எனக்கு மிகவும் பிடித்த காமிக் – கால்வின் அண்ட் ஹாப்ஸ் (Calvin and Hobbes). சமூக விமர்சனம் என்கிற போர்வையில் ஆனால், பல தளங்களில் சஞ்சரித்த, சஞ்சரிக்கும் மகத்தான இலக்கியம் – பில் வாட்டர்ஸன் (Bill Watterson) என்கிற கலைஞன் (டாக்டர் அல்ல) வாழ்க்கையைக் குழைத்து அழகாகச் செதுக்கி நமக்கு அளித்தது… (இதெல்லாம் நம் தமிழில் வெளிவர முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!)

டிஸெம்பர் 31, 1989-ல் வெளிவந்த ஞாயிற்றுக்கிழமை பெரிய கார்ட்டூன் இது. வசதிக்காக பிய்த்துப் பிய்த்துக் கொடுத்திருக்கிறேன். தமிழ்ப் படுத்தியும்   இருக்கிறேன்.

Oh well, yet another year…

candh1 Read the rest of this entry »

இதனை நான் ஒரு வருடத்துக்கு முன் செய்திருக்க வேண்டும்.

D V Karunn Says: 22/12/2012 at 16:50 e

we need the copy of Justice Sarkaria commn for print.Hoping you may fufill our wish.

’டி வி கருண்,’

என்னிடம் பிற்சேர்க்கைகளுடன் இருந்த முழு அறிக்கை இப்போது இல்லை. இருப்பினும் சில விவரங்கள். உங்களுக்கு உதவியாக இருக்கலாம் என நினைக்கிறேன்.

சர்க்காரியா கமிஷன் – 1976 இறுதி அறிக்கை – தலைப்பு

Read the rest of this entry »

கருணாநிதி அவர்களின் தன்னிலை விளக்கம்: திரா விட இயக்கம் = பாஷாணத்தில் புழுத்த புழு.

இவருக்கு பாஷாணம் என்றாலும் என்னவென்று தெரியாது. புழுவென்றாலும் தெரியாது – இவை ஒருபுறமிருக்க, இவருடைய அண்மைய ’வெறும்’ அன்பழகன் அவர்களின் 91 பிறந்த நாள் விழாப் பேச்சு, மி்கவும் நகைச்சுவையோடு அமைந்திருக்கிறது – நமக்குத் தான் கொடுத்துவைக்கவில்லை – அதனை நேரில் கேட்டு இறும்பூதடைவதற்கு.

”வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங்கொள் கூட்டம்; உள்ளத்தால் ஒருவரே;  மற்று உடலினால் பலராய் காண்பார்; கள்ளத்தால் நெருங்கொணாதே; என வையம் கலங்க கண்டு, துள்ளும் நாள் எந் நாளோ என்று நம்முடைய புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடியதைப் போல, அந்தப் பாட்டையும் வெல்லத்தக்க அளவிற்கு இந்தக் கூட்டத்தை நான் காணுகின்றேன். Read the rest of this entry »

கடந்த பத்து நாட்களாக நான் பணி புரியும் பள்ளிகளில்  கிறிஸ்த்மஸ்-புதுவருடப்பிறப்பு விடுமுறைக்கு முன்னால் முடிக்க வேண்டிய வேலைகள் ஏராளமாகக் குவிந்திருந்தன. ஒருவழியாக இன்று மாலை அவற்றை முடித்தேன். அலுப்போதி அலுப்பு.

ஆனால், திடீரென்று மாலையில், மனைவிக்கும் (=துணைவிக்கும்) எனக்கும் அழைப்பு.

ஆக, கலாபினி அவர்களின் ஒரு இரண்டு மணிநேர மெஹ்ஃபில் போகும் வாய்ப்புக் கிடைத்தது இன்று. எங்களையும் கலைஞர்களையும் சேர்த்து 20-30 பேர் கச்சேரியில் இருந்திருந்ததால் அதுவே அதிகம் சஞ்சய் தேஷ்பாண்டே அவர்களின் தப்லா. விரல்களாடும் நாட்டியம்.

