மாணவர் போர் ஆட்டம் – பின்னூட்டம், விளக்கம்++

30/03/2013

போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்

இதற்கு, ’வெங்கடேசன்’ அவர்கள், ரத்தினச் சுருக்கமாக ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார் – “வறட்டு வேதாந்தம்.” அதற்கு நானும் பொன். முத்துக்குமார் அவர்களும் எங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டோம்.

இனி ’வெங்கடேசன்’ அவர்களின் சுருக்க-விளக்கமும், அதன் பின் என் கருத்துக்களும். (இது அக்கப் போர் இல்லை. அதனால், உரையாடல்களில், மாற்றுக் கருத்துக்களில் ஆர்வமுடையவர்கள் படித்தால், ஒருவேளை அவர்களுக்கு உதவியாக இருக்கலாம்)

-0-0-0-0-0-0-

ஐயா,
உங்களை அவமதிப்பது என் நோக்கமன்று. மாணவர் போராட்டம் தொடர்பான உங்கள் கருத்துக்களை படித்து வருகிறேன். இந்த பதிவை படித்தபின் எனக்கு தோன்றியது “வறட்டு வேதாந்தம்” என்பதே. அதை பதிவிட்டேன். தவறிருந்தால் மன்னிக்கவும்.

மாணவர் போராட்டத்தில் எழும் முக்கியக் கேள்விகள்: விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை இலங்கை ஒழிக்கும் போது வேண்டுமென்றே தமிழர்களை அழித்தார்களா? (இல்லை என்று நீங்கள் கருதினால் மேலே உள்ள கேள்விகளை விட்டு விடுங்கள்).அப்படியாயின் இதற்காக யாருக்காவது தண்டனை தரப்பட வேண்டுமா? அது ராஜபக்சேவா? இவரை தண்டிக்க வேண்டுமென்றால் யார், எப்படி விசாரித்து தண்டனை தர வேண்டும்? ஈழ மக்கள் rehabilitation ஒழுங்காக நடை பெற வேண்டுமா? இதற்காக தமிழக மக்கள் கவலைப் பட வேண்டுமா/? ஆம் எனில், அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்த குற்றத்தில் இந்தியா, சீனா, அமெரிக்காவின் பங்கு என்ன? தனி ஈழம் அமைய வேண்டுமா? இது குறித்து (வேற்று நாடான) தமிழக மக்கள் கோரிக்கை எழுப்பலாமா? அமைய வேண்டும் எனில் அதை எப்படி நிகழ்த்த முடியும்?

இப்படிப்பட்ட முக்கிய கேள்விகள் உள்ள இந்த பிரச்சனையில் உங்களது முதல் பதிவு ஒரு மாணவனோடு நடந்த உரையாடலை நையாண்டியோடு பேசியது. பிறகு விடுதலை புலிகள் செய்த அட்டூழியங்களை தகுந்த ஆதாரங்களோடு உரைத்தீர்கள். இப்போது ஒரு கேள்விப் பட்டியலை தந்துள்ளீர்கள். உங்கள் முதல் கேள்வி “போர் என்பதற்கும், போராட்டம் என்பதற்குமான வேறுபாடு” என்பது. நீங்கள் கேட்ட மற்ற கேள்விகள் நியமாகவே படுகின்றன. ஆனால், போராட்டம் குறித்த விவாதத்தில் இறங்கும் முன் இப்பிரச்சனையில் அடிப்படை கேள்விகள் குறித்து உங்கள் கருத்துக்களை எழுதிவிட்டு பேசுவதே சரியான முறை என்பது என் எண்ணம். குறைந்த பட்சம் “இலங்கை பிரச்சனைக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லை” என்றாவது சொல்லலாம். இதை செய்யாமல் போராட்டம் பற்றி academic கேள்விகள் மட்டுமே கேட்பது எனக்கு வறட்டு வேதாந்தமாக பட்டது.

இது தொடர்பான என் கருத்துக்களை சுருக்கமாக கூறி விடுகிறேன். விடுதலை புலிகள் ஒரு தீவிரவாத இயக்கம். அதை அழித்தது நல்லது. ஆனால், இதை செய்யும் போது ஈழத் தமிழர்களையும் வேண்டுமென்றே அழித்தார்கள். இந்த குற்றத்திற்கு பொறுப்பு ராஜபக்சேவும் அவரது சகாக்களும்.இதற்காக International War Crimes Tribunal போன்ற ஒரு அமைப்பில் விசாரணை செய்து தண்டனை தர வேண்டும். இதற்காக தமிழக மாணவர்களும், மக்களும் கோரிக்கை எழுப்புவது சரி. ஆனால், மாணவர்கள் போராட்டம் தோல்வியில் முடியும் என்பதே என் கணிப்பு. இருப்பினும் முயற்சி செய்வதை நான் ஆதரிக்கிறேன். இப்போராட்டம் தமிழக அளவில் பரவும் போது இது ஒரு தேர்தல் பிரச்சனையாக மாற வாய்ப்பு இருக்கிறது. அப்போது அரசியல் கட்சிகள் ஏதாவது செய்யலாம். இப்படி இந்திய அரசுக்கு ஒரு நிர்பந்தம் ஏற்பட்டு சர்வதேச அளவில் காய் நகர்த்தலாம். குதிரைக்கு கொம்பு முளைக்கும் கதை தான். இருந்தாலும் முயற்சிப்பதில் தவறில்லை. இப்போது இந்த போராட்டத்தை இந்திய அரசுக்கு எதிராகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் திருப்பி விட சில இயக்கங்கள் முயல்கின்றன. இதில் எனக்கு ஏற்பு இல்லை. இந்த இரு நாடுகளையும் விட சீனாவே இலங்கைக்கு போரில் அதிகம் உதவியது என் புரிதல்.

இந்த போராட்டத்தில் மகஇக என்ற இடது சாரி அமைப்பு தீவிரமாக ஈடுபடுகிறது. மாணவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் “வினவு” என்றொரு blog நடத்தி வருகிறார்கள். அங்கே, இப்போராட்டம் தொடர்பான என் ஐயப்பாடுகளை மறுமொழிகளாக இட்டுள்ளேன். ஒருவேளை உங்களுக்கு விருப்பம் இருந்தால் படித்துக் கொள்ளலாம்.
http://www.vinavu.com/2013/03/27/eelam-revolutionary-organizations-protests/
http://www.vinavu.com/2013/03/19/iit-students-against-eelam-genocide/

நீங்கள் பட்டியலிட்ட கேள்விகளை விரிவாக விவாதிக்காமல் என் கருத்துக்களை சுருக்கமாக கூறுகிறேன். இந்த மாணவர்கள் இப்பிரச்சனை தொடர்பாக பெரிய புரிதல் இன்றி உணர்ச்சிப் பூர்வமாக ஈடுபட்டுள்ளார்கள். இப்போராட்டத்தின் நோக்கங்கள் என்ன, இவர்களது போராட்டத்தால் இந்த நோக்கங்கள் எப்படி நிறைவேறும் என்பது பற்றிய தெளிவு இருப்பதாக தெரியவில்லை. இந்த போராட்டம் வன்முறைகளுக்கு இட்டு செல்லவும், இந்திய அரசுக்கு எதிராகவோ, மற்றேதேனும் திசையிலோ மடை திருப்பி விடப்பட வாய்ப்பு அதிகம். அதே போல IPL தொடங்கியதும் காணாமலும் போகலாம். இப்படி இப்போராட்டம் தொடர்பாக எனக்கு ஐயப்பாடுகள் இருந்தாலும் “முயற்சிக்கட்டும். என்ன நடக்கிறது பார்ப்போம்” என்ற வகையில் இதை நான் ஆதரிக்கிறேன்.

நீங்கள் போராட்டத்தை கேள்வி கேட்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், மேலே சொன்னது போல: (1) விடுதலைப் புலிகளை அழித்தது சரியாயினும், இந்த நிகழ்வின் பொது இன அழிப்பு நடந்ததா? (2) இதற்கு ராஜபக்சேவும் அவரது கூட்டாளிகளும் விசாரிக்கப்பட்டு தண்டனை தரப்பட வேண்டுமா? (3) தமிழ் ஈழம் அமைய வேண்டுமா? (4) ஈழ மக்கள் rehabilitation ஒழுங்காக நடை பெற வேண்டுமா? (4) இதை பற்றியெல்லாம் இந்தியா அரசு கவலைப்பட வேண்டுமா? (5) தமிழக மக்கள் கவலைப்பட வேண்டுமா? (6) இவற்றில் நீங்கள் எதையாவது ஆமோதித்தால் மாணவர் போராட்டத்துக்கு மாற்றாக எந்த வழியை முன் வைக்கிறீர்கள்?
இவற்றிக்கு ஏதேனும் பதில் சொல்லி விட்டு போராட்டத்தை விமர்சிப்பது சரியாக இருக்கும் என்பது என் கருத்து.

அப்படியின்றி academic கேள்விகள் மட்டுமே கேட்டதனால் நான் “வறட்டு வேதாந்தம்” என சொல்லி விட்டேன். மன்னிக்கவும்.

If these can be considered “considered” comments, I am sorry for not posting them earlier. I did not have time, but still wanted to express my opinion. On the other hand, if these look ignoramus, I am sorry again for bothering you with my ramblings.

-0-0-0-0-0-0-

வெங்கடேசன், வணக்கம்.

உங்கள் விளக்கத்துக்கு நன்றி.

உரையாடல்களில் இது சகஜம். மன்னிப்பு எல்லாம் கேட்கவேண்டாம். நானும் என்னுடைய குரஸாவா அகிரா கதைக்கு மன்னிப்பு-கின்னிப்பு எல்லாம் கேட்க மாட்டேன். உங்களுக்குப் பட்டதை, உங்களுக்கு அவகாசம் கிடைத்த படிக்குச் சொன்னீர்கள். நானும் அப்படியே. என்னை மாதிரியல்லாமல், நாசூக்காக, பண்புடன், மரியாதையுடன் எழுதிய இளைஞர் பொன். முத்துக்குமாரும் அப்படியே. இதனைக் குறித்துக் கொள்வோம் – ஆனால் விட்டுவிடுவோம். மறக்க, மன்னிக்க எல்லாம் வேண்டாம். எனக்கு இந்த அடுக்குமொழி பொறுக்கி நடை பிடிக்காதவொன்று.  இதற்கு நீங்கள் என்னை மன்னிக்கலாம், சரியா?

நான் எழுதியிருந்தேன்: இன்னொன்று: ராஜபக்ஷ பற்றி, சிங்கள இனவாதம் பற்றியெல்லாம் கற்றை கற்றையாக, கிகாபைட்டெரபைட்டாக எழுதுவதற்கு, வெறுப்பு மட்டும் ஊட்டுவதற்கு, பலபேர் இருக்கிறார்கள். அவற்றில் பலவும் உண்மையாகவே இருக்கக் கூடும். இவற்றைப் பற்றி மானாவாரியாக, உள்ளீடே இல்லாமல் உணர்ச்சிக் குவியலாக அடுக்குமொழி பொறுக்கி நடையில் எழுதி ஒரு டோக்கன் எதிர்ப்பை, தமிழனின் அட்டைக் கத்திப் போர்க்குணத்தைக் காட்டி –  குண்டியைச் சொறிந்து கொண்டு,  டர்ரென்று விட்டுக் கொண்டே போவது எனக்கு  ஒத்துவராது. மன்னிக்கவும்.

ஹ்ம்ம். மன்னிப்புக் கேட்டதற்கு, என்னை மன்னிக்கவும்.

என்னை ஏன் ராஜபக்ஷ பற்றி எழுதவில்லை, அவர் போர்க் குற்றவாளி என்று அறிவிக்கவில்லை,  தூக்கில் போடவில்லை என்றெல்லாம் கேட்காதீர்கள்.  நான் ICJ அல்ல. நேரடியாகச் சொல்கிறேன் – உங்களுக்கு பிடிக்கும் அல்லது மற்றவருக்குப் பிடிக்கும் என நான் எழுதித் தள்ளிக் கொண்டிருப்பது எனக்குச் சரி வராது. அப்புறம், நமது திராவிடப் பாரம்பரியத்தின்படி – யாராவது இரு முன்னணி நடிகைகளின் தொப்புள்களைப் பற்றி என்னிடம் இடஞ்சுட்டிப் பொருள் விளக்க ‘எக்ஸ்பெர்ட்’ (பெர்வ்ர்ட்?) கருத்துக்களைக் கேட்டு விடுவார்கள். என்னுடைய கருத்துக்களில் பொதுவாகவே மகிழ்ந்திருக்கும் நான் – அதையும் அறிவியல் பூர்வமாக அலசி எழுதிவிடுவேனோ என்ன எழவோ! ஆக, வெங்கடேசன் – எனக்குப் பட்டதைத் தான் நான் எழுத முடியும். புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். அல்லது கொல்வீர்களா?

எனக்கு என் சுய அனுபவங்கள் மூலம் தாம் எழுத முடியும். அனுபவங்களைக் கடன் வாங்கி, சுட்டு, சுடாமல் அல்லது மனதுக்குக் குளிர்ச்சியாக பாற்சுரப்பிகள் பிதுங்கி வழியும் நடிகைகள் படங்கள் போட்டு, டிவி-செய்திகள் பார்த்துவிட்டு புளகாங்கிதம் அடைந்து எழுத, எனக்கு இந்த ஜென்மத்தில் கொடுத்து வைக்கவில்லை. எனக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது என் கையறு நிலையைப் பார்த்து விட்டு.

சரி.

1. நீங்கள் படைபடைக்கும் வெய்யில் சைக்கிளில், ஒரு ஞாயிற்றுக் கிழமை மதியம், செம்புழுதிப் படலச் சாலையில் மூன்று – நான்கு கிமீ ஒட்டிக் கொண்டு, ஒரு இளைஞனுக்கு ,கணிதம் சொல்லிக் கொடுக்கப் போகிறீர்கள் – இலவசமாகத்தான்.  ஆனால் அவன் பொறுக்கிகளுடன் கல்லெறியப் போயிருக்கிறான். ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்.’  கல்லெறிவதில் மும்முரமாக இருக்கப் போவதாக ஒரு குறுஞ் செய்தியாவது அனுப்பியிருக்கலாமே!  அப்படிக் கிடைத்திருந்தால், நீங்கள் வீட்டில் நிம்மதியாக புத்தகம் படித்துக் கொண்டு அல்லது வேறு குழந்தைக்கு உதவிகரமாக, அல்லது உங்கள் குழந்தைகளுடனே பேசிக் கொண்டு நேரத்தை செலவழித்திருந்திருக்கலாமே! ஹ்ம்ம்ம்? அந்தப் பையன், பின்னர், எதற்குக் கல்லெறிந்தோம் எனும் அறிவில்லாமலும் இருக்கிறான். நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் செய்தது இது மட்டுமே! மாணவர்கள் போராட்டம் அல்லது புண்ணாக்கு

2. உங்கள் குழந்தை (அதாவது, உங்கள் பள்ளிக் குழந்தை) – ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’  கல்லெறிதலில் உடைந்த கண்ணாடி தெறித்து அடிபட்டு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது. அந்தக் குழந்தையுடன், மருத்துவமனைக்கு ஓடிப் போகிறீர்கள். செய்தி  கேட்டு, ஒன்றையும் புரிந்து கொள்ளாமல் ஓடி வந்து, பள்ளியையும், ஆசிரியர்களையும்  ஏகவசனத்தில்  பேசும், கோபக்கார பெற்றோர்களையும், அவர்களுடைய குடிகார உறவினர்களையும் (= ’ஒம் பொண்டாட்டி கூதில எம் பூள வைக்க’) சமாதானப் படுத்துகிறீர்கள். ஒரு இளைஞர் உங்கள் சட்டைக் காலரைப் பிடிக்கிறார். பதிலுக்கு நீங்களும் அடி நிமிர்த்திவிட முடியும் – உங்களுக்குத் தேவையான உடல்வலி, மனவலி எல்லாம் இருக்கிறது. ஆனால், அதனால் குழந்தையின் அடிக்கு என்ன லாபம், பள்ளிக்கு என்ன லாபம்? ஆளாளுக்கு உங்கள்  பள்ளியை எப்படி நடத்த வேண்டும், உங்களுக்கு பொறுப்புணர்வு  இருக்க வேண்டும், இந்தக் கால ஆசிரியர்கள் ரொம்ப மோசம் – குழந்தைக்கு அடி – ’ரத்த காயம்’ – பட்டிருக்கிறது, ஆனால் இரண்டே ஆசிரியர்கள் தானா வந்திருக்கிறீர்கள் – என்று ஆலோசனைகள் பல அளிக்கிறார்கள்,  கருத்துக்களை முன் வைக்கிறார்கள், அறிவுரைக்கிறார்கள். ஆக பகீரதப் பிரயத்தனப் பட்டு பொறுமை காத்து, புன்னகை முகத்துடன் – 5 மணி நேரம் போலச் செலவழிக்கிறீர்கள், சோறு தண்ணியில்லாமல் (ஆமாம், காலவரையற்ற  ’உண்ணாவிரதம்’  தான்). வெளியில் வரும்போது, ‘ஸ்டூடென்ட்ஸ்’ உங்களுக்கு ஒரு துண்டுப் பிரசூரம் கொடுக்கிறார்கள் – அதில், அந்த எழவெடுத்த பிரபாகரன் எக்களித்துச் சிரித்துக் கொண்டிருக்கும் படம் வேறு! நீங்கள் என்ன செய்வீர்கள்?  நான் இதை எழுதினேன். குழந்தைப் படுகொலைகள், எல்டிடிஇ பிரபாகரன், போராட்டங்கள்: சில சிந்தனைகள், குறிப்புகள்

3. நான் எழுதிய வறட்டு வேதாந்தம் பற்றி – எனக்கு விஷயங்களைத் துப்புறவாக அறிந்து கொள்வது முக்கியம். குருட்டாம் போக்கில் எழுத, வாழ்க்கையை நடத்த முடியாது. ஆக, போராட்டங்களைப் பற்றிய இந்தக் கட்டுரையை எழுதினேன்.  போராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள்

இதிலுள்ள அனைத்துக் கேள்விகளுக்கும், என்னளவில், எடுத்துக் காட்டுகளுடன் பதில்கள் (= என் கருத்துக்கள்) இருக்கின்றன. ஆனால் அது இன்னொரு சமயத்துக்கு.

4. வினவு போன்ற தளத்தை தயவுசெய்து தேவைக்கதிகமாகப் படிக்க வேண்டா. முக்கியமாக, எதையாவது சாப்பிடும் போது நிச்சயம் வேண்டாம் – புரைக்கேறி,  உங்கள் உயிருக்கே ஆபத்து வந்து விடும். ஜாக்கிரதை.

உங்களுக்கு விருப்பமிருந்தால் உரையாடலில் இருக்கலாம்.

அன்புடன்,

__ரா.

2 Responses to “மாணவர் போர் ஆட்டம் – பின்னூட்டம், விளக்கம்++”


  1. Excellent. Thank you.


  2. பரிதாபம்.ஐயா பரிதாபம்.எட்டு லக்சம் தமிழர்களை பற்றியும் கல்லுரி மாணவர் நலுனர்வினை புரிந்து கொள்ளாமலும் சில கிமி சைக்கிளில் சென்று வந்த அனுபவம் முடிவு செய்கிறது


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s