தமிழர்களுக்கு, பீலா வுடுவது என்பது ரத்தத்திலேயே ஊறிய அறம்

22/12/2014

பயப்படாதீர்கள். இது பிலுக்கல் + பிலிம் காட்டல் = பீலா வுடுதல் —- (2/2) – அதாவது இரண்டாம் பாகம். முதல்பாகம் இங்கே. இந்த பாகத்தைப் படிக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிவிடாது.

பயப்படவேண்டாம். அவ்வப்போது அரைப்பைத்தியம் முழுப்பைத்தியம் ஆகிவிடும், அவ்வளவுதான்.  நான் ‘நார்மலாகத்தான்’ இருக்கிறேன். ;-) என் கடன் பிணி செய்துகிடப்பதே!

-0-0-0-0-0-0-

… … தமிழ் பிலிம் உலகில் எல்லோரும் நடிகர்களே! டைரக்டர்களாக நடித்துக் கொண்டிருக்கும் கருத்துக் களவாணிகள். ஒருவாய் டீக்கு சிங்கி அடித்துக்கொண்டிருந்தாலும் காப்பியடிக்கத் தயங்காதவர்கள். இசையமைப்பாளர்களாக நடித்துக் கொண்டிருக்கும் டமாரத் திருடர்கள். திரைப்பாடல் எழுதி வாழ்க்கையில் முன்னேறமுயலும் சில்லறைத் திருட்டு ஹைக்கூவான்கள்.

இதற்கு மேல் – நடிகர்களாக நடிக்கும் நடிகச் சிகாமணிகள். ஒருவர் கூட உருப்படியில்லை. அயோக்கியப் பதர்கள். இதில் பலர் என் உற்ற நண்பர்கள்தான்.  என்னிடம் கற்றுக்கொண்டு என்னையே விஞ்சி விட்டார்கள். வாழ்க களவுடன்.

சமூகவலைத்தளங்களில் இவர்களை, இவர்களின் முகத்திரைகளைத் தொடர்ந்து கிழித்துக்கொண்டிருக்கிறேன். இருந்தாலும் என்னைக் கண்டுகொள்ள மாட்டேனென்கிறார்கள். ஒரு சான்ஸ் கூடக் கொடுக்கமாட்டேனென்கிறார்கள் – பொறாமை பிடித்த ஞமலிகள்.

அடுத்த 2015ஆம் வருடம் பொங்கலுக்கு, நான் அஸிஸ்டென்ட் டைரக்டராக மகத்தான பணிபுரிந்து க்ளாப் அடித்த படம் ரிலீஸ் ஆகிறது. அவசியம் பார்க்கவும். க்ளாப் அடிப்பதற்கு என ஒரு ஆஸ்கர் பரிசு ஏற்படுத்தப்பட்டு அதற்கான முதல் பரிசை எனக்குக் கொடுத்தால், வெள்ளைக்காரர்கள் குறைந்தா போய்விடுவார்கள்?

இது, ஜப்பானிய டைரக்டர் டகேஷி கொட்டாங்கச்சி சார் படம் ஒன்றின் அப்பட்டமான காப்பி என்று சொன்னால் நம்பாதீர்கள். அந்த ஆள் ஒரு சப்பானிய சப்பாணி. இது ஒரு பழைய தமிழ்ப் படத்தின் காப்பிதான். ஒரிஜினல் மூலம் –  ‘கும்பகோணத்தில் நரசூஸ்!’  நினைவிருக்கிறதா?  அது ஒரு தெர்மலோ முறையில் வெஸ்ட்வுமன் கலரில், புத்தம்புதிய காப்பியடிக்கப்பட்ட படம்.

கடந்த 50 நூற்றாண்டுகளாக மக்களின் பேராதரவு பெற்று சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் திரைக்கவிதைதான் இது. அதன் ஹீரோதான் ராஜராஜசோழன் சார்!

சிவாஜி-சோழன்சிவாஜி கணேசனாக, பராசக்தி திரைப்படத்தில் நடித்திருக்கும் ராஜராஜசோழன் சார் தான் இவர், அடையாளம் தெரிகிறதா?

கீழே ராஜராஜசோழன் சாருடைய ஒரிஜினல் புகைப்படம்.  ஹிஸ்டரி சேனலில் வேண்டும் எனக்கேட்டார்கள் என்பதற்காக நான், 1010 வாக்கில் எடுத்ததுதான். முட்டாள்களே இது கிமு-விலா என்றா கேட்கிறீர்கள்? கிபி தான். கிமு 1012வாக்கில் நான் ஒரு சிறுவன்.

rajarajachozhan-originalஎல்லாம் சரி – ஆனால் இப்போதாவது அவர் முகம் நினைவுக்கு வருகிறதா? முட்டாள் தமிழனுக்கு வரலாற்றுப் பிரக்ஞையே இல்லை. என்ன செய்வது சொல்லுங்கள். திரும்பித் திரும்பி விஷயங்களைச் சொல்லிக்கொண்டேயிருக்க வேண்டியதுதான்.

இந்த பெருமைமிக்க படம் ட்சுனாமியில் அழிந்துவிட்டது என்று நினைத்திருந்தவேளையில் – என் நெடுநாள் நண்பரும், தமிழ வரலாற்றறிஞருமான (=Dravidology) பேராசிரியர் ஆஇரா வேங்கடாசலபதி அவர்கள்தான், இதனை மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஆவணக் காப்பகத்திலிருந்து மீட்டெடுத்துக் கொடுத்தார். ஆஇரா வேங்கடாசலபதி அவர்களுக்கு புனைவிலக்கியத்துக்கான நொபெல் பரிசுகூட இதுவரை கிடைக்காதது துரதிர்ஷ்டமே! கீழே, நொபெல் பரிசுக்கான தேர்வுக்குழு பற்றிய அவருடைய மேலான கருத்து…

ஹிந்து-வில் இது குறித்து வந்துள்ள ஒரு செய்தி... http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/article6703693.ece

ஆதாரம்: 18 டிஸெம்பர், 2014 தேதியிட்ட  தமிழ்ஹிந்து-வில் இது குறித்து வந்துள்ள ஒரு செய்தி…

 அத்தனையும் அசைக்கமுடியாத உண்மை. எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. :-(

-0-0-0-0-0-0-0-

சரி. ராஜராஜசோழன் சாருடன், நான் சிறுவயதில் காவிரிப்படுகையில், பலமுறை பாண்டி ஆடியாடிக் களித்திருக்கிறேன். பின்னர் மழைக்காலங்களில் வீட்டுத் தாழ்வாரங்களில் சோழி விளையாடியதும் நினைவில் இருக்கிறது. பாண்டியை சோழி வென்றது  இப்படித்தான். நந்தினியின் ஆபத்துதவிகள் சுத்த வேஸ்ட். கல்கி விட்டதெல்லாம் வெறும் பீலாதான்.

அதை விடுங்கள். பிற்காலத்தில் ராஜராஜன் சார் சகுனம் பார்த்து அரசியலில் நுழைந்து மாமன்னராகி பல்லாங்குழி விளையாட்டில் சகுனியான பெருஞ்சூதாடி மாமல்லனை வென்றதாவது நினைவிருக்கிறதா?

சங்க காலத்துக்கு முன்பிலிருந்தே சினிமா—->>>>அரசியல் தலைமை என்பதுதான் திராவிடத்தில்  #ட்ரென்டிங். டிங் டிங்…

-0-0-0-0-0-

நிகழ்காலத்துக்கு வருவோம்! தூங்கி விட்டீர்களா என்ன??

… ஆனால் அந்த அப்பேர்க்கொத்த ‘கும்பகோணத்தில் நரசூஸ்!’ படமே ஒரு காப்பிதானாம். ஒரு வடகொரிய திரைப்பட ஆர்வல நண்பர் அங்கலாய்த்துக்கொண்டு சொன்னார்.

