இதுதாண்டா தமிழ் இளைஞன்!

19/11/2012

(அல்லது) டன்னிங் – க்ரூகர் விளைவு

என்னுடைய அனுபவத்தில் – இக்கால இளைஞர்களில், ஒருசில விதிவிலக்குகளையே, பார்த்து, அறிந்து பெருமையும் சந்தோஷமும் பட்டிருக்கிறேன், அவர்கள் மீது மிகவும் மதிப்புக் கொண்டிருக்கிறேன் என்றாலும், பொதுவிதி சார்ந்த பெரும்பான்மையான இக்கால இளைஞர்களை, நான் அவநம்பிக்கையுடனும் சலிப்புடனும், சில சமயம் வெறுப்புடன் தான் பார்க்கிறேன்.

இந்த இரண்டாம் வகையினரான இளைஞர்களைப் பற்றித் தான் இந்த இடுகை.

நான் ஐம்பது வயதினை எட்டிக் கொண்டிருந்தாலும், என் எண்ணங்களுக்கு,  ஒரு ’தலைமுறை இடைவெளி’ மட்டுமே காரணமாக இருக்க முடியாது, என நினைக்கிறேன். ஏனெனில் நான் இளைஞனாக இருந்த போதும் எனக்கு இதே எண்ணம் தான். கர்வம் என்று கூட இதனைச் சொல்லலாம். நிதர்சனம் என்றும் இதனைப் பார்க்கலாம்.

ஆனால், இந்த, குப்பையாக்கப் பட்ட, குப்பையில் சந்தோஷமாகப் புரளும், குப்பைத்தனமான இளைஞர்கள் தாம் நம் சகல சீரழிவுகளின் அடிப்படை என்பது என் துணிபு,


இம்மாதிரியான இக்கால இளைஞர்களை, பொதுவாக, இரு பிரிவுகளாகப் பிரிக்கிறேன்.

முதலாவது: படிப்பறிவு கிடைக்கக் கொடுத்து வைக்காத, அல்லது படிப்பை ஒதுக்கும் இளைஞர்கள். இவர்கள் பெரும்பாலும் கிராமப்புற, அவர்தம் பெற்றோர்களுக்கும் படிப்பு கொடுத்துவைக்காத, இளைஞர்கள்; இந்நிலைமைக்குச் சமூகக் காரணிகள் பல இருக்கின்றன).

இரண்டாவது: படிப்பு (படிப்பறிவு அல்ல) கிடைக்கக் கொடுத்துவைத்தவர்கள்; இவர்கள் பொதுவாக நாற்காலி உத்யோகங்களில் (தகவல் குமாஸ்தாத் தொழில்கள் இன்னபிற) இருப்பவர்கள். முடிந்தவரை ஓடியாடி வேலை செய்யாமல், நாற்காலி உத்யோகங்களில் பதவிசாக அமர்ந்து நன்றாகச் சம்பாதிப்பதினாலேயே (’நேர்மையாக வேலை செய்து’என்பதில்லை) தாங்கள் பரிணாம வளர்ச்சியின் உச்சாணிக் கிளையில் இருப்பது போன்ற பிரமைகளில் இருப்பவர்கள்.

முதலாமவர்கள் சூர்யா, அஜித், தனுஷ், விஜய், விக்ரம், வேதாள் போன்றவர்களின், ஸிக்ஸ் பேக் மேக்கப் போட்ட குஞ்சாமணிகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பவர்கள்; அந்த நடிகர்களுக்கு ஃப்லெக்ஸ் விளம்பரம் (சதுர அடிக்குப் பதினோரு ரூபாயாம்!) தயார் செய்து, அவற்றில் தங்கள் சிறு இளிக்கும் முண்டங்களின் புகைப்படத்தைப் போட்டு, தியேட்டர் வாசல்களில் வைத்துப் பாலாபிஷேகமும் பீராபிஷேகமும் செய்து, போகிறவருகிறவர்களுக்கெல்லாம் இனிப்புக் கொடுத்துப் புளகாங்கிதம் அடைபவர்கள். வேலைவெட்டியற்ற அதி விசிலடிச்சான் குஞ்சுகள்.

அவர்களின் மாமன் / அண்ணன்மார்கள் / அப்பன்கள் –  ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்காந்த் போன்றவர்களினுடையதை.

அவர்களின் பாட்டனார்கள் – எம்ஜிஆர், சிவாஜியுனுடையதை…

கொள்ளுப் பாட்டனார்கள் – எம்கே தியாகராஜபாகவதருடையதையோ என்ன இழவையோ!

ஒரு வகையில் இவர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். இம்மாதிரி ஒரு சில இளைஞர்களுடன் சிறிது காலமாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, இவர்கள் வயல்களுக்கு வாய்க்கால்களை வெட்டிவிடமுடியுமென்று…  Difficult, but not impossible.

=-=-=-=-=

இப்படிச் சொல்வதனால் நகரங்களில் உள்ள இரண்டாம் பிரிவினர் பாடு அற்புதமென்றில்லை. என்ன, அந்த முதிரா இளைஞர்கள் – ஆண்கள்தான்  –  சுயசிந்தனையற்றுப் பிடித்துக் கொண்டு தொங்கும் குஞ்சாமணிகள் தான் வேறு – அவற்றின் உரிமையாளர்கள் – பில் கேட்ஸ், அவர்கள் முதலாளிகள்/மேலாளர்கள், கார்ல் மார்க்ஸ் (சிலை), தாமஸ் ஃப்ரீட்மன், நொம் சோம்ஸ்கி, ஜக்கி வாசுதேவ், அய்ன் ராண்ட் (படம்) என நீளும் அந்தப் பட்டியல்.

இவர்கள், ஃபிலேக்ஸ் விளம்பரங்களுக்குப் பதிலாக, ட்விட்டர் கீச்சல்கள், குரங்குக் கைகளால் வலைப்பூக்களில் வெட்டிப் பின்னூட்டம், ஃபேஸ்புக் சுவர்களில் சிறுநீரடிப்பது போன்றவைகளைச் செய்து, வாழ்க்கையில் ஒரு முக்கியமான பகுதியை மற்றவர்களின் குஞ்சாமணிகளைத் தொடர்வதையும், நம்மை இவ்வளவு குஞ்சாமணிகள் தொடர்கிறார்களே என்று புளகாங்கிதம் அடைவதிலும் செலவழிக்கிறார்கள்.

இதற்கு மேல் அவர்கள் அந்த இஸம், இந்த இஸம், அந்தக் கோட்பாடு, இந்தக் கோட்பாடு,  புரட்சி, வெற்றிவேல்-வீரவேல், அலுவலக நேரத்தில்/பணத்தில் வெட்டி இண்டெர்னெட், ஸ்டாக்மார்க்கெட், வேலை என்கிற பெயரில் ஒப்பேற்றுவது எப்படி, உழைப்பே இல்லாமல் சம்பாதிப்பது எப்படி, பிலுக்குவது எப்படி, பகல் நேரத்தில் வேலை செய்யாமல் பஜனை செய்து விட்டு பின் இரவுகளில் வேலை செய்வதால் என்னவோ உழை உழை என உழைத்து நாட்டையும், வீட்டையும், பணியிடத்தையும், உயர்த்திக் கொண்டிருக்கிறோம் என்பது போன்ற அரூப விஷயங்களின்  / பிரமைகளின் குஞ்சாமணிகளையும் அலையாய் அலைந்து, தேடித்தேடிப் பிடித்து, கை வழுக்கினாலும் மீண்டும் எம்பிப் பிடித்துத் தொங்குபவர்கள். அதற்காகப் பெருமைப் படுபவர்கள்.

இவர்களுக்கு எதனைக் கண்டாலும் அலட்சியம் தான். எதனையும் – அது ஒரு பொருளானாலும் சரி, கோட்பாடானாலும் சரி – அவற்றைப் புரிந்து கொள்ளாமலேயே உபயோகித்து சாலையின் நடுவில் விட்டெறிவது தான் வழக்கம். தலைப்புச் செய்திகளை வாசித்து, உடனே அவற்றில்  நிபுணர்களாகவும், விரிவும் ஆழமும் மிக்க வல்லுனர்களாகவும் ஆகி, உலகத்துக்கே அறிவுரைகளும், பின்னூட்டங்களும், பதிவுகளும், கட்டுரைகளும் வாரிவாரி வழங்குவார்கள் வேறு! ஒரு விதத்திலும் உன்னதம் பற்றித் தெரியாமல், உன்னதத்தை நோக்கி ஒரு எட்டு கூட வைக்காமல், நுனிப்புல்களின் நுனிகளை மட்டும் மேய்ந்து, அதனையும் செரிக்காமல் வாந்தி எடுப்பவர்கள் இவர்கள். கோர்வையாக நான்கு வரிகள் பேசவோ எழுதவோ – ஏன், படிக்கவோ வக்கற்றவர்கள். மூன்று வினாடிகளில் அவர்களால் தெரிந்து தெளிய முடியாத எதுவும் அவர்கள் கடைக்கண் பார்வைக்கு உகந்ததல்ல – அது மட்டமானது.

உடலுழைப்பு இவர்களுக்குக் கேவலம். அருவருக்கத் தக்கது. இவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு முட்டாள்கள், சொத்து பிரித்துக் கொடுப்பதற்காகவே பிறந்தவர்கள். வேலை கொடுப்பவர்கள் முட்டாள்கள் – அவர்கள் இவர்களுக்கு வெட்டிச் சம்பளமும் இன்னபிற வசதிகளும் கொடுக்கவே இருக்கிறார்கள். இவர்களை மணந்து கொள்ளும் பாவப்பட்ட முட்டாள் இளம்பெண்கள் – வரதட்சிணைக்கும், சாப்பாட்டுக்கும், சம்போகத்துக்கும் மட்டுமே.

இவர்கள் – சமத்துவம், சகோதரத்துவம், பெண்ணுரிமை எல்லாம் வாய் கிழியப் பேசுவார்கள், ஆனால் நடந்து கொள்வது மிகவும் நீசத்தனமாக. தைரியம், நேர்மை என்றால் கிலோ என்ன விலை எனக் கேட்கும் கோழைகள் தான் இவர்களில் பலர்.

=-=-=-=-=

ஹ்ரீனே தெகாஹ்ர்த் (Rene Descartes)  – ”நான் யோசிக்கிறேன், ஆகவே நான் [இருக்கிறேன்]” என்பது போலச் சொன்னார். (I think, therefore I am)

முற்காலங்களில் இவர்கள், குண்டு புத்தகங்களை பின்னர் படிப்பதற்காக ஸெராக்ஸ் செய்து வைத்துக் கொள்வார்கள், அவர்கள் இருப்பையும் தினவையும், அற்ப_சராசரித்தனத்தையும்  சரி கட்ட.  (I xerox therஎfore I am)

சிலகாலம் கழித்து, இவர்கள் புத்தகங்களை. கட்டுரைகளைத் தரவிரக்கம் வண்டைவண்டையாகச் செய்து கொண்டு, அவற்றைப் படிப்பதாக பாவனை செய்தனர், ஆகவே, அவற்றின் பாடுபொருட்களில் விற்பன்னர்கள் ஆயினர். (I download, therefore I am)

சில வருடங்களில் அவர்கள் வெட்டி-ஒட்டல்களில் நிபுணத்துவம் பெற்று, எதனைப் பற்றியும் கருத்துக்களை இணையத்திலிருந்து வெட்டி, இணையப் பொறிகளை வைத்து மொழி மாற்றம் செய்து, பின்னர்  தங்கள் பெயரில் ஒட்டி பவனி வந்தனர். (I cut n’ paste, therefore I am)

இன்னும் சிலகாலம் கழித்து அவர்களுக்கு இம்மாதிரி, தரவிரக்கம் செய்து கொள்ள 10 வினாடிகளுக்கு மேலானால் அவர்கள் மூளைகள் உருகி விடும் போல இருந்ததால், அவர்கள் சுட்டிகளை மட்டும் கவனித்து – அணுவுலை, திரைப்படங்கள், மரபணுவியல், இலக்கியம், கணிதம், அறவியல், அறிவியல், கல்வி, வானசாஸ்திரம், விவசாயம், மார்க்ஸிஸ்ம், மண்ணாங்கட்டியிஸம், தெருப்புழுதியாலஜி என்று பல விஷயங்களில் வித்தகர்கள் ஆனார்கள். (I have the URL, therefore I am)

இப்போது, வாலிப (வயோதிக) அன்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி: 140 எழுத்துக்களிலேயே அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தலைப்பில் வல்லுனராகி, வல்லுனர்தனமான கருத்துச் சொல்ல முடியும். (I tweet about any URL or any damn thing, therefore I am)