Read the rest of this entry »

அல்லது  >>> foreign aid (for NGOs) considered harmful வெளி நாட்டுப் பணம் பெற்று (= யாசித்து),  நம்மூர் தொழில்முறை நடிப்புச் சுதேசிகள் நடத்தும் மானாவாரி  ’தன்னார்வ’ நிறுவனங்களைப் பற்றியது இந்த இடுகை. ஜெயமோகன் அவர்கள் இது பற்றி நிறைய எழுதியிருக்கிறார் அண்மையில் –  எதிர்வினைகளில், விவாதங்களில் அது எம்டிஎம், எஸ்வி சேகர் ராஜதுரை, விடியல் சிவா என்று ஒரு சுற்றுச் சுற்றி வந்ததும் கூட; இந்தப் பொங்கல் விடுமுறையின் போதுதான் – இவற்றையும், இது தொடர்பாகவும், தொடர்பில்லாமலும் – தன்னார்வ நிறுவனங்கள், நீதிமன்றம், அவமதிப்பு, அவதூறு, வக்கீல் நோட்டீஸ், வியாஜ்யம் என எம்டி முத்துக்குமாரசாமி அவர்கள், விமலாதித்த மாமல்லன் அவர்கள் போன்றவர்கள், எழுதியவையையும் ஒழுங்காகப் படிக்க வேண்டும் – இந்த விஷயத்தில் தமிழ் நாட்டின் கட்சிசாரா, தற்சார்பும், தனித்தன்மையும் உடைய சிந்தனையாளர்களின், அவர்கள் இணைய எழுத்துக்களின் ட்ஸெய்ட்கெய்ஸ்ட் (zeitgeist)  பற்றிப் புரிந்து கொள்ளவேண்டும் – அதாவது, எனக்கு! (அக்கப்போர் தானோ?) ராபர்ட் ஃப்ரோஸ்ட் சொன்னார்:

“We dance round in a ring and suppose, But the Secret sits in the middle and knows.” Read the rest of this entry »

முட்டாள்தனத்தால் விளைந்தது என்கிற ரீதியிலேயே, தேவையான அளவு விளக்கப்படக் கூடிய எந்த எதிர்மறை நிகழ்வையும் நாம், வன்மத்தினால் ஏற்பட்டது எனக் கருதக் கூடாது. (Never attribute to malice that which is adequately explained by stupidity.)
— ராபெர்ட் அன்ஸன் ஹென்லெய்ன் (1907-88)

நான் கனிமொழி அவர்கள் பற்றி எண்ணும்போதுதான் (எண்ணித் துணிக கருமம்) இந்த ராபெர்ட் ஹென்லெய்ன் மேற்கோள் நினைவுக்கு வந்தது; பரிதாபமாகவும் இருக்கிறது. நான் அவருடைய கவிதைகளைப் பற்றிப் பேசவரவில்லை இங்கு. Read the rest of this entry »

(அல்லது) செய்வன திருந்தச் செய்.

தலைப்பிலுள்ள சமன்பாட்டை, விளக்கி, அதனைத் தெளிவாக்கி ஒரு விதமாகத் தீர்வு(!) செய்யும் ஒரு தாமதமான பதிவுதான் இது.

=-=-=-=

அண்மையில் நடந்த மத்திய அரசுக்கு எதிரான ஓட்டெடுப்பில், திமுக எதிர்த்து ஓட்டளித்திருக்கலாமே!

திமுக அப்போது நினைத்திருந்தால் மத்திய அரசைப் பணிய வைத்து எல்லா காரியங்களையும் (அதாவது, கருமங்களையும்) சாதித்துக் கொண்டிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? தமிழகத்துக்கு மின்சாரம், கர்னாடகாவிலிருந்து காவிரி நீர், தமிழகத்துக்கு மேலும்  நிதி  (கருணா அல்ல) ஒதுக்கீடு, இலங்கைக்கு எதிராகப் போர், தளபதி சுடாலின் தலைமையில்… எல்லாமே!

ஏன் செய்யவில்லை? சோழியன் குடுமிகள் சும்மா ஆடுவதில்லை, அதுதான் காரணம்…

இதைவிட முக்கியமான காரணம் – மடியில் கனத்தகனம், வழியில் பயமோபயம் – அவ்வளவே! இதுவும் அனைவருக்கும் பெரும்பாலும் தெரியும், அல்லது யூகிக்க முடியும்.

ஆனால் எப்படிப்பட்ட கனங்கள் அவை என்பது பற்றி ஊடகங்களில் பதில்களோ, கேள்விகளோ இல்லை. சிபிஐ காங்கிரஸின் ஏவலாளாகச் செயல்படுகிறது என்கிற பொத்தாம்பொதுவான எண்ணம் தவிர ஒரு சுக்கு அதிக விவரமும் நம்மை அடைவதில்லை.

இது ஒரு புறமிருக்க,  என்னைப் பொறுத்தவரை, திமுகவின் மத்திய அரசு ஆதரவிற்கு, ஒரு முக்கியமான மூல காரணம், திமுக தலைவர்கள் அவர்களுடைய பாத்தியதைக்கு மட்டுமே உரிய ‘அறிவியல் பூர்வமாக ஊழல் செய்யும்’ திறமையை காலத்திற்கேற்ப வளர்த்துக் கொள்ளாததும் ஆகும். Read the rest of this entry »