(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (18/n)

சாளரம் #10: நம் தமிழர்களுக்கு ‘நாம் vs மற்றவர்கள்’ அல்லது ‘நம்மாள் vs வேற்றாள்’ குறித்த இனம் புரியாத (அதாவது, புரிந்த) அடுக்குப் பிரிவு உணர்ச்சி என்பது மிக, மிக  அதிகம்.

அதாவது இந்த உணர்ச்சி – நம்மையும், மற்றவரையும் அடுக்குப் பிரிவு சார்பாகவே பார்த்து, அது மேல், இது கீழ்  என விரித்து, முத்திரை குத்தி – அதன் மூலமாக விரியும் பிம்பங்களினூடே, அவை மூலமாக மட்டுமே  அதுவும், எந்த மானுட அடிப்படை விழுமியங்களினாலும், அறவுணர்ச்சிகளினாலும் பாதிக்கவேபடாமல்  உலகைப் பார்த்தல். Read the rest of this entry »

நொபெல் பரிசையும் புக்கர் பரிசையும் இணைத்து, அறிவியல்-இலக்கியங்களுக்காகவென நிறுவப்பட்ட மிகப் பிரபலமான நொக்கர் விருதை, பல்லாண்டுகளாக, ஆப்பிரிக்காவிலுள்ள லைபீரியா நாடு அளித்து வருகிறது என்கிற அற்புதமான விஷயம், தமிழகத்தில் பலருக்குத் தெரியாது.

மேலதிகமாக, இவ்விருதைப் பெற்ற புத்தகத்துக்கு லைபீரியா, பெரிய லைப்ரரி ஆர்டர் ஒன்றைக் கொடுக்கும் என்கிற விஷயத்தையும் பல தமிழ்ப் பதிப்பாளர்கள் – ராயல்டி ஏய்க்கும் பதர்கள் – மறைத்து விடுவார்கள், என்பதும் பலருக்குத் தெரியாது.

லைபீரியா-வின் தலை நகர் மன்ரோவியா. இது ஒரு தமிழ்ப் பெயர். ஒரு மன்னர் வரைந்த ஓவியம் போல இந்த நகரம் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நண்பர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் கருதுகிறார். (ஆதாரம்: சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்)

லைபீரியா-வின் தலைநகர் மன்ரோவியா – இது ஒரு தமிழ்ப் பெயர்!!!

ஒரு மன்னர் வரைந்த ஓவியம் போல இந்த மன்ரோவியா நகரம் காட்சியளிப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம் என, எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நண்பரும், அகழ்வாராய்ச்சியாளரும், மேலதிகமாக ஐ.ஏ.எஸ்-ஸுமான ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் கருதுகிறார். (ஆதாரம்: சிந்துவெளியில் தமிழ் ஊர்ப்பெயர்கள்).

ஆர்பா அவர்கள் அவருடைய கட்டுரையில் – தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களான ஆர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி,  பாஷ்யம் ‘சாண்டில்யன்’ அய்யங்கார் போன்றோர்களின் ஆய்வுகளிலிருந்தும், ராஜசிம்ம பல்லவனும் அருண்மொழித் தேவனும் கொள்கைக் கூட்டணி அமைத்து அக்காலத்திலேயே ஆப்பிரிக்கா சென்று குளம் தொட்டு வளம் பெருக்கியதைப் பற்றிப் பேசும் ஜப்பானில் உள்ள கல்வெட்டுகளிலிருந்தும் இந்த லைபீரிய உண்மையைக் கண்டெடுத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் என்பதை நம்பிக்கைக்குரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-0-0-0-0-0-0-0-0-

நிற்க,  நாம் நொக்கர் விருது பற்றித்தானே பேசிக் கொண்டிருந்தோம்? … … சரி. இப்போது ஒரு முக்கியமான விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டும்: கலகத்தமிழ்ப்பிரதிக்காரரான மேதகு சாருநிவேதிதா அவர்களே கூறியிருக்கிறார்கள் – இந்த நொபெல் விருதானது நொபெல் + புக்கர் + கலைமாமணி + பத்மஸ்ரீ + பத்மப்பிரியா  + பத்மநாபன்(வியட்நாம் வீடு) இணைந்து ஒருசேர வழங்கப்படுவதற்கு நிகரானது, என்று.

Read the rest of this entry »

(அல்லது) தமிழர்களாகிய நாம் ஏன் இப்படி இருக்கிறோம்? (17/n)

இந்தத் தலைப்பை, தமிழ் – ஆண்கள் – பலானதின்  நீளம், அதைக்குறித்த அவர்கள் போதாமை என்று  நீங்கள் புரிந்துகொண்டால், அது சரியில்லை என்றாலும், உடனடியாக சாளரம் #3க்குச் செல்லலாம்: சாளரம் #3: தமிழர்கள், தங்கள் ஆண்மை குறித்த தாழ்வுணர்ச்சியால் வாடுபவர்கள் (24/11/2013)

ஆக — கவனம், கவனம்.  இந்தச் சாளரம், வேறு ஒன்றைக் குறித்தது.

