“சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!”

20/12/2014

பணியிடம் சார்ந்த சிலபல விஷயங்களால், தமிழ குடிகாரர்களின் அராஜகச் செயல்பாடுகளினால், குடித்தோகுடிக்காமலோ அறிந்தோஅறியாமலோ உமிழப்படும் ஜாதிவெறி உச்சாடனங்களால்,  அயர்வையும் குவிந்துகிடக்கும் வேலைகளைப் பார்த்துத் திகைத்துப்போய் மலைப்பையும் (= mountain bag also என்றறிக) அடைந்து கொண்டிருக்கிறேன்; ஆகவே, சக்தியும் மூச்சுவிட நேரமும் கிடைக்கும்போதெல்லாம் நகைச்சுவைக்காக (= for jewelry taste) என்று மட்டுமே, விடுதலை வினவு போன்ற தளங்களிலெல்லாம், தலையில் அடித்துக்கொண்டு தேடிப்படிக்கவேண்டிய அளவுக்கு படுகேவலமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். :-(

இச்சமயம், கட்டுரைக்குத் தொடர்பில்லாத, ஆனால்  தொடர்புடைய ஒரு விஷயம்:  ஜெயமோகன் அவர்களின் அண்மைய கட்டுரைகளில் ஒன்றான ‘பேய்கள்’ – இதனையும் இன்று காலை படித்துக்கொண்டிருக்கும்போது,  நாற்முக்காலியில் இருந்து கீழே வீழ்ந்து உருண்டு உருண்டு என் குண்டியை நீக்கிக்கொண்டு சிரித்தேன்.  :-))))

நன்றி, ஜெயமோகன்! என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய எஸ்ரா அவர்களின் மொழிமாற்ற நடையில் மறுபடியும் எழுதவேண்டுமென்றால், என் பகலை, இப்போதுதான் உருவாக்கினீர்!  வாழ்க நின் குற்றம்! வளர்க நும் ஏத்தம்! B-)!

சரி, இந்த அதிஅற்புத அனுபூதி நிலை நகைச்சுவைத் தேடல்களில் கிடைத்த ஒரு மாணிக்கத்தைப் பற்றிய காதைதான் இது.

யாம் பெற்ற பேறு பெறுக இவ்வையகம்!

-0-0-0-0-0-0-

விடுதலை வீரமணியார் அவர்களின், ஒரே சமயத்தில் புளகாங்கிதத்தையும் படுபீதியையும் அளிக்கும் உடும்புத்தைலமுதல்வாத விற்பனைக்கான ஏகபோக உரிமையின் பரிணாம வளர்ச்சிதான் இது!

இதைப் படித்துவிட்டு, சிரிப்பதா அழுவதா அல்லது மையமாக, ஒரு திராவிடத் தமிழனான என்மேலேயே காறித் துப்பிக்கொள்வதா என்று எனக்குச் சரியாகவே புரியவில்லை.

அடுக்குமொழி வீரத்தனத்தின் பரிணாம வளர்ச்சி என்பது அபாரமானது. திராவிட மிகைப்படுத்தப்பட்ட புல்லரிப்புகள் கொண்டது. ஆகவே பரிதாபமானது. இந்த ஆவிக்குரிய எழுப்புதல்தரவல்ல அடுக்குமொழியின் அழகுகளைப் பற்றி நான் நிறையவே பிலாக்கணம் வைத்துள்ளேன் – பார்க்க: அதன் முத்தாய்ப்புக் கட்டுரையையும், அதன் பின் தொடரும் நிழல்களின் குரல்வளைகளையும்)

… ஆனால், என் மனவலியையும், புஜபல மகாமகோ பராக்கிரமத்தையும் மீறி,  17-டிஸெம்பர்-2014 அன்றைய வீரமணிய அறிக்கையைப் படிக்கப் படிக்கவே எனக்கு மூத்திரம் வந்து விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்! :-(

-0-0-0-0-0-

அவருடைய அறிக்கையில் சில பகுதிகள் கீழே; படித்து இன்புறுக:

“தாய்க்கழகமான திராவிடர் கழகம் அதனைப் பாராட்டி வரவேற்பதோடு, அதனை தி.மு.க.வினர் வாசித்தால் மட்டும் போதாது; சுவாசிக்கவேண்டும்; மனதில் பதிய வைத்துக்கொண்டு அசை போடவேண்டும். அதனை செயலில் காட்டவேண்டும்.

தி.மு.க.வின் பலம் என்பது ஆட்சியால் அளக்கப்பட வேண்டிய ஒன்றல்ல; திராவிடர் இனத்தின் மீட்சியால் அளவிடப்படவேண்டிய காலக் கடமைகளில் ஒன்று!

தி.மு.க.விற்கு எதிராக ஒரு சிறு துரும்பு தென்பட்டாலும், அதைப் பெரும் தூணாக ஆக்கி மகிழும் பார்ப்பனீய ஊடகங்களுக்கு ஆத்திரம் ஏன்?

தி.மு.க.வை அழித்துவிட்டால், தங்களது மிகப்பெரிய இன எதிரி அரசியல் களத்தில் வேறு இருக்க முடியாது என்பதற்காகத்தான் – நாளும் பல்வேறு பிரச்சினைகள் ஊதி ஊதி ஒரு பெரும் பிரச்சாரப் போரையே தந்திர மூர்த்திகள் செய்கின்றனர்; காரணம், ஆரிய மாயை அப்படிப்பட்டது!

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பவர்கள் தெளிவு பெறாத பேதையர்கள். திராவிடத்தால் எழுந்தோம் – வாழ்ந்தோம் – வாழ்வோம் என்பவர்கள் தீரம் மிக்க வீரர்கள் என்பதை தி.மு.க. தனது பிரச்சார முழக்கமாக ஆக்கி திக்கெட்டும் கொண்டு செல்லவேண்டிய தருணம் இது!

திராவிடம் – ஆரியம் என்பது தனி மனித ரத்தப் பரிசோதனையால் அல்ல, பண்பாட்டின் அடையாளம்; தனித் தன்மை! அனைவருக்கும் அனைத்தும் என்ற சமூகநீதிக் களம்!

முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள்!

இன்றைய காலகட்டத்தில் தி.மு.க.வின் அரிய காவ லர்கள் அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்களும், அதன் லட்சியக் காவலர் இனமானப் பேராசிரியரும், அவர்களது ஆணைகளை செயல்படுத்திடும் செயல் வீரச் செம்மல் தளபதி ஸ்டாலின் ஆகிய மூவரும்தான்!

இம்மூவரும் முப்படைகளின் சக்தியைப் பெற்று செயலாற்றும் லட்சிய அரண்கள் தி.மு.க.வுக்கு.

இந்த எஃகு கோட்டைகளின் மூலபலச் சுவர்கள் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்ற அதிர முடியாத அஸ்திவாரங்கள் அந்தக் கோட்டைக்கு உண்டு.

எனவே, பதவிச் சலசலப்புகள் – பத்திரிகைப் புரளிகள், பகடிகள் – இதன் பலத்தை ஒருபோதும் பறித்துவிட முடியாது!

பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் – பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்! துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத்தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது!

ஜாதிவெறி – மதவெறி மற்றும் பல்வேறு சூழ்ச்சிப் பொறிகள் – தி.மு.க.வை வீழ்த்திவிடக் காணும் கனவுகள் கலைந்துவிடும் என்பது உறுதி.

கட்டுப்பாடு – கட்டுப்பாடு – கட்டுப்பாடு என்ற கவசத்தை அணிந்தால், தோழர்களே மற்றவரின் காகித அம்புகளால் கழகத்தை வீழ்த்திட முடியாது!

துரோகங்களால் துளை போட முடியாத எந்த இயக்கத் தையும், சிறு தொல்லைகளால் தொலைத்துவிட முடியாது!

சூளுரையுங்கள்!

சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!

அதை வைத்தே இயக்கத்தின் எதிர்காலத்தை எண்ணுங்கள்!

…. …

:-)))))))) சிரித்துச் சிரித்து வயிறே புண்ணாகி விட்டது. :-(

சரி. முழு அறிக்கையும் இங்கே இருக்கிறது: பழி தூற்றுவோரைப் புறந்தள்ளி விழி திறந்து வழிநடக்கும் வித்தகர்களாக தி.மு.க.வினர் – பாசறை வீரர்கள் வீறுநடை போடட்டும்! திராணி இருந்தால் படிக்கவும். :-(

இன்னொரு விஷயம்: வீரமணியார் அவர்கள் திராவிட இயக்கத்தின் எதிர்காலம் என்பதை, மிகமிகச் சரியாகவே – பணம்  என்றுதான் பார்க்கிறார் என்பது தெளிவாகவே தெரிகிறது.

அப்போதுதானே அதனை எண்ணமுடியும்?

-0-0-0-0-0-0-

தொடர்புள்ள பக்கங்கள்:

 

 

6 Responses to ““சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!””

 1. Venkatesan Says:

  // சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!

  அவரு சூனாவுக்கு சூனா போட்டாரு. இதை போயி பெரிசாக்கி தலைப்பு வைக்கறீங்களே! இதைத்தான் “தி.மு.க.விற்கு எதிராக ஒரு சிறு துரும்பு தென்பட்டாலும், அதைப் பெரும் தூணாக ஆக்கி மகிழும் பார்ப்பனீய ஊடகங்கள்” அப்படின்னு தலைவர் சொல்றாரு.


  • // அவரு சூனாவுக்கு சூனா போட்டாரு
   ஏனுங்க, அத்தொட்டு தானங்க எனக்கு சூசூ வந்திரிச்சின்னு சொன்னாக்க கோச்சிக்கிறீங்க. :-)

 2. Venkatesan Says:

  “ஜாதி – தீண்டாமை, பெண்ணடிமை, மூட நம்பிக்கைகள், பகுத்தறிவை பயன்படுத்தாமை, மதவெறி – இவற்றையெல் லாம் ஒழிப்பதை தனது மூலக் கொள்கையாய் கொண்டுள்ள ஓர் அரசியல் கட்சி – திராவிடர் கழகத்தைத் தாய்க் கழகமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம்”

  இவை எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு. ஆனால், இவை திமுக வின் கோட்பாடு என்று சொல்லும்போது எனக்கும் சிரிப்பு வருகிறது. பதவி வெறி, சுயநலம், பணத்தாசை இவையே திமுகவின் கோட்பாடுகள்.

  // பகுத்தறிவை பயன்படுத்தாமை

  இவ்வளவு நாளா பகுத்தறிவை வெச்சு கல்லா கட்டிட்டு இருக்காங்க. ஆனா, “பகுத்தறிவு” அப்படின்னு சொல்றதுக்கு எதிர்ப்பதம் கூட உருவாக்கலை போல. ஆங்கிலத்தில், “irrationality” அப்படின்னு வார்த்தை வெச்சிருக்கான்!

  // அரசியல் கட்சியாக உருவாகிவிட்டாலே, கொள்கை களில் ஓரளவுக்கு சமரசம் செய்துகொள்ளவேண்டிய நிர்ப் பந்தம் ஏற்படும் என்பதால்தான் தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகம் பதவி, அரசியல் பக்கமே தலைவைத்துப் படுக்கவும் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார்கள் //

  அரசியல் கட்சி ஆகி சமரசம் செஞ்சுட்ட கும்பலோட கூடி குலாவறதும் சமரசம் செய்யறது தானே, தலைவரே!

  // வெறும் பதவிகளுக்காக மட்டும் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல தி.மு.க //

  ஹி ஹி ஹி! கொள்ளைக்கார காங்கிரஸ் தொடங்கி கொலைகார காவி கட்சி வரைக்கும் கூட்டணி வெச்சுட்டு இப்படி எல்லாம் பேசலாமா தலைவரே?

  // இன்றைய காலகட்டத்தில் தி.மு.க.வின் அரிய காவ லர்கள் அதன் ஒப்பற்ற தலைவர் மானமிகு சுயமரியாதைக் காரரான கலைஞர் அவர்களும், அதன் லட்சியக் காவலர் இனமானப் பேராசிரியரும், அவர்களது ஆணைகளை செயல்படுத்திடும் செயல் வீரச் செம்மல் தளபதி ஸ்டாலின் ஆகிய மூவரும்தான்! //

  இவ்வளவு தான் மேட்டர். “ஸ்டாலின் தான் அடுத்த வாரிசு” அப்படின்னு ஒத்த வரில சொம்படிக்கறதுக்கு எதுக்கு தலைவா இம்மாம் பெரிய கட்டுரை? பேராசிரியர் ஆணையை ஸ்டாலின் செயல் படுத்தறாரா? ஹி ஹி ஹி! இதப் படிச்சு பேராசிரியர் பேரதிர்ச்சி அடையப் போறாரு!

  // சுயமரியாதைச் சூரணத்தை உண்ணுங்கள்!

  கல்லா கட்டரதுக்காகவே கழகத்துல இருக்கோம். எங்கள போயி சூரணத்த தின்னு, சுன்னாம்ப தின்னு அப்படின்னுட்டு! தலைவர் குடும்பம் மட்டும் அதிரசம் தின்னும். நாங்க மட்டும் சூரணம் தின்னனுமா?


  • //கல்லா கட்டரதுக்காகவே கழகத்துல இருக்கோம். எங்கள போயி சூரணத்த தின்னு, சுன்னாம்ப தின்னு அப்படின்னுட்டு! தலைவர் குடும்பம் மட்டும் அதிரசம் தின்னும். நாங்க மட்டும் சூரணம் தின்னனுமா// Super!

 3. பெரியார் தடி Says:

  பார்ப்பன கைக்கூலி குஞ்சு குளுவான்களுக்கு தங்கள் மீதே சேறடித்துக்கொண்டு அசிங்கப்பட்டாய் பார் என்று எதிராளியை காட்டி சிரிப்பதே வழக்கமாகிவிட்டது.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s