(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (10/n) — சாளரம் #4

சாளரம் #4:பொதுவாக நம் தமிழர்களுக்கு நகைச்சுவை உணர்ச்சி என்பது ஒரு சுக்குக்கும் கிடையாது, அப்படியே தப்பித்தவறி இருந்தாலும் அது, மிகமிகக் குறைவாகவும் அதுவும் — ஒருவழிச் சாலையாகவும் இருக்கும் – அதாவது மற்றவர்கள் கிண்டலடிக்கப்படும்போது, பகடி செய்யப் படும்போது அதனால் புளகாங்கிதம் அடைவோம்.

ஆனால், நம்மை  யாராவது, நாக்கின்மேல் பல்லைப் போட்டுச் சொன்னால்…. அவ்வளவுதான்! நமக்கு, அதனைப் பொறுக்கவே  முடியாது. கோபப்படுவோம், அழுது மூக்கைச் சிந்திப் பிலாக்கணம் வைப்போம், ‘என் கையறு நிலையைப் பாரீர்’ என, சக பேராண்மைக் குறைவாளர்களிடம் முறையிடுவோம்.

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரி புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

மைக்கெல் பிக்கரிங், ஷரன் லாக்யெர் / பேல்க்ரேவ் மேக்மில்லன் / 2009 / flipkart / இப்புத்தகத்தில் அழகான, நம் அறிவை விரிவாக்கும், நகைச்சுவையைப் பற்றித் தெரிந்துகொள்ளவேண்டியவையை விளக்கும், கோடிட்டுக் காட்டும் கட்டுரைகள் உள்ளன. இம்மாதிரிப் புத்தகங்கள் தமிழில், நம் பண்பாட்டிற்கேற்ப விரிக்கப் பட்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இப்புத்தகத்தின் துணைத் தலைப்பைப் படித்தால், நகைச்சுவையின் எல்லைகள் குறுக்கப்படவேண்டும் என்று இது சொல்வதாகத் தோன்றும்; ஆனால், இப்புத்தகம் அப்படியில்லை.

Read the rest of this entry »

என் நண்பர் பகபகத் சிங் அவர்களின் ‘ நான் ஏன் ஆத்திகன்  ஆனேன்’ என்கிற புத்தகத்தை அறிமுகம் செய்வதில், உள்ளபடிக்கே மிகவும் பெருமையடைகிறேன்.

இவரை நான் பல வருடங்களாக அறிவேன்; இவர் என்னுடன் வாய்-பாடு — அதாவது 2×3=8 == ரெண்ட் மூண் வொம்போத் வகையறா – ஆனால் தேவனுக்கு நன்றியுடன் சங்கீதமாகப் பாடுவது பாடுபொருள் — கற்றுக் கொள்கிறார்; ஏப்ரல் 1, 2014 அன்று சென்னை தாக்கர் பாபா பள்ளி வளாகத்தில் எங்களுடைய முதல் வாய்பாடுக் கச்சேரி எனத் திட்டம் வைத்திருக்கிறோம்; இவர் பெயரில் உள்ளது ஆங்கில sing – தமிழ் சிங், அதாவது அசிங் (-1 அல்லது -2) அல்.

ஒரு விண்ணப்பம்: கச்சேரிக்கு அலைகடலென ஆர்பரித்துத் திரண்டு வரவும்.

அதற்குள் மறந்து விட்டீர்களானால், மறுபடியும் சொல்கிறேன் – இந்தப் புத்தகத்தின் தமிழ் மொழித் தலைப்பு: வை டிட் ஐ பிகம் எ தீய்ஸ்ட்? – அதாவது ஆங்கிலத்தில்: naan yen aaththigan aanen?

Read the rest of this entry »

மன்னிக்கவும்: எனக்குக் கொஞ்சம் தேவைக்கதிகமாகவே வெட்கமும் அவையடக்கமும் உண்டு. என்னுடைய பெருமைகளை நானே தம்பட்டம் அடித்துக் கொள்வது என்பது, எனக்கு எப்போதுமே என்னவோ  போலிருக்கும். இருந்தாலும் வழக்கம்போலத் தொடர்கிறேன்.

