போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்

இதற்கு, ’வெங்கடேசன்’ அவர்கள், ரத்தினச் சுருக்கமாக ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார் – “வறட்டு வேதாந்தம்.” அதற்கு நானும் பொன். முத்துக்குமார் அவர்களும் எங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

இனி ’வெங்கடேசன்’ அவர்களின் சுருக்க-விளக்கமும், அதன் பின் என் கருத்துக்களும். (இது அக்கப் போர் இல்லை. அதனால், உரையாடல்களில், மாற்றுக் கருத்துக்களில் ஆர்வமுடையவர்கள் படித்தால், ஒருவேளை அவர்களுக்கு உதவியாக இருக்கலாம்)

-0-0-0-0-0-0-

ஐயா,
உங்களை அவமதிப்பது என் நோக்கமன்று. மாணவர் போராட்டம் தொடர்பான உங்கள் கருத்துக்களை படித்து வருகிறேன். இந்த பதிவை படித்தபின் எனக்கு தோன்றியது “வறட்டு வேதாந்தம்” என்பதே. அதை பதிவிட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும். Read the rest of this entry »

அன்புள்ள பூவண்ணன் அவர்களே!

உங்கள் பின்னூட்டங்களைப் படித்தேன். நன்றி. (1, 2)  [உங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கும் மற்ற அனைவருக்கும் கூட நன்றி]

வணக்கம். இப்படி ஒரு யோசிக்கும், அதுவும், சுயானுபவங்கள் பெற்ற, இளைஞர்கள் மீது உண்மைக் கரிசனம் உடைய ஒரு எதிர்விவாதக் காரருடன் உரையாட வாய்த்திருப்பது எனக்குச் சந்தோஷமே! அரைகுறைகளிடம், அற்பர்களிடம் — வாதாடி, வழக்காடி அலுத்து  விட்டது, நண்பரே!

உங்களுக்கு முடிந்தால், என்னுடைய நோக்கு – ஒரு ஜாதி ரீதியான பார்வை என்பதையெல்லாம் தற்போதைக்குக் கடாசி விடுங்கள். அது ஒரு பழைய கவைக்குதவாத மூத்திர வாடையடிக்கும் முட்டுச் சந்து என்பதுதான் என் எண்ணம். (அவகாசமிருந்தால், பிறகு விவாதிக்கலாம், இதனையும்)

ஹ்ம்ம். ஒரு காலத்தில், அடி உதை குத்து சண்டை போன்ற வீரமறவ மழபுலவஞ்சித்தனமான வாயில்லா உரையாடல்களிலும், தயங்காமல் ஈடுபட்டுக் கொண்டிருந்தவன்தான் நான். போராட்டம், புரட்சி, விடிவெள்ளி அதுஇதுவென்று பல சுற்றுக்கள் சுற்றி வந்தவன் தான். ஆனால், தற்போது அப்படியில்லை. (பெருஸ்ஸுக்கு வய்ஸாடிச்சில்ல, மேலும், ஆடிய ஆட்டம் என்ன.. என்று நொண்டிக்கொண்டே பாதகாணிக்கை பாலாஜி கனவில் வர ஆரம்பித்து விட்டார் வேறு!) Read the rest of this entry »

“What’s your view of things, Coyote?”

“Well, it mostly depends on how I’m looking at them, I guess. The angle of perception is important too, of course. And whether or not of open or closed eyes and mind.

“All in all, I’d say I tend to view things thru my crystal, Much more clarity there, and it tends to filter-out misconceptions, too.”

“You know what, Coyote? You talk too damned much!”

“Yes, I agree. And you, Asshole, ask too many questions.”

(From  – Elderberry Flute Song Contemporary Coyote Tales. Peter Blue Cloud is one of the finest native american story tellers and poets)

JournalEntry: 13th June, 2006.

(அல்லது) வெட்டி உணர்ச்சிவசப் போராட்டங்களினால் ஆன பயன் என் கொல்?
(அல்லது) இணை வரலாறுகளைக் கற்போம், படிப்பினைகள் பெறுவோம், நம்மை அறிவோம்,
(அல்லது) எல்டிடிஇ, பிரபாகரன் செய்யாத தமிழ்க் குழந்தைக் கொலைகளா?

… அதென்ன தமிழ்க் குழந்தை சிங்களக் குழந்தையென்று பிரித்துப் பார்க்கும் பைத்தியக்காரத்தனம் என்று நீங்கள் கேட்கலாம். குழந்தைகளில் அவர்களின் விகசிப்புகளில், ஏதாவது வித்யாசம் இருக்கிறதா எனக் கேட்கலாம். கொலை செய்யப் பட்டாலும் குழந்தை, குழந்தைதானே என உருகலாம். ஏன் இந்த வெறுப்பு என மனக் கிலேசமுறலாம். நானும் கூடக் கேட்கலாம் – ஏன், வளர்ந்த மனிதர்களுக்குள் மட்டும் வித்தியாசம் பார்த்து, நமக்கு ஒரு சாராரைப் பிடிக்கவில்லையென்றால் அவர்களைக் கொலை செய்யலாமா? அழித்தொழிக்கலாமா?  ஹ்ம்ம்?

தமிழ் தமிழ் என அரற்றி ஆகாத்தியமிட்டு, அய்யோ தமிழ்க் குழந்தையைச் சாகடித்து விட்டார்களே, தமிழ் ‘இனத்தை’ ஒடுக்குகிறார்களே என்று புலம்பி, கீழ்கண்டவற்றில் சிலதையோ, பலதையோ, அல்லது அனைத்தையோ செய்வது, போராடுவது எனக்கு ஒவ்வாத விஷயம்: Read the rest of this entry »

கணிதத்தின் அழகுகளில் ஒன்று – அதன் ஒரு கூறினைப் பற்றி நமக்குக் கொஞ்சம் தெரிந்த மற்றொரு கூறின் வழியாக விளங்கிக் கொள்வது. பின்பு விளங்கிக் கொண்ட முதலாவதன் வழியாக, நம்முடைய, பின்னதின் / இரண்டாவதின் தன்மையை மேலும் அறிந்து கொண்டு, திரும்பவும் அதனைப்  புதியதாகப்  பார்த்து, அதனை முன்னெடுத்துக் கொண்டு செல்லல். சுற்றிச் சுற்றி, ஒரு திருகாணியின் மறை சுழல்வது போல மேலெழும்பி, இப்படியே ஆனந்தமாகச் சென்று கொண்டிருக்கலாம். Read the rest of this entry »

இந்த மலினப் படுத்தப் பட்ட, இப்போது ஒடிக் கொண்டிருக்கும் – மாணவர்களின் போராட்டம் – மன்னிக்கவும் – இந்த விசித்திர ஜந்து –  ’student protest’ — — அரசியலோ அல்லது கொள்கை சார் போராட்டமோ அல்ல. இது வெறும் கல்லெறியும்,  உணர்ச்சிமிகுந்த பொறுக்கித்தனம் தான்.

-0-0-0-0-0-

வாரம் ஒருமுறையாவது என்னிடம் கணித / வாழ்க்கைப் பிரச்னைகளை நிவர்த்தி செய்து கொள்ள வரும் ஒரு பாண்டிச்சேரி பொறியியல் மாணவன் (கொஞ்சம் மந்தம், பாவப்பட்ட அவன் தந்தை மிகவும் வேண்டிக் கொண்டதால் இந்த வேலை – அயர்வுதான்)  – போனவாரம் வரவில்லை. Read the rest of this entry »

(அல்லது) அறிவியல், அரசியல், வரலாறு, தொழில்நுட்பம், இலக்கியம் இன்னபிற பற்றி, டாப்டக்கர் கட்டுரைகள் எழுதுவது எப்படி
(அல்லது) ஒரே வினாடியில் 2 மினிட் நூட்ல்ஸ் தயாரித்து மாக்கி கம்பெனிக்கே மாரடைப்பு  ஏற்படுத்துவது எப்படி?
(அல்லது) அட்டைக் காப்பியுடன் அட்டை டீயும் அட்டை பன்னும் அட்டை பிஸ்கெட்டும் கூட அடிப்பது எப்படி?
(அல்லது, கடைசியாக) ஐயன்மீர், அறிவியலை(யும்) தயவுசெய்து மன்னித்து விடுங்கள்!

பாவமன்னிப்பு_கோரல்: கணியன் பூங்குன்றன் கடிக்கப் பட்டதற்கு இந்தப் பதிவின் காரணம் தான் காரணம். (எப்படி அற்புதமாக எழுதி விட்டுப் போய்ச் சேர்ந்தான் இவன்! மிகமிகப் பெருமையாக இருக்கிறது எனக்கு, இவன் மொழியும், கவிதையும் தத்துவமும் ரிக்வேத நாஸதீய ஸூக்தக்காரனின் மொழியும் கவிதையும் தத்துவமும் வளர்ந்த இடத்தின், சங்கிலி இணைப்பு போல் தொடர்ந்த மகத்தான பாரம்பரியத்தின், அதன் குறுக்கும் நெடுக்குமான மகாமகோப் பெருவழிகளில், தடங்களில் சுருண்டுருளும் ஒரு கூழாங்கல் நான் என்பது!!)

எச்சரிக்கை: இது ஒரு மிக நீஈஈஈஈஈஈஈளமாஆஆஆஆஅன பதிவு, என் ஆற்றாமை தான்; பொறுத்துப் பொறுத்துப் பார்த்தும் கேளிக்கை நாடகங்கள் அரங்கேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது மிகவும் விசனம் தரும் விஷயம். எனக்கு வெறிதான். பொறுமையாகப் படிக்கவும். Read the rest of this entry »