படைப்புத்திருடல் செய்து இணையத்தில் படையல் வைப்பது எப்படி

08/08/2013

(அல்லது) ‘யுவகிருஷ்ண’  லீலா தரங்கிணி

(அதாவது) ‘யுவகிருஷ்ணா’ அவர்களின்,  ஓயாத  அலைகள் போன்ற,  தொடர்லீலைகள்…  Rather relentless  plagiarism…  (க்ருஷ்ண’  லீலா தரங்கிணி எழுதிய ஸ்ரீ நாராயணதீர்த்தர் என்னைப் பெருந்தயவு  பண்ணி மன்னிப்பாரா?)

எச்சரிக்கை: நிச்சயமாக இந்தப் பதிவுதான் இந்தப் பெருந்தகையைப் பற்றிய கடைசியானது. (ஸ்ஸ்ஸ்! அ ப்  பா   டா!)

உங்களுக்கு நினைவிருக்கலாம்:

‘யுவகிருஷ்ணா’ அவர்கள் பொத்தாம் பொதுவாகவும் அபத்தமாகவும், நேர்மையில்லாமலும், வெட்டிஒட்டியும், ஈயடிச்சான் காப்பியடித்தும் – ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து – பின் மார்வாடி குடும்பங்களைப் பற்றியும் அரைகுறையாக எழுதப் போக, அதைப் பற்றிய என் கருத்துக்களைப் படித்த ஒரு மார்வாடி யுவதியும் என் முன்னாள் மாணவியுமான ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தது. (அது என்னுடைய கருத்துகளை விடவும் மிக காட்டமானதாக இருந்தது. ஆனால் அதில் சொல்லப் பட்டவை உண்மைகளே!)

சரி… உங்களுக்காக, உங்களுக்காக மட்டுமே  —  இன்டெர்நெட் வரலாற்றிலேயே முதல்  முறையாக….  டட்டடா டட்டடா டட்டடா … ’யுவகிருஷ்ணா’ அவர்களின் கும்பகோணம் டிகிரி காப்பி. அதை நுரை பறக்க  ஆற்ற முயன்ற என் பதிவு, அந்தப் பதிவில் என் மாணவி இட்டிருந்த அந்தப் பின்னூட்டம்

இந்த யுவதியை, நான், அவருக்கு நேரம் இருக்கும் போது,  ‘யுவகிருஷ்ணா’ அவர்களின் பதிவுகளை – புள்ளியியல் ரீதியாக பொருட்படுத்தத்தக்க (statistically significant)  எண்ணிக்கையில் கையாண்டு – ஒப்புக் கொள்ளமுடியுமான எடுத்துக்காட்டு தெரிவுசெய்யும் முறையப் பின் பற்றி  (acceptable sampling technique) –  ஒரு சுளுவான பகுத்தாய்வு செய்து, லெக்ஸிகல் அனலிஸிஸ் செய்து  அதில்   ‘யுவகிருஷ்ணா’ அவர்களின் பிரத்யேகப் போலிச்சுஜாதாமயமாக்கலை  ஒதுக்கி – பின் அவற்றின் பாடுபொருட்களின் சொல்லாடல்களிலிருந்து,  இவருடைய ப்ளேஜியரிஸ்ம் (படைப்புத் திருடல் / எழுத்துத் திருடல் / கருத்துத் திருடல்)  குறித்த விவரங்களைச் சேகரம் செய்யுமாறு – ஒரு விளையாட்டுப் போலச் சொல்லியிருந்தேன்.

இதனை வெகு தீவிரமாக எடுத்துக் கொண்ட இந்த யுவதி, ஒரு மாதம் முன், இது தொடர்பான பல விவரங்களை எனக்கு அனுப்பியிருந்தார். ஆனால், நான் இரண்டு நாட்கள் முன்புதான் இவர் மின்னஞ்சலைப் பார்த்தேன். (இப்போது இவர் அமெரிக்காவில் உயர்கணித ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்)

இவருடைய முறை:  நான் பரிந்துரைத்தது போல, ’யுவகிருஷ்ணா’ அவர்களின் 50 பதிவுகளை எடுத்துக் கொண்டு, அவற்றை மொழிமாற்றம் செய்து (machine assisted translation) பின், லிஸ்ப் மொழியில் கட்டளைக்கட்டுக்களை (programs) எழுதி எந்தத் தளங்களிலிருந்து எந்தப் பத்தி / வரி / பாடுபொருள் எடுக்கப் பட்டிருக்கிறது என அறிவது;  தரவுகள் இணைக்கப்பட்ட ஒரு அட்டவணையைத் தயாரிப்பது.

ஆனால் அந்த யுவதி, தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த 50 பதிவுகளில் சினிமா விமர்சனங்களையும், கருணாநிதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் ஒரு கவிதையையும் (அடக் கடவுளே! ஆக, இந்த ‘யுவகிருஷ்ணா’ ஒரு திமுக ஆதரவாளரா! அய்யோ பாவம்!!) சேர்த்திருந்தார். இது சரியில்லை (என்னால் இவற்றைச் சரிபார்க்க முடியாது – ஏனெனில், கல்மனம் கொண்ட என்னாலேயே  சகிக்க முடியாதவை இவை!) என்று நான் இவற்றைத் தவிர்த்து, மறுபடியும் அவரை – அட்டவணையைத் தயாரித்து அனுப்பச் சொன்னேன்; இந்த முறை அவர் உபயோகித்தது 35 பதிவுகள் – எல்லாம் கடந்த மூன்று நான்காண்டுகளில் பதிக்கப் பட்டவை. ஒரே நாளில் அனைத்தையும் மறுஆய்வு செய்து ஒரு மகாமகோ ஆவணத்தை அனுப்பிவிட்டார். (இது ஒரு 51 MB அளவுள்ள 700 சொச்ச பக்கங்களுள்ள ஒரு பிடிஃப் கோப்பு!)

இப்போது , இந்த ‘ஆராய்ச்சியின்’ சில ‘டாப் டக்கர்’  புள்ளியியல் விவரங்கள்:

 1. ஆராய்ச்சிக்கு மொத்தம் எடுத்துக்கொண்ட ‘யுவகிருஷ்ணா’ பதிவுகள்: 35 (இக்காலகட்டத்தில் பதிக்கப் பட்ட சுமார் 670 பதிவுகளிலிருந்து கணினியால் ரேன்டமாக –  தெரிவு செய்யப்பட்டு பகுப்பாய்வு செய்யப் பட்டவை)
 2. இவற்றில் சந்தேகத்திற்கிடமில்லாமல் கருத்துத்திருடல் செய்யப் பட்டிருக்கும் பதிவுகள்: 32. (உள்ளடக்கத்தில் 35%த்துக்கு மேல் ’ஸெராக்ஸ்’ செய்யப்பட்டுள்ள பதிவுகள்)
 3. இவற்றில் அப்பட்டமாக,  65%த்துக்கும் மேலாக – வார்த்தைக்கு வார்த்தை ஈயடிச்சான் காப்பி அடித்துள்ள பதிவுகள்  29.
 4. உள்ளடக்கத்தில் 95%த்துக்கு மேல் காப்பி அடிக்கப்பட்டுள்ள பதிவுகள்: 14.
 5. அமெரிக்க, இங்கிலாந்து, இந்தியப் பத்திரிக்கைகளிலிருந்து (ஆங்கிலம்) இவை எடுக்கப் பட்டுள்ளன.
 6. தொலைக்காட்சி சேனல்களின் இணையத் தளங்களில் இருந்தும் பத்திகள் உருவப் பட்டுள்ளன. (முக்கியமாக அல்ஜஸீரா, பிபிஸியின் குளுவான் சேனல்கள் போன்ற எதிர்ப்பு / போராளித் தளங்களிலிருந்து)
 7. எழவெடுத்த விக்கிபீடியாவினால் சந்தேகத்திற்கிடமில்லாத பாதிப்படைந்த பதிவுகள்: 8
 8. இந்த 35 பதிவுகள் குறித்த அட்டவணை விவரங்களில் – ஐந்தினை மட்டும் நான், நேரடியாகச் சரி பார்த்தேன். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமென்றால், யுவதியின் கணினிக் கட்டளைக்கட்டுக்கள் ஒருதலைப்பட்சமாகச் செயல் படவில்லை என்பது என் கருத்து. (இந்த ஐந்து பதிவுகளை நான் இதற்கு முன்னர் படிக்கவில்லை)
 9. பொதுவாக, சுடச்சுடச் செய்திகள் சுடப்படவில்லை; ஓரிரு மாதங்கள் கழித்துத்தான் ‘உல்டா’ செய்யப் பட்டுள்ளன. இதை – plagiaristic phase lag – கருத்துத்திருடலின் காலம் சார்ந்த தள்ளுபடிவிற்பனை எனக் கருதலாமோ?
 10. எனக்கும் இந்த யுவதிக்கும் பொதுவான  தெரிந்த மொழிகள் – தமிழ், ஆங்கிலம், ஹிந்தி. ஆனால், ‘ஆராய்ச்சி’ செய்யப்பட்டது தமிழ்+ஆங்கில மொழிகளில் மட்டுமே. ஆகவே ‘யுவகிருஷ்ணா’ அவர்கள் மற்ற மொழித் தளங்களில் இருந்து சுங்கவரி கட்டாமல் இறக்குமதி செய்திருந்தால், அது இந்த அட்டவணையில் இடம் பெற வாய்ப்பில்லை.

ஹ்ம்ம்… நான் யோசிக்கிறேன் – இந்த ‘யுவகிருஷ்ணா’ போன்றவர்களுக்கு இப்படிச் சீரழியவேண்டிய அவசியம் என்ன? சோம்பேறித்தனமும், யார் இவற்றையெல்லாம் சரிபார்க்கப் போகிறார்கள் என்கிற மனப்பான்மையுமா? அல்லது – இணையத்தில் உள்ளவைகளை ‘ஃப்ரீயாக’ உபயோகித்துக் கொள்ளலாம் என்கிற வெள்ளந்தி எண்ணமா? அல்லது தினம்தினம் ஏதாவது ‘புத்சா’ எழுதாவிட்டால், விசிலடிச்சான் இளைஞக்குஞ்சாமணிகள் தன்தளத்தை மறந்துவிடுவார்கள், ‘லைக்’ போடமாட்டார்கள் என்கிற பயமா?  அல்லது இப்படித்தான் ஒரு புடம்போட்ட திராவிடமனம் சிந்திக்குமா? அல்லது – ஒருகால் இவையெல்லாம் தெரியாமல் செய்துவிட்ட தவறுகளா?

ஆனால், இந்த விவகாரங்கள், தெரியாமல் செய்த தவறுகளாக இருக்கமுடியும் என்று தோன்றவில்லை; ஏனெனில் ‘டிங்கோ டாங்கோ’ என்று தன்னை அழைத்துக் கொண்ட ஒரு நபர் இட்ட பின்னூட்டத்தின் படி. இந்த ‘யுவகிருஷ்ணா’ அவர்கள், தினமலர் செய்த கருத்துத்திருடலுக்கு எதிராக காப்பிரைட் கீப்பிரைட் என்று 2007ல் பொங்கியிருக்கிறார்…

”நம்ம நியாயஸ்தரின் பழைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பதிவு ஒன்று http://web.archive.org/web/20071011032949/http://madippakkam.blogspot.com/2007/10/blog-post_8319.html”

கருணாநிதி அவர்கள் சொல்லக் கூடுவது போல: ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை... என்ன எழவோ

பின்குறிப்பு: அந்த மார்வாடி யுவதி தன்னைப் பற்றிய விவரங்களுடன், அந்தக் கோப்பையும் பிரசுரிக்கச் சொன்னார். ஆனால்:

1. அந்த யுவதி அனாமதேயமாகவே இருக்கட்டும். ஏனெனில், அவருக்கு அசாத்திய தன்னம்பிக்கையும் குண்டு தைரியமும் இருந்தாலும் – எனக்கு  இணைய ஆண்கள் – அதுவும் கீபோர்ட் போராளிகளின் மீது தீராத அவநம்பிக்கை. அதுவும் திரா விடப்  போராளிகள்?  கும்பலாகச் சேர்ந்து GRoIP செய்து விடுவார்கள் – அதாவது – Gang rape over IP. ஆனால், மாட்டிக் கொண்டால் குய்யோமுறையோ என்று கத்திப் பிலாக்கணம் வைப்பார்கள்!

2. அந்தக் கோப்பும் பிரசுரிக்கப் பட மாட்டாது. ஏனெனில் – மீட்பு? Redemption? Repentance of the sinner?? எப்படி வேண்டுமானாலும் கருதலாம்… இவற்றில் எனக்கு இதில் நிச்சயம்  நம்பிக்கை இருக்கிறது. அதிசய நிகழ்வுகள் நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகளை நான் ம்றுதலிக்க  மாட்டேன். எனக்கு ‘யுவகிருஷ்ணா’ போன்றவர்களைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. நிச்சயமாக, எனக்கும்  மீட்பு தேவையே!

பின்பின்குறிப்பு: இந்தப் பதிவிற்கு சொம்புகுமாரர்களிடமிருந்து எத்தகைய பின்னூட்டம்/பின்னூட்ட,ம் வந்தாலும், அதைப் பொருட்படுத்தி பதில் கொடுப்பதாக இல்லை.  ஒரு தடவை செய்தது போதும்.

தொடர்புள்ள பதிவுகள்:

12 Responses to “படைப்புத்திருடல் செய்து இணையத்தில் படையல் வைப்பது எப்படி”

 1. சரவணன் Says:

  யுவகிருஷ்ணா பற்றி நீங்கள் எழுதியிருப்பவற்றை முழுக்க ஒப்புக்கொள்கிறேன். “choose your best choice”
  “படுத்தவாக்கில் வீற்றிருக்கிறார்” என்றெல்லாம் எழுதி, அதில் என்ன தப்பு என்று கேட்டவர். இங்கு நான் சொல்ல வருவது வேறு.

  விஜய் டிவியில் ‘என் கணவன் என் தோழன்’ என்ற பெயரில் இந்தியிலிருந்து தமிழாக்கிய தொடர் நாடகம் ஒன்று பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அதில் தன் கணவனின் தங்கை, மேலும் ஒரு வருடம் படித்து டிகிரி முடித்தபின் அவள் கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாமே என்று கேட்டதற்காக ஒரு பெண்ணை அவள் மாமியார் அரை மணி நேரம் காய்ச்சி எடுக்கிறார். முழு எபிசோடும் அந்தப் பெண் மாமியாரின் வசைபாடலைக் கேட்டபடியே இருந்தாள். ‘இன்னும் ஒரு வருடம் புலி வாலைப் பிடித்த மாதிரி மாப்பிள்ளை வீட்டாரைத் தாங்கிக்கொண்டிருக்கணும். அவர்களுக்கு ஏதாவது கோபம் வந்து, பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டால், பிறகு நிச்சயம் முடிந்த பெண்ணை யார் கட்டுவார்கள்?’ இத்தியாதி சகிக்க முடியாத பிலுபிலுப்பு. இதை ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா? அந்தக் குடும்பம் ஒரு (சௌகார் பேட்டைக்குப் புலம் பெயராத) மார்வாரிக் குடும்பம்.

  பெண் படிப்பது, வேலைக்குப் போவது என்பதெல்லாம் அவர்கள் இந்தக் காலத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத கலாச்சார அதிர்ச்சிகள் என்பதாகவே காட்டினார்கள்! யுவகிருஷ்ணா பதிவைப் படிப்பவர்கள் சில ஆயிரம்பேர் என்றால் இந்த சீரியலைப் பார்ப்பவர்கள் இலட்சங்களில் (தமிழில் மட்டும்). இதற்கும் ஏதாவது செய்யுங்களேன்!

  • ramasami Says:

   அன்புள்ள சரவணன் – நம் ஆட்களுக்கு ஸ்டீரியோடைப் செய்யாமல் எதையும் புரிந்து கொள்ள இயலாது. ஆனால் நான் தொலைகாட்சி கிட்டவே போகாதவன் என்பதாலும், என்னுடைய நேரத்தைப் பொன்னாக மதிப்பவன் என்கிற காரணத்தாலும் – இந்த ஊடக உளறல்கள் பற்றி எழுத முடியாமைக்கு – என்னை மன்னிக்கவும்.

   ஏனக்கு என்ன தோன்றுகிறது என்றால் – நமக்கு எவ்வளவு நேரம் ஆகப் போகிறது, சிங்களவர்கள் நாலு பேர், மார்வாரிகள் நாலு பேர் என, ஆர்எஸ்எஸ் நாலுபேர், நக்ஸலைட் நாலு பேர் எனத் தேடிப்பிடித்து நட்பு கொண்டு பின்னர் நம் கருத்துக்களை வளர்த்திக் கொள்வதற்கு. ஹ்ம்ம். நாம் மிகவும் சோம்பேறிச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள்…

   எனக்கு உங்கள் வருத்தம் புரிகிறது. ஆனால், நீங்கள் இந்த இழவைப் பற்றிச் சுட்டுப் பொசுக்குகிற மாதிரி, தரவுகளுடன்/அனுபவம் சார்ந்து எழுதினால், அதை நான் பிரசுரிக்கத் தயார். ஒன்றிரண்டு பேருக்காவது இதைப் பற்றித் தெளிவு பிறக்கலாமல்லவா? (என்ன, மேதகு ‘யுவகிருஷ்ணா’ அவர்களின் பதிவுகள் போல, உங்கள் பதிவை (என் பதிவையும் தான்) விசிலடிச்சான்’லைக்’கர்கள் ஆயிரக் கணக்கான எண்ணிக்கையில் படிக்க மாட்டார்கள். பாதகமுமில்லைதான்…)

   வாழ்க்கையெனும் ஓடம்… :-)

 2. k7 Says:

  your writting is always boring…always critizising some body…

  • ramasami Says:

   k7 – Thanks! Your ritting is fool of speelling mushtakes.

   Checkmate & QED. ;-)

   • k7 Says:

    what a wonderfull man you are!! not able to tolerate Criticism! I dont know how you family is tolerating you, god bless them and your subordinaes who are working with you!!!!

    • T.S. Ravi Says:

     Mr. Ke Seven, he has thanked you for your ‘critizism’ and also ‘critizised’ your spelling mistakes. Instead of correcting those, you have now shown your extraordinary strength in grammar also by making further ‘critizism’. Try to improve upon your English writing lest your superiors will not tolerate you!! God bless you, your family and your colleagues & superiors !!!!!!!!


 3. yuvavai nakkal syaara pappan thorgi


 4. yuva nakka seyaara pappaan throgi oliga


 5. யுவா எங்க தல போயிடும் உன் தல – சொரினாய்

 6. பொன்.முத்துக்குமார் Says:

  அனேகமாக மேற்கண்ட 3 பின்னூட்டங்களும், ஒரிஜினல் மாயவரத்தான் இட்டதாக இருக்காது.

  யப்பா, சிஷ்ய பிள்ளேங்களா, கொஞ்சம் ஒரிஜினல் பேரோட வரக்கூடாதா ? பின்னூட்டம் இடறதுக்கு கூடவா அடுத்தவன் தோளுல சவாரி செய்யணும் ?

  ஆமா, எவ்ளோ கண்ணியமா பின்னூட்டம் இட்டுருக்கீங்க, ஒங்க தரத்த இப்படியா வெளிப்படுத்துறது ?

  “உழல மட்டுமே ஆசைப்படும் (அல்லது அதற்கு மட்டுமே வக்கிருக்கும்) உங்களுக்கு சேறு போதும்”


 7. மேலே என் பெயரில் வெளியாகியுள்ள பின்னூட்டங்கள் என்னுடையவை அல்ல. சோனமுத்தான் எதையுமே ஒரிஜினலாகச் செய்ய மாட்டான் என்பதற்கு அவன் என்னுடைய பெயரில் இட்டிருக்கும் இந்த பின்னூட்டங்களே சாட்சி!


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s