இரண்டு பதிவுகள் முன், ஒரு பின்னூட்டத்தில் திரு  ‘ரவிக்குமார்’ அவர்கள், டெலக்ஸ் முறையில் (அல்லது தற்கால எஸெம்மீஸ் மொழியில்) அவருடைய உள்ளக் கிடக்கையை, ஒரு தமிழராகத் தம் சகோதரத் தமிழரை அறிய அவருக்கிருக்கும் ஆர்வத்தை, ஜெம்மொழி ஆங்கிலமொழிப் பின்னூட்டமிட்டு ஜெவ்வனே வெளிப்படுத்தினார்கள்: “sir, thankz for recomending book. plz tell when the book released.” இவர் ஒரு தகவல்தொழில் நுட்பத் தட்டச்சுக் குளுவானாகத்தான் இருப்பாரென்று என்னுடைய அனுமானம். ஏனெனில் இவருக்குத் தமிழிலும் எழுதமுடியவில்லை; ஆங்கிலத்தையும், பாவம்  என்னைப் போல எழுதுகிறார். எழுதியதை இடஞ்சுட்டிப் பொருள் புரிந்துகொள்ளும் முனைப்பும் இல்லை. கொஞ்சம் வெள்ளந்தி மனிதரோ?

சரி… இதனால் வாழ்க்கையையே வெறுத்துவிட்ட நான், முதலில் அதற்கு விட்டேற்றியாக ஒரு பதில் அளித்திருந்தேன். ஆனால் அது சரியில்லை, நியாயமில்லை  என்று தோன்றியதால, வேறு வழியில்லாமல் உண்மையைச் சொல்லிவிடலாம் எனத்தான் இந்தப் பதிவு. மன்னித்தருளவும். Read the rest of this entry »

தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (7/n)

சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் … யின் தொடர்ச்சி:

… நமக்குப் பேரும் புகழும் பெற்று, உலகறிய வாழவேண்டும் என ஆசை. நாம் எலியளவு இருந்தாலும் புலிபோல் காட்டிக்கொள்ள ஆசை. ஆக நாம் —  நமக்கும், நாம் வழிபடும் சினிமாக்காரர்களுக்கும் அரசியல்காரர்களுக்கும் பெரிய்ய பெரீய்ய கந்தறகோள விளம்பரத் தட்டிகளை வைத்து இதன் வழியாக நம் சாசுவதத்தன்மையையும், மேன்மையையும் உலகுக்கு அறிவிக்கிறோம். …

நம் தமிழ் நாட்டில் உள்ள அளவு ஃப்லெக்ஸ் தட்டிகள், கட்-அவுட்கள் உலகில் வேறெங்கும் இருக்குமா என எனக்குச் சந்தேகமே! ஃப்லெக்ஸ் தட்டி அச்சிடும் கருவிகளைத் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலைசெய்யும் விற்பனை விற்பன்னர் ஒருவரிடம் என் சந்தேகத்தைக் கேட்டபோது என் கருத்தை ஆமோதித்தார். இந்தியாவில், அதுவும் தமிழ் நாட்டில்தான் இதற்கு ஏக வரவேற்பு! Read the rest of this entry »

சாளரம் #3: பொதுவாக, நம் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு,  தங்கள் ‘ஆண்மை’ (பேராண்மை?) குறித்த, இனம் புரியாத ஒரு தாழ்வு மனப்பான்மையும் – ஆகவே அதன் தொடர்பான உளைச்சலும் அரிப்பும் இருக்கின்றன.

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (6/n) [தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ?? வரிசையில் ஆறாம் பாகம்]

இது பரவாயில்லைதான் – எவ்வளவோ விஷயங்களில் தாழ்வுமனப்பான்மை கொண்டிருக்கவேண்டிய நாம், எவ்வளவோ விஷயங்களுக்காகப் பெருமை (=மற்றவர்களை ஒடுக்கும், அற்பமாக நினைக்கும் கர்வ வகையறா அல்ல) கொள்ளவேண்டிய நாம் – பொதுவாக, இவற்றுக்கு எதிர்ப்பதமாகவே நடந்து கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மைதான்.

ஆக, நிதர்சனம் எப்படியோ — ஆண்மை, பேராண்மை போன்ற விஷயங்களில் தாழ்வு மனப்பான்மையிருப்பது பரவாயில்லைதான் – பல விஷயங்களில் இது ஒன்று மட்டும் தானே – ஆகவே, இது தன்னளவில்  ஒரு பெரிய பிரச்சினையுமில்லை.

ஆனால், இதனால் நமக்கு ஏற்படுவது ஒரு மகாமகோ சிடுக்கல் பிரச்சினை!

… இந்தக் கையலாகாத்தன – அய்யய்யோ, நமக்குத் தேவையான அளவு ஆண்மையில்லையே – என்கிற  மனப்பான்மையானது — நம்மைப் பலவிதங்களிலும் பாடுபடுத்தும் இந்தத் தாழ்ச்சியை, அநியாயமாக நமக்கு இழைக்கப்பட்ட அநீதியாக நாம் கருதுவதை —  எப்படியாகவேனும் ஈடு செய்ய அநியாயத்துக்கு  உந்துகிறது. Read the rest of this entry »

calculus made easy!

22/11/2013

The Annotated Alice‘ of Lewis Carrol and Martin Gardner – was (finally) returned a couple of weeks back by my dear Rama and I was fondly leafing through it, before sentimentally returning it to the library shelves. It is currently rubbing shoulders with the books of the likes of  Isaac Asimov, JBS Haldane, Erwin Schrödinger, Enrico Fermi, Paul Dirac, Albert Einstein, Robert Oppenheimer et al and should be feeling happy now; what a work of deep scholarship!

Rest in peace, Martin. You lived to a ripe old age of 96 and also did a great job of living, all the while!

Having thoroughly enjoyed (actually a lame word like ‘enjoyment’ does begin to describe the pure exhilaration one feels studying a Martin Gardner or a Douglas Hofstadter or a Richard Feynman) ‘The Annotated Alice’ among many other works of Martin, I am reminded of that 1910  gem ‘Calculus Made Easy‘ of Silvanus Thompson which was later updated and edited by Martin in 1998. ( I just realized that this classic, a real classic at that, has completed hundred years of its existence!)

Now, what is oh so great about the book? Read the rest of this entry »

(அல்லது)  தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (5/n)

அதாவது, வரலாறு என்பது முதற்சங்கத்துக்கும் முன்னால், பஃறுளியாறு லெமூரியாவில் குமரிக்கண்டத்தில் ஓட ஆரம்பித்தற்கும் முன்னால், ஏன் கல் தோன்றுவதற்கே கூட முன்னால்,  தமிழகமெங்கும் ஓடோதி ஓட்டமாக ஓட்டமெடுத்துக் கொண்டிருந்த ஒரு பண்டமிழ் ஆறு என்பதை அறிக. மேலும், அச்சமயத்திலேயே, நம் முன்னோதிமுந்தைய மூதாதைகளின் பேரரசன் அதிமுற்காலச் சோழன் – ஒன்றரையாம் கபாடபுரம் கண்டாராதித்தன் இமையம் சென்று கோவேறுகழுதைகளைப் பிடித்துக் கொண்டு வந்ததையும் மேலதிகமாக அறிக! (எனக்குப் பிடித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான இமையம் அவர்களை இப்படி உபயோகிப்பதற்கு அவர் என்னை மன்னிப்பாரா?)

சாளரம் #2: பொதுவாக, நமக்கு வரலாற்றறிவு என்பது குறைவு. மிக முக்கியமாக, சமகால வரலாற்றை அவதானிப்பது என்பது இன்னமும் குறைவு.

இவ்வரிசையில், முந்தைய பதிவுகள்: தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ??

-0-0-0-0-0-0-0-0-0-0-

ஏன்  நமக்கு வரலாற்றைப் பற்றிய பிரக்ஞை இல்லையென்றால், நமக்குப் பல முக்கியமான விஷயங்களைப் பற்றிப் புரிந்து கொள்வதற்கோ, தெரிந்து தெளிவதற்கோ சிரத்தையில்லை. நாம் பெரும்பாலும் நுனிப்புல் மேய்பவர்கள் என்பதை தனிப்பட்ட முறையில், நேரடியாக அறிவேன். எப்படியெனில்,  நானும் இந்த நுனிப்புல் மேயும் ஜாதியின் பிரதம அங்கத்தினன் தான் என்பதை மட்டில்லா மகிழ்ச்சியுடன் இங்கு தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன் –  என்ன இருந்தாலும் நானும்  ஒரு தமிழன் தானே! Read the rest of this entry »