மகாமகோ பின்நவீனத்துவ மணிமேகலையும், உதயசூரியகுமரனும்

30/08/2013

(அல்லது) உதிரி அரசியல்வாதிகள் உணவுப் பாதுகாப்பு மசாலாதோசைமசோதா

இப்படியாகத்தானே மணிமேகலைப் பூங்கொடியாள், இத்தாலியில் பிறந்து இங்கிலாந்து அடைந்து, அங்கிருந்த இந்திய ராணியின் அரசிளங்குமரன் கரம் பற்றி, இந்தியா கண்டு, பின்னர் அந்த அரசிளங்குமரன் — உதயசூரியகுமரன் எனும் வெகுபிற்காலச் சோழனின் அப்போதைய நண்பனான விடுதலைப்புளிச்சோழனால் – படுகொலை செய்யப்பட்ட பின், தானே  அரசுகட்டில் ஏறி என்ரெகா போலிக்குளம் தொட்டு ஸ்விட்ஸர்லாந்து வங்கி வளம் பெருக்கினார்?

இப்படியாகத்தானே இம் மணிமேக்கிங்கலை, கஞ்சி மாநரகம் சென்று அங்குள்ள மெத்தப் படித்த அமர்த்யா அரைகுறைஷென் அறவண அடிகளிடம் பாடம் கேட்டு, ‘பிச்சை இடினும் ஆளுகை நன்றே’ முதலான பயிற்சிகள் பல பெற்று, தம் மக்களை கஞ்சி மட்டும் குடிக்கும் ஓட்டாண்டிகளாக்குகிறார்?

இப்படியாகத்தானே, மணிமேகலையான, ‘மணி மே கலை’ (அஃதாவது – சுழன்றும் துட்டுப்பின்னது அண்டம் என்பதன் ஹிங்கில வடிவம்)  என்பதை ஐயம்திரிபற உணர்ந்த, அறிந்த, அவர் – இந்திய மக்களின் வரிப்பணத்தை, அவர்கள் வாழ்வாதாரங்களை, அவர்கள் எதிர்காலத்தைப் பணயம் வைத்து (இஃதாவது: தன் பணத்தை வைத்து அல்ல) – அவர்களுக்கே பிச்சை போடத் தயாராக இருக்கிறார்…

இப்படியாகத்தானே, இந்திய மக்களுக்கு தொலை நோக்குடன் திட்டங்கள் தீட்டிப் பணிகள் பல செய்வதற்குப் பதிலாக, அந்தக் கால மணிமேகலை போல அமுதசுரபி (தன் முயற்சியில் மனம் தளராத விக்ரமனுடையதல்ல)  மூலம் தம் அரசியல் நண்பர்களான உதயசூரியக்குமரச் சோழர்கள் போன்றவர்களுக்கும் உதவிகள் செய்வதற்காகப்  ‘புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ வேலை செய்து கொண்டிருக்கிறார்? நம் மக்களுக்குப் பெரிய மனது பண்ணிப் பிச்சை இட்டுக் கொண்டிருக்கிறார்? பின்னர் இந்தப் பிச்சைகளைக் காட்டி ஓட்டு அறுவடை செய்யலாம் என மனவிஸ்கி குடித்துக் கொண்டிருக்கிறார்?

அதனால் தானே உதயசூரியக் குமரன் அவர்கள் புளகாங்கிதத்தாலும், மேலும் வயிறு புடைக்க உண்ண, சந்தர்ப்பங்கள் கூடி வருவதாலும், 2ஜி பேயை ஓட்ட – அதனைச் சரிக்கட்ட இவ்வகை பஜனைகள் கொஞ்சம் உதவலாம் என்பதாலும் இப்படியெல்லாம் பேசுகிறார்?

“பசியை போக்கும் வகையில், உணவு பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியதால், மணிமேகலையாக, காங்கிரஸ் தலைவர் சோனியா திகழ்கிறார்’

“உணவு பாதுகாப்பு மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் சுதந்திரம் பெற்றது போன்ற உணர்வும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது. உணவு உரிமை கிடைத்துள்ளது.

சோனியா, தன் மனதில் தோன்றிய பெரிய காரியத்தை செய்து முடித்துள்ளார்.நாடு முழுவதும், பலர், ஒருவேளை உணவு இல்லாமல் உள்ளனர். அவர்களின் பசியை போக்க வேண்டுமானால், எத்தனையோ மணிமேகலை தேவைப்படுவர். அத்தனை மணிமேகலைகளையும் சேர்த்து ஒரு மணிமேகலையாக சோனியா, இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

கன்னியாகுமரியில், திருவள்ளுவர் சிலையை திறந்த போது, என் கை, கால்கள் நடுங்கி, பேச முடியாத நிலைக்கு திக்குமுக்கு அடைந்தேன். அதேபோன்ற உணர்வு தான் சோனியாவுக்கும் ஏற்பட்டிருக்கும்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, என் நெஞ்சு பதைபதைத்தது. அவர் உடல் நலம் தேறி வரவேண்டும் என நினைத்தேன். உடல் நலம் பெற்று விட்டார். அவருக்கு எனது பாராட்டுக்கள்.

மகாமகோ ஜால்ராக்களை நேரிலேயே கேட்டு, தொபுக்கடீரென்று மற்றவர் காலில் விழும் காரிய சர்வாங்க நமஸ்காரங்களைப் பார்த்து, ரூபாய் நோட்டு மாலைகளை, ஆளுயர திக்குமுக்காடவைக்கும் மாலைகளைப் பார்த்து (ஒரு பார்வையாளனாகத்தான்!) நெளிந்திருக்கும் எனக்கு, ஒரு 90 வயதான முதியவர் இப்படி சொம்புக்குமாரச் சோழனாக இருப்பது படு மோசமாக, நாராசமாகவே இருக்கிறது.

இருந்தாலும், மணிமேகலை கேட்கிறாரோ இல்லையோ, பொதுவாக அவர் திசையில் திரும்பி வணங்கி, வடக்கிருந்து தன் மானத்தைத் துறக்கும் மாண்பு போன்ற கல்யாணகுணங்களையுடய உதயசூரிய குமரனின் பணிவும் பாங்கும் எனக்குப் புளகாங்கிதம் தருகிறது தான்…

ஆனாலும், சில சமயம் தோன்றுகிறது – இந்தத் தள்ளாத வயதில் இப்படியெல்லாம் ஏன் பேசவேண்டும்? என்ன அவசியம்? என்னதான் அப்படி மடியில் கனம்?

ஹ்ம்ம்… எனக்கு, விடுதலை வீரமணி அவர்கள் முன்னொரு காலத்தில் ஜெயலலிதா அவர்களுக்கு ஓங்கி ஓங்கி  அடித்த ஜால்ராக்கள் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன – இஜ்ஜால்ராக்களைக் கேட்டிருந்தால், ‘ஐயப்ப பஜனை’ புகழ் இன்னொரு வீரமணி அவர்களே பொறாமைத்தீயினால் வெந்து போயிருப்பார்…

-0-0-0-0-

ஆனால், எனக்கும் ஒரிஜினல் அக்மார்க் மணிமேகலையைப் பிடிக்கும் – இந்த மகாமகோ மணிமேகலையை அல்ல.

-0-0-0-0-

ஒரு கொசுறு நகைச்சுவை –  உதயசூரியகுமரன் அவர்கள் இப்படியும் பகன்றிருக்கிறார்:

இந்தியாவில் உள்ள ஏழை, எளிய, சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அட, கருணாநிதி அவர்கள் ஒரே சமயத்தில்  ஒரு ஏழை, எளிய, சாதாரண, சாமான்ய, அடித்தட்டு, நடுத்தரக் குடும்பத்தினர் என அறியும் போது என் பாழாய்ப் போன நெஞ்சு விம்மிப் பரவசமடைந்து புடைக்கிறது…

ஆஹா! இப்படியல்லவோ இருக்கவேண்டும் ஒரு மக்கள் தலைவன்!!

வாள்க மனி மேக்கிங் கலை!

வால்க தமிள்!!

வெள்க கஞ்சித் தொட்டிக் காங்ரெஸ் கட்சியினர்!!!

வலர்க இந்தியப் பிச்சைkகாரர்கள்!!!!

பொலிக ஸ்விட்ஸர்லாந்த் வங்கிக் கணக்குகள்!!!!

ஆதாரங்கள்: :-)

One Response to “மகாமகோ பின்நவீனத்துவ மணிமேகலையும், உதயசூரியகுமரனும்”

  1. sreedhar Says:

    What to comment? Ammana kaaranga oorla kovanham kattinavan Muttalh.


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s