தேடிச் சோறு நிதந் தின்று… …வீழ்வே னென்று நினைத்தாயோ? (1/4)

12/12/2014

—  “ஸார், நீங்க ப்ராமின்ஸா?

அந்த அழகான இளைஞன் என்னைத் தயங்கித் தயங்கிக் கேட்டான். என்னிடம் இருந்து ஒரு பெருமூச்சுதான் உடனடி பதிலாக வந்தது.

இத்தனைக்கும் நானும் ஒரு ஒரிஜினல் அக்மார்க் நயம் திராவிடக் கிருஷ்ணன் தான். இயற்கைக்கு நன்றியுடன் மெலனின் வேண்டிய அளவு தொடர்ந்து சுரந்து, என்னை இந்தச் சுட்டெறிக்கும் சூரியனிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. பேச்சும் பொதுவாகவே நம் பழம்பெரும் பாரம்பரியங்களில் ஒன்றான மெட்ராஸ் கொச்சை ‘அடீங்… கொம்மாள...’  பாஷையில்தான். கட்டைகுட்டையாக தாடி நரைத்த மொட்டைத்தலைதான் பெரும்பாலும். கூட பக்கவாத்தியமாக கிழிந்த டீஷர்ட்டும், அதன்மேல் துண்டும், தொடைமயிர் தெரிய டப்பாக்கட்டு லுங்கியும், ஒண்ணரைக் கண்ணும்… போதாக்குறைக்கு எள்ளும்கொள்ளும் சதா வெடித்துக்கொண்டிருக்கும் முகபாவம்…

டேய்,  என்னைப் பார்த்தால் தத்துவ விற்பன்னன், பணிவும் அன்பும் கனிவும் கண்ணியமும் நிரம்பிய ஞானவான், போற்றுதற்குரிய குரு, சமனநிலை மிக்கவன் போலவெல்லாமா  தெரிகிறது? என் வட்டாரத்தில் அப்படி யாருமே இல்லையே! அப்படி யாராவது உங்கள் வட்டாரங்களில் இருக்கிறார்களா என்ன??  ங்கொம்மாள…  ஞானசூனியன்களா, நான் வெறும் கிருட்டிணச் சாமான் இருக்கும் சாமானியன் தான். குட்டிச்சுவரான குட்டிச் சின்னி யுவ இளைஞக் கறுப்பன்தான்; அதுவும் – புதுப்பெரும்பொலிவும் நீட்டமும் – ஆகவே  பொழுதன்னிக்கும் தமிழ்ப்படச் சதைநாயகிகளின் முலைகளையும் துடைகளையும் புட்டங்களையும் பார்த்து எழுச்சி பெற்று ஆனால் கைகூடாக் காரியத்தால் இதயம் இனிக்காமல் கண்கள் மட்டும் பனித்து வாட்டம் கொண்ட பராக்கிரமம் மிக்க திராவிடச் சாமானியன்.

நான் அக்மார்க் தமிழன். அறச்சீற்றத்துடன் அபரிமிதமாகப் பேசிக்கொண்டே மற்றவர்கள் கொட்டையை கமுக்கமாக நசுக்கிக்கொண்டிருக்கும் பின்நவீனத்துவ சமூக நீதிக்காரன், ஆகவே ஆண்குறிக்கோள் குவியப்பார்வை மிக்கவன் – இதனைச் சாராதவைகள் எனக்குத் துச்சம்.

பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க

பணைத் தொடை இரண்டும் பருவேல் காக்க

ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க!

இரண்டா?? அய்யய்யோ! என்னை ஏமாற்றி விட்டனரே, பாவிகள் – என் திராவிட மூதாதைகள்! எனக்கு ஒன்றேஒன்றுதானே இருக்கிறது. :-(

அல்லது பாலன்தேவராயன் கொட்டைகளைக் குறியுடன் சேர்த்துக் குழம்பிவிட்டாரோ? எப்படியும் – திராவிடக் குறியீடுகளின் மகாமகோ பெரும்பாட்டனாரான, திராவிடப் பண்பாட்டின், அதன் அதிகாரக் குவியத்தின் ஊற்றுக் கண்ணான ஆண்குறிமுதல்வாதத்தை (=ப்ரிக்கிஸ்ம்) எப்படி இந்த பாலன் கூட்டிக்கொடுக்க முடியும்? சொல்லுங்கள். இந்த தேவராயன் என்பவன் ஆரிய நச்சுப்பாம்போ?

பச்சைத் திராவிடனுடையது தான் உலகத்திலேயே நீளமானது அல்லவா? உலகின் முதல் குறியீடு திராவிடப் பெருங்குறியீடுதானே?

கூனிஃபொர்ம் (இதனை ராமாயணக் கூனியின் முதுகுவளைந்த சித்திரத்தைப் பொருத்தி திராவிட அரைகுறைதனத்துடன் புரிந்துகொள்ளவேண்டாம்! கூனி + ஃபார்ம்) எனும் விடைத்து நிற்கும் ஆண்குறியீட்டுக் குச்சியெழுத்துகள் தானே முதலில் வந்த எழுத்துருக்கள் – பின் வந்தவைதானே யோனிக்குறியீடுகளான வட்டெழுத்துகள், ஹ்ஹ!  இதனை மறுதலிக்கவும் முடியுமோ?  பெண் நாசமாப் போகட்டும். மன்னிக்கவும். இதுவும் திராவிடக் கொள்கைதான். இதுகூடத் தெரியாதா உங்களுக்கு? திராவிடன் இருக்கிறான் – ஆனால் திராவிடச்சிகள் என்று திராவிடத்தைக் கண்டுபிடித்த அந்த கால்ட்வெல்லோ அபே துபோய் போன்றவர்களோகூட  எங்குமே குறிப்பிடவில்லையே! ஆண்கள் தான் திராவிடர்கள். பெண்கள்? அவர்கள் வெறும்  பெண்கள்தாம்.

பல திராவிட ஆண்ணியக் காரர்கள் மனதாற நம்பி, ஆனால் பகிரங்கமாக வெளியில் சொல்லாததைப் போல பெண் = முலை + துடை + புட்டம் + யோனி + வீட்டுவேலை. லூஸ்ல விடுங்க.

சரி அய்யா. நான் ஆரியப் பழங்கஞ்சி அல்லன். உங்களிடம் இருப்பது ராங் அட்ரெஸ். இன்று, ஈது வேறு கிழவன். ஞானக்கூத்தனல்லன். போங்கடா!

ஹ்ம்ம்ம்… இருந்தாலும் என்னைப் பல சமயங்களில், நம் தங்கத் தமிழ் நாட்டில், சமதர்மப்பூங்காவில், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களெல்லாம் கூட இப்படிக் கேட்டிருக்கிறார்கள்.

 “ஸார், நீங்க ப்ராமின்ஸா?”

வடக்கிலாவது –  ‘நீ மதறாசியா’ என்பதோடு விட்டுவிடுவார்கள், என்  செல்ல தக்கணி ஹிந்திக் கொச்சையைக்கேட்டுத் தலையில் அடித்துக்கொண்டு, பாவம் அவர்கள்… கைகோ ரே ஸாலே, க்யா ஹுவாரே லவண்டே, பம்பூ லகா தூங்கா மாதர் சோத்…

-0-0-0-0-0-0-0-0-

 “ஸார், நீங்க ப்ராமின்ஸா?”

இம்மாதிரி கேள்விகளில் எப்போதுமே பன்மை தான் – பேருந்து நடத்துநர்கள் ஒரே ஒரு பெண் ஏறினாலும்,  ‘யோவ்! லேடீஸ்க்கு இடம் கொடு!!‘ என்று சொல்வது போன்ற பன்மை. பன்மை = மரியாதை என்கிற வழமையோ என்ன இழவோ  அல்லது எதிலும் ஜாதி எங்கும் சதி  என்று அலையும் வெறியோ!

எப்படித்தான் இதனைக் கஷ்டமே படாமல் ‘அசால்ட்டாகக்’ கண்டுபிடிக்கிறார்களோ(!) நம் மறத்தமிழர்கள் என்று நான் நினைக்காத நாளில்லை.

மகாமகோ கார்ல் மார்க்ஸ் 1853லேயே தன்னுடைய கட்டுரை ஒன்றில் சொல்லாதது போல –

 “தோழர்களே! திராவிடனின் ஒவ்வொரு சொல்லிற்கும் செயலிற்கும் பின்னால் ஜாதிவெறியப் பார்வை ஓளிந்திருக்கிறது”

(ஆதாரம்: கார்ல் மார்க்ஸ் கட்டுரை)

… என்பது உண்மையோ?

ஹ்ம்ம்… எது எப்படியோ, என் முகத்தில் வழியும் அசட்டுத்தனத்தையோ பெருமித அசட்டையையோ அல்லது அழுக்குச் சட்டையையோ கண்டுகொண்டு இப்படி பளிச்சென்று உலகத்துக்கே வாழ்வாதாரமான விஷயத்தை நொடியில் கண்டுகொள்கிறார்கள் – அல்லது  இடியாப்பச் சிக்கலை அவிழ்த்துவிடுகிறார்கள். ஆழிசூழ் உலகே ஸ்தம்பித்து விடுகிறது.

பல பத்து வருடங்கள் முன்னரெல்லாம் – பொதுவாக (பெரும்பாலும் திராவிட முயக்க அரைகுறைக் குஞ்சாமணிகளால்) இப்படிக் கேட்கப்பட்டவுடன் நான் முகத்தைச் சுளித்துக் கொண்டு –  ‘அது உங்களுக்கு ரொம்ப முக்கியமா? உங்களுக்கு இப்பொழுது என்னவேண்டும்??’ எனப் பதில் கேள்வி ஒன்றைச் சுர்ரென்று கேட்டு அவர்கள் வாயை அடைத்துவிடுவேன் – இதெல்லாம் என் இளம் வயதில்.

ஆனால், மிகவும் வருத்தம்  தரக்கூடியதாக  – இப்போதெல்லாம்  நான் அப்படியில்லை; மேலும் — நீங்க முதலியார்ஸா /  நாடார்ஸா / பிள்ளைஸா / கவுண்டர்ஸா / தேவர்ஸா /  நாய்டூஸா / இன்னபிறஸா… என்றெல்லாம் நம் திராவிட சமத்துவபுரங்களில் (அதாவது அசட்டுவபுரங்களில்) கேட்கப் படுவதை கவனிக்க ஆரம்பித்ததும்  – இந்தச் சலிக்கவைக்கும் கேள்வியை இன்னொரு பின்புலத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.

அதாவது – இப்படி ஒரு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சலிக்கவைக்கும் கேள்வியைக் கேட்பவர்களால் — ஏதாவது உரையாடல் திறப்பிற்காக ஒரு புள்ளியில் ஆரம்பித்து, பின்னர் தொடர்ந்து பேசுவதற்கான முஸ்தீபாகவும், ஒரு ஆபத்தில்லாத, ஜாதி அசூயையற்ற, ஜாதிவெறியற்ற கேள்வியாகத் தான் இக்கேள்விகள் அப்பாவித்தனமாகக் கேட்கப் படுகின்றன என்பதையும் புரிந்து கொள்ள, சமன நிலையில் அவற்றை அணுக, எனக்குப் பலவாண்டுகள் பிடித்தன. (ஆனால், ‘டேய், நீ பாப்பானா?’ வகையறா கேள்விகள் நிச்சயம் ஜாதிவெறிக் கேள்விகள் தான் என்பதிலும் எனக்கு ஐயமேயில்லை; இப்படி நான் பலமுறை விளிக்கப்பட்டிருக்கிறேன் – சில திராவிட இயக்க அரைகுறைக் குளுவான்களுடன் சுவாரசியமான தள்ளுமுள்ளுகளும் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் இதெல்லாம் வேறு கதை; இன்னொருசமயம் பார்க்கலாம்!)

… அன்றும் அப்படித்தான்.

அந்த இளைஞனின் கேள்விக்குப் பதிலாகச் சிரித்துக் கொண்டு, ‘நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அப்போ நீங்களும் தமிழரா?’ எனப் பதில் கேள்வி கேட்டு, கர்வம் பிடித்த சுயமோகியான என்னுடன் பேச எத்தனிக்கும் பாவப்பட்ட மற்றவர்களுக்கு, சங்கோஜமும் படபடப்பும் தரும் முதலறிமுக நிமிடங்களைக் கடந்து – பின்னர் உரையாட ஆரம்பித்தோம்.  (அதாவது பெரும்பாலும் அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்)

-0-0-0-0-0-0-0-0-0-0-

சுமார் பத்து வருடங்கட்கு முன்வரை நாங்கள் பெங்களூரின் வடகிழக்குப் பகுதியில், (அப்போது) அமைதியான குடியிருப்பு ஒன்றில் வசித்துக் கொண்டிருந்தோம்.அழகான, சுத்தமான தெருக்கள்; இருமருங்கிலும் மாபெரும் ஆஃப்ரிகன் ட்யுலிப் மரங்களும், ஆஹாவென்று எழுந்து நிற்கும் தூங்குமூஞ்சி மரங்களும். சாலை விளிம்புகளில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கும் ரோஜாக்களும் செம்பருத்திப் பூக்களும் – இவற்றினூடே, அந்தக் காலத்து தூர்தர்ஷனில் பிஎஸ் சசிரேகா அவர்கள் வெகு சுலபமாக, உச்ச்ச்ச்ச்சஸ்தாயியில் பாடிய ‘காக்கைச் சிறகினிலே…’ மூளையில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கும், சிலசமயம் கேஜே யேசுதாஸின்  ‘ஏழாவது மனிதன்’ படத்து அதே பாட்டும்.

ஜில்லிப்பு மிகுந்த, பட்சிஜாலம் சூழ்ந்த மார்கழிப் பனிக்காலக் காலை நடைகள் மிக அழகானவை. என் அம்மாவும் கூட வருவார் சில சமயங்களில். அழ வள்ளியப்பா, நாமக்கல் ராமலிங்கம்பிள்ளை, ரசிகமணி டிகேசி, பாரதி, பசவண்ணா, அக்கம்மா, பைரப்பா (பர்வா!) என்று சுழித்தோடிக்கொண்டோடும் பேச்சு.

பல நாட்கள், என் ஒன்றரை வயது மகனையும் தோளின்மேல் தூக்கிக் கொண்டு செல்வேன். அவன் அப்போதிலிருந்தே, வேறெந்த குழந்தையையும் போலவே, ஒரு கேள்வி ஞானி. அவன் பேச (=கேள்வி) ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் திக்கித் திணறி விடுவேன். சாலையோரச் செடிகளின் தாவரவியல் இரட்டைப் பெயர்களையும் (’ஸொலேனம் ஸுரட்டென்ஸ்’ – கூடவே தமிழில் கண்டங்கத்திரி)…

… சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். பின் அவைகளில் எது எதற்கு உதவிகரமானது என்ன சத்துகள் இருக்கின்றன என்றும்… இவனுக்குப் பயந்தே, போகிற  ‘ரூட்’டில் இருக்கிற செடிகொடிமரங்கள் பற்றியெல்லாம் கொஞ்சமேனும், முன்னதாகவே தெரிந்துகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருந்தேன்.

… சாலையோரம் நின்றுகொண்டிருக்கும் கார்களின் பெயரும் – ஒரே அப்பா, அத்தோ பாரூ, அப்பா இத்தோ பாரூதான்.  அதேபோல ‘அந்த வண்டிக்குப் பின்னால் டிஃபரென்ஷியல் இல்லை, ஏன்?’  முடிந்தவரை ஆங்கிலக் கலப்பில்லாமல் தூய தமிழில் தெளிவாகப் பேசக்கூடியவனாகவும் இருந்தான் அவன். வீட்டில் மேஜை நாற்காலிதான் – டேபிளோ சேரோ இல்லவேயில்லை. (எல்லா குழந்தைகளும் அடிப்படையில் ஞானிகளாகவே இருக்கிறார்கள் – ஆனால், அவர்களில் பெரும்பாலோர், நம்மைப் போன்ற சராசரிப் பெற்றோர்களால் வளர்க்கப்பட்டு அநியாயமாக மத்யமர்களாகவும் அதமர்களாகவும் உருவெடுத்து விடுகிறார்கள். இதுதான் நம் சமகாலங்களின் மகத்தான சோகம்)

ஆச்சரியத்தையும் அயர்வையும் ஒருங்கே அளிக்கும் அக்கணங்கள்… சில சமயம் சாலையோர ரோட்ரோலர் மேல் உட்காரவைத்தால் கொஞ்ச நேரம் மானசீக சாலை போட்டுக் கொண்டிருப்பான். நானும் இம்மாதிரி கேள்விகளற்ற இடைவெளிகளில் கண்ணை மூடிக் கொண்டு எதையாவது முணுமுணுத்துக் கொண்டிருப்பேன். அன்று அலுவலகத்தில் என்ன செய்யலாம் எனும் திட்டக் கணக்குகளும் ஒடிக் கொண்டிருக்கும். (ஆம். எனக்கும் அந்தக் காலத்தில், தொழில்முனைவுகள், அலுவலகம், வேலை போன்றவையெல்லாம் இருந்தன. ஆனால், அலுவலகத்தில் பாவம், அவர்களுக்கு என்னுடன் அனுசரித்துப் போகவேண்டிய, என் தாளங்களுக்கு ஆடவேண்டிய தலைவிதி!)

… இம்மாதிரி ஒரு காலைவேளையில்தான், என் மகன் ரோட் ரோலரை ஓட்டிக் கொண்டிருந்தபோது அந்தப் பையன் பேசவந்தான்.

-0-0-0-0-0-0-0-

 “ஸார், நீங்க ப்ராமின்ஸா?”

:-(

அடுத்தபகுதி: தேடிச் சோறு நிதந் தின்று… …வீழ்வே னென்று நினைத்தாயோ? (2/4)

8 Responses to “தேடிச் சோறு நிதந் தின்று… …வீழ்வே னென்று நினைத்தாயோ? (1/4)”

 1. சம்புகன் Says:

  பூனூல அறுத்தா ஓடிருவாங்க பாப்பானுங்க. பெரியார் இதுக்கெ மறுபிறவி எடுப்பாரு

  • ஷிவா Says:

   Dickhead

   —–>>>>> அய்யா ஆஸ்ட்ரேலியசூழல் காரரே!

   இந்த மாஜிவினவுகும்பல் + இப்போதைய திராவிடர்கழக அனுதாபியிடம் கோபப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை, அவரை விட்டுவிடுங்கள். அவரை உடலுக்கு நல்லது. இளம் அவரைப் பொரியலின் சுவை அலாதிதான். ஆனால் முதிய அவரையில் வெறும் நார் மட்டுமே இருந்தால் பிரச்சினையில்லைதான்.

   பிரச்சினையென்னவென்றால் இந்த முதிய அவரைகள் இளிப்பதைப் பார்த்து அவற்றின் விதைகளிலிருந்து தவறாமல் முளைவிடும் விடலை பாகற்களும் தையாதக்காவென குதிக்கும்.

   கொடிது கொடிது திராவிட சரித்திரசக்கரம் கொடிது.

   ரா.

   • Shiva Says:

    padika palagiya’vanga, konjam kooda sindhika palagalayae’nu ninnakirappo BP yeriduthu. Thanks much for your reply.

  • A.Seshagiri Says:

   எந்த பெரியார் (? !),கீழ் வெண்மணி கொடூர சம்பவத்திலே,தாழ்த்தப்பட்ட மக்களுக்காக “தொடை” தட்டி எழுந்தாரே அவரா அதுவும் மறு பிறவி!

  • பொன்.முத்துக்குமார் Says:

   ’பெரியாரு’க்கு அறுக்க மட்டும்தான் தெரியும், இணைக்கத் தெரியாது-ங்கிற இந்த உண்மையத்தானுங்க இவ்ளோஓஓஓஓ நாளா சொல்லிட்டு இருக்காங்க ஒரு தரப்பு. எப்படியோ நீங்களும் அதுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறதை படிக்கிறப்போ சந்தோஷமா இருக்குங்க.

 2. சம்புகன் Says:

  bramin rats foxes ellaam jadi veri pUnal

 3. ராஜன் Says:

  பதிவுக்கு சம்மந்தம் இல்லாமல் கேட்பதை பொறுத்துக்கொள்ளுங்கள்(எனது எழுத்து/இலக்கணப்பிழைகளையும்).
  நீங்கள் சோவியத் ரஷியாவில் வெளியான science made easy என்பது போன்ற பொருள்கொண்ட ஒரு புத்தகம் பற்றி ஒருமுறை எழுதி இருந்தீர்கள்.அப்புத்தகத்தின் பெயரை குறிப்பிட முடியுமா?
  மற்றொரு விஷயம் நீங்கள் தற்போது வெளியிடும் now reading பகுதி ஒரு வரம்.அதில் வரும் புத்தகங்கள் தலைப்பை எழுதி வைத்து ஒவ்வொன்றாக படிக்க முயல்கிறேன்.மிக்க நன்றி.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s