சாளரம் #9: பொதுவாக, நம் தமிழர்களுக்கு நீளம் எனும் அளவை சரியாக மேலாண்மை செய்ய முடியாது, தெரியவும் தெரியாது;

இந்தக் கோட்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கு, இந்த ’நீளம்’ எனும் படிமத்தை (வெறும் குறியீட்டை அல்ல), நாம் பல விதங்களில், பல கோணங்களில், பல துறைகளின் ஊடாகப் பார்க்கவேண்டும். இந்தப் பொதுத்தன்மையானது, பண்பாட்டு ரீதியாக நாம் ஒதுக்கிக்கொண்டிருக்கும் சிரத்தை மனப்பான்மையை, ஆகவே வளர்த்துக்கொண்டிருக்கும் அசட்டை/விட்டேற்றி மனப்பான்மையை ஒட்டி உருவாகிறது. Read the rest of this entry »

லிராய் ஜோன்ஸ் (LeRoi Jones) என்னைப் பொறுத்தவரை ஒரு மிக நல்ல கவிஞரும், மிக மிக அழகான அழகியல் சார் இசை விமர்சரும். உலகத்துக்கு அமெரிக்கா கொடுத்த கொடைகளில் ஒருவர் அவர். ‘கறுப்பர் கலைகள்’ (Black(!) Arts(!!)) என்றழைக்கப்படும் 1960களில் இயங்கிய இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் முதன்மையானவர்.

எனக்கு இவருடைய எழுத்துகளின் அறிமுகம் கிடைத்தது, 1978 வாக்கில் என நினைவு – முதலில் படித்தது இவருடைய டட்ச்மேன் எனும், இன்னமும் என் நினைவில் இருக்கும், படு அற்புதமான, நெஞ்சைப் பிழியும் நாடகத்தை; ஆனால், இதன் நாடகமாக்கத்தைப் பார்க்க இன்றுவரை கொடுப்பினை இல்லை. இப்போது யோசித்துப் பார்த்தால், இந்த நாடகத்தின் தமிழாக்கத்தை, தமிழ்ப் பண்பாட்டுடன் பொருத்திப் பார்த்தலைச் செய்தால், லிராய் ஜோன்ஸ்-ன் அரசியல் நகர்வுகளை நோக்கினால் — நமக்கு தலித் இலக்கியம், தலித் கவிதை, தலித் அழகியல் என்றெல்லாம் தேவையற்றுப் பிரித்துப் பேசி, அயோக்கியத்தனமாக நாம் அனைவரும் உளறிக்கொட்டிக் கொண்டிருப்பது தெரியவந்து, நம் தற்காலத் தமிழ்ப் பண்பாட்டுஅரசியலை வெறுக்கவைக்கும்… Read the rest of this entry »

நான், பல காரணங்களுக்காக மிகவும் மதிக்கும் பெரியவர் ஒருவர் (மன்னிக்கவும், இவர் ஒரு பார்ப்பனர் அல்லர்; ஆர்க்காட்டு முதலியார், எண்பது வயதிருக்கலாம்; மணிக்கொடி பற்றிப் பேசிப்பேசியே கழுத்தை அறுப்பவர். இக்காலங்களில் இன்டெர்நெட்டிலேயே ஐக்கியம் ஆகி மாங்குமாங்கென்று படித்துக் கொண்டிருப்பவர்; ஜேஜே: சில குறிப்புகளின் அரவிந்தாட்ச மேனனை நினைவு படுத்துபவர்; தனிமையையும் தமிழையும் விரும்புபவர்; ஆங்கிலத்திலும் புலமை மிக்கவர் அதிகம் பேசாதவர்), ஒரு நீள மின்னஞ்சலில், வருத்தப்பட்டு, கோபத்துடன் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார்; கீழே அதன் சாராம்சம், என்னுடைய  வார்த்தைகளில்:

ஏன் இப்படிச் செய்கிறாய். மற்ற எழுத்தாளர்க ளெல்லாம் பெரும்பாலும் அப்படித்தானே இருக்கிறார்கள். எஸ். ராமகிருஷ்ணன் அவர்களை மட்டும் தனிப்பட்ட முறையில் ஏன் குறி வைத்துத் தாக்குகிறாய், இம்மாதிரி ஆட்களால் தானே, இலக்கியத்தின் பக்கம் மேன்மேலும் மக்கள் ஈர்ப்படைந்து, பின்னர் நல்ல இலக்கியங்களுக்கு அறிமுகமாவர். சுளுக்கெடுப்பது உன் தொழிலா. ஒரு விமலாதித்த மாமல்லன் போதாதா. தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர் கூட கொண்டாடத் தக்கவரில்லையா. நீ ஏன் இப்படி முரடனாக இருக்கிறாய். ஏன் இந்த தேவையற்ற சகதி. அமிலத்தன்மையைக் குறைத்துக் கொண்டால், இன்னமும் நிறைய பேர் படிப்பார்களே…  நல்ல விஷயங்களைப் பற்றி எழுதலாமே. கெட்ட வார்த்தைகளைக் குறைத்துக் கொள்ளலாமே… டட்டடா டட்டடா…

-0-0-0-0-0-0-0-0-0-

அவருக்கு நான் எழுதிய தமிழ் பதிலின், கத்தரிக்கப்பட்ட (சுத்திகரிக்கப்பட்ட, தனிப்பட்ட விவரங்கள் வெட்டப்பட்ட), ஆக, 1/3 ஆகக் குறைக்கப்பட்ட வடிவம்: Read the rest of this entry »

மறப்போமா இவர்களை?

தன் (கஷ்மீரி பண்டிட்) விவசாயக் குடும்பத்தை (லஷ்கரீ-தய்யபா) கொலைவெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு மார்ச் 23, 2003 அன்று பலி கொடுத்து (நந்திமார்க் படுகொலைகள்), பின்பு ‘தான் மட்டும் இறக்கவில்லை’ என்கிற குற்ற உணர்ச்சியால் பைத்தியம் பிடித்தலைந்து ஒரு வருடத்திற்குப் பின் அதே நாள் பாகீரதியில் வீழ்ந்து தன்னை மாய்த்துக்கொண்ட எனது இளம் நண்பன் ராஜீவ் குமார்-ன் நினைவுக்கு, இப்பதிவு சமர்ப்பணம்.

-0-0-0-0-0-0-0-

2001-2002 வாக்கில் நான் பணிபுரிந்து கொண்டிருந்த நிறுவனத்திற்காக, இளம் பொறியியலாளர்களை, மேலாண்மைக்காரர்களை, மனிதவளமேம்பாட்டுக் காரர்களை தேர்வு செய்வதற்காக, அதுவும் தரமான முஸ்லீம் இளைஞர்களை குறைந்த பட்சம் 80%-ஆவது சேர்த்துக் கொள்ளவேண்டுமென்று திட்டம் போட்டு,  ஜாமியா மிலியா இஸ்லாமியா, ஜாமியா மிலியா ஹம்தர்த், ஜேஎன்யு என்றெல்லாம் டெல்லியில் சில மாதங்கள் வெறிபோலச் சுற்றிக் கொண்டிருந்தேன். Read the rest of this entry »

இப்பதிவைப் படிக்கப்போகும் நீங்கள்,  ஒரு புலவராகவோ, கவிஞராகவோ, திரைப்படப் பாடலாசிரியராகவோ அல்லது இன்னபிற விசித்திர  ஜந்துவாகவோ இருந்தால், உங்கள் மனம் வீணாகப் புண்படக் கூடாது என்று தோன்றினால், தயவு செய்து மேலே படித்துத் துன்புறவும். இது முக்கியம். தற்காலத் தமிழப் பண்பாட்டின் படி, தான் எதையாவது கந்தறகோளமாகச் செய்து அதற்கு ஏதாவது எதிர்மறை எதிர்வினை வந்தால் அதனை நினைத்து உடனுக்குடன் புண்பட்டு, ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடி, கண்டீரா – என்னைப் பற்றி, என்ன சொல்லிவிட்டான் இவன் என அழுது புரண்டு, ஆதூரமாக நாலு வார்த்தை எவனாவது சொல்லமாட்டானா என்று ஓரக்கண்ணால் பார்த்து, மூக்கிலிருந்து ஒழுகும் சளியை நக்கிக்கொண்டு அய்யோ உப்புக் கரிக்கிறதே என்றலைவது மிக மிக  முக்கியம்.

ஆம். எனக்குத் தெரியும், எவ்வளவு அயோக்கியர்கள்  புண்படுத்தியிருக்கிறார்கள் என்னை, அற்பர்கள்.  ஆனால், மார்கழிக்குளிர் முடிந்தும், மகரராசியில் புகுந்தும் – சளி, சனியன் போகவே மாட்டேனென்கிறது. ஆகவே, இக்காலங்களின் உணவிற்கான உப்பை மிகக் குறைவாகவே வாங்குகிறோம். Read the rest of this entry »