கனிமொழி (ஸ்டாம்ப் பேப்பர் விவகாரம்++) = திமுக-வின் மத்தியஅரசு ஆதரிப்பு

15/12/2012

(அல்லது) செய்வன திருந்தச் செய்.

தலைப்பிலுள்ள சமன்பாட்டை, விளக்கி, அதனைத் தெளிவாக்கி ஒரு விதமாகத் தீர்வு(!) செய்யும் ஒரு தாமதமான பதிவுதான் இது.

=-=-=-=

அண்மையில் நடந்த மத்திய அரசுக்கு எதிரான ஓட்டெடுப்பில், திமுக எதிர்த்து ஓட்டளித்திருக்கலாமே!

திமுக அப்போது நினைத்திருந்தால் மத்திய அரசைப் பணிய வைத்து எல்லா காரியங்களையும் (அதாவது, கருமங்களையும்) சாதித்துக் கொண்டிருக்கலாமே! ஏன் செய்யவில்லை? தமிழகத்துக்கு மின்சாரம், கர்னாடகாவிலிருந்து காவிரி நீர், தமிழகத்துக்கு மேலும்  நிதி  (கருணா அல்ல) ஒதுக்கீடு, இலங்கைக்கு எதிராகப் போர், தளபதி சுடாலின் தலைமையில்… எல்லாமே!

ஏன் செய்யவில்லை? சோழியன் குடுமிகள் சும்மா ஆடுவதில்லை, அதுதான் காரணம்…

இதைவிட முக்கியமான காரணம் – மடியில் கனத்தகனம், வழியில் பயமோபயம் – அவ்வளவே! இதுவும் அனைவருக்கும் பெரும்பாலும் தெரியும், அல்லது யூகிக்க முடியும்.

ஆனால் எப்படிப்பட்ட கனங்கள் அவை என்பது பற்றி ஊடகங்களில் பதில்களோ, கேள்விகளோ இல்லை. சிபிஐ காங்கிரஸின் ஏவலாளாகச் செயல்படுகிறது என்கிற பொத்தாம்பொதுவான எண்ணம் தவிர ஒரு சுக்கு அதிக விவரமும் நம்மை அடைவதில்லை.

இது ஒரு புறமிருக்க,  என்னைப் பொறுத்தவரை, திமுகவின் மத்திய அரசு ஆதரவிற்கு, ஒரு முக்கியமான மூல காரணம், திமுக தலைவர்கள் அவர்களுடைய பாத்தியதைக்கு மட்டுமே உரிய ‘அறிவியல் பூர்வமாக ஊழல் செய்யும்’ திறமையை காலத்திற்கேற்ப வளர்த்துக் கொள்ளாததும் ஆகும்.

யோசித்துப் பாருங்கள் – சர்க்காரியா கமிஷனின் மூல காரணகாரியங்களிலிருந்து சுமார் 40 ஆண்டுகளாக பரந்துபட்ட, விரிவாக்க ஊழல்களைத் தொடர்ந்து – பொய் வருத்தச் சிரமம் பார்க்காமல், கண் துஞ்சாமல்,  செய்து வருகிறவர்கள், திமுக தலைவர்கள். இந்த அனுபவங்களால், அவர்கள் இந்த ‘விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யும்’ திறமையை பெருமளவு – ஆழத்திலும், வீச்சிலும், செய்நேர்த்தியிலும் – வளர்த்திக் கொண்டிருக்க வேண்டுமல்லவா? கருணாநிதி இதில் ஏன் கோட்டை விட்டார் என்றால், எல்லாம் வல்ல தட்சிணாமூர்த்திக்கே இது வெளிச்சம்.

=-=-=-=

கருணாநிதி அவர்களின் நவம்பர் 28, 2012 அறிக்கையில் அவர் சொல்கிறார்.

