மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு

19/03/2013

இந்த மலினப் படுத்தப் பட்ட, இப்போது ஒடிக் கொண்டிருக்கும் – மாணவர்களின் போராட்டம் – மன்னிக்கவும் – இந்த விசித்திர ஜந்து –  ’student protest’ — — அரசியலோ அல்லது கொள்கை சார் போராட்டமோ அல்ல. இது வெறும் கல்லெறியும்,  உணர்ச்சிமிகுந்த பொறுக்கித்தனம் தான்.

-0-0-0-0-0-

வாரம் ஒருமுறையாவது என்னிடம் கணித / வாழ்க்கைப் பிரச்னைகளை நிவர்த்தி செய்து கொள்ள வரும் ஒரு பாண்டிச்சேரி பொறியியல் மாணவன் (கொஞ்சம் மந்தம், பாவப்பட்ட அவன் தந்தை மிகவும் வேண்டிக் கொண்டதால் இந்த வேலை – அயர்வுதான்)  – போனவாரம் வரவில்லை.

நேற்று அவனைப் பார்த்து ஏனென்று கேட்டால் உணர்ச்சிப் பிழம்பாக ’student protest’  என்றான்,
என்னப்பா அது ஸ்டூடென்ட் ஸெராக்ஸ் மாதிரியா?
என்ன சார் ஜோக்கடிக்கிறீங்க, ஈளத்துக்காக!
என்ன??
ஆமாம் சார், அங்க கொல பண்றாங்க!
யாரை?
தமிளர்களை!
யார்?
நீங்க டீவீ பாக்கணும் சார், ஒங்ளுக்கு ஓண்ணுமெ தெர்யல. அவ்ங்க சிங்களவனுங்க!
ஆங், அப்படியா?
ஆமா சார் அவனுங்க புத்தமதக்காரங்க. அவங்க வெறிநாயிங்க. அல்லாரையும்  நிக்கவெச்சு சுடணும்!!
டேய் அவங்க வடையா நீங்க சுட்றத்துக்கு? நம்ப அம்பேட்கர் பௌத்தர் தாண்டா, அவர் வெறி நாயா? என்னடா ஒளற்றீங்க? ஒங்க வூட்ல அவ்ரு படத்துக்கு மாலகீலல்லாம் போட்டுதானடா வெச்சுக்றீங்க! மூளகீள இருக்கா? எதுக்குதான் பண்றீங்க ஒங்க ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட?
அமெரிக்கா சதி பண்ணி ராஜபட்சேவ தூக்கில போடாம தடுக்கறாங்க – அதுக்குதான்  ப்ரொடெஸ்ட் பண்றோம்.
ராஜபக்ஷ யார்னு தெரியுமா?
அவன் தான் சிங்கள ராணுவ அதிகாரி, ஜெனிவால சிறைல தள்ளப் போறாங்க.
என்ன நீ டீவீ பாக்கச் சொல்ற! ஏத்தம் தாண்டா ஒனக்கு.சரி, என்னதான் பண்றீங்க ஒங்க ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்ல.
சொன்னா கோய்ச்சுப்பீங்க. காலேஜெல்லாம் போவ மாட்டோம்.
சரி, வேறு என்னத்தான் பண்வீங்க?
யாராவது ஆரம்பிப்பாங்க, பின்ன கல்லெட்த்து வுடுவோம்! தண்டவாளத்ல படுப்போம். கோஷம் முழங்குவோம்! மொட்டப் பசங்கள வெர்ட்டியடிப்போம். ஆனா நான் ரொம்ப அத்ல கலந்துக்றதில்ல சார்.
என்ன வீர்ம்டா? நாளெல்லாம் இப்படி ஒழக்கற சரி, ஏன் ராத்ரி வீட்டுக்கு வரல்ல?
திமுக காரங்க டிக்கெட் கொடுத்தாங்க – சினிமா போனோம்.
இத்தான் தமிழன் கொல்லப்படறத்துக்கு ஒங்க ஸ்டூடென்ட் ஸெராக்ஸ் சாரி ப்ரொடெஸ்ட் பண்ற கத… கருமாந்தரம்.  வெக்கப் படாத, நாலு நாளாவா இப்டீ சினிமா போன?
ஆமான் சார்.
சாப்பாடு?
சாப்பாடும் கொடுத்தாங்க சார், கட்சிக் காரங்க. பிரியாணி பாக்கெட்டும் ப்ரெட் பஜ்ஜியும்.
குடிச்சியா?
அய்யோ சார், நீங்க சொன்னத்லேர்ந்து குடிக்றத விட்டுட்டேன் சார். சாமி சத்தியம்.
அடேங்கப்பா. சரிதான்… . ஐநா, அமெரிக்கா, ஸ்ரீலங்கா அரசு, இந்தியா என்ன பண்ணுது, ஒங்க கருணாநிதி என்ன நெலம, ஜெயலலிதா என்ன சொல்றாங்க, மன்மோஹன் என்ன சொல்றார், டெஸோ புஸோ இதெல்லாம் தெரியுமா?
சார், அதெல்லாம் தேவையில்ல, எங்க காலேஜ் மாணவர் தலைவர்  ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்னு சொன்னாரு,  பண்ணினோம். தமிளனுக்குத் தமிளன் இது  கூடச் செய்யலேன்னா? லயோலா காலேஜ் பசங்க உண்ணாவிரதம் இருந்து செத்துட்டாங்களாம்!
டேய், அதெல்லாம் வதந்திடா! அவுங்க செத்தாலும் நல்லதுதான். அந்த முட்டாள்களுக்கும் ஒரு மசுரும் தெரியாது. ஒரு எழவும் புரியாம, கண்ட கழுத சொல்றத கேட்டு, ஃப்ரீ பிரியாணிக்கும் குப்பப் படத்துக்கும் அலஞ்சு ஒங்கொப்பன் வவுத்தெரிச்சலக் கொட்டிக்காத. என்ன முட்டாள் தனம்யா இது!
சார், ஒங்களுக்கு பிரச்சினையோட ஆளம் புரியல; என்னோட தனிப்பட்ட பிரச்சினைக்கா போராடறேன்? நீங்கதான சொன்னீங்க அரசியல்ல ஈடுபட்ணும்னிட்டு?
வக்கணயா பேசறதான்! இந்த அசிங்கத்தயாடா அரசியல்ன்ற? நீ நாய் மாரி பிரியாணிக்கும் சினிமா டிக்கெட்டுக்கும் அலையறத வொங்கப்பன் கேட்டான்னா தூக்குல தொங்கிடுவான்.
சார் அவருக்குத் தெரியாது. சொல்லிடாதீங்க.
எனக்கு வேற வேலயில்ல? சரி, அந்த லீடர் பையன் – எந்த வூரு? அவன் என்ன படிக்கற பையனா?
இல்ல சார். அவன் லாஸ்பெட்டு. அவன் அப்பா எல்பிஎஃப் தலைவராம்.
அவன கூட்டிக் கிட்டு ஒரு நாள் வா, அந்தக் கழுதப் பயல பிடிச்சு நாலு வார்த்த கேட்கணும். இந்த மாதிரி அரகொற பொறுக்கிப் பசங்களோடவா சுத்தற? எவ்ளோ செலவு பண்ணி ஒங்கப்பா ஒன் மேல நம்பிக்க வெச்சு ஒழச்சிட்ருக்காரு – நீ அவர ஏமாத்தறியே!
சாரி சார்.
டேய் ஒங்க அப்பாரு தோட்டவேல செஞ்சு நாளெல்லாம் வெய்யில்ல நின்னு ஒன்ன படிக்க வெக்யறாரு – நீ போய் அங்க ரௌடீங்க்ளோட மசுத்த பிடுங்கி கிட்டு இருக்க! ஒனக்கு உருப்பட வோண்டாமா? வாழ்க்கைல முன்னேற வேண்டாமா?
அதில்லசார், பிரபாகரன் பையன கொன்னுட்டாங்க, பிஸ்கெட் கொடுத்துட்டு.
டேய் ஒனக்குத் தெரியுமா எவ்வளவு தமிழன்கள, குட்டிப் பசங்கள அந்தப் பிரபாகரன் கொன்னான்னிட்டு, நம்ம ராஜீவ்காந்தியயே கொன்னத வுடு!
சார், ஆனாக்க  அதுக்கும் இதுக்கும் சமமாய்டுமா?
ஆவாதுதான். ஆனா, நீங்க இங்க கல்லெறிஞ்சா, மொட்டப் பசங்கள வெர்ட்டினா, அங்க சரியாய்டுமா? என்னாங்கடா போக்கத்தவனுங்களா, யோசீங்கடா…
ஏதோ ஆவேசத்துல…
ஏண்டா, நான் மயிலம் போயி முருகன்கிட்ட மொட்ட அட்ச்சிக்கினு வந்தா என்னையும் வெர்ட்டுவியா? ஒதிப்பியா?
அய்யோ சார், நீங்க தெய்வம் சார்! ஒங்கள அப்டி செய்ய மனசால கூட நெனக்க மாட்டேன் சார், சாமி சத்தியம்.
போடா போக்கத்தவனே! சினிமா கதவசனம் பேசறாம்பாரு. மொதல்ல அந்த ரௌடிப் பசங்க சகவாசத்த விட்டுட்டு  காலேஜ் தொறக்கற வரிக்கும் என்கூட ஸ்கூல்ல தெனத்துக்கும் இரு புரியுதா? படிச்சி முன்னேற்ற வழியப் பாரு, சரியா?
ஆனா, என் ஃப்ரெண்ட்ஸ் என்னப் பத்தி தப்பா நெனப்பாங்களே!
தம்பீ, ஒனக்கு நல்லபடியா சொன்னா புரிய மாட்டேங்குது. ஆனா ஒண்ணு சொல்றேன் – இன்னொரு தரம் நீ இப்படி ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட் அப்டீஇப்டீன்னு போய் கல்லெறிஞ்சா என் வூட்டுப் பக்கமே வராத. அவ்ளோதான் மேத்ஸ் அவ்ளோதான் அட்வைஸ். ஒன்னமாரி அரட்ராயர் சொங்கிப் பசங்களோட, வொங்கப்பா சொன்னார்னிட்டு மாரடிக்கறேன் பாரு அத்தச் சொல்லணும்… வூட்டுக்குப் போ. வொங்கப்பா கிட்ட நாளக்கி பேசறேன்.

-0-0-0-0-0-

வருத்தப் பட்டாலும் அவன் ஓரளவு புத்திசாலி. புரிந்துகொண்டான். பிழைத்துக் கொள்வான். அவனளவில் ’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ முடிந்தது.

இன்று என்னுடன் சில மணி நேரம் இருந்து விட்டுச் சென்றான். ஏதோ படித்தான் கூட. அவன் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாற்போலக் கூடத் தோன்றியது. சுபம்.

நான் செய்தது அரசியல்தான்.

-0-0-0-0-0-

இந்தப் பையன் ரொம்ப மோசமான உலக அறிவு கொண்டவன் அல்ல. இவனுக்கே இந்த நிலைமை என்றால் – மற்ற விசிலடிச்சான் குஞ்சுகளின் நிலைமை படு மோசமாகத்தான் இருக்கும். என்னவென்று தெரியாமலேயே ’மொட்டப் பசங்கள’ விரட்டியடித்துப் புரட்சி செய்யும் இம்மாதிரி மண்டூகத் திலகங்களுக்கு, இந்த இடதுசாரிக் குளுவான்களிடமிருந்து, தமிழ் வெறிய அரைகுறைகளிலிருந்து ஆமோதிப்பு வேறு.

எனக்குத் தோன்றுகிறது – இந்த ’ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ ஒரு வெட்டிக் காட்சி தான். ஆனால் இது மோசமானால், தீவிரமடைந்தால், அக்கால ‘ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட’ பம்மாத்து  போல தமிழகத்தைப் பல்லாண்டுகள் பின்னே திருப்பிப் போட்டு விடும்.

ஆனால் மோசமாகாமல் இதுவும் பிசுபிசுத்துவிடும்தான். எனக்கு நம் மாணவர்களிடம் இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. ஏதாவது கமல் ரஜினி விஜய் விக்ரம் வேதாள் இன்னபிற படமென்றால் போராட்டத் தட்டிகளைக் கீழே போட்டுவிட்டு தியேட்டர்களில் சரணடைந்து விடுவார்கள். இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது டாஸ்மாக்.

பிரபாகரனும், கருணாநிதியும்…

‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…

17 Responses to “மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு”

 1. ilangovan Says:

  super sir, great, all students are rowdys , they have nothing about eelam in their head, all the college or school students are throwing stones, i am excited by your article, superrrrrrrrrooooooo super

 2. Anonymous Says:

  Not a good post!

 3. Anonymous Says:

  punnaku pathivu

 4. surya Says:

  i see this as a repeat of 1983.. when kuttymani and jagan was killed in srilankan prisons we did a one day strike protest.. as a first year degree student i was happy to get a day’s leave. But the interest and support for eelam/ltte etc got faded when they strated the gunfight(kanchana) in the pondybazar. chennai. much before the 1991 massacre of RG.. despite all the idio-sync thinkings of RG he was a kind of leader to look for. Had the courage to send the IAF to Srilanka much before IPKF.. Maldives saga liberation from LTTE.. what all and
  now the cycle is starting again..
  kotta azichuttu start from the begginning.
  Hope this doesn’t repeat in another 30 years or so from today.
  rgds-Surya

 5. Anonymous Says:

  உங்களுக்கு குடும்பம்னு ஒன்னு இருந்தா, கவலையேபடாதீங்க, அங்கன உங்க பொண்டாட்டி மொதக்கொண்டு எவனு(ளு)க்கும் உங்கள புடிக்காது.. Self Eccentric Ego தெறிக்குது.. சார் கணிதம், அரசியல், வரலாறு எல்லாத்துலயும் கில்லி போல?? எவனும் உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியாதே?? போடா பொச்சு..


 6. I have not seen in any media in tamil nadu and india taking interview of Srilankan tamil as well as Sinhalese political leaders and trying to find out solution and move forward. very pathetic but we need to look after future generation in Srilanka.

 7. சான்றோன் Says:

  நிர்வாணர்களின் நாட்டில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்…….. ” தமில் ஈள உனர்ச்சி ” யால் மூச்சுத்திணறும் தமிழ‌கத்தில் ,இது போன்ற கட்டுரைகள் சற்றே மூச்சு வாங்கும் ஆசுவாசத்தை அளிக்கின்றன……. நன்றி ஐயா…

 8. Anonymous Says:

  எனது பள்ளி மற்றும் கல்லூரிப் பருவங்களில் நான் இது போன்ற போராட்டங்களில் பங்கெடுத்திருக்கிறேன். நான் உட்பட எனக்குத் தெரிந்து இது எல்லோருக்கும் ஒரு கொண்டாட்டம் தான். கூடுமான வரை கால வரையற்ற விடுமுறைதான் எங்களது நோக்கம். அப்போது குடி கலாச்சாரம் (இந்த அளவுக்கு) இல்லை. உங்களது மாணவர் சொன்னது போல் கூட்டத்தின் தலைவனுக்கு உள்ளூர் அரசியல் (அல்லது ரௌடி) புள்ளிகளுடன் தொடர்பு இருக்கும். தன்னை கதாநாயகனாக்கிக் கொள்ள (அல்லது ரௌடிக்கு தனது வலிமையை நிறுவ) இது போன்ற சாகசங்கள் தேவைப்படும்.

  கல்லூரியில் நூலகம் இல்லையென்று கூடப் போராடியிருக்கிறோம். நியாயமான கோரிக்கைதானே என்று நெகிழ்ச்சியுடன் கல்லூரி நிர்வாகம் மிகுந்த ஆர்வத்துடன் உடனடியாக நூலகம் அமைத்துக் கொடுத்தது. ஆனால் போராடிய எந்த மாணவனும் நூலகத்தை எட்டிப் பார்க்கவில்லை (நான் போய், அங்குள்ள தமிழ்க கதைப் புத்தகங்கள் பலவற்றைப் படித்தேன். ஆங்கிலமெல்லாம் எவனுக்குப் புரியும்?).

  ஆசிரியர்கள பலர் மாணவர்களை விட அறியாமை உடையவர்கள் தான். ஆனால் மிகுந்த அகந்தையுடையவர்கள். தன்னை மதிக்கவில்லையென்று ஒருவனை (ஒருத்தியை) அவர்கள் எண்ணினால், தங்கள் அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்தி, பள்ளியென்றால் அவனை(ளை) வகுப்பில் தோல்வியடையச் செய்வார்கள், கல்லூரி (நான் பொறியியல்) என்றால், செய்முறைத் தேர்வில் தோல்வியடையச் செய்தல் அல்லது மதிப்பெண்ணைக் குறைத்தல்(அல்லாவிட்டாலும் 2/3% க்கு மேல் எந்த மாணவருக்கும் செய்முறையில் வெற்றியடையும் தகுதி இருக்காது என்பது நிதர்சனம்) என்று அதிகாரத்தை நிறுவுவார்கள்.

 9. tamil Says:

  உங்களைப் போன்ற அறிவாளிகள்,களப்பணியாளர்கள்,எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் காலனிய ஆதிக்கத்தை எதிர்ப்பதும் வீண், எல்லோரும் ஒழுங்காக வேலையைப் பாருங்கள் என்று அந்தக் காலத்தில் உபதேசம் செய்திருக்கிறார்களா என்பதை தேட வேண்டும்.உங்களிடம் அறிவை விட காழ்ப்பும், திமிரும்,தனக்கு பிடிக்காததை,பிடிக்காதவர்களை அலட்சியம் செய்து எழுதும் மிக அதிகமாகவே உள்ளன. சோ+ஜெயமோகன் சேர்ந்த கலவைதான் இது.

  • பொன்.முத்துக்குமார் Says:

   சரி, காழ்ப்போ, திமிரோ, தனக்கு பிடிக்காததை / பிடிக்காதவர்களை அலட்சியம் செய்து எழுதாத தன்மை உடைய நீங்கள்தான் சொல்லுங்களேன் :

   மிச்சம் மீதி இருக்கும் எல்லா ஈழ தமிழர்களும் உரிமைகள் கிடைக்கப்பெற்று சமாதான வாழ்வு வாழ என்ன வழி ?


 10. // ’மொட்டப் பசங்கள’ விரட்டியடித்துப் புரட்சி செய்யும் இம்மாதிரி மண்டூகத் திலகங்களுக்கு, இந்த இடதுசாரிக் குளுவான்களிடமிருந்து //

  இரண்டு அல்லது மூன்று இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை வைத்து 400க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த போராட்டங்களை கொச்சைப்படுத்தும் முயற்சி!!

  // ராஜபக்ஷ யார்னு தெரியுமா?
  அவன் தான் சிங்கள ராணுவ அதிகாரி, ஜெனிவால சிறைல தள்ளப் போறாங்க. //

  மிகைப்படுத்தப்பட்ட அல்லது ஒரே ஒரு மாணவனின் நிலையை வைத்து ஒட்டுமொத்த நிகழ்வையும் எடைபோடும் அறைகுறை முயற்சி..

  சுயதம்பட்டம் அடித்து, சுயபிரதாபத்தை காட்டியதை விட இந்த பதிவில் வேறொன்றுமில்லை.


 11. போரிலே நேர்ந்த அழிவு போதாது- வயிற்றிலும் அடிப்போம்

  இலங்கை அரசுடன் செல் போன், தொலைக்காட்சி நெட்வொர்க் போன்ற பெரிய லாபகரமான தொயில்களை செய்த அதே அரசியல்வாதிகள், திடீர் என்று அவர்கள் அரசியல் கணக்குகளுக்காக இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களை வாங்க தடை செய்ய உலக நாடுகளை கேட்டு வருகிறார்கள்.

  போரில் நிராதரவாக நின்ற அபலை தமியர்கள் தனிப்பட்ட மலேசிய நாட்டு இந்துக்கள், இந்திய இந்து தொண்டு நிறுவங்கள் முலம் ஐ.டி கம்புயூட்டர்,. சிறு தொழில். கை வினை தயாரிப்பு, காளான் வளர்ப்பு, மீன் வளர்ப்பு, ஆடை தயாரிப்பு, போன்றவற்றை பழின்று-

  இத்தகைய பொருட்களை கொழுப்பு விலிருந்து உலக சந்தையில் ஏற்றுமதி செய்ஹு கொஞ்சம் கொஞ்சமாக வறுமையில் இருந்து வெளியே வரும் வேலையில்-

  அவர்கள் வயிற்றில் அடிப்பது போல இலங்கை நாடு ஏற்றுமதி, தொடர்பு மற்றும் வர்த்தகத்தை பகிஷ்கரிக்க கொஞ்சமும் அது இவர்களைத்தான் மிகவும் பாதிக்கும் என்ற உண்மையை மறைத்து மறக்கடித்து பிரச்சாரம் செய்து வருவது எதை காட்டுகிறது?

  இவர்களின் தமிழ். ஈழம் என்னும் உணர்ச்சி விஷமேட்டிரும் நோக்கம் உண்மையில்-

  அங்கே ஈழதிலும், தமிழகத்திலும், நெடிய துயர் மிகுந்த இன வெறி சண்டைகளையும், பிரிவினைவாத உள்நாட்டு குழபங்களையும் தூண்டி விடுவதே என்பது மட்டும் தெளிவாகவே தெரிகிறது.

  அவர்களையும் நமது சமுதாயத்தையும் அழிக்க அவர்கள் வீசும் வலையை அறுத்து அதில் இருந்து நமது மாணவ இளைன்ஞர் சமுதாயத்தை விடுவிப்போம்.

  இதுவரை 20 மாணவர்கள் இவர்களின் மன ஆயுத்தம் தரும் பிரசாரங்களால் தங்கள் உயிரை மிது விட்டார்கள்.

  அதை இவர்கள் ரசிப்பது காரணம்-

  இப்படி மன அழுத்தம் தேவை படுவது இது போல 20 தற்கொலை படையினரை தயார் செய்யவே !

  தமிழகத்தை நகால்ந்த்து போல விடுதலை கிறிஸ்துவ இயக்க போர்கலமக்கவே இவை ஏலோலம் நடக்கின்றன.

  ஈயம் என்ற போர்வையில் நமது நாட்டை பிளவுபடுத்தவும், மீண்டும் எல் த த எ என்ற பயங்கரவதத்தை கொண்டு வரவே இந்த சதி

 12. மாணிக்கம் பரமேஸ்வரன் Says:

  வாய்யா பார்த்தசாரதி…


 13. உங்கள் ஆரம்ப எழுத்திலேயே உங்கள் உள்ளம் புரிந்துவிடுகிறது .மன்னிக்கவேண்டும் ஐயா.இன்றைய மாணவர் சமுதாயம் நம்மை போல் இல்லை. முன்னேற துடிப்புடன் உழைக்கிறார்கள்.எதிர்காலத்தை பற்றி திட்டமிடுகிறார்கள்.அதே சமயம் நாட்டின் மீதும் சமூகத்தின் மீதும் அக்கறை கொள்கிறார்கள்.வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்திருக்கும் மாணவரை பார்க்கலாம்.ஆனால் வேலை செயாத சோம்பேறி இளைஞர்களை பார்க்க முடியவில்லை.நீங்கள் நினைப்பது போல் அரசியல் வாதிகளால் இப்போராட்டம் உருவாக்கப்படவில்லை.தானாக எழுந்தது என்பதை நீகள் உணர வேண்டும்.இபோராட்டதல் திமுக பதவி இழந்தது என்பதை மறக்கவேண்டாம்.


 14. இன்னொரு முக்கிய கருத்து.மாணவர் போராட்டம் அமெரிக்க தீர்மானம் நிறைவேறவேண்டும் என்பதே


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s