நேற்று அவர் வழக்கம்போல – ஹாலிவுட் டைரக்டர் அண்ட்ரேய் குரசாவா காஃப்மன் சார் அவர்களைத்தான் சொல்கிறேன் – என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்; அவர் ஒரு மங்கோலியப் படம் ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறார் – பெயர்  ‘73, கொப்பரவாயன் தெரு,  மங்குனியாண்டிபுரம், மாப்பிள்ளை வினாயகர் மங்கோலிசோடா சாப்பிடுங்கள்!’ கொஞ்சம் நீளமான பெயர்தான். இருந்தாலும் நமக்கெல்லாம் தெரியாதா? இதுதான் தமிழின் ட்ரென்ட்.  இதுதான் பின் நவீனத்துவ ஹாலிவுட் டைரக்டரின் புத்தம்புதிய தமிழ்த் தலைப்புக் காப்பி.

ஆகவே அவர் படுபிஸி. இதுவே ஒரு பழைய பெங்காலி படத்தின் காப்பிதானாம், எஸ் ராமகிருஷ்ணன் சார் தான் இன்று காலையில் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னார் – சத்யஜித் ராய் சார் மகள் ஐஷ்வர்யா ராய் மேடம் எடுத்த  ‘பெங்கோலி சோடா’ வாம் அது. எனக்கு இது  நிச்சயமாக நினைவிருக்கிறது.

ஆம்! ஸ்வர்ணகமலோ அல்லது ஸ்வர்ணரஜினியோ – அக்காலத்தில் ஒரு அவார்ட் கூட வாங்கியது அது. ராஜாராம்மோஹன் ராய் சார் தான் அதன் ஹீரோ, ஹீரோயின் அருந்ததிராய் மேடம் என்பதெல்லாம் எனக்கு இன்னமும் நினைவில் சிவப்புமையாக இருக்கிறது… புரட்சியாளராக இந்தப் படத்தில் தத்துப்பித்ரூபமாக நடித்ததற்கு, அருந்ததிராய் மேடம், வுமன்புக்கர் பரிசு வாங்கியதாவது உங்களுக்கு நினைவிருக்கிறதா??

-0-0-0-0-0-0-0-

“கவலையே வேண்டாம்!” என்று அவருக்கு — உலகப் புகழ்பெற்ற அண்ட்ரேய் குரசாவா காஃப்மன் சார் அவர்களைத்தான் சொல்கிறேன், இவருக்கு வருடாவருடம் ஆஸ்கர் கொடுத்தே அலுத்துப் போகப் போகிறது திரையுலகம், நான் தட்டச்சுசெய்வதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள்   —  சொன்னேன்.  “யாமிருக்க பயமேன்!”

பாவம், அவருக்கும் என்னைப் போல மூச்சுவிடவே நேரமில்லை. அமெரிக்க கருக்கலைப்பு சட்டங்களைப் பற்றிய என்னுடைய மேலான கருத்தைக் கேட்டறிய ஒரு புதுக்கருக்கு குலையாத  கார் அனுப்பினார் ஆனால் நடுவழியில் அட்லான்டிக் சமுத்திரத்தில் அது முழுகிவிட்டது.  பஸிஃபிக் சமுத்திரம் வழியாக வந்திருந்தால் என்னவாம். நடுவழியில் ஹவாய் செருப்பை மாட்டிக்கொண்டு  எதிர் நீச்சல் போட்டிருக்கலாமே! பாலச்சந்தர் சார் கார் அனுப்பினால் இப்படி நடக்குமா?

சரி. நடப்பது நடக்கும். பறப்பது பறக்கும். நீஞ்சுவது நீஞ்சும். நடந்தது நடந்துவிட்டது. முழுகியது முழுகிவிட்டது. இனிமேல் முழுகுவதும் நல்லதற்கே. மூழ்க குளமுடன். என் மாஜிகாதலி, பக்கத்து வீட்டு கீதா இப்படித்தான் சொல்லியிருப்பாள். அவள் இந்தியத் தத்துவ ஞானன்.

கார் முழுகிவிட்டதென்பது, அது அய்யங்கார் என்பதாலோ? பார்ப்பனர்களையே நம்பமுடியாது. நடுவில் கவிழ்த்திவிடுவார்கள். அதனால்தான் அவர் – உலகப் பிரசித்தி பெற்ற அண்ட்ரேய் குரசாவா காஃப்மன் சார் அவர்களைத்தான் சொல்கிறேன் – என்னுடன் செல்ஃபோனில் உரையாடினார்.  என் தொலைபேசித் தொடர்பு எண் இவர் போன்ற சில குறிப்பிட்ட மனிதர்களுக்கு மட்டும்தான் தனிப்பட்ட முறையில் தெரியும். நானும் படுபிஸிதான் அல்லவா. என் வாழ்க்கை எனக்கு முக்கியம். அற்ப, கவைக்குதவாத செயல்களில் என்னால் ஈடுபட முடியாது – எனக்கு அதற்கெல்லாம் நேரமோ விருப்பமோ இல்லை.

இதை எழுதிக்கொண்டிருக்கும்போதே 300 மிஸ்ஸ்டு கால்கள். எவ்வளவுபேர்களுக்குத் தான் என்னால் தொடர்ந்து விதம் விதமாக அறிவுரை கொடுக்கமுடியும் சொல்லுங்கள். இருப்பதோ ஒரு வாய்தான். மேலதிகமாக இரண்டு கைகள். அவற்றில் மொத்தம் பத்து விரல்கள்தான். எவ்வளவுதான் தட்டச்சு செய்யமுடியும்? கால்விரல்களாலும் மிதியச்சு செய்ய கற்றுக் கொள்ளவேண்டுமா என்ன இழவோ… என் பிரச்சினை ஒருவருக்குமே புரியமாட்டேனென்கிறது…  இடையிலுள்ள இடை நிலைப் பாகமும் ஒன்றுதானே இருக்கிறது. ஒருவனுக்கு மொத்தம் மூன்றுவிதமான கீபோர்ட் வேண்டுமென்றால் அது கொஞ்சம் மிகைதானே! ஒரு பன்மைத்தட்டச்சு வீரனாக இருப்பது ஆயாசம்தான். நானே ஒரு போரோளியாக இருந்தாலும், இப்படித்தான் தோன்றுகிறது.

-0-0-0-0-0-0-

ஹ்ம்ம்… கண்டகண்ட அற்பக் கழுதைகளுக்கு நம்பரைக் கொடுக்காதே என்று இடித்துஇடித்து என் மனைவி சொன்னாள். நான் கேட்டிருக்கவேண்டும். நான் என் தனிமையை விரும்புபவன் என்று என் மனைவிக்குத் தெரியாது. ஒரு நாளுக்கு 3000 பேர்களுக்கு மட்டுமே என் எண்ணைக் கொடுக்கவேண்டும் என மட்டுறுத்திக் கொள்ளவேண்டும். வேறு வழியில்லை.

ஆம். எனக்கு என் ப்ரைவசி மிகவும் முக்கியம். என் பிறந்த நாளை, நாளைய இந்தியா, ப்ரைவசி பாரதீய திவஸ் என வருடாவருடம் கொண்டாடுமா? எனக்குச் சந்தேகம்தான். நான் லத்தீன் அமெரிக்காவில் பிறந்திருந்தால் இப்படியா நிலைமை இருக்கும்? என்னைத் தலையில் தூக்கிக் கொண்டாடியிருப்பார்கள். உங்கள் பாவம், தமிழனாகப் பிறந்து விட்டேன்.

முதலில் மணி கௌல்  சார் படங்களப் பாருங்கடா முட்டாள்களா! அவர் கரு கும்மிருட்டில்தான் முழுப்படத்தையும் எடுப்பார். ஆர்ட்டிஃபிஷியல் லைட்டே கிடையாது. எல்லா ஸ்டார்களும் அவரவர்களுடைய சொந்த வெளிச்சத்தை நம்பித்தான் நடிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் மொத்தம் பத்து வார்த்தை ரேஷன். காமிரா, அது பாட்டுக்கு இருட்டில் கவிதை பாடிக்கொண்டிருக்கும். படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனும் ஒரு கலக்கக் கலகப் பிரதியை அவனே கற்பனை செய்துகொள்ளவைத்து, டீகன்ஸ்ட்ரக்டட் ரியாலிட்டியை ரீகன்ஸ்ட்ரக்ட்  செய்ய முனைந்த மாபெரும் டைரக்டர். தமிழ் டைரக்டரெல்லாம் அவரிடம் பிச்சை வாங்கவேண்டும். உஸ்கி ரோடி பார்த்திருக்கிறீர்களா?  ஆனானப்பட்ட அகிரா குராஸாவா சாரே  இந்தப் படத்தைப் பார்த்து,  பயபீதி வந்து சீதபேதியில் தாறுமாறாகச் சிக்கிக்கொண்டதை நீங்கள் அறியமாட்டீர்கள்.

ருத்ரைய்யா சாரின் ‘அவள் அப்படித்தான்’ படத்தை 300, 000 தடவைதான் பார்த்திருக்கிறேன். அது ஒரு க்ளாஸ்ஸிக். ஒரு வேளை, நான் மட்டுமே அதைப் பார்க்காமல், பிறரையும் பார்க்க விட்டிருந்தால், அதன் பெருமை பரவலாகியிருக்குமோ?

ஃபெல்லினி சார் ஃபெல்லினி சார் என்று அல்ட்டிக்கொள்கிறார்கள், சில நேற்று பிலிம்பெஸ்டிவலில் படம்பார்க்க முளைத்து, இன்று  விக்கீபீடியாவை நக்கி சுடச்சுட படவிமர்சனத்தை எழுதும் காளான்கள். இவர்களுக்குத் தெரியுமா ஃபெல்லினியின் ஆசான்களை, முன்னோடிகளை?? உங்களுக்குத் தெரியுமா வாக்குநி சார், ட்ரிப்டுநி சார்? அவருடைய சிஷ்யர்களையாவது – காட்அப்நி சார் பேன்ட்எய்டிநீ சார் போன்றவர்களையாவது தெரியுமா?

பேன்ட்எய்டிநீ சார் அவர்களின் படம் - இவர் படங்களெல்லாம் ரேடட் பலானவை என்பதையாவது புரிந்துகொள்வீர்களா?பேன்ட்எய்டிநீ  சார் அவர்களின் படம்; இவர் படங்களெல்லாம் X ரேட்டட் பலானவை என்பதையாவது புரிந்துகொள்வீர்களா?
தமிழ் சினிமாவை இனிமேல்தான் எடுக்கவேண்டும் அதுவும் நான் சார் எடுத்தால்தான் அது சாத்தியம். ஆனால் பாவிகள், ஒரு சான்ஸ் கூடக் கொடுக்கமாட்டேனென்கிறார்கள். :-(
-0-0-0-0-0-0-

சாதா தமிழ் உலகில் இரு பிரிவுகள்தான். (1) திரைப்படவுலகில் இருப்பவர்கள். (2) திரைப்படவுலகில் நுழைய, கால்கடுக்கத் தவம் இருப்பவர்கள். இந்த இரண்டாம் பிரிவினர் முதற்பிரிவினரை எகத்தாளமாக ஏசிக்கொண்டே இருப்பர்.

தலித் திராவிடம் ஆரியம் பார்ப்பனம் இடை நிலைச் சாதியம்,  கடை நிலை வினவம் போன்ற பகுப்புகள் எல்லாம் சும்மா. வெறும் சினிமா சான்ஸ் கிடைக்கும்வரைதான். அயோத்திதாஸ் இன்னொருமுறை பிறந்து வந்தாலும் சின்னப்பதாஸ் என்ற பெயரில் உலவினால்தான் மரியாதை கொடுப்போம், சத்தியராஜாகச் சொல்கிறேன்.

தமிழ்த் திரைப்படம் பார்ப்பவர்களில் இருவகைகள்தான் – (1) கதா நாயகியின் மார்பை வெறிப்பவர்கள் (2) கதா நாயகியின் மார்பை வெறிப்பவர்கள்.

சோதா தமிழ்சினிமா ரசிகன் (சினிமா பார்ப்பவர்களில் 100% மட்டும்தான் இவர்கள்; மற்றவர்களெல்லாம் என்னைப்போலவே கலாரசிகர்கள்)  பார்வையில் தமிழ் நடிகைகளில் நான்கு பகுப்புகள்

 1. தொடை
 2. குண்டி (இதனை  ‘ப்ருஷ்டம்’ என எழுதினால் கவித்துவமாக இருக்குமோ?)  – இதில் முக்கியமான பிரிவுகள்: (அ)  பிரிவு (ஆ) அரைக்கோளத்தன்மை (இ) அதிர்வு (ஈ) வளமை
 3. தொப்புள் – இதில் முக்கியமான பிரிவுகள்: (அ) வெளியில் பிதுங்காமல் உள்ளிருக்கும் தன்மை (ஆ)  ஆழம் (இ)   சாய்வு (ஈ) சுற்றியிருக்கும் மெல்லிய பூனைமயிரின் செழுமை  (உ) சுற்றுச் சதையின் தங்கக்கொக்கி நகை தாங்கும் தன்மை (ஊ) உள்ளே லின்ட் எனப்படும் அழுக்கு சேராத் தன்மை  (எ)  சுற்றுப் பரப்பின் சுருக்கமிலாத் தன்மை (ஏ)  சுற்றுப்பரப்பில் பம்பரம் விடக்கூடியமை போன்றவை.
 4. மார்பகம் – இதில்  முக்கியமான உட்பிரிவுகள்: (அ) பிளவு (ஆ) பூரிப்பு (இ)  நிறம் (ஈ) பிதுங்கல்தன்மை (உ) அதிர்வு (ஐ) தொங்கலின்மை. அவ்வளவுதான்.

நடிகைகளின் முகத்தையும் நடிப்பையும் எவர் பார்க்கிறார்கள்? எல்லா திராவிட ரசிகர்களும் என் போன்ற ஜென்டில்மேன்களாகவா இருப்பார்கள்? அயோக்கியர்கள் :-(

எனக்குப் பிடித்த நடிகை, கனவுக்கன்னி – கேபி சுந்தராம்பாளாக ஒரு காலத்தில்  ‘அடிமடி கேட்கின் அதிரடி மாரோய்‘ எனப் பாடி நடித்துப் போய்ச்சேர்ந்த ஔவையார் மேடம் தான்.

-0-0-0-0-0-0-

சோதாச் சாதா தமிழ் இணைய எழுத்தாளர்களில் இரு பிரிவுகள்தான்: 1) பார்த்தவுடன் சூட்டோடுசூடாக திரைப்பட விமர்சனம் எழுதுபவர்கள் 2) சூட்டோடு சூடாக திரைப்பட விமர்சங்களைப் படிக்காமலேயே லைக் போடுபவர்கள்.

சோதா தமிழட் ட்விட்டன்களில் இருவகைதான்: 1) தமிழ் சினிமாவைப் பற்றிக் கிண்டலாக கமென்ட் அடிப்பவர்கள் 2) கிண்டலாக ரீட்வீட் செய்பவர்கள்.

ஆமென்.

பின்குறிப்பு: மன்னிக்கவும்; நான் சென்றவாரம் இரண்டு நாட்கள் போல, சென்னையில் இருந்தேன். ஒரு பழைய சினேகிதன் – கடந்த சுமார் 25 வருடங்களாக, தெலெகுத் ‘திரைப்பட வொலகில்’ தொடர்ந்து தன் முயற்சியில் தளராமல், வேதாளம்போல ‘அஸிஸ்டென்ட் டைரக்டரா’கப் பணியாற்றிக் கொண்டிருப்பவன். முட்டாள். ஒரு காலத்தில் கம்பீரமும் உற்சாகமும் மண்டையெல்லாம் மூளையும் நிரம்பியவனாகத்தான் இருந்தான், பாவம். அவன் நோக்கில், இப்போது அவன்  “a COMPLETELY failed man with NO redemption.” :-( அவனுடைய குடிபோதைச் சுயப்பிரதாப + கழிவிரக்கப் பேச்சைக் கேட்டுக்கேட்டு நான் கண்ட துர்சொப்பனமோ சொப்பன ஸ்கலிதமோதான் இந்தக் காட்டுரை. மற்றபடி கவலை வேண்டாம்.

பின்பின்குறிப்பு: இந்த நண்பனைப் பற்றி, நான் சென்றவருடம் எழுதிய ஒரு ‘அலறும் நினைவுகள்’ வகையறா வெகு நீளக் கட்டுரை இது: இகாரஸ்புத்திரன்(!), இகாரஸ்குமார்(!!) இன்னபிற – சில ‘டயரி’ குறிப்புகள் (16/10/2013)

… அற்புதமான மனிதர்கள்.  அடிப்படை நேர்மையும், படிப்பும், நகைச்சுவை உணர்ச்சியும், தளறா உழைப்பும் கூடி வந்தவர்கள். இவர்களுடன் பழக லபித்ததற்கு, கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் உண்மையிலேயே ஒரு பாக்கியசாலிதான்.

ஆனால், இவர்களுடைய தொடர்புகள் எல்லாம் அறுந்து (உண்மை: நான் நட்புகளை வளர்க்க, போஷகம் செய்யத் தெரியாதவன்) சுமார் 20 வருடங்களுக்கு மேலாகி விட்டன. எங்கு இருக்கிறார்கள் என்றே சரியாகத் தெரியவில்லை – ஆனாலும் இவன் பிற்காலத்தில் – சுமார் பத்து வருடம் கழித்து, ஒரு ஆங்கிலக் கவிதைத் தொகுப்பை, சொந்தக் காசில், சொந்தப் பெயரில் வெளியிட்டான் எனக் கேள்விப்பட்டேன்.

அப்போது சுட்டுப்போட்டாலும் தெலுகு தெரியாவிட்டாலும், இப்போது தெலுகுத் திரைப்பட உலகில் இருக்கிறான் எனக் கேள்விப் படுகிறேன்; எவ்வளவு படுபுத்திசாலிகள் இப்படி இந்த உலகத்தைத் தஞ்சமடைந்து – அற்பர்களோடு கலந்து, சுயத்தை இழக்கிறார்கள் என நினைத்தால், மிக வருத்தமாக இருக்கிறது; ஆனால், எது எப்படியோ, இவர்கள் சந்தோஷமாக இருந்தால் சரி.

ஆனால், கொஞ்சம் யோசித்தால் — இவர்களை, இவர்களோடு இயங்கிய தருணங்களை, இப்போது நினைத்தாலும் மிகவும் நெகிழ்ச்சியாகவே இருக்கிறது.

இது போதும்தான்.

குறையொன்றுமில்லை, நரைமுடிக்கண்ணா…

-0-0-0-0-0-0-

நிச்சயமாகச் சொல்வேன்:  “வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.” :-(

பின்பின்பின்குறிப்பு: மேற்கண்டதும் பீலாதான். மன்னிக்கவேண்டாம். :-((

4 Responses to “தமிழர்களுக்கு, பீலா வுடுவது என்பது ரத்தத்திலேயே ஊறிய அறம்

 1. nparamasivam1951 Says:

  இரண்டு நாட்கள் சென்னையில் இருந்ததற்கே திரு ராமசாமி சாருக்கு இப்படி ஆகியது எனில் சென்னையிலேயே வசிக்கும் என் போன்றோர் நிலை குறித்து என்ன எண்ணுகிறீர்கள்?


 2. அய்யா பரமசிவம் சாருக்கு,

  உங்கள் தலையிலிருந்து மேஜிக்யதார்த்தவாத பாம்பு சிரித்துக்கொண்டே கேட்கிறது “புருடா, சௌக்கியமாஆஆஆ?” ;-)

  புருடன் சொன்னது, அதில் அர்த்தம் உள்ளது. நான் பரம புருடன். பரஞ்சோதி… (மயக்கும் மலஹரி)

  இது பின் நவீனத்துவப் பின்னூட்ட எதிர்கொள்ளல். உங்களுக்குப் புரிந்தால் சரி. (எனக்குப் புரியவில்லை)

  மற்றபடி, நீங்கள் நலம்தானே? கஷ்டப்பட்டுப் படித்து முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

 3. பெரியார் தடி Says:

  பார்ப்பனர்களுக்கு என்று திருத்திக்கொள்ளவும்

 4. Sam Says:

  wow


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s