… ஆ… என்ன சுகம்… மேலும், பகலும் இரவும், கீச்கீச் என்று கீச்சிக் கொண்டே இருக்கலாம்.  தொடரவேண்டிய குஞ்சாமணிகளும் தொடரும் குஞ்சாமணிகளும் தான் வேண்டுமளவு இருக்கின்றனவே! வெட்டிவம்பும், கவைக்குதவாத குப்பை அரட்டையும், அவதூறும், ஆபாசமும் எப்போதும் தமிழர் பண்பாட்டின் அடிப்படைக் கூறுகளாக இருப்பது நமக்கு வசதியாக வேறு இருக்கிறது.

சில சமயம், இதில் சில அபாயங்கள் இருக்கின்றன. சில சமயங்களில் சட்டம் பயமுறுத்துகிறது..  Some fall by the wayside. Collateral  damage, what else!

Lusers beware.

=-=-=-=-=

இந்த இரண்டாம் பிரிவினர்களுடைய அப்பன்மார்கள், பாட்டன்மார்கள் பலபேர் குமாஸ்தாக்கள், சிறிது படிப்புக் கிடைக்கப் பெற்றவர்கள்.  இவர்களில் பெரும்பாலோர் மீடியோக்ரிடி (mediocrity – இதனைத் ‘தாங்கவொண்ணா, கிடந்து உழலும் சராசரித்தனம்’ என மொழி ‘பெயர்க்க’லாமா?) ஒன்றையே (அவர்கள் பையன்களைப் போலவே) தாரக மந்திரமாக ஓதி வந்து,  ‘மாசம் பொறந்தா சம்பளம்,’  குமுதம், ஆனந்தவிகடன் பின் சென்றவர்கள்.

இவர்கள் செய்த/செய்யும் ஒரே தவறு, தன் மகனை/மக்களை, கடும் செலவு செய்து ‘படிக்க’ வைத்தது / வைப்பது – ஏனென்று கேட்டால், தங்களால் முடியாததை, தங்களுக்கு மறுக்கப் பட்டதை, தங்கள்  உதவாக்கரை மக்களுக்கு அவசியம் கிடைக்கச் செய்வேன் எனப் பிடிக்கும் அடம்.

பரிதாபத்துக்குரிய ஜீவன்கள் தான்.

=-=-=-=

’கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணம் இதுவெனும் அறிவுமிலார்’ என்று பாரதி சொன்னார். மெடா-காக்நிஷன் – மெடா-அவேர்னஸ் பற்றித்தான் இங்கு பேசுகிறார் அவர்.

Meta – cognition என்பதை – மீ அறிதல், மீ அறியும் நிலை/ஆற்றல் எனச் சொல்லலாமா? Meta -awareness என்பதை மீ விழிப்புணர்ச்சி, மீ அறிவு நிலையுணர்வு என??

இந்த இரண்டாம் பிரிவு இளைஞர்கள்  போன்றவர்கள் பற்றிய, அவர்களைப் பிறர் புரிந்து கொள்ள அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது; அவர்களிடம் இம்மியளவு கூட இல்லாத மீ அறிவு நிலையுணர்வைப் பற்றிய ஒரு முக்கியமான ஆவணம் இது.

Unskilled and Unaware of It: How Difficulties in Recognizing One’s Own Incompetence Lead to Inflated Self-Assessments (1999)

ஜான் க்ரூகர், ஜஸ்டின் டென்னிங் எழுதிய, சுவையான விவாதங்களையும், எதிர்வினைகளையும் தூண்டக் கூடிய  இக்கட்டுரையை நான் பல ஆண்டுகள், இளம் மேலாளர்களுடன் உரையாடுவதற்குப் பயன்படுத்தியிருக்கிறேன்.

“It is one of the essential features of such incompetence that the person so afflicted is incapable of knowing that he is incompetent.”

நீங்களும் இதனைப் படித்தறிந்து இறும்பூதடைவீர்களாக.

இக்கட்டுரையின் (என் + ஜான் + ஜஸ்டின்) முடிவு: இந்த இரண்டாம் பிரிவு இளைஞர்களுக்கு விமோசனமே இல்லை.

=-=-=-=-=

குறிப்பு: மேற்கண்ட எல்லா பிரிவுகளிலும் குறிப்பிடத்தக்க, மதிக்கத்தக்க, கொண்டாடத்தக்க விதி விலக்குகள் இருந்தார்கள்,  நிச்சயம் இப்போதும் இருக்கின்றார்கள். இவர்கள் தொழில்நுட்பங்கள் கொடுக்கும் சாத்தியக் கூறுகளை வைத்துக் கொண்டு சில சமயம் அது இல்லாமலும் கூட – சுயஅர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும், கடின உழைப்புடனும் செயல்பட்டு,  தொடர்ந்து விரியும் அறிவின் கதவுகளைத் திறந்து கொண்டு ’ நிர்வாண’த்தை நோக்கி முன்னேறிய வண்ணம் இருக்கிறார்கள்.  அவர்களை வணங்குகிறேன். வாழ்த்தியும் மகிழ்கிறேன்.

ஆனால், நான் அவர்களைப் பற்றி எழுதவில்லை இங்கு.  எனக்குத் தெரியும் நிச்சயம் அவர்கள் ‘பெய்யெனப் பெய்யும் மழை.’

=-=-=-=-=

தொடர்புடைய பதிவுகள்:

11 Responses to “இதுதாண்டா தமிழ் இளைஞன்!”


 1. ப்ர்ர்…காலம்போன கடேயில் திண்ணையில் உட்கார்ந்து புலம்பும் பெருசு சொல்வதை தொகுத்த மாதிரி இருக்கு சார். என்ன நீங்க அங்க அங்க சார்த்தர் பூக்கோ மார்க்ஸ் நோம் ச்சோம்ஸ்கி மானே தேனே பொன்மானே போட்டு (சொந்த லைப்ரரியா இல்லை கல்லூரி லைப்ரரியா) எழுதிட்டீங்க :)))

 2. Anonymous Says:

  Its true


 3. இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த தத்துவ ஞானி ஹ்ரெனே டேகார்ட் பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி. என்னுடைய குறுந்தளம் காண்க:

  http://descartes.cyberbrahma.com/

  S.K

 4. பிரவீன் Says:

  தோழரே இந்த பாகிஸ்தானுக்கு ஜிங்கு ஜா போடும் “தேச பக்தர்களான” அருந்ததி ராய் அமார்க்ஸ் ஆகியோர் பற்றியும் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..இன்றைய இளைஞர்கள் இவர்களின் பின் சென்று சீரழியாமல் தடுப்பது நம் கடமை அல்லவா?எழுதுவீர்கள் என நம்புகிறேன்

 5. tamil underdog Says:

  தாங்கள் ஒரு காலத்தில் இரண்டாம் வகையினரின் முந்தைய தலைமுறையாக இருந்தீர்கள் என்று புரிந்து கொள்கிறேன் :).


 6. @பிரவீண்
  இந்த பேர்வழிகளைவிட மிக ஆபத்தானவர்கள் சில டுபாகூர் இந்துத்துவா-வாதிகள்.
  பெரிய மேதாவித்தனத்துடன் பக்கம் பக்கமாக கீதை, இராமாயணம், ஜாதிகள் இவற்றைப் பற்றியெல்லாம் எழுதிக் குவித்து, நடுநடுவே நைசாக நம் சனாதன தர்மங்களைப் பற்றி விஷ வித்துக்களை விதைத்து மக்களைக் குழப்புவதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். இது போன்ற நபர்கள் சிலரைப் பற்றி இந்த வலைப்பதிவில் ஏற்கனவே திரு. ராமசாமி அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். இன்னும் அவர்களைப் பற்றி எழுத வேண்டும்!


 7. […] ராமசாமி எழுதிய பதிவு ஒன்றில் இந்த மூடர் கூட்டத்தை பற்றிய ஒரு […]


 8. […] அறியவுமில்லை என்பதைக் கூட அறியாத, டன்னிங்-க்ரூகர் விளைவின் எடுத்துக்காட்டுதான் […]


 9. […] டன்னிங்-க்ரூகர் விளைவு; மீயறிவு நிலையின்மை குறித்தது. இதைப் பற்றி நிறைய, பத்தாண்டுகளுக்கு மேலாகத் தமிழில் அப்படியும் இப்படியும் எழுதியாகிவிட்டது. […]


 10. […] டன்னிங்-க்ரூகர் விளைவு என்பது குரூரமான ஒன்று என என் […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s