… சில்லறை  வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும்  மத்திய அரசின்  முடிவினை  தி.மு. கழகம் ஏற்கவில்லை, எதிர்க்கிறது  என்ற  நிலைப் பாட்டினை  ஏற்கெனவே  அறிவித்திருந்தாலும்கூட; நாடாளுமன்றத்தில் 184 ஆவது விதியின்கீழ்  இந்தப் பிரச்சினை தொடர்பாக  வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டுமென்ற  பா.ஜ.க.  உள்ளிட்ட சில கட்சிகளின் கோரிக்கையைப் பொறுத்தவரை;   அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறுமேயானால்  –  இன்று  மத்தியிலே உள்ள அய்க்கிய  முற்போக்குக் கூட்டணி அரசு  கவிழ்ந்து விடக்கூடும்  என்ற  நிலை இருப்பதை  மறுப்பதற் கில்லை.

… மத்தியில்  அதே பா.ஜ.க.வினுடைய  ஆதிக்கமோ அல்லது அதன் ஆதரவு பெற்ற அரசோ ஆட்சிப் பொறுப்புக்கு  வருமேயானால்; இன்னும்  எத்தனை அலைக் கற்றை ஊழல் புகார்கள் ;  பாபர்  மசூதி  இடிப்பு, கரசேவை, சிறுபான்மையினருக்கு எதிரான செயல்கள் போன்ற  மதவாதப் பயங்கரங்கள்   ஏற்படக்கூடும்  என்பதை யும் எண்ணிப் பார்த்து,  அத்தகைய  மதவாத  அரசோ  –   ஊழல்  பீதிகளைக் கிளப்பி  வஞ்சக  வலையில்  மக்களைச் சிக்க வைக்கும்  எந்தவொரு  அரசோ பதவிக்கு  வந்து விடு வதற்கும்  இடம் தரக் கூடாது  என்ற நிலைப் பாட்டையும் மறந்து விடுவதற்கில்லை.

இதையெல்லாம்  சிந்திக்கும்போது  இந்தப் பிரச்சினையில்   மத்திய  ஆளுங்கட்சியான  அய்க்கிய முற்போக்குக் கூட்டணி  அரசு  நீடிக்க வேண்டியது இன்றைய சூழ்நிலையில்  காலத்தின் கட்டாயம்  என்பதையும்  மறந்து விடுவதற்கில்லை.

இதுதானா உண்மை? இது மகத்தான சப்பைக் கட்டு மட்டுமே அல்லவா?

எது எப்படியோ,அந்த காலத்தின் கட்டாயம் என்றால் என்ன என்பதை – திமுக ‘அறிவியல் பூர்வமாக ஊழல் செய்யும்’ திறமையை காலத்திற்கேற்ப வளர்த்திக் கொள்ளாததற்கான ஒரு எடுத்துக்காட்டு மூலமாகப் புரிந்து கொள்ள. இவ்விடுகையில் முயற்சிப்போம்…

=-=-=-=

பல காரணங்களால், புதுடெல்லி சார் காமன்காஸ் (பொது இலக்கு, காரணம், நலம்) என்ற ஒரு அமைப்பின் பல மரியாதைக்குரிய அங்கத்தினர்களை  நான் அறிவேன். இதன் பொறுப்புகளில் இருப்பவர்கள் – இந்திய அரசின் மிகமிக உயர் பதவிகளில் இருந்தவர்கள் (கமல்காந்த் ஜஸ்வல் போன்றவர்கள்), வழக்கறிஞர்கள் (ப்ரஷாந்த் பூஷன் போன்றவர்கள் – இவர்கள் வெறும் வழக்குரைஞர்கள் மட்டும் அல்ல), ஓய்வுபெற்ற நீதிபதிகள், உண்மையான களப்பணிகள் செய்யும் அறிவுஜீவிகள் (மது கிஷ்வர் போன்றோர்) – அனைவரும், சுயநலம், மெய்வருத்தம் பாராமல், பொதுவாழ்வில் தூய்மையை உயர்த்திப் பிடிப்பவர்கள், இதில் ஓரிருவர் எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் ஆனவர்கள் கூட.

2G ஊழல்களை வெளிக்கொணருவதிலிருந்து, திட்டங்களை வகுப்பது, அரசு/மேலாண்மையின் உயர் தட்டுகளில் நாட்டின் மேன்மைக்கு கருத்துக்களை பரிந்துரைப்பது, கொள்கைகளை எப்படி செயல்பாடுகளாக மாற்றுவது, நாட்டு நடப்புகளில் ஓளிவுமறைவை விலக்குவது வரை, பல திசைகளில், பல மேடைகளில் ஒயாது போராடிவரும் நிறுவனம் காமன்காஸ்.  (இது பற்றிய கூடுதல் செய்தி: இது ஒரு தொழில்முறை மனிதவுரிமைச் சங்கமாக, செயல்படாதது எனக்குப் பிடித்த விஷயம். )

அதில் உள்ள சில நண்பர்களிடம் அண்மையில் உரையாடி, 2G வழக்கு பற்றிய என்னுடைய சில சந்தேகங்களை (என்னதான் நடந்து கொண்டிருக்கிறது?)  நிவர்த்தி செய்து கொண்டேன்.

இருப்பினும்,  இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் (கனிமொழி – Accused #17,  ஷரத்குமார் – Accused # 16) மீதான, அவர்களுக்கு எதிரான, சில அசைக்கமுடியாத, எதிர்க்கமுடியாத சில சட்டரீதியான நுணுக்கங்களை / பார்வைகளை என்னால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதையும் ஒப்புக் கொள்கிறேன் – ஆகவே அவற்றைப் பற்றி எழுதவில்லை.

இன்னும் சில நண்பர்கள் மூலம், கற்றைகற்றையாக இந்த வழக்கு பற்றிய ஆவணங்களின் நகல்களைப் பெற்றேன். முக்கியமாக, சிபிஐ  நீதிமன்ற நீதிபதி அஜித் படிஹொக் (Ajith Bharihoke) அவர்களின் கனிமொழி / இராசா வழக்கின்மீதான – ஜாமீன் நிராகரிப்புத் தீர்ப்புக்கள். படித்தேன்,  அவற்றில் பல விஷயங்கள் சொல்லப் பட்டு இருக்கின்றன – கனிமொழி + அவர் நண்பர்கள் – அரசுக்கு, சிபிஐ-க்குக் கொடுக்காத ஒத்துழைப்பு பற்றி, பல கசப்புச்சுவை மிக்க ஆவணங்கள். இவற்றில் பலவற்றைப் படித்தேன், மூச்சு முட்டினாலும் – பின் அவற்றை, என் குழந்தைகளின் ‘ஒரு பக்க எழுதும் காகிதமாக’ உபயோகமும் படுத்திக் கொண்டிருக்கிறேன்.

அஜித் படிஹொக் - இவர் போல நமக்குப் பல நீதிபதிகள் தேவை...

அஜித் படிஹொக் அவர்கள் – இவர் போல நமக்குப் பல நீதிபதிகள் தேவை… (இவர், சென்ற வருடம் ஓய்வு பெற்றார்)

இவை அனைவற்றிலும் பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருந்தாலும், நான் புரிந்துகொண்டிருக்கும் சில விஷயங்களில், ஒரு ஆவணஜோடிப்பு, பொய்மை (forgery) விவகாரத்தை மட்டும் நான் ஒரு ‘எடுத்துக்காட்டாக’ விவரிக்கிறேன்.

முதலில், ஸ்டாம்ப் பேப்பர் – என்கிற முத்திரைத்தாள் 

(மன்னிக்கவும், இது ஒரு கேடுகெட்ட கோடம்பாக்கத் திரைப்படத் தலைப்பல்ல!)

முத்திரைத்தாட்களை நாம் நம் வாழ்க்கையில் ஒரு தடவையாவது உபயோகித்து இருப்போம் – இருப்பினும் இவற்றைப் பற்றிச் சில வார்த்தைகள்.

முத்திரைத்தாட்களில் ஒப்புதல்களை, விற்பனைகளை, இணக்கங்களை, ஒப்பந்தங்களை, உடன்பாடுகளை, தீர்வுகளைப் பதிந்து சில நடைமுறைச் செயல்பாடுகளில் அவற்றை முறையாக அரசுப் பதிவாளர் அலுவலகங்களில் பதிந்தும் இருக்க வேண்டியது அவசியம்.

முத்திரைத்தாட்கள், அச்சடிக்கப் படும் பண நோட்டுகளைப் போலவே, வருடா வருடமோ, அல்லது சில வருடங்களுக்கு ஒரு முறையோ அவற்றின் நிறம்,  நிறவேற்பாடுகள் (shades, tints), உறழ்பொருவு, மலைவுகள் (contrast), வடிவமைப்பு (design), உருவரை (layout) – நுணுக்கமாக மாற்றப் பட்டு அச்சாகுபவை. இந்தக் காரணத்தால், காலவரையறை சார்ந்த ஆவணங்களுக்கு, மேற்கண்ட பகுப்புகளை மட்டும் வைத்தே அவை எப்போது ஆவணப்படுத்தப் பட்டன என அறிய முடியும்.

ஆக, அவற்றின் முக்கியத்துவத்தினால், அவசியத்தினால், பரந்துபட்ட உபயோகத்தினால் – இந்த முத்திரைத் தாட்களை முன்வைத்து இருவிதமான பெரும் ஊழல்கள் நடை பெறுகின்றன.

  1. போலி முத்திரைத்தாள் அச்சடித்து வினியோகம் செய்யும் தொழில் முனைவோர்(!)களால், கர்னாடக தேல்கி போன்றவர்களால் பிரபலமாக்கப் பட்ட வழிமுறைகள்.  இவை கள்ள நோட்டு அச்சடிப்பது போன்றவை – எனக்குத் தெரிந்து, இது தமிழ் நாட்டில்  குறிப்பிடத்தக்க அளவு இல்லை. (என்ன இருந்தாலும், நாம் திமுக தயவால்,  ‘அறிவியல் பூர்வமாக ஊழல் செய்வதைச்’ செவ்வெனே செய்பவர்கள் தானே?)
  2. அசல் முத்திரைத்தாட்களைப் பதுக்கி, அந்தந்த வருடங்கள் வாரியாக, வடிவுரு வாரியாக வைத்து அவற்றை யானைவிலைக்குப் பிற்காலத்தில், ஆவணஜோடிப்புகளுக்காக விற்றல். அவற்றைப் பற்றிய பதிவேடுகளில் ((யாருக்கு, எப்போது, எக்காரணத்திற்காக விற்றது என்பது குறிந்த, முத்திரைத்தாள் விற்பனையாளரின் குறிப்புகள், இவற்றை இவர்கள் அரசு அலுவலர்களுக்குக் காண்பிக்க வேண்டும் கூட) முன் தேதியிட்டுப் பதிவு செய்தல் – – ஆக, பின்னர், சாவகாசமாக நாம் என்ன ஒப்பந்தம் வேண்டுமென்றாலும் முன் தேதியிட்டுப் போட்டுக் கொள்ளலாம். இதனைப் பதிவு (அரசு சார்பதிவாளர்களிடம்) செய்ய வேண்டுமானால், ஆட்சி நம் கையில் இருந்தால், என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

கனிமொழி – Accused #17,  ஷரத்குமார் – Accused # 16 – இரண்டாவதையும் செய்யவில்லை. பாவம்.

கனிமொழியும், ஷரத்குமாரும் – அவர்கள் வழக்கறிஞர்கள் மூலமாக சிபிஐக்கு கொடுத்துள்ள சில முக்கியமான தஸ்தாவேஜுகளும் அவசரகதியில் ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் என சொல்கிறது உயர் நீதிமன்றம் – சொன்னவர் அப்பழுக்கற்ற நீதிபதி அஜித் படிஹொக்.

பாருங்கள்.

டெல்லி உயர் நீதி மன்றத்தில்,  Kanimozhi Karunanithi vs Central Bureau Of Investigation வழக்கில் - கனிமொழியின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து, அஜித் படிஹொக் அவர்கள் தீர்ப்பளித்த, சுமார் நாற்பது பக்க, 8 ஜூன் 2011 தேதியிட்ட ஆவணத்திலிருந்து ஒரு சிறு பகுதி - அஜித் படிஹொக் எப்படி அங்கலாய்க்கிறார் பாருங்கள். (இத் தீர்ப்பின், முழு ஸ்கேன்களைக் கொடுக்கலாம், ஆனால் என்னுடைய குட்டி பேண்ட்விட்த் இணையத் தொடர்பில் அது முடியாத காரியம் - இந்தத் தீர்ப்பு, இணையத்தில் இருப்பின், அதன் சுட்டியைக் கொடுக்க முயல்கிறேன்)

டெல்லி உயர் நீதி மன்றத்தில், கனிமொழி கருணாநிதி vs சிபிஐ வழக்கில் – கனிமொழியின் ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து, அஜித் படிஹொக் அவர்கள் தீர்ப்பளித்த, சுமார் நாற்பது பக்க, 8 ஜூன் 2011 தேதியிட்ட ஆவணத்திலிருந்து ஒரு சிறு பகுதி – அஜித் படிஹொக் எப்படி அங்கலாய்க்கிறார் பாருங்கள். (இத் தீர்ப்பின், முழு ஸ்கேன்களைக் கொடுக்கலாம், ஆனால் என்னுடைய குட்டி பேண்ட்விட்த் இணையத் தொடர்பில் அது முடியாத காரியம் – இந்தத் தீர்ப்பு, இணையத்தில் இருப்பின், அதன் சுட்டியைக் கொடுக்க முயல்கிறேன்)

இது சம்பந்தப்பட்ட ‘ஒரிஜினல்’ ஆவணங்களை, இதுவரை Accused #17,   Accused # 16 நண்பர்களால், சிபிஐக்குக் கொடுக்க முடியவில்லை – ஏதேதோ காரணங்கள். எனக்கு இவர்களின் கையறு நிலை புரிகிறது.

ஏதோ அவசரத்துக்கு அடோபி ஃபோட்டோஷாப்பையும், க்ஸெராக்ஸ் மெஷினையும், ஸ்கேன்னரையும், மாதிரி முத்திரைத்தாளையும் வைத்து ஏதோ ஆவண நகல் என்று சிபிஐ-க்குக் கொடுத்துவிட்டார்கள். சிபிஐ, வழக்கை, ஏறக்கட்ட – ஊத்திமூடி விடும் என நினைத்தார்கள்.

இப்போது? காமன்காஸ், சுப்ரமணியம் ஸ்வாமி என்று பல கிடுக்கிப் பிடிகள்…

ஒரிஜினல் ஆவணங்கள் தொலைந்து போய் விட்டன எனக் காரணம் சொல்லலாம் – இப்படிச் சொன்னால் நீதிமன்றம் கேட்கும், ஏன் நீங்கள் உடனே காவல்துறைக்கு ஒரு புகார் அளிக்கவில்லை என்று. ஆட்சியில் இருந்தால் இதற்கும் ஒரு ஜோடிப்பு செய்யலாம் தான், ஆனால், வட போச்சே!

ஒரிஜினல் ஆவணங்களின் குறிப்பேடு விவரங்கள் (முத்திரைத்தாள் விற்பனையாளரிடம் இருக்க வேண்டுமல்லவா?) பற்றி நீதிமன்றம் கேட்கும். அப்போதும் அவற்றை ஜோடிக்க முடியும் ஆட்சியில் இருந்தால், எப்படியாவது… ஆனால், வட போச்சே!

ஒப்பந்தங்கள் சம்பந்தப் பட்ட – கம்பெனி பதிவாளர் (Registrar of Companies)  குறிப்புகள்,  படிவங்கள் இவையெல்லாம் எங்கே என நீதிமன்றம் கேட்கலாம் – இது கொஞ்சம் கஷ்டம், ஆனால் ஒரு கைதேர்ந்த கம்பெனி ஆக்ட் விற்பன்னர், ஆடிட்டர் மூலம் இதனையும் சரிக் கட்ட முடியும்… ஆனால், வட போச்சே!

அல்லது ஒரிஜினல் ஆவணங்கள் + பதிவாளர் (ROC)  குறிப்புகள்,  படிவங்கள் + முத்திரைத்தாள் விற்பனையாளர் பதிவேடு அனைத்தும் மாயமாக மறைந்து விட்டன, அல்லது எங்கள் வீட்டுச் செல்ல நாய்கள் முழுங்கி விட்டன என்றுதான் சொல்ல முடியும்.

ஆக, நித்ய கண்டம்,  பூர்ண ஜாமீன் தான், வேறேன்ன?

=-=-=-=

இப்போதைக்குச் சிபிஐ நோண்டாது என்கிற தைரியம்தான் சிறிது நிம்மதி தரும் விஷயம். ஆனாலும் நோண்ட ஆரம்பித்தால் (சிபிஐ ஆய்வாளர்களில் பலர் மஹா புத்திசாலிகள், நேர்மையாளர்கள் தாம்) என்ன ஆகும் என்கிற பயம் – காங்கிரஸ்  வெறுப்பேற்றப் பட்டு, சிபிஐயை ஏவினால்? இருப்பது போதாது என்று, ஆவண ஜோடிப்பு வழக்கு வேறு வந்து விடுமே! அய்யோ இயற்கையே!

இது போன்ற பல, மிகப்பல, பலான பயங்கள் வேறு. பாவம்  திமுக தலைமைக்கு.

அவர்களும் என்னதான் செய்வார்கள்? கொஞ்சமாவது காரியங்களைச் செவ்வெனே முடிக்கும் திறமிருந்தால், பயிற்சியிருந்திருந்தால், இம்மாதிரி விஷயங்களை சரியாக, விஞ்ஞானபூர்வமாகத்தானே செய்திருப்பார்கள்? ஹ்ம்ம். பேராசை என்பது, அசட்டு தைரியத்தின் வழியாக, இவர்களின் விஞ்ஞானக் கண்களை மறைத்துத்தான் விட்டது.

ஆக, என்ன ஆயிற்று?

திமுக மத்திய அரசுக்கு ஆதரவு.

(சமன்பாடு தீர்வு செய்யப் பட்டது)

ஆக, திமுகவின் இன்றைய தேவை – விஞ்ஞானிகள்!

ஆமென்.

பின்குறிப்பு: இத்துடன் கிட்டத்தட்ட 100 பதிவுகள் எழுதிவிட்டேன் என நினைக்கிறேன் – ’திமுக எதிர்ப்பக்கங்கள்’ என்கிற பிரிவில். எதிர்மறையான இவ்விஷயம் இத்துடன் போதுமெனத் தோன்றுகிறது.

=-=-=-=

தொடர்புள்ள பதிவுகள்:

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Advertisements

2 Responses to “கனிமொழி (ஸ்டாம்ப் பேப்பர் விவகாரம்++) = திமுக-வின் மத்தியஅரசு ஆதரிப்பு”


  1. உங்களுக்கு நன்றி.

  2. Anonymous Says:

    மக்களின் கைகளைக் கொண்டே அவர்களின் கண்களை குத்தச்செய்வது ஆபத்தாண்டவர்களின் அரசியல் வார்த்தை ஜாலம். பத்திரங்களில் இவ்வளவு விஷயங்களா அறியச் செய்தமைக்கு நன்றி. சிபிஐ அறிக்கை கிடைத்தது அதிசயம்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: