[திரா விட இயக்கம்] பாஷாணத்தில் புழுத்த புழு

29/12/2012

கருணாநிதி அவர்களின் தன்னிலை விளக்கம்: திரா விட இயக்கம் = பாஷாணத்தில் புழுத்த புழு.

இவருக்கு பாஷாணம் என்றாலும் என்னவென்று தெரியாது. புழுவென்றாலும் தெரியாது – இவை ஒருபுறமிருக்க, இவருடைய அண்மைய ’வெறும்’ அன்பழகன் அவர்களின் 91 பிறந்த நாள் விழாப் பேச்சு, மி்கவும் நகைச்சுவையோடு அமைந்திருக்கிறது – நமக்குத் தான் கொடுத்துவைக்கவில்லை – அதனை நேரில் கேட்டு இறும்பூதடைவதற்கு.

”வெள்ளம்போல் தமிழர் கூட்டம்; வீரங்கொள் கூட்டம்; உள்ளத்தால் ஒருவரே;  மற்று உடலினால் பலராய் காண்பார்; கள்ளத்தால் நெருங்கொணாதே; என வையம் கலங்க கண்டு, துள்ளும் நாள் எந் நாளோ என்று நம்முடைய புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பாடியதைப் போல, அந்தப் பாட்டையும் வெல்லத்தக்க அளவிற்கு இந்தக் கூட்டத்தை நான் காணுகின்றேன்.

தொடர்புள்ள பதிவு: பொறுக்கி நடைத் தமிழ்…

”தங்கசாலை வீதியில் இவ்வளவு பெரிய கூட்டத் தைப் பார்க்கும் பொழுது, இது பேராசிரியருடைய  91-ஆவது பிறந்தநாள் விழாவிற்காக நடைபெறு கின்ற கூட்டம் மாத்திரமல்ல; இது மாநாடு. அந்த மாமகனுக்காக நாம் நடத்துகின்ற மாநாடு என்று நானும் கருதுகின்றேன்.

தொடர்புள்ள பதிவுகள்: ‘வெற்று’ அன்பழகனும் தமிழ் அலக்கணமும்…  ||  ‘வெறும்’ க அன்பழகன் கூட ஒரு குற்றவாளிதான்!

”திராவிட இயக்க வரலாற்றில் தங்கசாலை

இந்த அரங்கிற்கு வரும்பொழுது, இந்தப் பகுதியைப் பற்றி நான் சிந்தித்தவாறு வந்தேன். திராவிட இயக்கத்தி னுடைய பழைய கால வர லாற்றில்  தங்கசாலை தெருவுக்கு ஒரு முக்கியமான இடம்  உண்டு. வரலாற்றுப் பகுதியிலே தங்க சாலையை குறிப்பிடாமல் இருக்க முடியாது. எப்படி தங்கசாலை என்று பெயர் வந்தது? என்று நான் வருகிற வழியில் கற்பனை செய்து கொண்டேன். சென்னைக்கு வந்தவர்கள் இங்கிருந்த வர்களைப் பார்த்து, “இங்கே தங்க வசதி உண்டா? என்று கேட்டதாகவும், “தங்க சாலை ஒன்று இருக்கிறது என்று விடை அளித்ததாகவும், அப்படியானால் நாங்களெல்லாம் “தங்க; சாலை என்று அதை அமைத்துக் கொள்ளலாமா? என்று கேட்டதைப் போலவும், “அமைத்துக் கொள்ளலாம், நிச்சயமாக என்று அனுமதித்ததைப் போலவும், அதைக் கேட்டு தங்குவதற்கு ஒரு சாலை சென்னையில் இருக்கிறதாம் வாருங்கள் எல்லோரும் என்று தமிழகத்திலே உள்ள பெருமக்கள் எல்லாம் சென் னைக்குப் படையெடுத்து வந்ததைப்போல் இன்றைக்கு இந்த மாநாட்டை நாம் நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

பாவம், இவருக்கு வெகுவேகமாக  வயதாகிக் கொண்டிருக்கிறது!

மேடைப் பேச்சுக்களிடமிருந்து இவரையும், இவரிடமிருந்து மேடைப்பேச்சுக்களையும் மீட்க நேரம் வந்துவிட்டது.

”பேராசிரியருக்கு நான் மாலை அணிவித்தேன் என்றால், அது எனக்கு நானே சூட்டிக் கொண்ட மாலை. பேராசிரியருக்கு சால்வை அணிவித்தேன் என்றால் அது எனக்கு நானே போர்த்திக் கொண்ட சால்வை.

அய்யகோ! என்னப்பா இது கொடுமை…

”இது அரசியல் இயக்கம் மாத்திரமல்ல; சமுதாய இயக்கமாகவும் இருக்கிற காரணத்தால்தான், சமுதாயத்திற்குத் தேவையான; தந்தை பெரியார் அவர்கள் எடுத்துக் காட்டிய பல செய்திகளை நாம் செயலாக்கி இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலிலே வெற்றி பெற்று சட்டசபைக்கோ, பாராளுமன்றத்துக்கோ சென்றால் மாத்திரம் போதாது. அங்கே சென்று நம்முடைய கருத்துக்களை, நம்முடைய கொள்கைகளை, நாம் நாட்டிலே பரப்பி வருகின்ற லட்சியங்களையெல்லாம் செயல்படுத்த வேண்டும் என்ற அந்த உறுதியோடுதான் நாம் பாராளுமன்றத்திற்குச் சென்றிருக்கின்றோம், சட்டமன்றத்திற்கும் சென்றிருக் கின்றோம்.

நன்றி, மீண்டும் வராதீர்கள்.

”அப்படி பரப்புவதற்கு என்னைப் பொறுத்தவரையில், பேரறிஞர் அண்ணா அவர்களுக்குப் பிறகு, தந்தை பெரியார் அவர்களுக்குப் பிறகு, என்னைப் பொறுத்த வரையிலே திராவிட இயக்கத்திலே பெரும் துணையாக எனக்கு இருப்பவர் நம்முடைய கழகத்தினுடைய தலைவர்களிலே ஒருவரான பெருந்தகை பேராசிரியர் என்று சொன்னால் அது மிகையாகாது.

அதாவது, திராவிடச் சிந்தனைகளைப் பரப்புவதற்கு, அண்ணா முதலில் கருணாநிதிக்குத் துணையாக இருந்தார். பின்னர் பெரியார் கருணாநிதிக்குத் துணையாக இருந்தார். பின் இந்தப் பெருந்தகை.

பேஷ்! பேஷ்!! ஏன், திருவள்ளுவர் கூட இவருக்குத் துணையாக இருந்துதானே குறளோவியத்துக்கு தெளிவுரையாகத் திருக்குறள் எழுதினார்!!

தொடர்புள்ள பதிவுகள்:  திருவள்ளுவரைக் கொலை செய்தது யார்? ஏன்?? (ஒரு γ ரே ரிப்போர்ட்)  ||  திருவள்ளுவரை ஒழித்த கருணாநிதிச் சோழன்!

”எந்த ஆட்சி வந்தால் தாங்கள் சுபீட்சமாக வாழலாம் என்று கருதி வாக்களித்தார்களோ, அந்த ஆட்சி வந்து விட்டதாகக் கருதியவர்கள் தங்களை ஏழைகளாக, எலும்பு உருவங்களாக, பட்டினி கிடப்பவர்களாக, பரிதவிக்கக் கூடிய, பசி பசி என்று கதறக் கூடியவர்களாக ஆக்கியதன் காரணமாக தங்களுடைய நிலங்களைப் பார்த்து அழுது கண்ணீர் வடித்து இந்த கண்ணீர்தான் நான் உங்களுக்கு பாய்ச்சுகின்ற தண்ணீர் என்கின்ற அளவிற்கு நிலைமை முற்றிப் போய் வேறு வழியில்லாமல் 7 பேர் தற்கொலை செய்து கொண்டிருக் கின்றார்கள்.

ஆக, ஒப்புக் கொள்கிறார் இவர், தன்னாட்சியில் தமிழ்மக்கள் சுபிட்சமாக இருந்திருக்கவில்லை என்று.

அது இருக்கட்டும் – சென்ற மாநிலச் சட்டசபைத் தேர்தலில் திமுக கும்பலுக்கு எதிராக ஓட்டுச் சேகரித்தவன் என்கிற முறையில் சொல்கிறேன் – நம் மக்கள், சுபிட்சமாக வாழவேண்டும் என்று அத்தேர்தலில் வாக்களிக்கவில்லை – அராஜக, அயோக்கிய ஆட்சி ஒழிய வேண்டுமென்றுதான் வாக்களித்தார்கள்.

”திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து இந்த 7 குடும்பங்களையும் திராவிடக் குடும்பங்கள் அவை, உழவர் குடும்பங்கள், பாட்டாளி குடும்பங்கள், அந்தக் குடும்பங்களுக்கு ஏற்பட்ட –  தற்கொலையால் ஏற்பட்ட இந்த வேதனை யைத் தீர்க்க அவர்கள் மறைந்த பிறகு மிச்சமிருக்கின்றவர்கள் வாழ வழி ஏற்படுத்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயலாளர் மூலம் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் 7 குடும்பங்களுக்கும் மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை உங்கள் முன்னிலையிலே வழங்குகின்றேன்.

மாவட்டச் செயலாளர் கலைவாணனிடம் இந்த 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவர் நாளைய தினம் திருவாரூர் சென்றவுடன் இந்த ரூபாயை  அவர்களுக்கெல்லாம் வழங்கிவிட்டு, அவர்களிட மிருந்து ரசீது பெற்று அனுப்புவார் என்ற நம்பிக்கையுடன் உங்கள் முன்னிலையில் வழங்குகிறேன்.

அய்யா கருணாநிதி அவர்களே, அவர் பூண்டி கலைவாணன் தான். கருணாநிதி அல்ல. அவர் நிச்சயம் ரசீது அனுப்புவார். அது உண்மையாகவே இருக்கும் கூட. மற்றவர்களும் தன்னை மாதிரியே இருப்பார்களோ என எண்ணி மனக் கிலேசம் அடையவேண்டா.

=-=-=-=-=

எது எப்படியோ, பாஷாணத்தில் புழுத்த புழுவாக இருப்பது, நெளிவது, நீஞ்சுவது, குடைவது, நசுக்கப் படுவது என்பதெல்லாம் பெருமைக்குரிய விஷயமா என்ன, அதை எந்தப் பின்புலத்தில் பட்டுக்கோட்டை அழகிரி சொல்லியிருந்தாலும்?

நல்ல நகைச்சுவைதான் போங்கள்!

திமுக (எதிர்ப்)பக்கங்கள்…

Advertisements

One Response to “[திரா விட இயக்கம்] பாஷாணத்தில் புழுத்த புழு”


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: