கருணாநிதி அவர்களின், சொந்த திமுகழகம் பற்றிய அவருடைய கோப விமர்சனம்! (ஆச்சரியமாக இருக்கிறதா?)

02/12/2014

நான் நினைக்கவேயில்லை – மகாமகோ கருணாநிதி அவர்களாலேயே அவருடைய  கழகம் (அஸ்குபுஸ்கு, இது இசுடாலிருடையதோ, அழகிரியினுடையதோ, கனிமொழியினுடையதோ, கேடி சகோதரர்களினுடையதோ – ஏன், அண்ணாவுடையதோ, சம்பத்துடையதோகூட  நிச்சயமாக அல்ல! இது நிச்சயம் அவர் சொந்தமாகச் சம்பாதித்து அவர் பாத்தியதையில் தொடர்ந்து  இருப்பதுதான்!) விமர்சிக்கப் படும் என்று!

…பாருங்கள், அவருடைய விமர்சனத்தை… 1996ஆம் ஆண்டு வெளிவந்த அவருடைய திருக்குறள் உரையிலேயே தன் திமு கழகத்தைப் பற்றி கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார், அதனைச் சூதாடும் இடம் என வர்ணனை செய்கிறார். இந்த இழிசொல்லுக்கு, அந்த பாவப்பட்ட வள்ளுவரைவேறு சகதியில் இழுக்கிறார்! (அந்த சமயம் அப்படி என்ன திமுக, இப்போது  இருப்பதைவிட, அவ்வளவு  மோசமான நிலையிலா இருந்தது?  ஹ்ம்ம்…?)

-0-0-0-0-0-0-0-0-
குறள் 937:
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

கலைஞர் உரை: சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.

ராமசாமியின் பொழிப்புரை:  என்னோட திமுக-வ விட்டுட்டு, ஓடுங்கடா போக்கத்த பயலுவளா, வொடன்பிறப்புகளாம் ஒடன்பெறப்புங்க!  நீங்க அல்லாரும் இங்கயே டேரா போட்டுக்கினு, பெர்த்தியார் சொத்துக்கு நாய்மாறீ அலையறவ்னுங்கொடா! எல்லா சொத்தும் என்னோட்துதான், போங்கடா!

பொழிப்புரையின் விரிப்புரை: நானே தொடர்ந்து கழகத்தில் காலத்தைக் கழித்து, நம் திராவிட மூதாதையர்களான பெரியார், அண்ணா போன்றவர்கள் தேடிவைத்த அசையும்-அசையா சொத்துக்களையும், நற்பண்பை(!)யும், ஓட்டுவங்கியையும் நாசமாக்குகிறேன் – எனக்கு உங்கள் உதவி தேவையில்லை, நீங்கள் மேலே செல்லவும். கடை விரித்தோம், கொள்முதல் செய்தோம், கட்டிவிட்டோம். நாங்கள் சர்வமூலர்கள். பாவம் திருமூலர்.

குறள் 935:
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.

கலைஞர் உரை: சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.

ராமசாமியின் பொழிப்புரை:  திரும்பி இந்த பக்கம் வர்ரவேவராதீங்கடா! ஜூது வெள்யாடினாலும் ஒங்களுக்கு நிச்சயமாக ஒரு பங்கும் கொடுக்கமுடியாது, என்னோட குடும்பத்துக்குக் கொடுக்கற்துக்கே எங்கிட்ட இருக்றது பத்தாது, எங்கிட்ட இர்ந்த ஒரே வூட்டையும் பொதுவுக்கு எள்தி வெச்சுட்டேன்வேற…

பொழிப்புரையின் விரிப்புரை: கழகத்தை விட்டுவிடுவதோ, அதன் சொத்துகளை அனுபவிப்பதையோ , அதன் மூலமாக ஏற்படும் தொடர்புகளால் தொடர்ந்த ஆதாயத்தைப் பெறுவதையோ என்னால் விடவே முடியாது. என் மடியின் கனம் அப்படி. ஆசைகளின் அளவு அவ்வளவு! ஆகவே – இந்த திமுக-வை விட்டுவிட மனதில்லாமல், ஏதாவது எங்களுக்கும் பங்கு கிடைக்குமா என்று தொடர்ந்து அறிவாலய வட்டாரத்திலேயே அலைபவர்கள் ஒரு குப்பைக்கும் கூடப் பிரயோஜனப் படாமல் அழிவார்கள்.

நன்றி, வணக்கம்.

ஆதாரம்(!): கலைஞரின் திருக்குறள் உரை – அதிகாரம்: சூது; குறள் #935, #937

பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரச் சிவப்பு புகழ் சீனாவின் சூதாடும் கழகம் - உலத்திலேயே இதுதான் மிகப்பெரியது; லாஸ் வேகஸ் தர கழகங்களெல்லாம் இதனிடம் பிச்சை வாங்க வேண்டும். இந்த கழகத்திலும் நம் திராவிடக் கண்மணிகளின் மறைமுகப் பங்கேற்பு இருக்குமோ? ;-) மேலதிக கந்தறகோள விவரங்களுக்கு: China's sin city: Inside the world's biggest gambling den http://www.independent.co.uk/news/world/asia/chinas-sin-city-inside-the-worlds-biggest-gambling-den-1757211.html

பாட்டாளிவர்க்கச் சர்வாதிகாரச் சிவப்பு‘ புகழ் சீனாவின் சூதாடும் கழகம் – உலத்திலேயே இதுதான் மிகப்பெரியது; லாஸ் வேகஸ் தர கழகங்களெல்லாம் இதனிடம் பிச்சை வாங்க வேண்டும். இந்த கழகத்திலும் நம் திராவிடக் கண்மணிகளின் மறைமுகப் பங்கேற்பு இருக்குமோ? ;-) மேலதிக கந்தறகோள விவரங்களுக்கு: China’s sin city: Inside the world’s biggest gambling den

-0-0-0-0-0-0-0-

தொடர்பற்ற, ஆனால் ‘ஒருமாதிரி’ தொடர்புள்ள பதிவுகள்:

3 Responses to “கருணாநிதி அவர்களின், சொந்த திமுகழகம் பற்றிய அவருடைய கோப விமர்சனம்! (ஆச்சரியமாக இருக்கிறதா?)”


 1. இது தான் சொந்த செலவுலெ சூனியம்ங்கறது. திருக்குறளுக்கு விளக்கம் எழுதுவானேன், இப்போ ஒத்திசைவுகிட்டே வாங்குவானேன்!

 2. கலைஞர்பித்தன் Says:

  நீ காலையில் வாக்கிங் போற டைமை மட்டும் சொல்லு அது போதும்


  • அவசியம் சொல்கிறேன். பித்தம் தெளிந்தவுடன் தொடர்பு கொள்ளவும்.

   அதற்குமுன் நாலு வரி கோர்வையாகத் தமிழில் எழுதக்கற்றுக்கொண்டால் நலம்.


Leave a Reply to கலைஞர்பித்தன் Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s