ஸ்டாலின் தபால்தலை, கருணாநிதி தபால்தலை

26/06/2013

ஸ்டாலின் வாழ்நாளிலேயே, அவர் முகம் பதித்த தபால்தலையை யூஎஸ்எஸ்ஆர் அரசு பதிப்பிக்கிறது.

ஆனால் பொதுமக்களிடமிருந்து அதன் மீதான ஒரே எதிர்ப்பும் புகார்களும் – காரணம்: அது சரியாக ஒட்டமாட்டேன் என்கிறது,

தபால் குழுமமும் அதன் ஆராய்ச்சியாளர்களும் என்னென்னமோ முயன்று புதுப்புதுப் பசைகளைக் கண்டு பிடித்து, அவற்றைத் தடவிய அந்தத் தபால்தலையை மறுபடியும் மறுபடியும் வெளியிட்ட வண்ணமிருக்கிறார்கள். ஆனாலும், பொது மக்களிடமிருந்து அதே புகார் – ஒட்டவில்லை, ஒட்டவில்லை – ஆகவே அவற்றை உபயோகிக்க முடியாது என்கிறார்கள். பிரச்சினை தீவிரமடைகிறது.

கடைசியில் இந்த விஷயம் ஸ்டாலின் காதுகளுக்குப் போகிறது. அவருக்கு ஒர்ர்ரே  கோபம், இருக்காதா பின்னே?

பெட்ரோக்ராடை  ஒரே அரசாணை மூலம் ஸ்டாலின்க்ராடாக மாற்றியவன் நான்! வோல்கா கொண்டவன், டான்யூப் கண்டவன்,  ஆரிய மாயை ஹிட்லரை வெற்றிகொண்டு பைன்கூம்புகளை [அங்கு பாவம், வாகை மரங்கள் இல்லை போலும் – ஆ-ர்] என் தலைத்தொப்பியில் சொருகிக் கொண்டவன் நான்!

துரோகியை விட விரோதியே மேல் என்று மார்க்ஸை அரவணைத்து ட்ராட்ஸ்கியைக் கொன்றவன் நான்! குறில் தீவுகள் கிடைக்கும் வரை ரஷ்யஜப்பான் உதிக்கும் வரை, ஜப்பான் பேரினவாதத்தையும் அதன் கொடுங்கோல் ஹிரோஹிடொ மன்னனையும் எதிர்த்தவன் நான்!

வடதுருவத்தில் கூட்டாட்சி, ஸோவியத் ஒன்றியங்களில் தனியாட்சி, சாதா ஒன்றியங்களில் காட்டாட்சி எனக் கொள்கை வகுத்திட்டவன் நான்!  அரிமா போன்ற அரிவாளியாகிய நான் உயிரைத் துச்சமாக மதித்து, அரிவாள் மீதேறிப் பயணித்து உலகத்தைச் சுத்தி, அந்தச் சுத்தி+அரிவாள் சேர்த்த புரட்சிகரச் செங்கொடியைத் தூக்கிய நானே ஒரு தமிழன்தான்! நான் ஸ்டாலினாக ஆகாவிட்டால், திராவிடனாக இருந்திருப்பேன்தான்!

பெரியாரே என் கனவில் வந்து அவர் கனவில் வந்த கார்ல் மார்க்ஸ் ஆணையிட்ட படி என்னை எப்படியாவது இந்தப் பாவப்பட்ட ரஷ்ய மக்களை ஆண்டு அவர்களின் இனமானத்தைக் காத்திடச் சொன்னதால் தான்  நான் இங்கு தலைவனாகி இருப்பவன்…

கம்யூனிஸப் படத்தின் திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாம் செய்து, பாட்டெழுதி இசையமைத்து, நடித்து ஸென்ஸார் செய்து, வெளியிட்டு, கடைசியில் அந்தப் படத்தை ஒரேயாளாக உட்கார்ந்து பார்த்துப் புளகாங்கிதமுற்று வரலாறும் படைத்திருக்கிறேன் நான்! என்னை எதிர்த்தவர்களை குலக் அனுப்பிய குலக்கொழுந்து நான்… எனக்கேவாடா ஹல்வா கொடுக்கிறீர்கள் எனக் கர்ஜிக்கிறார் கொலைஞர் ஸ்டாலின்! அவர் ஒரு விடுதலைச் சிங்கமும் கூட!

ஆக, ஸ்டாலின் தனக்குப் பிடித்த அமைச்சர் மொலடோவ்-இடம் சொல்லி, இந்த ’தபால்தலை ஒட்டாத’ பிரச்சினையைத் தீவிரமாகப் பரிசீலித்து ஆவன செய்யச் சொல்கிறார்.

மொலொடோவ் பிரச்சினையின் காரணத்தைக் கண்டு கொண்டார். ஆனால் தானைத்தலைவர்,  கம்யூனிஸ இனமானக் காவலர், ஸோவியத் ஒன்றியங்களில் நிரந்தரத் தலைவர்,  இஞ்சினீயர் டாக்டர் நர்ஸ் கம்பவுண்டர் நோயாளி ஸ்டாலின் அவர்களிடம் அதைச் சொல்ல பயம்.  தலையைச் சொறிந்து கொண்டு நிற்கிறார்.

என்னடா எறிகுண்டுத் தலையா, பீரங்கி வாயா… ஏண்டா ஒட்ட மாட்டேங்குது?

அண்ணேய், அத்தாண்ணேய் இது…

ஏண்டா ஹிட்லர் மூஞ்சியா, ட்ராட்ஸ்கி மண்டையா, இன்னாடா ரீஸன்??

அண்ணெய், அத்து வந்து…

இன்னாடா டாய், இன்னாடா ரவுஸு பண்ற, பூர்ஷ்வா பொறுக்கியா… சொல்லுடா…

அண்ணேய், அந்த பொதுமக்களுங்கோ, ஒங்க தபால் தலையின் முன்னாடி பக்கம் தான் எச்சி தடவி ஒட்ட ட்ரை பண்றாங்கோ! அத்தாண்ணேய் இத்து…

அடேய்ய்ய்ய்ய்

அத்தாண்ணேய் இத்து… அடிக்காதீங்கண்ணேய்… புர்ச்சி வால்க! இசுடாலின் வாள்க!!

முதலில் இந்த நகைச்சுவையை, ஸ்டாலின் (ஒரிஜினல் அக்மார்க் ரஷ்யஜார்ஜிய ஆள்) பற்றித் தான் கேள்விப்பட்டேன்.பின்னர் இதே நகைச்சுவையை மாஸேதுங், இந்திராகாந்தி, நாஸர், தாட்சர், புஷ் (இளையவர்) போன்றோரை வைத்தும் கேட்டிருக்கிறேன்.

இப்போது நம் கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றிய  ‘விடுதலை’ பதிப்பித்த செய்தி:  இங்கிலாந்தில் கலைஞர் உருவம் பொறித்த அஞ்சல் தலை!

stamp_kk
(இந்த நகைச்சுவைக்காக, விடுதலை பத்திரிக்கைக்கு நன்றி)

ஏன் இந்தத் தள்ளாத வயதில் இப்படித் தொடர்பேயில்லாத ஒரு தபால்தலையை,  சோம்பித் திரியாமல் சொம்படிக்கும்  சொக்கத்தங்கங்கள் வெளியிட்டு,  கருணாநிதி அவர்களைப் பாவம், நெளிய வைக்கிறார்களோ — எனக்குப் புரியுவே மாட்டேன் என்கிறது…  வயதான காலத்தில் பாவம், இவருக்கு நிம்மதியே இல்லை.

Advertisements

One Response to “ஸ்டாலின் தபால்தலை, கருணாநிதி தபால்தலை”


  1. Now, your picture could also be a stamp on the letter you send to your dear one. India Post will introduce “the facility of converting personal photographs as legally valid stamps” in Chennai in a couple of weeks.———–Kasran


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: