பயிர் வட்டங்கள் என்று உடும்புத்தைலவாதிகளால் அழைக்கப்படும் ‘crop circles’ளின் உள்ளே பயிர் இருக்காது. இதைப் பயிரற்ற வட்டங்கள் என்றுதான் அழைக்க வேண்டும். ஆனால் வெள்ளைக்கார முட்டாள்கள் இவற்றை இப்படித்தான் அழைக்கிறார்கள். ஆகவே நாமும் அவர்களை வாழ்த்தி, வணங்கி மகிழ்ந்து அவர்கள் காலடியில் விழுந்து புரண்டு – இந்தியாவில் ஒரு எழவு ‘பயிர் வட்டமு’ம் இல்லாத போதிலும் பயிர் வட்டம் பற்றி கப்ஸாக்களை,  படு ஸீரியஸாக விடுகிறோம். இம்மாதிரி விஷயங்களைப் பதிப்பிப்பதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள்!

ஆனால் — அதேபோல மயிர் வட்டங்கள் என்பவையும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துதெளிந்தோமில்லை! இவை பெரும்பாலும் வயதான ஆண்களின் உச்சந்தலைக்கும் பிடரிக்கும் நடுவில் திடுக்கிடும் வகையில், புரிந்துகொள்ளவே முடியாத வகையில், திகைக்கவைத்து விக்கித்துப் போக உதிக்கும் தலைமயிரில்லாத பகுதிகள் –  அதாவது, இதனைப் படிக்கும் நீங்கள் ஆணாக இருந்து – உங்கள் வயது 45க்கு மேலான பட்சத்தில், உங்கள் பின்னந்தலையை யோசிப்பது போல் தடவிப் பார்த்தால் கொஞ்சம் வழுக்கும் பகுதிகள்தாம் இவை; ஆனால், ஒரு ஆணுக்கு ஒன்று என்று மட்டுமே, அம்மா இலவச வழுக்கைத் திட்டத்தின்படி அளிக்கப்படுவது இது. ஆகவே ஒன்று வாங்கினால் இன்னொன்றும் ஃப்ரீ எனக் கிடந்து ஞமலிபோல அலையவேண்டாம்.  மேலும், உங்கள் மண்டையில் ஒரு ஓளி வட்டத்திற்குத்தான் இடம். இன்னொன்று வந்தால்,  கொஞ்சம் – ரிஃப்லெக்டர் என்பதற்குப் பதிலாக இரு ஹெட் லைட்டுகள் போலக் கண்றாவியாகக் காட்சியளிக்கும் என்பதை மனதில் கொள்ளவும். உங்கள் பின்னால் அணிதிரண்டு ஆர்பரித்து வருபவர்கள் – கெக்கலி கொட்டிக் கண்கூசச் சிரிப்பார்கள் என்பதை உணரவும். Read the rest of this entry »

இந்த மங்கோலியச் சாகசப் பயணத்தின் முதல்பகுதியைப் படித்தால், இந்த இரண்டாம் பாகம் மேலதிகமாகப் புரியாமல் போகலாம்.

… சரி. நான் முன்னமே சொன்னது போல, என் துணைவியாருக்கு சந்தோஷத்தைத் தந்துகொண்டு என் மங்கோலியப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன்…

விமான நிலையத்தின் பாதுகாப்புச் சோதனைகளில் மறுபடியும் மறுபடியும் என் பெட்டியைத் திறக்கச் சொல்லிப் பார்த்தவண்ணம் இருந்தனர் – ஏனெனில், அந்த பரிசோதக முட்டாள்கள், என்னுடைய புத்தகக் கட்டுகளை ஒரு நூதன வெடிகுண்டு என நினைத்துவிட்டனர் போலும். அல்லது, ஒருகால்,  என் புத்தகங்களின் பின் அட்டைகளில் என் மகாமகோ தொப்பையுடனான குண்டுப் படத்தைப் பார்த்து, அவை குண்டு தயாரிப்புக் கையேடுகள் என நினைத்துவிட்டனரோ? Read the rest of this entry »

ஷிவ் விஸ்வநாதன் அவர்களை நான் பலபத்தாண்டுகளாக, ஏறக்குறைய அவர் எழுதுவதையெல்லாம் படித்து வந்திருக்கிறேன் என்கிற முறையில் – நான் தயங்காமல் சொல்வேன் – அவர் ஒரு பிரகாசிப்பு மிகுந்த சமூகஅறிவியல்சார் சிந்தனையாளர் மட்டுமல்லாமல், அழகான பல திடமான ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியிருப்பவர்.

மேலும் – அவருடைய சில மாணவர்களின் கருத்தை ஒட்டி எழுதினால் – அவர் ஒரு செய்நேர்த்திமிக்க மாயாஜால ஆசிரியர் – அதாவது கருத்து-பண்பாட்டுப் புலங்களில் குறுக்காகவும் நெடுக்காகவும் புகுந்து அழகான கதைகளையும், கருதுகோள்களையும் நெய்யும் திறன் படைத்தவர். அவர் மாணவர்களை, தன் அறிவாற்றலின் வசீகரத்தால், அவர் ஒரு பாம்பாட்டி போல ஆட்டுவித்தார் (ஆட்டுவிக்கிறார்?) என்பது எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும் விஷயம்! Read the rest of this entry »

நெடுநாட்களாக, குறிப்பாக 2011லேயே இணையத்தில் பிரபலமாக இருந்த நான், ஒத்திசைவு இணையதளம் மூலமாக எழுதவந்து மேலும் உலகப் புகழ் பெறுவதற்கு முன்பிலிருந்தே – ஒரு வாசகர் குழு ஆரம்பித்து என் கொள்கைகளைப் பரப்ப வேண்டும் என்று என்னுடைய தேர்ந்த வாசகர்கள் கருதி எனக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர்.  எனக்கு இந்த விஷயம் எல்லாம் ஒத்துவராது என்று கருதினாலும், கடந்த மூன்று வருடங்களாக அவர்களே கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள், க்ரேக்க மொழி உட்பட நான் எழுதியுள்ள கட்டுரைகளை அலசுகிறார்கள். நான் எழுதியுள்ள பல புத்தகங்களை எனக்கு அறிமுகப் படுத்துகிறார்கள். படுத்துகிறார்கள். என்னுடைய செல்லமான களைஞர் அவர்களைக் களைந்து வேகவைக்கிறார்கள்.  ஐன்ஷ்டீன் சொன்னவற்றை நான் சொன்னதுபோல, இசையில் விற்பன்னன், ஞானாசிரியன் போலவெல்லாம் எழுதுகிறார்கள் – எனக்கு இதில் பிரச்சினையில்லை – ஏதோ தமிழர்களுக்கு ஞானம் வளர்ந்து, சார்பு நிலைத் தத்துவம், இசை பற்றியெல்லாம் புரிதல்கள் ஏற்பட்டால் சரி! தமிழனுக்கு ஏதோ என்னாலான உபகாரம்.

இதுதொடர்பான அப்போதைய பிரச்சினையென்னவென்றால்,  என் வாசகர்கள் குழுவிற்கு ஒரு லோகோ, ஒரு நல்ல பெயர் வைக்கவேண்டுமாக இருந்தது.  வாசகர் வட்டம் என்றால் தட்டையாகவும், சகல பக்கங்களிலும் மொண்ணையாகவும் இருக்கும்; பிடிபடாமல் வழுக்கிக் கொண்டேயிருக்கும். வாசகர் சதுரம் என்றாலும் தட்டை; பட்டம் தறிகெட்டுப் பறப்பது போன்ற தோற்றம். இவை இரண்டும் முப்பரிமாணமற்றவை.  குழுமம் என்று சொன்னால் – ஏதோ கேப்பங்கூழினை  ‘மம்மம்’ என்று சொல்லி குழந்தைகளுக்குத் தாய்மார்கள் ஊட்டிவிடுவது போன்ற வழவழா கொழகொழா தோற்றம். ஒரே பிரச்சினை!  எனக்கு, பெயருக்கு அப்பால் –  நான் எழுதிஎழுதி,  லோகத்துக்கு அருள் பாலிக்கும் திறனையும் அந்த பெயரும், லோகோவும் வெளிக்கொணர வேண்டும். பரந்துபட்ட எம் தமிழ் மக்களுக்கு, எளிதாகவும் பிடிபடவேண்டும்.  ஆக, யோசித்து, யோசித்து…

… இப்படி, என்னுடைய வாசகர்களே ஒன்றுசேர்ந்து ஒருங்கிணைத்துக் கொண்டு நடத்தும் குழுவை  ‘ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்  நற்பணி இயக்கம்’ எனப் பெயர் சூட்டினார்கள், சூட்டிகையான சூடிக் கெடுத்த சுடற்கேடிகள்.

ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்; 20 பக்கங்கள் - முப்பது விளிம்புகள் - 20 கூர்முனைகள்; இது சாதா வட்டம், சதுரம், குழுமம் போன்றதல்லை. இது ஒரு முக்கியமான ப்லேடோனிக் திடமம். இதற்குள்ளே நான் உறைந்திருப்பேன், பல பக்கங்களையும், குத்தும் கூர்மையையும், விளிம்பு நிலை மனிதத்துவங்களையும் உள்ளடக்கி, உலகத்தை ரெமிமார்ட்டினூடே பார்த்து, கொழுப்பெடுத்துக் கொழுப்புகள் பலவகை உண்டு, தொப்பை மிகுந்து விக்கல்களையும் ஏப்பங்களையும் இன்னபிற வாயுத்தொல்லைகளையும் பகிர்ந்துகொள்வதே குறிக்கோள்.  இணைவதற்கு / மேலதிக விவரங்களுக்கு அணுகவும்.

ராமசாமி வாசகர் ஐகஸஹெட்ரன்; லோகோ!

Read the rest of this entry »

அய்யய்யோ! மோதி பிரதமராக உள்ள அரசின் பிரமாதமான முதல் சாதனையாக — — ஒரு பக்கம்,  ஓமர் அப்துல்லா + கிரீஷ் கர்னாட் + யுஆர் அனந்தமூர்த்தி + லாலு பிரசாத் யாதவ் + மல்லிகா சாராபாய் + தேவ கௌடா போன்றவர்களெல்லாம்,  அவர்கள் சத்தியம் செய்ததுபோல், இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு — நாளைக்கே அமெரிக்காவிலேயோ அல்லது வேறேதாவது எழவிலேயோ போய் நிரந்தரமாகத் தங்கிவிட முயற்சி செய்யப் போகிறார்களே என்று நான் வருத்தத்துடன் ஆனந்தத்தில், கதனகுதூகலத்தில் மூழ்கிக் கொண்டிருக்கும் தருணத்தில்…

… இன்னொரு பக்கம்,  பாவம், மோதியின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி குறிப்பிடத் தகுந்த வெற்றி பெற்றதற்குப் பின் – பலரும் தொழில்முறை அறிவுரைக்காரர்களாக மாறி விட்டார்கள். இத்தனை நாள் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் – இப்போது பிரதம மந்திரி ஆகப் போகிறாய் அல்லவா? உடனே விலைவாசியை அடக்கு, தீவிரவாதத்தை அடக்கு, என  அடக்குஅடக்கு என்று துடிக்கிறார்கள்…  ஆக்கபூர்வமான அறிவுரைகளை அளித்தே தீருவேன் என்கிறார்கள். Read the rest of this entry »

(அல்லது) கோத்ரா, தீர்ப்பு, என்னுடைய முயற்சிகள்: சில குறிப்புகள்

மேலே படிப்பதற்குப் பின்புலமாக நீங்கள் என்னுடைய முந்தைய பதிவை (அதன் பாவப்பட்ட பின்னூட்டங்களுடன்) படித்தால் நலம். படிக்காவிட்டாலும் ஒரளவு புரியலாம். (

குஜராத் பற்றி பீலா விடுவது எப்படி? (=ஹர்ஷ் மந்தர், தீஸ்தா ஸெதல்வாத், அருந்ததிராய் போன்றவர்களிடம் கற்றுக்கொண்டு, மேற்கொண்டு நம் தமிழ்க் குளுவான்கள் மசாலா சேர்ப்பது எவ்வாறு? கோத்ரா ரயிலெரிப்புக் கொலைகள்: திரித்தல்களும், அற்பத்தனங்களும்…

வெங்கடேசன் அவர்கள், தன்னுடைய பின்னூட்டங்களில் கீழ்கண்ட கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார்: ஒன்று, இரண்டு. இவற்றில் இரண்டாவதற்கு இந்த பதில்.

அன்புள்ள வெங்கடேசன்:

உங்கள் கரிசனத்துக்கும் – உண்மை என்னவாக இருந்திருக்கலாம் எனும் சிந்தனைகளுக்கும் நன்றி. எனக்குத் தெரிந்து பல மனிதர்கள் இப்படி இல்லை.

  • நான், அம்மணி தீஸ்தா ஸெதல்வாத் தளத்திலிருந்த பொதுத் தீர்ப்பைப் படிக்கவில்லை. அவர் மேல் எனக்கு துளிக்கூட நம்பிக்கையில்லை; ஏனெனில் தரவுகள் சார்ந்து அவரை ஒரு பண/கருத்து மோசடிப் பேர்வழியாகக் கருதுகிறேன். அதே சமயம் பல வடிவங்களை ஒருங்கிணைத்து எது சரி எதில் என்ன பாடபேதம் என்று ஆராயவேண்டிய அளவு, போயும்போயும் தீஸ்தாக்கள் மேல் நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை – ஏன், உங்களுக்குமே இல்லை — என்பதுதான் என் எண்ணம். மேலும் வெறும் கூக்ல் மூலமாக, மௌஸை உருட்டி இணையத்தில் கிடைக்கும் சத்தற்ற செய்திகளை நான் உடனே நம்பி விடுவதில்லை. என் பயிற்சியும் அனுபவங்களும் (healthy skepticism) அப்படி என்னை ஆக்கிவிட்டிருக்கின்றன. ஆம். இன்டெர்நெட்டித்யேவ நஸாது ஸர்வம். :-( காளிதாஸன் எப்போதுமே காப்பாற்றிவிடுவான்! :-)

Read the rest of this entry »

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
—  (திருக்குறள்(அறத்துப்பால்(வாய்மை)))

அதாகப்பட்டது:  மனதாறத் தெரிந்தே, அண்டப்புளுகுணி மாங்கொட்டையாக இருப்பவர்களை அவர்களுடைய மனச்சாட்சியே சுட்டுவிடும் என்று  திருக்குறள் நீதிபோதனையாகச் சொன்னாலும் – என்னைப் பொறுத்தவரை, எனக்குத் தெரியவந்த மாங்கொட்டைகளை, எனக்கு நேரமும் பொறுமையும் (=பொறுமையின்மை) இருந்தால் நானே சுட்டுவிடுவது வழக்கம்; ஏனெனில் பலருக்கு மனச்சாட்சியே இல்லை. இது ஒரு பிரத்தியட்ச உண்மை.

சரி. Read the rest of this entry »