திராவிட இயக்கம், வாயுத்தொல்லை, ஜெலுஸில் – நகைச்சுவை…

17/08/2013

ஆயிரம்  முக்கியமான வேலைகள் காத்துக் கொண்டிருந்தாலும், கவைக்குதவாத வீண் வெட்டி அக்கப்போர்களில் கிடைக்கும் மகாமகோ இன்பம்ஸ் – அவற்றின் சுகமே அலாதிதான்.

’சந்திரசேகரேந்திரன்’ எனத் தன்னை அழைத்துக் கொள்பவர் ஒரு பின்னூட்டமிட்டிருக்கிறார்:

”திராவிடர்களை விழிப்புணர்வு பெறச்செய்தது அண்ணாவின் எழுத்து. அவர்களை எதுவும் எதுவும் தெரியாத மயக்கத்தில் வைத்திருக்க விரும்புவது பார்ப்பனீயம். அதற்கு பின்பாட்டு பாடிவருபவர்கள் நீங்கள்.

வெளிப்படையாய் கேட்கிறேன். அடுக்குமொழி தமிழுக்கு அடுக்காத மொழி என்கிறாரே கட்டுரையாளர் அதற்கும், அந்த மொழிநடையை “பொறுக்கி நடை” என்கிறாரே அதற்கும் இலக்கண ஆதாரத்தை காட்டட்டும். அகத்தியம்- இல்லை. ஆனால் தொல்காப்பியமும், நன்னூலும் உள்ளது. இது இரண்டிலிருந்தும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒன்றிலேனும் இதற்கு ஆதாரமிருந்தால் கட்டுரையாளர் காட்டட்டும், அல்லது அவரின் பக்க வாத்தியங்களான நீங்கள் காட்டுங்கள்.

இது எதுவுமில்லாமல் ஆதாரமின்றி வெறும் வயிற்றெரிச்சலில் பேசுவதாக இருந்தால் கொஞ்சம் ஜெலுசிலை குடித்துவிட்டு வீட்டுக்குளே இருந்து பேசுங்க. பொதுவில் பேசினால் இப்படி கேள்வி வரத்தான் செய்யும்.

உங்கள் (பொன்.முத்து/ ராமசாமி/ சான்றோன்) அடுத்த பதிவு தொல்காப்பியம் அல்லது நன்னூலிலுள்ள ஆதாரமாக இருக்குமென எண்ணுகிறேன்.”

-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… அய்யா,  தாங்கள் வெளிப்படையாகக் கேட்கிறீர்கள். ஆகவே, நானும், எனக்கு முடிந்தவிதத்தில் வெளிச்சிரங்காகவே பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்:

அன்புள்ள ‘சந்திரசேகரேந்திரன்,’

 1. முதலில் உங்கள் புனைபெயருக்கு தமிழ் இலக்கணபூர்வமான பரிசுத்த ஆவி தூயதிராவிட விளக்கம் உள்ளதா என இயம்புக. மற்றையவை சில்லுண்டி விஷயங்கள்தாம் என அறிக.
 2. “திராவிடர்களை விழிப்புணர்வு பெறச்செய்தது அண்ணாவின் எழுத்து.” – அப்போது அவர்களைக் மகாமகோ குறட்டை விட்டுத் தூங்க வைத்தது பெரியாரின் பேச்சா? என்ன அய்யா – விழிப்புணர்வு கிழிப்புணர்வு என்பதையெல்லாம் அசால்டாக  உபயோகப் படுத்துகிறீர்கள்? ஒருகால், ‘வேலைக்காரி’ போன்ற அதி முன்நவீனத்துவ நவீனங்களினால் அலைக்கழிக்கப் பட்டு நீங்கள் பெற்றிருக்கக் கூடிய விழிப்புணர்வைச் சொல்கிறீர்களா என்ன? அல்லது ‘becauseஐ மூன்றுதரம் ஒரே வரியில் உபயோகித்து’ மேலை நாட்டினர் – ஆங்கிலப்பேச்சாளர்கள் அனைவரையும்  ஒரே சமயத்தில் மூக்கில் விரலை வைக்க வைத்து உலகத்தையே ஸ்தம்பிக்க வைத்த, ‘இன்னாட்டு இங்கர்சால்’ எழுப்பியதாகப் பரப்பப்படும் உலகளாவிய விழிப்புணர்வைச் சொல்கிறீர்களா?
 3. “அவர்களை எதுவும் எதுவும் தெரியாத மயக்கத்தில் வைத்திருக்க விரும்புவது பார்ப்பனீயம்” என்று வேறு சொல்கிறீர்கள் – ஆக, உங்கள் நோக்கில் பெரியாரும் அதைத்தானே செய்திருக்கிறார். ஆக, நீங்கள் சொல்ல வருவது: பெரியார் ஒரு பார்ப்பனீயவாதி. (இன்னாங்கடா இத்தூ, புத்தூக் கதே!)
 4. ‘சான்றோன்,’ ‘பொன் முத்துக்குமார்,’  ‘டி எஸ் ரவி,’ போன்ற / ஏனைய மனிதர்கள், என் பக்க வாத்தியங்கள் அல்லர். அவர்கள் தனி ஆவர்த்தனக் காரர்களே. இவர்களைப் பற்றி எனக்குப் பெரிதாக ஒன்றும் தெரியாது. அவர்களுக்கும் என்னைப் பற்றி மேலதிகமாகத் தெரிய சாத்தியக் கூறுகள் இல்லை. என் கட்டுரைகளைப்(!) படிக்கும் அவர்களுக்கு, பாவம்,  என்னைப் பற்றி ஒவ்வாத / ஒத்துவராத / வெறுப்பை மூட்டும் சங்கதிகளும் இருக்கும் – இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள், உங்களையும் என்னையும்போல அல்லாமல், சிந்திக்கும் ஆட்கள், தொடர்ந்து தங்களை மேலெழுப்பிக் கொண்டிருக்கும் அறிவும் முனைப்பும் படைத்தவர்கள்; நிச்சயமாக இவர்கள் மனமும் மூளையும் காயடிக்கப் பட்டு சூம்பிப் போன திராவிடமுதல்வாதிகளல்லர் – உச்சாடனப் பூஜாரிகள் அல்லர். இந்தச் சிந்திப்பும் முனைப்புமுள்ள ஜாதி தமிழகத்தில் அருகிக் கொண்டிருக்கிறது என்றாலும், இந்தத் தனிஆவர்த்தனக் காரர்கள் தான் விடிவெள்ளிகள்…  என்ன, என்னைவிட அவர்களுக்கு கொஞ்சம் அதிக நேரம் இணையத்தில் செலவிட முடிகிறது – உங்களைப் போன்ற கருத்துக்களைப் பிடித்துக்கொண்டு தொங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, உங்கள் மொழி நடையிலேயே பொறுமையாக, மீண்டும் மீண்டும் பதில் கொடுப்பதற்கு. அவர்களுக்கு என் நன்றி. (தொடருங்கள் தனி ஆவர்த்தனத் தானைத் தலைவர்களே! வீறு கொண்டெழுந்து இவ்வீணர்களை வெற்றி கொள்ளுங்கள்! அடலேறுகளே, ஆர்ப்பரித்து ஆவணப் படுத்துங்கள்!!! புல்லர்களைக் cowவர்களுக்குக் கொடுத்து வீரவிருந்தோம்பலுங்கள்! வெட்டிவேல்! வீரவேல்!! — ஸ்ஸ்ஸ், மன்னிக்கவும் நண்பர்களே! மூச்சிரைக்கிறது.  கண்கள் பனிக்கின்றன. இதயம் சனியன், இனிக்காமல் படபடக்கிறது. நா கொழுகொழுக் கென்கிறது – எழவு பல் தேய்த்து, என் திராவிட நாக்கை வழிக்க வேண்டும். மீண்டும் மன்னிக்கவும். ஆமென். சுபம்.)
 5. நீங்கள் எழுதிக் கொண்டே போகிறீர்கள் — “ஆனால் தொல் காப்பியமும், நன்னூலும் உள்ளது. இது இரண்டிலிருந்தும்” என்றெல்லாம் – இவை இன்னா இளக்கன சுத்தமாண டமிள் ஸொற்றொடர்கள் என்பதை நீங்கள் விலக்க முடிந்தாள் நளமாக இருக்கும். என் சொல்றீங்?
 6. அகத்தியம், ஐந்திரம், தொல்காப்பியம், நன்னூல் – போன்றவற்றில் இந்த அடுக்கு மொழி – பொறுக்கி நடை என்ற ஒன்றுக்கு ஆதாரம் இல்லை. மன்னிக்கவும். அது என்னுடைய, சொந்தச் சரக்கு – இந்த நடையைக் குறிப்பிட நான் வைத்துள்ள செல்லமான ‘பட்டப் பெயர்.’ ஆனால் இந்தநடை உபயோகத்தில் இருப்பது நான் பிறப்பதற்கு முன்பிலிருந்தே என்பது எனக்கு வருத்தம்தான். நிற்க, இது கண்டுபிடிக்கப் பட்டதின்  —  தொடர்ந்து  தொடரப்பட்டதின் பிரத்யட்ச ஆதாரம்  —  நம் அண்ணாதுரையார், கருணாநிதியார், வெற்றிகொண்டானார், ஜேப்பியாரார், காரல்மார்க்ஸார் (திமுக) போன்றவர்களின் மகத்தான படைப்புகளில், செப்புதல்களில் உறைந்திருப்பது வெள்ளிடைமலை. ;-)
 7. ஹ்ம்ம், ஆனால் இந்த முனைப்புதான், எந்த எழவையும் அந்தக் கால  ‘கல் தோன்றி மண் தோன்றாக காலத்தில் இருந்தே’  தமிழ்க் (ஓஓ மன்னிக்கவும், திராவிட) கலாச்சாரத்தில் இருந்திருக்கவேண்டும் என மிகவும் கஷ்டப்பட்டு விளக்கிப்  புளகாங்கிதம் அடையும் தன்மைதான் – நம்மை, குட்டையில் ஊறிய மட்டைகளாக வைத்திருக்கிறது. இது மெய்யாலுமே படு கேவலமான விஷயம்தான்.
 8. நீங்களும் உபயோகிக்கும் (=கிடந்துழலும்) இன்டெர்நெட்டுக்கும், அதன கட்டுமானங்களுக்கும் என்றுகூட ஒரு இலக்கணம், அடிப்படை விதிகள் எல்லாம் உண்டு. ஆனால் அந்தத் தொல்காப்பியர் இது பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்கிற காரணத்தால், இந்த இணையத்தை உபயோகப் படுத்தாமலா இருக்கிறீர்கள்?
 9. முடிவாக, அய்யா சந்திரசேகரேந்திரன் அவர்களே! நீங்கள் கொஞ்சம் தயவுபண்ணி உங்கள் நகைச்சுவையுணர்ச்சியை வளர்த்திக் கொண்டால் உங்கள் ஆரோக்கியம் வளரும், பொலியும். ஆகவே, உங்கள் நலத்தைச் சிரமேற்கொண்டு, உங்களுக்குக் கீழ்கண்ட தளங்களைப் பரிந்துரைக்கிறேன்:
 •  விடுதலை: (அதாவது, வீரமணி அவர்களால் – தலையை விட்டு அதிலுள்ள மூளைக்கு விடுதலையளித்து அருளிச் செய்யும் நற்செய்திகள் நிரம்பியது)
 • வினவு: (இதைப் படித்தால் உங்களுக்கு உடனடியாக புரட்சிகர எழுச்சி ஏற்பட்டு உங்கள் கால்சராயின் சிப்பர் தெறிப்பதற்கு நான் உத்திரவாதம்; மேலதிகமாக, வெறும் பின்னூட்டமிட்டே,  யுகப்புரட்சிக்கு உங்களால் ஆன புரட்சிகர பங்களிப்பை அளிக்கலாம்.)
 • இதைத்தவிர சில மேல்_மாடி_காலி  இளைஞர்கள் நடத்தும் அதிதீவிர  காப்பிக் கடைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றைப் பற்றி வேண்டிய அளவு ‘ஆராய்ச்சி’ எல்லாம் செய்து எழுதியாகிவிட்டது. ஆக, எனக்கே கொஞ்சம் அலுப்பாக இருக்கிறது இவைகளைப் பரிந்துரைப்பது.

அன்புடனும் கரிசனத்துடனும்:

ராமசாமி.

பின்குறிப்பு: உங்கள் மண்டையின் மேற்பகுதிக்குள், ’கொஷக்முஷக் காலிஃப்லவர்’ போன்ற ஒன்று  இருக்கிறது. இந்த உதவாக்கரை உடலுறுப்புக்கு –  மூளை என்ற ஒரு வினோதப் பெயர் கொடுத்திருக்கிறார்கள் சில வேலையற்ற திரியாவரங்கள். … ஹ, இதெல்லாம் நம் திராவிடக் குளுவான்களுக்குத் தேவையில்லை என்பது இயற்கைக்குத் தெரியவில்லை என்பது ஒரு கொடுமையான விஷயம்தான்.

… இருந்தாலும் பாருங்கள்,  என் பாவி மனது அடித்துக் கொள்கிறது – உங்களை கடைத்தேற்ற ஏதாவது கண்டிப்பாகச் செய்ய அது கட்டளையிருகிறது, என்ன செய்ய.., ஆகவே…

தேவரீர் நீங்கள், கண்ட கழுதைகளுடன் அலைய வேண்டாம் – அவை மிகவும் ஆறிய திராவிடக் கழுதைகளாக இருந்தாலும் சரியே!  நல்ல புத்தகங்களைப் படிக்கவும். நல்ல இசையைக் கேட்கவும்.  வேளாவேளைக்குச் சாப்பிடவும். ஆரோக்கியமான காற்றை (அது திராவிடக் காற்றாக இல்லாமலிருப்பது முக்கியம்) சுவாசிக்கவும்.

திராவிடக் கழிவுகளை வெளியேற்றிய பின் சம்பந்தப் பட்ட பாகங்களைச் சுத்தம் செய்து கொள்ளவும். நண்பர் பூவண்ணன் இதுபற்றிப் பலசமயம் அங்கலாய்த்திருக்கிறார், நம் மக்களின் கடையேழு வள்ளல்களில் ஒருவராக இல்லாத  ஆய் போய்விட்டு, குண்டிகளைச் சரியாகக் கூட அலம்பிக் கொள்ளாத நம் திராவிடப் பாரம்பரியம் பற்றி. (பூவண்ணன் என்று இந்த வலைப்பூவில் தேடிப் படிக்கவும்.

இரவு தூங்கப் போகும்போது மறக்காமல் பல் விளக்கவும். இவற்றிற்கெல்லாம் விளக்கவுரை, தெளிவுரை எல்லாம் தொல்காப்பியத்தில் இருக்காது. தொல்காப்பியர் – ஹ்ம்ம் இந்தப் பாவி தொல்காப்பியர்  தான் திராவிடர்களின் முதல் கருத்துத் திருடலாளரோ? முழுமுதல் ப்ளேஜியரிஸ்டோ? காப்பி கடைக் காரரோ??  என்ன எழவோ… திராவிடர்களின் இந்த அட்டைக்காப்பி, ஈயடிச்சான் காப்பியடிக்கும் சுபாவத்துக்கும் தொல்காப்பியரே சான்றோ?? எனக்கு மிக மிக வருத்தமாகவே இருக்கிறது.

என்னவோ போங்க…

தொடர்புள்ள நகைச்சுவை:

6 Responses to “திராவிட இயக்கம், வாயுத்தொல்லை, ஜெலுஸில் – நகைச்சுவை…”

 1. சான்றோன் Says:

  என்ன சந்திரசேகரேந்திரன்……[ அல்லது நிஷாந்தன் சதானந்தசிவம் ……]

  [ திரு.ராமசாமி அவர்களே…..இவரது புனைப்பெயரே காழ்ப்பின்பால் அமைந்தது தான் ]

  இந்த விளக்கம் போதுமா அல்லது தொல்காப்பியமே [ கண்டிப்பாக கருணாநிதி கிறுக்கிய , பிழைகள் மலிந்த தொல்காப்பியப்பூங்கா அல்ல…அசல் தொல்காப்பியம் ] தான் வேண்டுமா?

 2. Chandrasekarenthiran Says:

  @Ramasami, @ Sandroon : //அகத்தியம், ஐந்திரம், தொல்காப்பியம், நன்னூல் – போன்றவற்றில் இந்த அடுக்கு மொழி – பொறுக்கி நடை என்ற ஒன்றுக்கு ஆதாரம் இல்லை. மன்னிக்கவும். அது என்னுடைய, சொந்தச் சரக்கு – இந்த நடையைக் குறிப்பிட நான் வைத்துள்ள செல்லமான ‘பட்டப் பெயர்.’// ……………………………………………………………………………….அதுதான் விஷயம். இந்த மொழிநடையை “அடுக்காத மொழி” என்றோ “பொறுக்கி நடை” என்றோ தொல்காப்பியமோ, நன்னூலோ குறிப்பிடவில்லை. அவை இதனை அனுமதிக்கின்றன. அவை அனுமதித்துள்ள இலக்கண கட்டுமானத்துட்பட்டே அழகியலோடு சேர்த்து இந்த மொழிநடை கையாளப்பட்டுள்ளது.

  உமக்கு இந்த மொழிநடையினால் திராவிடர்கள் அதிகாரம் பெற்றதை கண்டு வயிற்றெரிச்சல். அது இந்த மொழிநடையையும் வெறுக்க வைக்கிறது. ஆக இது பொறுக்கிநடையல்ல. திராவிடர்களின் வளர்ச்சியை கண்டு உமக்கு பொறுக்காததால் இந்த மொழிநடையை பொறுக்கிநடை என்கிறீர்.

  மற்றபடி நீங்கள் பக்கம் பக்கமாக எழுதியுள்ள விஷயங்கள் நான் கேட்ட விஷயத்துக்கு எந்த தொடர்பும் இல்லாதவை.

 3. ramasami Says:

  ‘சந்திரசேகரேந்திரன்,’

  உங்கள் நகைச்சுவை உணர்ச்சியைக் கொஞ்சம் குறைவாகவே கணித்து விட்டேன். மன்னிக்கவும்.

  தொடர்ந்து, பின்னூட்டம் இடவும். ஆனால் அதற்கு தட்டச்சு உபயோகிக்கவும். உங்கள் உடலின் பி[ன்பக்கத்தால் இடுவதற்குப் பெயர் பின்னூட்டமல்ல.

  திராவிடம், திராவிட இனம் என்பது ஒரு அழகான கற்பிதம் – முட்டாட்களுக்காகப் பிரத்யேகமாக ஜோடிக்கப் பட்டது. இதற்கு ஒரு அறிவியல் / வரலாறு சார்ந்த தரவு கூட இல்லை. இது பிரிவினைவாதத்திற்குப் பயன்பட்ட விஷயம், அவ்வளவுதான். கொஞ்சம் படித்தாலே உங்கள் மனத்தில் தெளிவு வந்துவிடும்.

  நீங்கள் வளர, என் வாழ்த்துக்கள்.

  __ரா.

 4. poovannan Says:

  ஹிந்து ,முஸ்லிம்,இந்தியா,பாகிஸ்தான் எல்லாமே கற்பிதங்கள் தானே சார்

  சில நாளைக்கு முன் வந்த செய்தி
  http://hms.harvard.edu/news/genetics-proves-indian-population-mixture-8-8-13

  The paper described how all populations in India show evidence of a genetic mixture of two ancestral groups: Ancestral North Indians (ANI), who are related to Central Asians, Middle Easterners, Caucasians, and Europeans; and Ancestral South Indians (ASI), who are primarily from the subcontinent.

  ஆர்யன் திராவிடன் என்பதை ANI ASI என்று அழைத்து கொள்வதால் இரண்டு தனி குழுக்கள் கிடையாது எனபது புலனாகி விட்டது என்று வாதிடுவது சரியா

  இணையத்தில் பலரிடம் கேட்ட கேள்வி உங்களிடமும்

  இந்தியா முழுவதும் ரிஷி கோத்திரங்களான பாரத்வாஜ ,காஷ்யப போன்றவை ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடம் இருப்பது எதை காட்டுகிறது.ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்தார்கள் என்பதை தானே.நாடார்களின் /கொங்கு வெள்ளாளரின்/சோரேன் பழங்குடியினரின் கூட்டம் என்ற கோத்திரம் போன்ற பிரிவுகளை குறிக்கும் வகைகள் அந்தந்த பகுதிக்கு உரிய மிருகங்கள் /மீன்கள்/செடிகள்/குல தெய்வங்கள் அடிப்படையில் தானே உள்ளது.
  அனைத்து கஷ்யப கோத்திரங்களும் கன்யாகுமரியில் இருந்து தான் மற்ற இடங்களுக்கு சென்றார்கள் என்றால் ஒத்து கொள்ளலாம்.இல்லை சும்மா இவற்றை பற்றி கேள்விப்பட்டு தனக்கு பிடித்ததை கோத்திரமாக வைத்து கொள்ள ஆரம்பித்தார்கள் என்றாலும் ஒத்து கொள்ளலாம்.ஆனால் அதே கோத்திரத்தில் திருமணம் செய்ய மாட்டோம் என்று பிடிவாதம் பிடித்து கொண்டு ,அதே கோத்திரத்தை சேர்ந்தவர்கள் சுயம்பாக இந்தியா,பாகிஸ்தான்,வங்காளம்,ஆப்கானிஸ்தானில் தன்னால் தோன்றினார்கள் என்றால் சரியா
  ஆரிய திராவிட பிரிவினைகளை அன்றைய காலகட்டத்தில் திலகர் முதல் இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அனைவரும் தானே சரி என்று வாதிட்டார்கள்.அதை பொறுக்கிகள் கண்டுபிடித்தது போல பழி போடுவது சரியா

 5. ramasami Says:

  வணக்கம் பூவண்ணன்,

  இந்த ஆராய்ச்சியின் முதல் ஆவணத்தை, 2009 வாக்கிலேயே படித்துவிட்டேன். மதிப்புக்குரிய குமாரசாமி தங்கராஜ் அவர்களின் ஆராய்ச்சிகளை, நான் பல வருடங்களாக ஆர்வத்துடன் படித்து வந்திருக்கிறேன்.

  நீங்கள் எடுத்துக் காடடியிருப்பது, எளிமைப்படுத்தல்கள், பொதுமைபடுத்தல்கள் – சரியல்ல. உங்கள் தருக்க உருவாக்கமும் சரி செய்யப் படவேண்டும்.

  நீங்கள் இந்தக் கோட்பாடுகள் தொடர்பான முழுமுதல் ஆவணங்களைப் படித்துவிட்டு, தங்கள் பார்வையைச் சரி செய்து கொள்ளவும்.

  மேலும் நீங்கள் சொல்வது போல – நான் எதையும் ‘பொறுக்கிகள்’ கண்டு பிடித்ததாக’வெல்லாம் சொல்லவில்லை. அவர்களுக்கு அந்த அளவுக்கு மூளையில்லை. அவர்கள் – வெள்ளைக்காரப் பாதிரிமார்கள் குயுக்திக் குறிக்கோளுடன் சொன்னதை, அவற்றின் குஞ்சாமணிகளைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள், அவ்வளவுதான்.

  திலகர் சொல்வதையெல்லாம் சரி என்று சொல்லமாட்டேன். அதேசமயம் அவர் ஆளுமையை/பங்கைக் குறைத்தும் மதிப்பிடமாட்டேன். அவர் சொல்லாததையெல்லாம் சொன்னார் என்று சொல்லவும் மாட்டேன்.

 6. க்ருஷ்ணகுமார் Says:

  \\\ நீங்கள் எடுத்துக் காடடியிருப்பது, எளிமைப்படுத்தல்கள், பொதுமைபடுத்தல்கள் – சரியல்ல. உங்கள் தருக்க உருவாக்கமும் சரி செய்யப் படவேண்டும். \\\

  Superb, Sir. I too told the same thing to Poovannan sir with reasons. But he repeats his pet theories with out any substantiation.

  I hope Poovannan Sir, reads a lot. But his pet theories always superimpose his conclusions.

  ஜோடுக்குத் தகுந்தபடி பாதத்தைச் செதுக்குவதிலேயே குறியாக இருக்கிறார்.

  அன்பர் அவர்களுடன் தமிழ் ஹிந்து தளத்தில் இது சம்பந்தமாக விவாதித்தது நினைவுக்கு வருகிறது.

  Relavant parts of that – I Share here

  \\\\ First, your basic premise seems to be flawed. You put forth a point that gothras are among brahmins and they are unique to them. It is flawed. I have given some examples. kashyapa of brahmin and kashyap of kayasth how is it different? athri of brahmin and atri of Jat? gargya of brahmin and garg of bania? goyal of baniya and goyal of jat? how different they are? simply by saying that they are different takes us nowhere unless and until you substantiate them with facts from PRIMARY SOURCES. Do not try to just quote a few urls which says so and so said so and so and endlessly the chain goes on.

  Second, from the basic premise of commonality of gothras to the end point of deriving conclusions, there can not be gap in between. You have to establish as to how the commonality of gothras lead one to finally conclude that one can reach certain conclusions. But, you straight away jump from your basically flawed premises to your final conclusions. That can be a wild guess, that may be a hypothesis on your part for further study, but to give it a colour of established fact is erroneous.\\\\ It seems you base many of your conclusions (what are they?Even those are not clear!!!!) on a premise that gothras are common among brahmins throughout the length and breadth of Hindusthan. \\\


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s