போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்

29/03/2013

அன்புள்ள பூவண்ணன் அவர்களே!

உங்கள் பின்னூட்டங்களைப் படித்தேன். நன்றி. (1, 2)  [உங்கள் கருத்தைப் பதிவு செய்திருக்கும் மற்ற அனைவருக்கும் கூட நன்றி]

வணக்கம். இப்படி ஒரு யோசிக்கும், அதுவும், சுயானுபவங்கள் பெற்ற, இளைஞர்கள் மீது உண்மைக் கரிசனம் உடைய ஒரு எதிர்விவாதக் காரருடன் உரையாட வாய்த்திருப்பது எனக்குச் சந்தோஷமே! அரைகுறைகளிடம், அற்பர்களிடம் — வாதாடி, வழக்காடி அலுத்து  விட்டது, நண்பரே!

உங்களுக்கு முடிந்தால், என்னுடைய நோக்கு – ஒரு ஜாதி ரீதியான பார்வை என்பதையெல்லாம் தற்போதைக்குக் கடாசி விடுங்கள். அது ஒரு பழைய கவைக்குதவாத மூத்திர வாடையடிக்கும் முட்டுச் சந்து என்பதுதான் என் எண்ணம். (அவகாசமிருந்தால், பிறகு விவாதிக்கலாம், இதனையும்)

ஹ்ம்ம். ஒரு காலத்தில், அடி உதை குத்து சண்டை போன்ற வீரமறவ மழபுலவஞ்சித்தனமான வாயில்லா உரையாடல்களிலும், தயங்காமல் ஈடுபட்டுக் கொண்டிருந்தவன்தான் நான். போராட்டம், புரட்சி, விடிவெள்ளி அதுஇதுவென்று பல சுற்றுக்கள் சுற்றி வந்தவன் தான். ஆனால், தற்போது அப்படியில்லை. (பெருஸ்ஸுக்கு வய்ஸாடிச்சில்ல, மேலும், ஆடிய ஆட்டம் என்ன.. என்று நொண்டிக்கொண்டே பாதகாணிக்கை பாலாஜி கனவில் வர ஆரம்பித்து விட்டார் வேறு!)

ஆக, வெற்றி அல்லது வீர்மரணம் என்கிற மயிர்க் கூச்சல்களில்லாமல் நடக்கும் தர்க்கபூர்வமான விவாதம் எனக்கும் உவப்பானது தான். (குதர்க்கமும் அப்படியே!) B-)

சரி. உரையாடல்களுக்கான சில கேள்விகளை, சில எண்ணச் சிதறல்களை (தர்க்கரீதியான வரிசைக் கிரமம் இல்லாமல்தான்) நான், ஒரு மானுட/சமூகவியல் மாணவனாக, கீழே கொடுக்கிறேன்.

 • நாம் வெகு ‘சல்லீஸாக’ வார்த்தைகளை உபயோகிக்கும் மனிதர்களாதலால், ஒரு மொழியியல் சார் கேள்வி: போர் என்பதற்கும் போராட்டம் என்பதற்கும் ஒரே வேர் தான் அல்லவா? இவர்களுக்குள்ள தொடர்பு யாது. போர் என்றாலே வன்முறை எனும் காட்சி விரிகிறது. போராட்டம் என்றால் – போர் எனும் பெயரில் குறைந்த வன்முறையுடன் ஆட்டம் போடுவதா? அப்படியானால் ‘அறப்போர்’ எனும் வார்த்தை? இவையென்ன புது வார்த்தைக் குழந்தைகள்; எனக்கு இது புரியவில்லை.
 • போராட்டம் என்றால் என்ன? அதற்கும் போருக்கும் வித்யாசங்கள் உள்ளனவா? போராட்டம் காலவரையற்றதா என்ன?  (காலவரையற்ற உண்ணாவிரதம் என்கிறார்கள் – அதற்கு காலவரையறுப்பு உள்ளது அல்லவா?  ஒன்று சாவு, இல்லை ஆரஞ்ச் ஜூஸ் அல்லவா?)
 • போராட்டத்துக்கு காலவரையுண்டு என்றால், அந்த கால்வரையை எப்படித் தெரிந்து கொள்வது?  அதற்கு முதலிலேயே அவற்றின் குறிக்கோள்கள் தெரிந்திருக்க வேண்டுமா? அல்லது உணர்ச்சிவசமாக முதலில் ஆரம்பித்துப் பின்னர் சாவகாசமாகக் குறிக்கோள்களை, இலக்குகளைத் தெரிவு செய்து கொள்ளலாமா?
 • போராட்டங்களுக்குக் குறியீடுகள், படிமங்கள், தொன்மங்கள் (symbols, metaphors, myths)  தேவையா? ஏன்? தேவை என்றால், அவற்றின் மூலமாக – பொதுப்புத்தியில் அறிந்து கொள்ளப்பட்ட  பாடுபொருட்களின் நம்பகத் தன்மைக்கும், அடிப்படை அறமான ‘குறைந்த பட்ச நேர்மை’க்கும் உள்ள தொடர்பு என்ன?
 • இந்தப் போராட்டங்களினால் – போராட்டத்தின் பாடு பொருட்களுக்கு, அவற்றின் நேரடி இலக்குகளுக்கு / குறிக்கோள்களுக்கு (உப இலக்குகளையே விடுங்கள்; மறைமுக இலக்குகளையும் விடுங்கள்), எந்த விதத்தில் குறுகிய / நெடுகிய காலவரையிலான மேன்மைகள் / நன்மைகள் / தீமைகள் / நெருக்கடிகள் இன்னபிற ஏற்பட்டிருக்கின்றன? ஏற்படும்?
 • போராட்டக் காரர்களின் கலாச்சாரச் சூழலுக்கு இப்படிப்பட்ட கேள்விகளுக்கான உங்கள் எண்ணங்கள் என்ன?
 • மேற்படி போராட்டக்காரர்களுடைய சூழ்நிலையிலேயே ஏறக் குறைய இருந்தும் – போராடாமலே – அந்த இலக்குகளை, அது மட்டுமல்ல, இன்னும் பிற நன்மைகளையும் அடைந்த பண்பாடுகளைப் பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன.
 • போராட்டக் காரர்களுக்கும், போராடப் படுபவர்களுக்கும் (யாருக்காகப் போராட்டம் நடக்கிறதஓ, அவர்களுக்கு) என்ன உறவு? போராடப் படுபவர்களின் உதவிக்குத் தான், மேன்மைக்குத் தான் போராட்டக் காரர்கள் போராட வேண்டுமா என்ன?
 • போராட்ட வழிமுறைகளுக்கும், போராட்ட இலக்குகளுக்கும் (ends versus means) ஒரு ஒத்திசைவு இருக்க வேண்டியது அவசியமா? ஏன்? இருக்க வேண்டாமா? மறுபடியும் ஏன்?
 •  போராட்டங்களில் வன்முறை பற்றி – இதற்கும் குறிக்கோட்களுக்கும் உள்ள உறவு – தகுந்த உறவா, தகாத உறவா?
 • போராட்டம் என்பதற்கு – பயிற்சி அவசியமா? இல்லை, உணர்ச்சிக் குவியல் மட்டும் போதுமா?
 • போராட்டக் காரர்களின் அடிப்படைத் தகுதிகளுக்கும் (credentials), போராட்டத்தின் குறிக்கோள்களுக்கும் என்ன உறவு? அது எப்படி இருக்க வேண்டும்?  அல்லது உறவே வேண்டாமா?
 •  முதலில் உணர்ச்சிக் குவியலாக ஆரம்பித்து விட்டு, போராட்டத்துக்கு  ஒரு அடிப்படை வலு (’critical mass’) வந்த பின்னர், தர்க்க ரீதியான தந்திரோபாயங்களுக்கு, சாவகாசமாகச் செல்லலாமா?
 • போராட்டங்களுக்கும், பேரூடகங்களுக்கும் – அவற்றின் வலைப் பின்னல்களுக்கும் உள்ள தொடர்பு – இரண்டும் ஒன்றை ஒன்று சாப்பிடும் உறவு (symbiotic relationship) மட்டுமாகத் திரிந்து போகாமலிருக்க வேண்டுமா? அல்லது இந்த உறவு சரிதானா? சரி என்றால், குறிக்கோள்களுடன் இந்த உறவின் தொடர்பு என்ன?
 • போராட்டங்களுக்கும்  முழு நேர அரசியல் கட்சிகளுக்கும் உள்ள தொடர்புகள் – அவை இருக்கலாமா? ஏன்? இருக்கக் கூடாதா? ஏன்? ’குறைந்த பட்சப் பொதுக் குறிக்கோள்கள்’ பாற்பட்டு இவை ஒன்றாகப் பணி புரிய முடியுமா? சாதக பாதகங்கள்? தந்திரோபாயங்கள்??
 • பொது மக்களுக்கும் போராட்டங்களுக்கும் தொடர்புகள் இருக்க வேண்டுமா? எந்த அளவுக்கு இருக்க வேண்டும்? சாதக பாதகங்கள்? தந்திரோபாயங்கள்??
 • போராட்டங்களுக்கும் பொறுக்கிகளுக்கும் உள்ள தொடர்பு – போராட்டக் காரர்கள் ‘அறப்’ போராட்டம் செய்வதாகவே ஒப்புக் கொண்டாலும் கூட,  பொறுக்கிகள் யாரும் பார்க்காதபோது போராட்டத்திற்குள்ளே நுழைந்து விடுகிறார்கள் என்றே ஒப்புக் கொண்டாலும் கூட இந்த பொறுக்கிகளைப் பற்றி போராட்டக் காரர்கள் எடுக்கவேண்டிய நிலைப்பாடு என்ன?
 • போராட்டமென்றால், பொதுச் சொத்துக்கள் தான் எதிரி நம்பர் ஒன்றா? போராட்டங்களுடன், பொதுச்சொத்து நாசத்தை எப்படிப் பொருத்திப் பார்ப்பது? அல்லது இது பொதுவாக ‘collateral damage’  என விட்டு விடப்பட வேண்டியதா?
 • வன்முறைக்கெதிராக எழுந்திருக்கிறது என நம்பப் படுகிற போராட்டத்தில் வன்முறையின் பங்கு என்ன?
 • போராட்டங்களின் தலைமை எப்படி உருவாகிறது? எப்படி இதனை வளர்த்தெடுப்பது? இவற்றின் பண்புகள் யாவை?
 • போராட்டங்களுக்குத் தேவையான பின்புலப் பங்களிப்புகளை (படிப்பு, பணம், உழைப்பு இன்ன பிற) எப்படி குறிக்கோள்களுடன் சமரசம் செய்து கொள்வது. (எனக்கு சமரசம் கெட்டவார்த்தையல்ல. மிளகுரசம் மாதிரி அதனையும் மிகமிகப் பிடிக்கும்)
 • போராட்டப் பின்புலங்களின் (நேரடியான / மறைமுகமான) குறிக்கோள்களை எப்படி (நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ) போராட்டங்களின் குறிக்கோள்களுடன் சமரசம் செய்து கொள்வது; இதிலுள்ள தந்திரோபாயங்கள் பற்றி.
 • இந்த மேற்கண்ட இரு சமரசங்களை எப்படி போராட்ட வழிமுறைகளுக்கும், போராட்ட இலக்குகளுக்கும் பொருத்தி முன்னெடுத்துச் செல்வது.
 • குறிக்கோள்களை கண்டெடுப்பது, தந்திரோபாயங்களை அறிந்து உபயோகிப்பது, போராட்டங்களை வளர்த்தெடுப்பது, சமன் குலையாமல் காப்பது, சமரசத்துக்கு விழைவது, உரையாடல்களுக்கு (உச்சாடனங்களுக்கு அல்ல) வழி வகுப்பது, குறிக்கோள்களை அடைந்ததை அறிய முடிவது, பின்னர் அடுத்த சுற்று என்ன என தீர்மானிப்பது –  பற்றி.
 • போராட்டங்கள் நீர்த்துப் (losing steam) போகாமல் இருக்கத்  தந்திரோபாயங்கள் என ஏதாவது இருக்கின்றனவா?
 • ’சாக்கடை ஆய்வாளர்கள்’ பற்றி, அவர்கள் சமூகத்துக்கு, உரையாடல்களுக்கு அளிக்கும் பங்கு பற்றி என்ன கருத்து?
 • அடிப்படை நேர்மை எனும் அறக் கருதுகோளுக்கும் – போராட்ட வழிமுறைகளுக்கும், இலக்குகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? அது ’முரணியக்கம்’ என்பதன் மூலம் மட்டும் தான் புரிந்து கொள்ள முடியுமா?
 • உங்களால் ஒரு வெற்றி கரமான போராட்டம் என இனங்காணப்பட முடிவதைப் பற்றி – அது எப்படி வெற்றி வாகை சூடியது பெற்றது என்பதைப் பற்றி, மேற்கண்ட காரணிகள் / பார்வைகள் மூலம் விரித்து உணர்த்த முடியுமா?
 • இந்தப் போராட்டங்களுக்கு ஒரு மாற்றே கிடையாதா? குறிக்கோள்களை, குறைந்த சமூகச் செலவில் அடைவதற்கு வேறு வழிகளே கிடையாதா? இல்லையென்றால் ஏன்? இருக்கின்றன என்றால் அவை யாவை?

-0-0-0-0-0-0-

சரி, something is definitely rotten in the state of Denmark.

இது நமக்கு – 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தெரிந்த விஷயம்தான். நன்றாகவே புரிந்த விஷயம்தான். அழுகின வாடை வீசுகிறது. உண்மையே. நாம் இதனை எப்படி எதிர்கொள்கிறோம். எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

பூவண்ணன், நீங்கள் உங்களுக்குத் தேவையான மேலதிக கேள்விகளையும் கேட்டு அதற்கு உங்கள் கருத்துக்களை அளிக்கலாம். உங்களுக்குப் பட்ட செயல்முறை விளக்கங்கள் அளிக்கலாம். குறிப்புகள் கொடுக்கலாம்.

அவசரமே இல்லை. தேவையான அவகாசம் எடுத்துக் கொள்ளுங்கள், தமிழகம் சார்ந்து (எடுத்துக்காட்டு: ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம்) – அல்லது உலகத்தில் எந்த பகுதி சார்ந்தும் உரையாடல் அமையலாம் – எனக்குப் பிடித்த, செல்லப் போராட்டங்கள் என சில இருக்கின்றன.

கேள்விகள் இருந்து கொண்டே இருக்கவேண்டும், அவற்றுக்கான பதில்கள் தேடப்பட்டு, செழுமைப் படுத்தப் பட்டு முன்னெடுத்துச் செல்லப் படவேண்டும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.

கண்களைக் கட்டிக்கொண்டு ஏரோப்ளேன் பாண்டி (அட்டாக் பாண்டி அல்ல) ஆட்டம் ஆடும் போது கூட, கட்டங்களுக்கு வெளியே நின்று கொண்டிருப்பவர்களை ‘சரியா,’ ‘சரியா?’ என்று கேட்டுக் கொண்டுதானே அடுத்த கட்டங்களுக்குத் தாவ முடியும்?

உங்கள் சக்தியையும், நேரத்தையும், இச்சையையும், பொறுமையும் பொறுத்து, என்னுடைய இவற்றையும் பொறுத்து, விவாதிக்கலாம். அவசரமேயில்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் உரையாடலிலும் இருக்கலாம். ஹ்ம்ம்… யோசித்தால், உரையாடல் நடந்தாக வேண்டும் என்று கூட அவசியம் இல்லைதான்.- ஆனால்… நடந்தால் நன்றாக இருக்குமோ?

மறுபடியும் நன்றி.

அன்புடன்

__ரா. (ஒன்றரை மணிநேரம் ஓடியதே தெரியவில்லை.ஆக, வகுப்புக்கு ஓட வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவன், மன்னிக்கவும்; இப்போதைக்கு இவ்வளவுதான்)
பின் குறிப்பு: பூவண்ணன் அவர்கள் மட்டுமல்ல. இதனைப் படிக்கும் நீங்களும் விவாதிக்கலாம். இந்தப் பதிவில் தான் எழுதவேண்டும் / பின்னூட்டமிடவேண்டும் என்றும் அவசியமில்லை. முடிந்தால் எங்காவது எழுதி, அதற்குச் சுட்டியளித்தால் கூடப் போதும். ஆனால், அப்படிச் செய்யாவிட்டால் கூடப் பரவாயில்லை. (ஓடவேண்டும்…)

தொடர்புள்ள பதிவுகள்:

13 Responses to “போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்”

 1. Venkatesan Says:

  வறட்டு வேதாந்தம்.

  • ramasami Says:

   Dear Sir Venkatesan,

   Don’t leave your random droppings all over please! I want your considered comments, if at all!

   I would await your point by point ‘real sword’ debunking / rebuttal of my takes. So draw your sword!

   Kurosawa Akira’s ‘Shichinin no Samurai’ or ‘The Seven Samurai’ has a scene involving Kyuzo, the zennish practitioner of swordcraft ‘kendo.’

   Kyuzo and a samurai have a duel with bokken (wooden sword) and the latter loses. But the loser does not agree, does not see the writing on the wall and insists that they fight with real swords.

   Kyuzo says: If we were fighting with real swords I’d have killed you.

   The other, posturing and pretending samurai says: All right, let’s fight with real swords.

   So Kyuzo says: It’s silly, I’ll kill you.

   So the other samurai draws his sword, Kyuzo rather reluctantly draws his too (in a beautiful arc with zanshin and remarkable focus) – and the pretender rushes headlong towards Kyuzo, and in one lyrical blow of Kyuzo’s blade, the pretender’s body falls in a slow motion to the dust…

   (remarkable cuts to Kambei in the interim – but this cannot go on)

   No. I am that pretender, who ought to know better than waste his time blogging, provoking, butting, rebutting, the various species of ignoramus Indicus. Sorry..

  • பொன்.முத்துக்குமார் Says:

   திரு.வெங்கடேசன்,

   பயந்துவிட்டீர்கள் போலிருக்கிறது. அது உங்களது குற்றமில்லை அன்பரே. பல பத்தாண்டுகளாக வெறுப்பதற்கு மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு தலைமுறையால் வளர்த்தெடுக்கப்பட்ட சந்ததியால் உருவான ஒரு சமூகம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று ஒரு கெள்வி எழுந்தால் சந்தேகமே இல்லாமல் தமிழகத்தை கை காட்டலாம்.

   சுய சிந்தனையை வளர்த்துக்கொள்ளக்கூட சோம்பல் பட்டு அப்படி சிந்திப்பவனை எப்படி எளிதாக நிந்திக்க முடிகிறது பாருங்கள்.

 2. சான்றோன் Says:

  சார்…….. தமிழகத்தில் இப்போது ஒருவகையான பாசிசம் கட்டமைக்கப்பட்டு வருகிறது……….

  ”புலிகள் மாவீரர்கள்…….அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை……..அவர்களை இலங்கை அரசோடு சேர்ந்து இந்தியாவும் அழித்தது……. எனவே இந்தியாவே முன் நின்று தனி ஈழத்தை பெற்றுத்தர வேண்டும்,,,……இல்லாவிட்டால் தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரித்து, ஈழத்துடன் சேர்த்து,” ஒன்றுபட்ட ” தமிழகத்தை உருவாக்க வேண்டும் ”

  எப்படி? இது போன்ற முட்டாள்தனமான ,னடைமுறை சாத்தியமற்ற , தேசவிரோத கருத்துக்களை அனைவரும் ஏற்கவேண்டும்….அப்படி ஏற்காதவன் தமிழனே இல்லை என்னும் அளவுக்கு கூச்சலிடுகிறார்கள்……. இதையும் நியாயப்படுத்த சில பேர்,……. இதில் யாரிடம் விவாதித்து என்ன ஆகப்போகிறது?

  • ramasami Says:

   ’சான்றோன்’ அவர்களே!

   நீங்கள் சொல்லும் விஷயம் வருத்தம் தரக் கூடியது தான். ஆனால்,எனக்கு தினசரி செய்திகளில், நாளுக்கு நாள் தடுமாறும் நிகழ்வோட்டங்களில் அவ்வளவு விருப்பமில்லை. ஆனால் ஒரு பொதுவான ஒட்டத்தை மட்டும் அறிவேன். இது கொஞ்சம் அறியாமையின் பாற்பட்ட அமைதிதான் – ignorance is bliss.

   ஆனால் வயதாக வயதாக இந்திய ஜனநாயகத்தில் நம்பிக்கை அதிகமாகி வருகிறது.

   எல்லாம் சரியாகி விடும் எனத்தான் எண்ணம். This too shall pass, what else!

   • சான்றோன் Says:

    மதிப்பிற்குரிய திரு.ராமசாமி அவர்களின் கவனத்திற்கு ………

    எனது புனைப்பெயர் தற்பெருமை காரண‌மாக வைக்கப்பட்டதல்ல…. நான் சார்ந்த [ இழிவாக அழைக்கப்படும்] சாதிப்பெயரின் திருத்தப்பட்ட வடிவம் ….அவ்வளவே….மற்றபடி நான் சாதி வெறியனுமல்ல……

    • ramasami Says:

     அய்யா, நான் அப்படி எதுவும் தற்பெருமை / இழிவு / சாதிவெறி என்றெல்லாம் எழுதவில்லையே! ‘சான்றோன்’ என மேற்கோள் குறிக்குள் எழுதியதால் அப்படி நினைக்கிறீர்களோ? நான், ஒரு அக்கால USENET மரபுப்படி, ’அழைக்கப்படும் பெயரல்லாதவர்ளை; விளிக்கும் போது / அப்பெயரை உபயோகிக்கும் போது, இடும் மேற்கோள் குறிகளை இட்டேன். அவ்வளவே. உங்களிடமிருந்து வரும் சமநிலை சார்ந்த, மதிக்கத்தக்க எண்ணக் கோர்வைகளைப் படித்தபின்னரும் கூட, அப்படிக் கீழ்மையாகச் செய்வேனா என்ன?

     அன்புடன்:

     ’ராமசாமி’ 8-)

     • சான்றோன் Says:

      அய்யா ….என்னை தயவு செய்து தவறாகப்புரிந்துகொள்ள வேண்டாம்…….வேறு சில தளங்களின் சில விவாதங்களில் நான் எனது புனைப்பெயருக்காக கிண்டலடிக்கப்பட்டதுண்டு…… அவற்றை நான் பொருட்படுத்தியதில்லை…. நான் பெரிதும் மதிக்கும் தங்களைப்போன்றவர்கள் என்னைப்பற்றி தவறாக [ சற்று அதிகப்பிரசசங்கித்தனமாக இருக்கிறதே என்று] எண்ணிவிடக்கூடாது என்பாதாலேயெ விளக்கம் அளிக்க முன்வந்தேன்……. நன்றி…….

 3. பொன்.முத்துக்குமார் Says:

  சார், நமக்கெல்லாம் இப்படி ஒரு பிரச்சினையை வேரடி மண்ணாக ஆராய்ந்து பார்த்து புரிந்து கொள்ளவேண்டும் என்ற முனைப்பு ரொம்ப புதுசு. அதுக்காகவே உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.

  இந்த ஆக்கபூர்வமான உரையாடலை தொடரவேண்டுமென பூவண்ணனை வேண்டிக்கொள்கிறேன்.

 4. அ.சேஷகிரி Says:

  ஐயா,
  தங்களின் அறிவு பூர்வமான கட்டுரையையும்,உங்களுக்கு நமது மாணவ மற்றும் இளைய சமுதாயத்தின் மீதுள்ள அக்கறையையும் தங்கள் வலைத்தளத்தை படித்து வருபவன் என்கிற முறையில் நன்கு அறிவேன்.இதில் திரு.வெங்கடேசன் போன்றவர்களின் ஒற்றை வார்த்தைகளை பொருட்படுத்தவேண்டிய அவசியமே இல்லை.ஆனால்
  திரு.பூவண்ணன் போன்ற அனுபவசாலிகள் இந்த உணர்ச்சிமய சூழ்நிலைகளுக்கு ஆளாவது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. உண்மையில் இலங்கையில் வாடும் நம் தமிழ்மக்களுக்கு இதுபோன்ற எடுத்தேன் கவிழ்த்தேன் அணுகுமுறைகளால் பயனைக்காட்டிலும் மேலும் துயரமே அதிகரிக்கும்.இங்கு சுற்றுலாவுக்கு,
  விளையாட்டுக்கு மற்றும் வழிபாட்டுக்கு வந்துள்ள
  சிங்கள மக்களை நாம் பெரும்பான்மையாக இருக்கிறோம் என்ற ஆணவத்தால் தாக்கினால் இதன் எதிரொலி அங்கு ஏற்கனவே நரக வாழ்க்கை நடத்தி கொண்டு இருக்கும் தமிழர் மீதல்லவா விழுகிறது.மேலும் அங்குள்ள நடுநிலையில் உள்ள சிங்களர்களும் நம்மை ஆதரிக்க மாட்டார்கள்.இந்த எளிய உண்மையை கூட புரிந்து கொள்ளாமலும் ,உசுப்பேத்தி,உசுப்பேத்தியே ,பொழைப்பை ஒட்டிக்கொண்டு இருக்கும் திராவிட கட்சிகளின் பின்னால் செல்வதனாலும் இந்த மாணவர்களுக்கோ,இலங்கையில் வாடும் தமிழர்களுக்கோ எந்த உபயோகமும் இல்லை.

 5. poovannan Says:

  சார் பயங்கரமான கேள்விகளா கேட்டு ரொம்ப பயமுறுத்துறீங்க

  இம்மானுவேல் கந்த் என்ற வெகுவாக போற்றப்படும் சிந்தனையாளரிடம் சென்று ஒரு பெண் தன காதலை தெரிவித்தாள்.ஆழ்ந்து அலசி அந்த பெண்ணை ஒத்து கொள்ள முடிவெடுத்து கந்த் அவர்கள் வீடிற்கு சென்ற போது அந்த பெண்ணின் தந்தை அவரிடம் தன பெண்ணுக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகளுக்கு தாய் என்றாராம்

  http://www.osho.com/online-library-situation-kant-girl-b1466efa-13d.aspx

  It is said of Immanuel Kant, one of the greatest systematizers, that one girl proposed to him. In the first place it is bad that the girl should propose, it is always the boy who proposes. But the girl must have waited and waited and Kant wouldn’t propose; the idea never occurred to him. He was so much in his philosophy, how could he be in love? He was so much rooted in his head, the heart was denied. So the girl, feeling too much time had been lost, proposed. Kant said, “I will think it over.”

  How can you think about love? Either it is there or not. It is not a question to be solved, it is a situation to respond to. Either your heart says yes or your heart says no. It is finished. What will you think? It is not a business proposal. But it was a business proposal to Kant. Too much head-orientation makes everything businesslike. So he thought, and he not only thought, he went to the library and consulted the books about love, marriage. Then he noted down in his notebook all that was in favor of marriage and all that was against. And he thought and thought and thought, and it is said that weighing the pros and cons, he decided in favor of marriage because a few points were more in favor than against. So it was a logical decision.

  Then he went and knocked at the girl’s door, and the father said, “She is already married and a mother of three children. So much time passed… you came a little late.”

  Time is needed for the mind. Mind is always late, because time will be needed and the situation will be lost. And when you knock at the door, the girl has moved – she is already a mother of three children. And this is happening every moment, remember: a situation is there, so act, don’t think, because if you think the situation will not wait for you. The girl will have moved. And when you are ready to respond there will be nothing to respond to. Kant was ready, but mind takes time and situations are moving. Life is a flow, a flux. It is not static; otherwise the mind would have found the answer. If the girl had remained…. But the girl was getting old, she was missing life. She could not wait, she had to move, make a decision.

  இருவது வருடங்களுக்கு மேலாக பேச்சு மூச்சில்லாமல் திடீர் என்று மாரடைப்பு வந்து விழும் பலரை பார்த்திருக்கிறேன்.உடனே அவருக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு காற்றை உள் அனுப்பும் மருத்துவர்கள்/மருத்துவ பணியாளர்களையும் பார்த்து வருகிறேன். இன்று வரை யாரும் பிழைத்து எழுந்து வந்தது கிடையாது
  ஒரு முறை ஓட்ட பந்தயத்திற்கு பிறகு சுருண்டு விழுந்த யூனிட்டை சார்ந்த தோழர் ஒருவருக்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக CPR செய்து மருத்துவமனையில் சேர்க்கும் போது brought dead என்று தான் சேர்த்தார்கள். பல சீனியர் மருத்துவர்கள் HIV போன்ற வியாதிகள் இருப்பதால் நன்கு அறிமுகம் இல்லாத /பிழைக்க மிக மிக குறைவான வாய்ப்பு உள்ள /இல்லை வாய்ப்பே இல்லாத நோயாளிகளின் வாயோடு வாய் வைத்து CPR செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று நீண்ட அறிவுரைகள் வேறு
  சென்ற மாதம் கோர்டேர்சில் திடீரென்று உயர் அதிகாரி ஒருவரின் தந்தை குளித்து விட்டு வந்து மயக்கம் போட்டு விட்டதாக அவசரமாக அழைத்தார்கள்.அங்கு சென்று நாடியை,கண்ணை பார்த்து விட்டு ,உதவியாளரிடம் இசிஜி மஷின் எடுத்து வர சொல்லி விட்டு ,அதில் ஒன்றும் வரவில்லை என்பதால் உயிர் பிரிந்து விட்டது என்று கூறி விட்டு death certificate கொடுத்து விட்டு வந்தேன்.
  ஒரு முயற்சியும் செய்யவில்லை.ஆனால் ஒன்றும் செய்யாததை நினைத்து ,என்னில் ஏற்பட்ட மாற்றங்களை எண்ணி குற்ற உணர்வு சில சமயம் குறுகுறுக்கிறது
  வெற்றி,தோல்வி,பிழைப்பானா,மாட்டானா,நமக்கு பாதிப்பு வருமா,வராதா ,எதிர்காலம் பாழாகுமா ,இ எம் ஐ கட்ட முடியுமா என்று பார்ப்பது/பார்த்து அலசிய பின் முடிவு செய்வது போராட அல்ல,எப்படி போராட்டத்தை தட்டி கழிக்கலாம் என்று தான்

 6. poovannan Says:

  இதே விஷயத்திற்காக திண்ணையில் வந்த கட்டுரையில் சில பதில்கள் உங்களின் சில கேள்விகளுக்கு பொருந்தலாம் என்று நினைக்கிறேன்

  http://puthu.thinnai.com/?p=19394#comment-15683

 7. பூவண்ணன் Says:

  *

  தனி மனிதன் போடுவது சண்டை.போர் கிடையாது
  ஆனால் தனி மனிதன் செய்தாலும் போராட்டம் தான். பலர் சேர்ந்து கொண்டு செய்தாலும் அது போராட்டம் தான்
  எனக்கு நடன பயிற்சி வேண்டாம் ,கராத்தே பயிற்சி வேண்டாம் என்று சிறுவர்,சிறுமிகள் முரண்டு பிடிப்பதும் போராட்டம் தான்.என் அவர்கள் வேண்டாம் என்று கூறுகிறார்கள் அவர்களின் பக்கம் ஞாயம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமே தவிர உன்னால் போராடி வெற்றி பெற முடியுமா என்ற ஆணவம் சரியா
  ஞாயம் இருந்தால் அவர்களின் போராட்டத்தை நிறுத்த அவர்கள் கோருவதை செய்ய வேண்டும் .போராட்டத்திற்கு வலிமை முக்கியத்துவம் கிடையாது. போருக்கு மிக மிக அவசியம்.
  எட்டு மாணவன் செய்தாலும் சரி எட்டு லட்சம் பேர் போராட்டம் செய்தாலும் சரி ,நீ எப்படி போராடலாம் என்ற கேள்வியில் துளி கூட ஞாயம் கிடையாது
  அம்மாவை அப்பா அடிக்க கூடாது என்று போராடாமல் நானும் நண்பர்களும் விளையாட பந்து வேண்டும்,நேரம் வேண்டும் என்று போராடுவது ஞாயமா என்ற கேள்வியிலும் அர்த்தம் கிடையாது
  இதற்காகவும் போராடுங்கள் என்று வேண்டுகோள் வைப்பதற்கும் இதை முதலில் செய்து விட்டு பிறகு இலங்கைக்கு போ என்பதற்கும் ஆயிரம் வித்தியாசம் உண்டு
  வன்முறை கலந்து விட்டதால்/வாஞ்சிநாதனால் விடுதலை போராட்டத்தை யாரும் நிறுத்தவில்லை.அரசை ஸ்தம்பிக்க அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்,ராணுவ வீரர்கள் பணியில் இருந்து விலக வேண்டும் என்று உலகப்போர் நடக்கும் போது போராட்டம் நடத்தியதையே நாம் குறையாக எடுத்து கொள்ளாத போது ஒரு சில மாணவர்கள் கல் எறிந்தார்கள் என்பதை பிடித்து கொண்டு தொங்குவது சரியா

  Load Older Messages

  Load Newer Messages

  Load More Results


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s