாரில் கலப்பார்கள்.

சத்தியமாகச் சொல்கிறேன்! இவர்கள் சாம்பாரைச் சாப்பிட்டு, எண்டெ குருவாயூரப்பா, ஞான் பல நாட்கள் ஜீவித்திருக்கிறேன். என் அடிக்கட்டுமானமும் இந்த செங்கல்பொடியால் பலம் வாய்ந்ததாக இருக்கிறது… நன்றி.

ஆனால், ஆனால் அது சாம்பாரா?

ஆந்திர சாம்பாரீதென அறிவீர்!

இது களப்பிரர்களின் அன்பளிப்பு. பல்லவர்களின் பங்கும் இருக்கலாம்.

தெலுங்கு சாம்பார் மிளகாய்முறை: செக்கச்செவேல் சிவசிவசிவப்பு மிளகாய் அரை டன், புளி கால் டன். உப்பு அரைக்கால் டன். எண்ணெய் வீசம் டன். தக்காளி ஒரு மில்லிகிராம். நீர் 1000 லிட்டர்.

இவை அனைத்தையும் கலந்து ஒரு கொதி வந்தவுடன், அதாவது, ஒரு சிறிய பாத்திரத்தில் கொள்ளும் அளவுக்கு, இரண்டு நாட்கள் அடுப்பில் இருக்கவைத்துச் சுண்டியவுடன், ரண்டி ரண்டியென்று போஜனம் செய்யக் கூப்பிடுவார்கள்.

இட்லிகளும் வளப்பமாக, புஷ்டியாக இருக்கும் வேர்க்கடலை சட்டினி (நான்கு வேர்க்கடலைகள் + 400 கிலோ பூண்டு + 400 கிலோ பச்சை மிளகாய் ++) சேர்த்துச் சாம்பாருடன் பரிமாறுவார்கள்.

ஒரு சிறு துளி சாப்பிட்டால், உடலின் ஒன்பது துவாரங்களிலிருந்தும் கூடு விட்டிங்கு ஆவி வரத் தொடங்கும்.

ஏடு கொண்டலவாடா… ஸ்ரீ வெங்கடேசா…

இரண்டாம் துளி சாப்பிடும் போது, உங்கள் உடல், ந்யூட்டனின் மூன்றாம் விதிப்படி இயங்க ஆரம்பிக்கும்.

கங்க்ராஜுலேஷன்ஸ்!

நீங்கள்தாம் செவ்வாய் கிரகத்தை அடையும் முதல் மனிதர். (முதலில் உங்கள் வாலின் கீழ்ப்பக்கம் இருக்கும் ஜ்வாலையை அணைக்கவும்)

=-=-=-=

இனி…. கன்னட-தெலுங்க-மலையாளக் கூட்டுச் சாம்பார்ச் சதி – எப்படி நடக்கப் போகிறது, அதன் விளைவுகள் எப்படி இருக்கும், தமிழச் சாம்பார் எப்படி விளைவுகளை எதிர் கொள்ளும், தமிழகம் பல சாம்பார் வகைகளின், வாரிசுகளின் சிறைக் கூடம் என்பதால் அது எப்படிப் பிரிக்கப்பட்டு ஆளப்படும், நம்முடைய சாம்பார்ப் பாரம்பரியம் போன்றவற்றை, வரைபடத்துடன்  காணலாம்… சர்வதேச சாம்பார் கோடும் கோடிட்டுக் காண்பிக்கப் படலாம்…

நாளைய வரலாற்றை நேற்றே யோசித்து இன்றே எழுதுவோம் (அடுத்த பதிவில்)

Advertisements

10 Responses to “சர்வதேச ’சாம்பார்’ கோடு”


 1. ராமர் பாலம் என்கிற மணல் மேட்டைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் சார் ?

  • ramasami Says:

   அன்புள்ள ’செந்தழல் ரவி’;

   நான் அது பற்றி ஒன்றும் நினைக்கவில்ளை.

   ஆனால், நீங்கள் அதனை ஒரு மணல் மேடாகக் கருதுகிறீர்கள் என்று புரிகிறது.

   நன்றி,


   • நினைக்கவில்ளையா ? :))) இது என்ன புது மாதிரி வார்த்தை ? சாம்பாரில் இருந்து மேஜிக்கல் ரியலிசம் வரை கருத்து சொல்லும் கருத்து கந்தசாமிக்கு மணல் மேட்டை பற்றி கருத்து எதுவும் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம்தான் :)))

  • கருப்புதழல் பாவி Says:

   உங்க நாத்தமிழ் அறிஞர் குலைஞரை கேட்டுக்கபா இங்க வந்து ஏன் லந்து பண்ணுற?இல்லனன்னா செகப்பு தணல வரும் கனவு சாரி வினவு கும்பலை கேளு

 2. த.துரைவேல் Says:

  ரசித்து படித்தேன். வரிக்கு வரி கிண்டல் என்பார்கள். நீங்கள் வரிக்கு நான்கு கிண்டல்களை அள்ளி தெளித்திருக்கிறீர்கள்.
  த.துரைவேல்


 3. கர்நாடகா சாம்பாரில் அங்கம் வகிக்கும் ஒரு முக்கிய வஸ்து “பெடகி” மிளகாய் என்று அக்கப்படுகின்ற செக்கச் செவேலென்று இருக்கும் காரமற்ற மிளகாய் ரகம். மேலும் அதோடு சிறிது வெல்லம் வேறு சேர்ப்ப்பார்கள். தமிழர்களில் பலர் இத்தகைய ரெண்டுங்கெட்டான் சாம்பாருக்கு அடிமையாக இருப்பதால் உங்கள் கட்சிக்கு ஆள் கிடைப்பது துர்லபம்.

  இன்னொரு வரலாற்று உண்மையையும் உங்கள் கவனத்திற்கு கொணர விரும்புகிறேன். சென்னைக்கு இட்லி+சாம்பார் காம்பினேஷனை கொண்டு வந்தது உடிப்பிக்காரகளே! ஆகையால் காவிரி போல் சாம்பாரும் அங்குதான் உற்பத்தியாகியது என்று இப்போது புதிதாக முளைத்திருக்கும் எட்டியூரப்பா கட்சி வாதிடக் கூடும்..!


  • அக்கப்படுகின்ற = அழைக்கப்படுகின்ற

   தவறு வருந்துகிறது!

   எஸ்.கே

 4. Anonymous Says:

  நம் வழக்கப்படி தமிழ்நாட்டு இட்லி சாம்பார் இரசிகர் மன்றம் தனியாக துவக்கிவிடலாம் போலுள்ளது. அதற்கும் சமூகவலத்தளம். உலக இரசிகர்கள் ஒன்றுகூடி ஒப்பேற்றலாம்.


 5. அடுத்த பதிவு எழுதும்முன் என் கேள்விக்கு பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன்…


 6. இது விஷயத்தில் ‘இட்லிவடை’யின் அபிப்பிராயத்தையும் அறிந்து வெளியிடலாமே?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: