மோதி, அயோத்தி ராம் மந்திர், தேர்தல் அறிக்கை, ஸெய்ன்ட் தாமஸ், குளுவான்கள், எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள்: சில குறிப்புகள்

20/04/2014

‘ராஜ்’ என்பவர் தன்னுடைய பின்னூட்டத்தில் எழுதியிருப்பதன் தமிழ்வடிவ சாராம்சம்:

மோதி ஒரு நல்ல நிர்வாகி என்பதையோ, குஜராத்தின் வளர்ச்சி பற்றியோ நான் சந்தேகப் படவில்லை. எனக்கு, பாஜக ஆட்சிக்கு வருவதில் ஒப்புதலிருந்தாலும் ஒரு பிரச்சினை.

நமக்கு ராம் மந்திர் தேவையா? இதன் காரணத்தால் எவ்வளவோ இறப்புகள் நிகழ்ந்துவிட்டனவே! பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் ராம் மந்திர் பற்றி சொல்வது கொஞ்சம் கவலைதருவதுதானே? மோதி இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பாரா?

அன்புள்ள ‘ராஜ்,’

நான் பாஜக அங்கத்தினன் அல்லன்.  மேலும், மோதி-யின் மனம் எப்படி வேலைசெய்யலாம் என்பதை என்னால் அனுமானிக்க மட்டுமே முடியும். ஆனாலும் பலபத்தாண்டுகளாக இக்கட்சியை(யும்) ஊன்றிக் கவனித்து வருபவன், சில நேர்மை+செயலூக்கம் கொண்ட பாஜக-வினரை நேரடியாக அறிந்துள்ளவன் என்கிற முறையில் என் கருத்துகள்:

 • பாஜக கட்சி என்பது ஒரு ஒருமைவாத, ஒற்றைக்குறிக்கோளினால் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியாக இல்லை. அதில் பல போக்குகள், பார்வைகள், பிரிவுகள் இருக்கின்றன. அக்கட்சியில் ஒரு பிரிவுக்கு, ராம் மந்திர் தேவை. ஆனால், பல பிரிவுகளுக்கு அது ஒரு பொருட்படுத்தத்தக்க விஷயமாக இருந்தாலும், இப்போது அது ஒரு தேவையற்ற விஷயம்.

 • ஏனெனில் பாஜகவுக்கும் தெரியும் – ஏப்படியும், ஊடகப் பப்பரப்பாக்களால் இந்த அயோத்யா குழப்பத்தில் மகாமகோ விஷம் கலக்கப் பட்டுவிட்டது. ஆக, தொடர்ந்து வலுவுடன் – ஊடகங்களின் சகல சாத்தியக் கூறுகளையும் உபயோகித்துக் கொண்டு மக்களிடம் ஊட்டப்பட்ட பொதுப்புத்தியின்மையை எதிர்த்து – தொடர்ந்து உரையாடி உண்மை நிலவரங்களை நிலைநாட்டுவது என்பது சுலபத்தில் முடியாது, என்பதை.  மேலும் அவர்களுக்குத் தெரியும்: ஒரு பெரும் இந்திய இளைஞர் திரள், சீரான வளர்ச்சியை நோக்கிய ஆர்வமிக்க சமூகக் கட்டமைப்பு,  மேலெழும்பிக் கொண்டிருக்கிறது என்று; இத்திரளுக்கு,   பழைய சச்சரவுகளைத் தொடர்ந்து அர்த்தமில்லாமல் பேசிக் கொண்டிருப்பதில் விருப்பமில்லை என்பதும். மேலும், மிக முக்கியமாக,  இந்த இளைஞர்களை வைத்துக்கொண்டுதான் இந்தியாவையும் தம் கட்சியையும் செறிவு படுத்தமுடியுமென்பதும்.
 •  ஆக, சுயபரிசீலனைகள் தொடர்ந்து நடந்துகொண்டு, பாதையைச் சீரமைத்துக்கொண்டு மேலெழும்பி – காங்க்ரெஸ் கட்சிக்கு ஒரு மாற்றாக (அதனை ஒழித்து அல்ல; காங்க்ரெஸ் கட்சியில் இன்னமும் பல நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்!), இந்தியப் பரப்பு முழுவதும், கட்சியில், நிர்வாகத்தில் புதிய இளைஞ ரத்தத்தைப் பாய்ச்சி எழும்புவதே அக்கட்சியின் குறிக்கோள்.
 • காங்க்ரெஸ், திமுக, அதிமுக இத்யாதிகளான இக்காலக் கட்சிகளைவிட (=கட்சிகள் போலல்லாமல்) உட்கட்சி ஜனநாயகம் மிகுந்த கட்சிதான் பாஜக. இதில் சமரசம் என்பது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் விஷயம். ஆக, தொலை நோக்குப் பார்வையில் செயல்பாடுகள் கட்டமைத்துக் கொள்ளப் படும் சாத்தியக் கூறுகள் இக்கட்சியில் அதிகம்; ஆகவே,  இந்த ராம் மந்திர் விஷயம் – ஊடகங்களால் ஊதப்பட்டு பெருக்கப் பட்டு – சில பாஜகவினராலும் கூட ஒரு பெரிய விஷயமாக, கௌரவப் பிரச்சினையாகப் பார்க்கப் படும் காலமும் மாறும்.  இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியர்களைப் பொறுத்தவரை – அக்கால வரலாற்று அவமானங்களைப் பற்றி நினைத்துக்கொண்டு புழுங்குவதற்கு மாறாக, இக்கால அவமானங்களான – அம்மணி ஸோனியா சக்ரவர்த்தினியார், அய்யா டாக்டரார் கலைஞரார் – போன்ற அழுக்குகளைத் துடைக்க முயன்றால் அதுவே போதுமானது. இதற்கு, நாம் நம் வரலாற்றினை முற்றிலும் வறட்டுவாதத்துடன் மறுதலிக்காமல் அதிலிருந்து ஏற்கவேண்டிய பாடங்களை ஏற்று, நம்மைத் தொடர்ந்து உயர்த்திக் கொள்ள வேண்டும். இனிமேல் என்ன செய்யவேண்டும் என்பதை யோசித்துத் திட்டமிட்டு, துப்புறவாகச் செய்யவேண்டும்.
 • சரி. மோதி-யைப் பொறுத்தவரை, பலருக்கும் இது தெரியாவிட்டாலும் – பரந்துபட்ட முன்னேற்றத்துக்குக் குறுக்கே ஹிந்துவோ, முஸ்லீமோ அல்லது அவருடைய கட்சியினரேகூட வந்தால், அவர்களின் எதிர்ப்பைக் கடாசிவிட்டு, பல சமயங்களில் நேரடித்தனத்துடன், வைராக்கியத்துடன் நடந்து கொண்டிருக்கிறார். அதனாலும்தான் அவருக்குத் தன் கட்சியிலேயே சிலருடைய எதிர்ப்பு இருக்கிறது. ஆக, என்னுடைய நம்பிக்கை என்னவென்றால் – கைதேர்ந்த அரசியல்வாதியாகிய அவர், சமரசப் பார்வையுடன், வைராக்கியத்துடன் – தேசத்துக்கு நல்லது எது, நீண்ட நெடிய நோக்கில் எது சரியாகவரும் என்பதைச் சிந்தித்துச் செய்வார், மக்கள் திரள்களை அரவணைத்துச் செல்வார் என்பதுதான்.
 • எப்படியும், மோதி அவர்கள் எதுபற்றியும் எப்படிப் பேசினாலும் இந்த ((மெக்காலே+மார்க்ஸ்)/2)வாதிகள் அதனைக் கண்டமேனிக்கும் திரித்து, பொய்களை பரப்போதிபரப்புச் செய்துவிடுகிறார்கள் – ஆக, நுணுக்கமான பிரச்சினைகள் தொடர்பான விஷயங்களில் அவர் கருத்துகள் சொல்வதேயில்லை. அப்படிப் பேசாமலிருந்தாலும் அவர் குள்ளநரித்தனம் மிக்கவர், அமுக்கமாக இருக்கும் சதிகாரர் என்கிறார்கள் இந்தப் பேடிகள். ஆனால், அவருக்குப் பல விஷயங்கள் பற்றித் தெளிவோ, கருத்துகளோ, செயலூக்கமோ இல்லாமலில்லை. ஆக காலச்சக்கரம் நிச்சயம் சுழலும், மாற்றங்களை உருவாக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பார்க்கலாம்.
 • இன்னொன்று: எப்படியும் பாஜக-வின் அறிக்கை என்பது ஒரு முக்கியமான விஷயமாக இருந்தாலும் – ஒருங்கிணைந்த தேசிய ஜன நாயக முன்னணியின் திட்டம் என்பது பல வெளிப்படையான சமரசங்களுக்கும் உட்பட்டதாக இருக்கும். மோதி அவர்களால் பிரதமராக முடிந்தால், சரியான சமரசங்களைத் தேர்வு செய்வார் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஏனெனில் அவரிடம் வசீகரமும், அதன் பின் மகத்தான உழைப்பும், அறிவுக் கூர்மையும் உள்ளன.
 • என்னுடைய கருத்து: நான் நாஸ்திகன். ஆனால், ஒரு அற்பப்போலி வறட்டுவாதக்காரன் (=பகுத்தறிவுப் பெரியார்க்காரன்) அல்லன். எனக்கு நாஸ்திகம் இணக்கமாக இருப்பது போல, பிறருக்கு ஆஸ்திகம் இணக்கமாக இருக்கலாம் என்பதை உணர்ந்தவன். ஒவ்வொருவருக்கும் அவர்களின் பின்புலங்களை, அனுபவங்களை, எண்ணங்களைப் பொறுத்துப் பார்வைகள் அமைகின்றன என்பதையும் அறிந்தவன். ஆகவே, அனாதிகாலம் தொட்டு வளர்க்கப் பட்டிருக்கும் குறியீடுகளுக்கும், உருவகங்களுக்கும், தொன்மங்களுக்கும் மானுட மனத்துக்கும் உள்ள இன்றியமையாத தொடர்புச் செறிவுகளை, தொடர்ந்து ஆச்சரியமாக அறிந்துகொள்ள முயற்சிப்பவன். மஹாபாரதத்திலும் கம்பராமாயணத்திலும் சொக்கிப் போயிருப்பவன். சில பிறமதம் சார்ந்த புத்தகங்களையும் குறிப்பெடுத்துக்கொண்டு படித்திருப்பவன்.
 • அதேசமயம், கடந்தெடுத்த அற்பர்களான ((மெக்காலே+மார்க்ஸ்)/2) ‘இந்திய ப்ரான்ட்’ அக்மார்க் இடதுசாரி_மனிதவுரிமை_அறிவுஜீவியப் பார்வைகளையும் —  ஒரு எழவையும் புரிந்துகொள்ளாமல், முன்னவர்களிடம் கடன்வாங்கி, நம்முடைய தட்டச்சுப் போராளிக் குளுவான்கள் கண்டமேனிக்கும் அடித்துவிடும் அலப்பரைகளையும்  அதே ஆச்சரியத்துடன் பார்ப்பவன். இவர்களைத் தொடர்ந்து, முடிந்தபோதெல்லாம் குயுக்தியுடன் கவனித்துக் கொண்டிருப்பவன். (மனிதனுக்கு வாழ்க்கையில் கொஞ்சம் நகைச்சுவை எண்ணங்களும் வேண்டுமல்லவா?)
 • சரி. என்னுடைய பணிவான பரிந்துரை: என்னைப் பொறுத்தவரை இந்த ராம் மந்திர்-ஐ இணக்கத்துடன் மந்திர்-மஸ்ஜித் வளாகமாக மாற்றி – மேலதிகமாக முடிந்தால் —

‘வேல் தாங்கிய இந்துவெறி ஆர்எஸ்எஸ் காக்கிடவுசர் மயிலைப் பார்ப்பனர்களால் விரட்டப்பட்ட ஸெய்ன்ட் தாமஸ் அவர்கள், முன்னமே 19ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டபடி மயிலாப்பூரிலிருந்து பரங்கிமலைக்கு ரத்தம் சொட்டச்சொட்ட 1ஆம் நூற்றாண்டிலேயே ஓடுவதற்குப் பதிலாக, வழிதவறி,   காடுமலைகளை நிற்காமல் தாண்டி (ஏனெனில் நடுவில்தான் அந்த கேடுகெட்ட மாவோயிஸ்ட் பாவிகள் இருக்கிறார்களே!) அயோத்யா போய்ச் சேர்ந்தார் – அங்கும் திரிசூலம் தாங்கிய ஸாகேதப் பார்ப்பனர்களால் சரமாரியாகத் குத்தப்பட்டார் – பின்னர் திரும்ப மூச்சிறைக்க, ரத்தம் பீறிட, நிற்காமல், சோறுதண்ணியோ அப்பமோயில்லாமல் வடதுருவம் வழியாகச் சுற்றியோடித் தென் துருவத்தை அமெரிக்கா வழியாக ஓடியடைந்து பெருங்கடல்களை நீந்திக் கடந்து, மில்லியன் வருடக்கணக்கிற்கு முன் காலயந்திரத்தில் பயணம் செய்து,  லெமூரியாக் கண்டம் வழியாக பஃறுளியாற்றை ஒரே தாண்டாகத் தாண்டி,  தமிழகக் கரையேறி நிற்காமல் தொடர்ந்து ஓடி,  போகிற போக்கில் திருவள்ளுவருக்குப் பயபீதி அளித்து,  செல்லும் வழியில் 20ஆம் நூற்றாண்டின் அளப்பறிந்த திரைக்கதை எழுத்தாளர்கள் ஜான் சாமியலுக்கும் மு. தெய்வநாயகத்துக்கும் சலாம் வைத்துவிட்டு, மறுபடியும் 1ஆம் நூற்றாண்டுக்குப் பறந்துசென்று அடையாறு எனும் புண்ணிய நதிதீரத்தில் உள்ள புனிதமலையாம் பரங்கிமலை வந்துசேர்ந்து ஒரு வழியாகப் போய்ச் சேர்ந்தார்! ஆகவே இந்த தாமஸ் தான் உலகின் முதலாம் ‘இந்து அடிப்படைவெறிவாத’ எதிரி; ஆமென்!’

[ஆதாரம்: திருவள்ளுவரைக் கொலை செய்தது யார்? ஏன்?? (ஒரு γ ரே ரிப்போர்ட்) ]

… … எனும் புதிய, செழுமையாக்கப்பட்ட தொன்மத்தைப் புகுத்தி,  மத நல்லிணக்கத்துக்காக இதனை விரித்து மந்திர் – மஸ்ஜித் – மடாலய வளாகம் எனப் பார்க்கலாம்.

 • இதைத் தவிர கௌதம புத்தரும் இங்கே வந்திருக்கிறார் எனத் தொன்மங்கள்/செய்திகள் இருக்கின்றன. ஆக, இந்த வளாகத்தை விரித்து மந்திர் – மஸ்ஜித் – மடாலய – மஹாயான வளாகம் என மாற்றலாம்.
 • இதற்குப் பின் திராவிடக் குளுவான்களையும் சமரசப் படுத்தவேண்டுமல்லவா? அதனால் இதனை மந்திர் – மஸ்ஜித் – மடாலய – மஹாயான – மங்காத்தா வளாகம் என்று மாற்றினால் பிரச்சினை தீர்ந்தது. என்ன சொல்கிறீர்கள்?
 • அய்யய்யோ! நான் ஒன்றை மறந்துவிட்டேன்!! நம் கயமை நிரம்பிய திராவிடத் தமிழர்களின், ஸ்ரீலங்கா தமிழர்களுக்கான வாய்ச்சவடால் ஆதரவிற்கும் ஏதுவாக இந்த வளாகத்தை – மந்திர் – மஸ்ஜித் – மடாலய – மஹாயான – மங்காத்தா – மட்டக்களப்பு அருங்காட்சியகம்+வழிபாட்டுத்தலமாக மாற்றி,  அதற்குள் இந்திய தேசிய விலங்காம் பாவப்பட்ட தறுதலைப் புலி-யின் சிலை ஒன்றையும் வைத்து விட்டால் … …. … தமிழகத்தின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும், என்ன சொல்கிறீர்கள்? :-(

-0-0-0-0-0-

இக்காலங்களில் – அரவிந்த கெஜ்ரிவாலறிவனார், ராஹுல ஸ்வயம்க்ருத அனர்த்த காந்தியார், முலயம் சிங்கனார், லாலுபிரசாதார்,  அம்மையார்கள்,  நிதிஷ்குமாராதிகள் போன்ற ஜந்துக்களெல்லாம் ( நம் கருணாநிதி அவர்களைத் தவிர! ஆச்சரியம் ஆச்சரியம்!!) பிரதமராக ஆசைப்பட்டு பவனிவரும் காலங்களில் — மோதி அவர்களுக்கு வேறு மாற்று இல்லை எனும் (=relative merit)  வாதத்தை விட, என்னைப் பொறுத்தவரை மோதி அவர்களிடம்,  தனிப்பட்ட கல்யாணகுணங்கள் பல (=absolute merit) இருக்கின்றன – ஆக தன்னளவிலேயேகூட அவர் முக்கியத்துவம் படைத்தவர், மரியாதைக்குரியவர் எனும் வாதத்துக்கு –  பல உரையாடல்களினாலும், படித்தல்களினானும், அனுபவங்களாலும், நாம் மிகவும்  மதிப்பவர்களின் கருத்துகளினாலும் வந்து கொண்டிருக்கிறேன்.  இது என் முடிவு.

ஆகவே, மோதி.

நரேந்த்ர மோதி! பதிவுகள்…

Advertisements

4 Responses to “மோதி, அயோத்தி ராம் மந்திர், தேர்தல் அறிக்கை, ஸெய்ன்ட் தாமஸ், குளுவான்கள், எதிர்காலம் குறித்த நம்பிக்கைகள்: சில குறிப்புகள்”

 1. Raj Says:

  அன்புள்ள ராம்,
  மிக விரிவான பதிலுக்கு நன்றி :)

  இந்த கேள்வி , இன்னும் பலபேருக்கு இருக்கும்னு நினைக்கிறேன் …உங்கள் விரிவான பதில் அதுக்கு உதவும்.

  நிற்க. தற்போது பலதரப்பட்ட குழுக்கள் மோதி அவர்கள சப்போர்ட் பண்றத பார்க்கிறேன். நீங்க நாட்டின் முன்னேற்றத்தை பத்தி நினைக்கிற இளைஞர் ;) குழுவில் இருக்குறீங்க. அதே சமயம் , “மோதிய நான் சப்போர்ட் பண்றேன் என்னா அவர் எங்க ஆளு. எங்க ஆளுங்கள எப்போதும் சப்போர்ட் பண்ணுவார்னு” சொல்ற குழுவும் உள்ளது. அவர் வந்தா கோவில் கட்டலாம்னு நெனக்கிற குழுவும் உள்ளது.

  மோதி அவர்களுக்கு நாம் ஒட்டு போடுவது முன்னேற்றத்திற்கு மட்டும்தானே ஒழிய கோவில் கட்ட அல்ல என்பது தெளிவாக புரிய வேண்டும். நல்லதே நடக்கட்டும்.

 2. சரவணன் Says:

  அதே தேர்தல் அறிக்கையில் பசுப்பாதுகாப்பு பற்றிக்கூட உள்ளது. ஏன், பசு மாடு (மட்டும்; காளை அல்ல) அழிந்துவரும் உயிரினம் ஆகிவிட்டதா? மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா இப்போது வேகமாக முன்னேறி வருகிறது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியாவை உலகில் முதல் நாடாக்க என்ன செய்வோம் என்று சொல்லியிருந்தால் அர்த்தம் இருந்திருக்கும்! ஏன் பசுப்பாதுகாப்பு பற்றிப் பேசுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

  • SureshKumar Says:

   Cows are considered sacred for Hindus. Just to oppose Modi please dont argue.. Touch your heart and answer yourselves -do you want to kill a domestic creature and earn money.

 3. nparamasivam1951 Says:

  ஆம். மோதி தான்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: