பர்மா, பாலிங், வௌவால், இன்டெர்னெட்

04/08/2013

கடந்த பத்து நாட்களில் எனக்கு வந்த மின்னஞ்சல்களில் நான்கு, நான் எழுதிய ‘யுவகிருஷ்ணா’ என்பவர் பற்றிய பதிவுகளைப் பற்றி.

பொதுவாக இம்மாதிரிக் கடிதங்களைப் படித்துவிட்டு – ஆனால் பதிலளிக்க மாட்டேன். ஆனால் இவற்றில் இரண்டிற்காவது விளக்கம் அளிக்கவேண்டும் எனத் தோன்றியது – ஏனெனில் இவர்கள், தாங்கள்  ‘யுவகிருஷ்ணா’ எழுதுவதைப் படித்து – அதனால் மனவெழுச்சி கொண்டு  எழுதவந்ததாகச் சொல்லி என்னை ‘மெட்ராஸ் பாஷை’யில்  [தேவையேயில்லாமல் என் தாயையும் இந்தச் சகதியில் இழுத்து 8-) ] ’விமர்சனம்’ செய்திருக்கிறார்கள்,  – அதாவது, அவரைப் பற்றி, அபாண்டமாகக் குறை கூறியிருக்கிறேன் என்று சொல்லி, ’நீ யார்’ என,  ஒரே பொங்கலோதிபொங்கல், க்றீச்சிடல்!  (இவர்களுடைய மின்னஞ்சல்கள், பொய் மின்னஞ்சல் முகவரிகளிலிருந்து வந்தவைதாம் எனத்தான் தோன்றுகிறது – இவர்கள் anonymouse அல்லது anonymess வகையினர்தாம்!).

இவர்கள் என்ன அப்படி ‘மனவெழுச்சி’ கொண்டு எழுதியிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது, அவர்களும் (நல்லவேளை) சொல்லவில்லை.

எது எப்படியோ, இளம் விசிலடிச்சான்குஞ்சுகளே, உங்கள் கேள்விகள்(?) என்று நான் புரிந்துகொண்டவைகளுக்கு என் விளக்கங்கள்(!):

ஆனால், முதலில் குறைந்த பட்சம் என்னளவுக்காவது பிழையில்லாமல் (ஆம், என் இலக்கண அறிவு(!) பற்றி எனக்கு நன்றாகவே தெரியும்)  எழுதக் கற்றுக் கொள்ளுங்கள். பின்னர் மனவெழுச்சி கொண்டு அட்டைக்கத்தி வீசலாம்.

1.  நான்  ‘யுவகிருஷ்ணா’ என்பவர் ஒரு குறியீடாக இருக்கும் சங்கதிகளைப் பற்றி எழுதுவதை விட்டுவிட்டு ஐந்தாறு மாதங்களாகிவிட்டன.

உங்கள் மேலான நண்பருடைய எழுத்துக்களை(யும்) படித்து நான்  மனவெழுச்சி கொண்டு எழுதியவை பற்றிய ஜாபிதா, கீழே:

நீங்கள், நான் ’அண்மையில் விஷம் கக்கி’ – ‘லக்கி’ பற்றி பொச்சரிப்புடன் எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நான் அண்மையில் அவரைப் பற்றி ஒன்றும் எழுதவில்லை.  நான் இவ்வருடம் (2013) மார்ச் 17 அன்று எழுதியுள்ளபடி – “உங்களை விட்டு விடுகிறேன் இனிமேல். நீங்கள் உங்கள் மனதுக்குப் பிடித்தாற்போல் வாழ்ந்து, காப்பியடித்தோ அடிக்காமலோ டீ குடித்தோ குடிக்காமலோ – பொலிய, வளர, சிறக்க என் வாழ்த்துக்கள்.

உங்களுடைய மின்னஞ்சல்களைப் படித்தால் யார் ‘அன்லக்கி’ என்று தெரியவில்லை. உங்களைப் போன்ற அடிப்பொடிகளைப் பெற்றுள்ள அவரா? அவரை ஒரு குருவாக வரித்துள்ள நீங்களா? அல்லது நானா?

2. எனக்கு – ட்விட்டர், ஃபேஸ்புக், கூக்ல்+ போன்ற சாடல் பெற்ற திருத்தலங்களில் கணக்கு இல்லை. ஒருவேளை அத்தளங்களில் யாராவது என் பெயரில், அண்மையில் எழுதியிருந்தால், அதுவும் என்னைப் போலவே எழுதியிருந்தால் – எனக்கு மகிழ்ச்சிதான்.

3. நான், என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் ஒரு ‘திமுக எதிர்ப்பாளன்’ என்பது சரியே. ஆனால் அதற்காக, ‘யுவகிருஷ்ணா’  அவர்கள் ஒரு திமுக அனுதாபி என்றெல்லாம் எழுதவேண்டாம். அவர் மேல் இந்த அபாண்டக் கொலைப் பழியைச் சுமத்த வேண்டாம். மாறாக ஒருகால்,  ‘யுவகிருஷ்ணா’  அவர்கள் ஒரு திமுக தொண்டர் அல்லது அனுதாபியாக இருந்தாலும்கூட – அதற்கும் என் விமர்சனங்களுக்கும்(!)  எந்தவிதத்திலும்  தொடர்பில்லை. எனக்கு நன்கு தெரிந்தவர்கள் சிலர் மகாமகோ திமுக அனுதாபிகள் – எனக்கு அவர்கள் மீது பரிதாபமே தவிர வெறுப்பு இல்லை.

4. எனக்கு ‘யுவகிருஷ்ணா’  அவர்களுடன் முன் விரோதம் / வணிகப் பிரச்சினை போன்றவையெல்லாம் இல்லை. உண்மையில், அவரை நான் நேரில் பார்த்தது கூடக் கிடையாது. அவர் பிரபலமா என்று கூட எனக்குத் தெரியாது.  ஆக, அவர் பிரபலத்தைப் பற்றி எனக்கு ஒரு கருத்தும் இல்லை. இதன் காரணமான அற்பப் பொறாமையென்றேல்லாம் இல்லை.  நான் விடலைப் பருவத்தில் இல்லை. என்னுடைய கவலை – உங்களைப் போன்ற யோசிக்கும் திறமையற்ற தொண்டரடிப்பொடிகளை அவர் பெற்றிருக்கிறாரே என்கிற ஆதங்கம் தான்.

5. ’புதிய தலைவலி’ பத்திரிக்கையை நான் மூன்று இதழ்கள் மட்டுமே (விலை கொடுத்து வாங்கி, எல்லாம் என் நேரம்தான்) படித்திருக்கிறேன். இதில் எப்படி கட்டுரைகள் பிரசுரமாகின்றன என்பதை ஒரு அனுமானமாக இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன்: பண்டைத் தமிழர் காலத்தில் கத்தி  – ஒருவேளை இதில் எழுதியிருக்கும் ‘கணேஷ்-வசந்த் விவகாரம்’ உங்கள் நண்பரைக் குறிக்கிறது எனக் கருதிவிட்டீர்களோ?

6. நான், கடந்த சுமார் 20 ஆண்டுகளில் எந்தப் பத்திரிக்கைக்கும் (புதிய தலைவலி  உட்பட) எழுதவில்லை. ஆக, நான் அனுப்பும் கட்டுரைகளை புதிய தலைவலி  பிரசுரிக்கவில்லை என்பது உண்மையல்ல. ஆக, ‘யுவகிருஷ்ணா’  என் கட்டுரைகளை நிராகரித்ததால், நான் அவரைத் தொந்திரவு செய்கிறேன் என்பதும் சரியல்ல. அவர் அப்படியே, நீங்கள் சொல்வது போல,  உங்களிடம் சொல்லியிருந்தாலும் கூட 1) அவர் வேறேதாவது ராமசாமியை என்னோடு முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கலாம், 2) அவர் சொன்னதை நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம் 3) அவர் உண்மையற்றதைச் சொல்லியிருக்கலாம் 4) நீங்கள் என்னிடம் பொய் சொல்லியிருக்கலாம்.

7. “ நீ அப்படி என்ன எழுதி கிழித்திருக்கிறாய்?” – உண்மைதான். அதிகம் எழுதவில்லை. அழகாகவும் எழுதவில்லை – ஒப்புக் கொள்கிறேன்.  ஆனாலும் – சுமார் இரண்டுஆண்டுகள் – 200ச் சொச்சம் பதிவுகளில் ஐந்து பதிவுகளை உங்கள் ‘யுவகிருஷ்ணா’  தொடர்பான அக்கப்போர்களில் செலவழித்திருக்கிறேன் என்பது விசனத்துக்குரிய விஷயம்தான். (இப்போது இந்த ஆறாவது வேறு!)

8.  எனக்கு ‘யுவகிருஷ்ணா’  என்பவர் என்ன ஜாதியென்றெல்லாம் தெரியாது. அந்த ஆவலும் இல்லை. அதற்கும் என் எழுத்துக்கும் தொடர்பில்லை. எனக்குத் தோன்றுவதெல்லாம், நன்றாக எழுதக்கூடிய திறமை அவருக்கு இருக்கலாம் என்கிற சந்தேகம்தான். சிரத்தையின்மையால் அந்தத் திறமை வெறும் ‘ஒப்பேற்றுதலாகி’ விடுகிறது என்கிற எண்ணம்தான். ஒரு பதிவில் அவருக்கு உதவத் தயாராக இருப்பதாகக் கூட எழுதியிருக்கிறேன் என நினைவு.

9. அவர் என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார், சொல்லியிருக்கிறார் என்பவற்றிலெல்லாம் எனக்கு ஆவல் இல்லை. அவர் என்னதான் சொல்லியிருந்தாலும் அது அவர் கருத்து – அதற்கு அவருக்கு முழுவுரிமை இருக்கிறது. அவருடைய உங்களைப்போன்றவர்கள், என்னைப்பற்றி என்ன எழுதுகிறீர்கள் என்பதிலும் எனக்கு எந்தவிட அக்கறையுமில்லை. இம்மாதிரி அக்கப்போர்களில் ஈடுபட, எனக்கு வாழ்த்த வயதில்லை, வணங்கி மகிழவும் விருப்பமில்லை, சுணங்கிப் போவதாகவும் இல்லை, பயந்து ஒதுங்குவதாகவும் இல்லை, அவதூறு என்று பொங்குவதாகவும் இல்லை.

10. நீங்கள் இருவரும் அனுப்பியுள்ள சுட்டியைப் பார்த்தேன் (சொல்லிக் கொண்டார்ப்போல் இருவரும் ஒரே  சுட்டியை அனுப்பியிருக்கிறீர்கள்? நீங்கள் இருவரும் ஒருவரேதானோ??). அதில் தமிழுலகில் யாருமே கவலைப்படாத பர்மாவிலுள்ள ‘பவுத்தத் தீவிரவாதத்தைப்’  பற்றி இவர் ஆராய்ச்சி செய்து எழுதியுள்ளதாகக் கூறியிருக்கிறீர்கள். அதனைப் படித்து என்னை, என் பார்வையைத் திருத்திக் கொள்ளச் சொல்லியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

படித்தேன். அது பற்றிய என் விமர்சனம் இங்கே.

batman-internet-pauling-burma

இரண்டு மூன்று இடங்களிலிருந்து வெட்டியொட்டிச் செய்யப்பட்டதுதான், அதுவும் இஸ்லாமுக்கும் மையன்மரிய பவுத்தத்துக்கும் இருந்த/இருக்கும் பல நூற்றாண்டுச் சிடுக்குகள் பற்றிய பின்புலம் அறியாமல் எழுதப்பட்டதுதான் இதுவும். ஆனால், தமிழில் எழுதுவதற்கு ( = ’உல்டா’ செய்வதற்கு), உங்கள்  யுவகிருஷ்ணா’ அவர்களுக்குக் கொஞ்சம் உடலுழைப்பு ஆகியிருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.  இந்த ஒருபக்கக் கட்டுரையின் கீழ்மையான மறைமுக நோக்கம் — பவுத்தர்கள் வன்முறையாளர்கள், ஸ்ரீலங்காவில் மட்டுமல்ல, மையன்மரிலும்தான் – என்று பாடுபட்டு நிறுவவதும் எனக்குப் புரிகிறது.

ஆனால் இது தொடர்பான குடைவுகளை  —  எங்கிருந்து எது லவட்டப்பட்டது / சுருட்டப்பட்டது என்பதை — நீங்களே செய்து கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை, இவர் – யுவகிருஷ்ணா – ஒரு இன்டெர்நெட் தொகுப்பான் சேவையாளர் / மொழி’பெயர்ப்பாளர்’ – அதுவும் சுட்டிகளைச் சுட்டாமல், மறுபேக்கேஜிங் செய்பவர் மட்டுமே!

11. ஸம்ஸ்க்ருதத்தில் ‘அனுகூல சத்ரு’ என்ற பதம் ஒன்று இருக்கிறது; இதற்கு மிக நீர்த்த பொருள் —  ‘உதவி செய்கிறேன் பேர்வழி என்று உபத்திரவம் செய்வது’ – ஆனால் மூலமொழியில் கொஞ்சம் காட்டம் அதிகம். பொறுப்பற்று குற்றச்சாட்டுகளை வீசி என்னைச் சீண்டும் நீங்கள், மிக நிச்சயமாக ‘யுவகிருஷ்ணா’  அவர்களின் அனுகூல சத்ருக்கள் தான். அவரும்  பாவம் தான்.

-0-0-0-0-0-0-

எனக்கு ‘மீட்பு’ குறித்து சில கருத்துக்கள் இருக்கின்றன. மீட்சியென்பது அனைவருக்கும் சாத்தியம். அதற்கு, நம் பாரதி சொல்வது போல – ஒரு ‘குழந்தையின் ஹ்ருதயம்’ வேண்டும். அவ்வளவுதான்.

ஆனால், உங்களைப் போன்ற கண்ணை மூடிக்கொண்டு பஜனை செய்யும் அரைகுறைத் துதிபாடிகள் இருக்கும்வரை, அவருக்கு அது சாத்தியமில்லை எனத்தான் தோன்றுகிறது. இது மிகவும் வருத்தம் தரக் கூடியது. என்ன செய்ய…

… இனிமேலும் இவ்விஷயத்தில் நேரம் கழிப்பது எனக்குப் பிடித்தமானதாக இல்லை. மன்னிக்கவும்.

6 Responses to “பர்மா, பாலிங், வௌவால், இன்டெர்னெட்”

 1. சான்றோன் Says:

  சார்.. இந்த அறிவுக்கொழுந்து , நரேந்திர மோடி அவர்களைப்பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார் பாருங்க…..அவருடைய அரசியல் அறிவை எண்ணி புல்லரித்துவிட்டேன்…..இவர்கள் எல்லாம் விகடன் குழுமம் உருவாக்கும் [ க்டந்த வார‌ம் நீங்கள் கிண்டலடித்த ] வினவு பாணி எழுத்தாளர்கள்…..ஒரு கம்ப்யூட்டரும் இண்ட்டர் நெட் இணைப்பும் இருந்துவிட்டால் உலகத்தில் எதைப்பற்றி வேண்டுமானாலும் கருத்துச்சொல்லலாம் என்ற எண்ணம் உடையவர்கள்……

  மியான்மர் பற்றி எழுதியிருக்கிறாரே…….அங்கு பவுத்தர்கள் எதிர் நோக்கும் அதே பிரச்சினைகள் , இந்தியாவில் காலம்காலமாக உள்ளதே…..அதைப்பற்றி இவரால் மூச்சுவிட முடியுமா?


 2. Sir! Ivanukku adippodihallam irukkangannu solli avana neengale periyaalakki vitruveenga pola irukke.. appidiyellam yaarum irukka matainga.. ivanethan vera perla ungalukku eluthiruppan..

 3. பொன்.முத்துக்குமார் Says:

  // எழுதுவதைப் படித்து – அதனால் மனவெழுச்சி கொண்டு எழுதவந்ததாக //

  கடவுளே, இந்த தமிழ் சமூகம் மீள்வதற்கு வாய்ப்பே இல்லையா ?

  நல்லதோர் வீணை செய்தே …


 4. போடா பொருக்கி யுவா மேல காண்டு ஏண்டா? தம்ழனா நீ வேர பொழப்பெ இல்லியா


 5. சொம்புபயலே நாரடிக்கரோம் பாரு, பாத்துட்டே இரு


 6. […] பர்மா, பாலிங், வௌவால், இன்டெர்னெட்04/08/2013 […]


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s