சிந்து சமவெளி எழுத்துகள் – ஒரு குறைப் பிரசவ ஆராய்ச்சி

27/12/2014

என்னுடைய இளம்வயதுக் கிறுக்குத்தனங்களில் ஒன்று – எப்படியாவது இந்த சிந்துவெளி எழுத்துகளை (=குறிகளை) ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லாத வகையில் கட்டுடைத்து, அவற்றின் சூழலில் புரிந்துகொண்டு, அவற்றின் வசீகர அர்த்தங்களைச் சரியாக, தருக்கரீதியில் நிறுவி அதனைப் பற்றி உலகளாவிய பிரசித்தி பெற்ற மகாமகோ ஆராய்ச்சிச் சஞ்சிகைகளில் எழுதி,  மகாமகோ புகழ்பெறவேண்டுமென்பது. :-)

இதற்கு ஒரு காரணம், என் ஆதர்ச மகாமகோ ரிச்சர்ட் ஃபெய்ன்மன் அவர்கள் ஆய்ந்தறிந்த பல விஷயங்களில் ஒன்றான – மெஹிகோ வட்டாரங்களில்  தழைத்துக்கொண்டிருந்த மாயர்களின் கலாச்சாரக்கூரான அவர்களுடைய எழுதுமொழியை (=ஹீரொக்லிஃபிக்ஸ்) வெற்றிகரமாகப் புரிந்துகொண்ட கதையும் ஆகும்.

ஈயத்தைப் பார்த்து இளித்துக்கொண்டிருக்கும் பித்தளையைக் கூடப் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், என்னைப் போல ஒரு அதிசராசரியான மனிதனின் பேராசையைப் பாருங்கள்.

… ஆனால், சுமார் 25 வயதினன் ஆனபோது, தொழில்முனைவுகள் போன்றவற்றில் ஈடுபடும் ஆர்வம் ஏற்பட்டபோது – இந்த வெறியை விட்டுவிட்டேன். ஆனாலும் அவ்வப்போது இந்த விபரீத ஆசை எட்டிப் பார்க்கும். பழம்பெரும் ஸோவியத் ஆய்வாளர்களிலிருந்து கமில் ஸ்வெலப்ல் ஊடாக ராஜாராம் வழியாக விட்ஸெல் அக்கப்போர்களைக் கண்டு பின்  எழுத்துருக்களின் வார்த்தைகளின் மொழிகளின் வளர்ச்சி, செமையாடிக்ஸ், மெட்டஃபர் என்று அலைபாய்ந்து கொண்டிருப்பேன், தொடர்ந்துகொண்டிருக்கிறேன்கூட.

என்னுடைய நோக்கில் ஒரு மகாமகோ வசீகரமான புதிர்தான் இது. அர்த்தமற்ற விவாதங்களில் ஈடுபடுவதை விடுத்து, இந்தப் புதிரைத் தீர்க்க முயன்றுகொண்டேயிருக்கலாம். முயற்சி தெருவினை ஆக்கும். பின் அது நெடுஞ்சாலையாகி,  ஜெர்மன் ஆட்டொபாஹ்ன் ஆகி ஸ்வீடனுக்குள் எகிறிக் குதித்து  ‘ரைட் ராயலாக’ நொபெல் பரிசே கிட்டிவிடுமோ? சொல்லமுடியாது – பெரும்புகழை அடைந்து உலகையே வென்றுவிடுவேனோ? ;-)

-0-0-0-0-0-0-0-

சென்ற வருடம் என் வீட்டிற்கு இம்மாதிரி இன்னொரு கிறுக்கரும் வந்திருந்தார் – அவர் டாக்டர் சார்ல்ஸ் நெகெல். எகிப்திய அலெக்ஸான்ட்ரிய அருங்காட்சியகமெல்லாம் போய் ஆய்வு செய்து, அங்கிருக்கும் சிந்துவெளிசார்ந்த அகழ்வாராய்ச்சிப் பொருட்களையும் அக்கால எகிப்திய கலாச்சார/எழுத்துக் குறியீடுகளையும் பொருத்திப் படித்து  – சிந்துவெளி எழுத்துகள் – சுங்கம், வாணிபம் தொடர்பான சங்கேதங்கள் மட்டுமே எனும் முடிவுக்கு வந்திருக்கிறார். ஒரு பவர்பாய்ன்ட் பேச்சும் கொடுத்தார். மண்டையெல்லாம் மூளைதான்.

பெரிய ஆஜானுபாகுவான உடல். என் வீட்டு நாற்காலிக்குள் அவர் பின்புறம் அடங்கவில்லை. கட்டுமஸ்தான புஜங்கள். ட்ரையாதலன் ஆசாமி. ஒரு அமெரிக்க வழக்குரைஞரும் கூட. குத்தியெடுக்கும் பார்வை.

“எப்படி என் முடிவு? சரிதானா சொல்!” என்றார், ஓங்கி என் முதுகில் ஒரு சந்தோஷ ஷொட்டு கொடுத்தபடி. எனக்கோ பயங்கர வலி. பொறாமை வேறு – ஆகவே ஆயிரம் நொள்ளை சொல்லலாமா என யோசித்தேன். என். ராம் அவர்களின் ஃப்ரன்ட் லைன் பத்திரிகையில் எவ்வளவு நாராசமான வாக்குவாதங்களைப் படித்திருக்கிறேன்! எவ்வளவு ஈபிடபிள்யு அக்கப்போர்களை ஆவலுடன் அசைபோட்டிருப்பேன். ஆக – அவற்றின்மூலம் பெற்ற பயிற்சியின் விளைவாகவாவது கொஞ்சம் நுணுக்கமான விமர்சனம் வைக்கலாமா என்றெல்லாம் நினைத்தேன்.

ஆனால் – நல்லவேளையாக, அவருடைய புஜபல பராக்கிரமத்தைப் பார்த்தபடி பலஹீனமான குரலில், “இதுவும் ஒரு ஆச்சரியகரமான புதிய பார்வைதான், வாழ்த்துகள்! பேராசிரியர் ராஜாராம் அவர்களைத் தெரிந்தவர் ஒருவர் இருக்கிறார் – தொடர்பு கொள்ளலாம்!” என்றேன். என் திராவிட தெகிர்யம் எல்லாம் இணையத்தோடு முடிந்துவிடும் விஷயம்தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?

இந்த சார்ல்ஸ், ஒரு புத்தகமும் (சிந்துவெளி + மனுஸ்ம்ர்தி பற்றியது) எழுதியிருக்கிறார் – இதனை ஒருவழியாக, சுமார் இருபது நாட்கள் முன்புதான் படித்துமுடித்தேன். இதற்கு வேறு ஒரு மதிப்புரை எழுதவேண்டும். சலிப்பாக இருக்கிறது. வேறு வழியில்லை.  ‘துக்ளக்’ பரக்கத் அலி போல மையமாக ஒன்றை எழுதிவிடவேண்டியதுதான்.
naegele_manu_bookcover

-0-0-0-0-0-0-0-

இப்படியாகத்தானே பத்ரி சேஷாத்ரி அவர்களின் 15 நவம்பர், 2014 தேதியிட்ட கட்டுரையான ‘சிந்து எழுத்துகளின் முன்-திராவிடத் தன்மை‘ என்பதை ஒருவழியாக இன்று படித்தேன்; இந்தக் கட்டுரை, பெருமைவாய்ந்த ஆய்வாளரான ஐராவதம் மஹாதேவன் அவர்களுடைய ஒரு சொற்பொழிவின் அழகான சாராம்சம்.

பின் அது சுட்டிய ஆய்வுக் கட்டுரையையும் ஒரு அவசரப் படிப்பு செய்தேன்.  இச்சமயம், பத்ரி சேஷாத்ரி அவர்களின் உழைப்பும், அவருடைய ‘செல்வங்களைக் கொணர்ந்திங்குச் சேர்க்கும்’  மெனக்கிடல்களும் என்னைத் தொடர்ந்து ஆச்சரியப் படுத்துகின்றன என்பதை இங்கு பதிவு செய்யவேண்டும். நன்றி அய்யா! :-)  நானாக இருந்தால் போங்கடா எனப் போய்க்கொண்டேயிருந்திருப்பேன். :-(

… எனக்கு ஐராவதம் மஹாதேவன் அவர்களையும் அவருடைய ஆராய்ச்சியையும் பிடிக்கும்தான். ஆனால் ரீபஸ் எனும் புதிர் போடும்/நீக்கும் முறை மூலமாக மட்டுமே இதனைப் பார்ப்பது என்பது கொஞ்சம் மிகையாகவே, அதர்க்கரீதியான குதித்தல்களைக் கொண்டிருக்கிறது எனப் படுகிறது. விஷயம் என்னவென்றால் – ரீபஸ் பற்றி கொஞ்சம் படித்திருக்கிறேன்; பொதுவாக நான், குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுதுபோக்குப் புதிர்களில் ரீபஸ் மேலான புதிர்கள் அதிகம்; கீழேயுள்ள புத்தகம் எனக்கு, இந்த விஷயத்தில் மிக உதவிகரமாக இருந்திருக்கிறது.

rebuses_bookcoverhttp://www.amazon.com/Rebuses-Readers-Pat-Martin/dp/0872879208

… அதேசமயம் இந்த ரீபஸ் சட்டகம் என்பது, சுமேரிய எழுத்துருக்களைப் புரிந்துகொள்ள கொடுத்துள்ள உந்துதல்களையும் உணர்ந்து புரிந்து கொண்டிருக்கிறேன்.  ஆனாலும், நான் ஐராவதம் மஹாதேவன் அவர்களின் ஆராய்ச்சிகளை மிகவும் மதிப்பவன் என்றாலும் – இந்த சிந்துவெளி எழுத்துகளுக்கான ரீபஸ் முறை விளக்கம் கொஞ்சம் அதிகமான கற்பனையைக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

“சிந்து மொழி முன்-திராவிடத்தை ஒத்தது” போன்ற (என்னைப் பொறுத்தவரை) திடுக்கிடவைக்கும் ஆராய்ச்சிமுடிவுகளெல்லாம் –  தரவுகளுடன் தருக்க நுணுக்கங்களுடன் அலசப்பட்டு நிறுவப்படவேண்டியவை. இல்லாவிடில் உணர்ச்சி ததும்பும் லெமூரியச் சுடுகாட்டில் இருந்து ஆவிகள் மேலெழும்பி மறுபடியும் நம் தமிழகத்தை நாறடிக்கவைக்கும் சாத்தியக் கூறுகள் அதிகமாகி விடும்.  இது பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதவேண்டும் என்றுதான் ஆவல். பார்க்கலாம்.

-0-0-0-0-0-0-0-0-

… இந்த சமயம் – 25 வருடங்கள் முன் யூஸ்நெட்டில் (USENET) வலம் வந்து, விழுந்து விழுந்து சிரிக்கவைத்த “ஸெலிஷ் மொழியைப் பெயர்த்துப் புரிந்துகொள்வது எப்படி’ எனும் அழகான ஆங்கிலப் பதிவினைப் படியுங்கள். :-)

இதற்கும் ஐராவதம் மஹாதேவன் அவர்களின் ஆராய்ச்சி முடிவுக்கும் முடிச்சு போடவில்லை என்றாலும்… ;-)

From: colin@rnms1.paradyne.com (Colin Kendall)
Newsgroups: sci.lang
Subject: Salish translation
Date: 17 Apr 89 14:31:35 GMT

In article <1765@arctic.nprdc.arpa>, harris@nprdc.arpa (Robert Harris) writes: 
> Are any of you familiar with the language of the Salish Indians,
> who reside, I believe, in Southern British Columbia?
> I'm going to reproduce the "words" below. If you have any
> idea at all of their meaning, please let me know.

First, the words have obviously been translated into Pig Latin at some
point. Undoing that, we have:

 (1) Yaynay hanay hay,		Nyay hhanay,
   Yahnay hanay, 		Nyah nha,
   Yahhay ay heenay,		Yyah nhee,
   Ahah nay hay.		Hahahnay.

 (2) Ahnay hay nay heenayNah nhaynayhee.

 (3) [Repeat group (1)]

 (4) Waynay hanay ahnay haynay Nway nha nah nhay
   Heeyah nay hayyuh		Nheeyah hayyuh

 (5) Repeat group (1)]

 Then, translating literally (with apologies; my Salish is slightly rusty):

 (1) Nyay hhanay,		No, it's not funny,
   Nyah nha,			Nyah-nyah,
   Yyah nhee, 		Nyah-nee,
   Hahahnay.			It's not funny.

 (2) Nah nhaynayhee.		No neigh.

 (3) [Repeat group (1)]

 (4) Nway nha nah nhay		No way, no, no, no.
   Nheeyah hayyuh		I need you. Hey, you!

 (5) [Repeat group (1)]


 And finally, freely:

 (1) I have a great sadness,
   So I insult you, seriously.

 (2) All my horses are gone.

 (3) [Repeat group (1)] 

 (4) I strongly deny it.
   I need your attention.

 (5) [Repeat group (1)]

 Hope this helps.

----END----

Thanks! http://alumni.media.mit.edu/~cahn/humor/4469 - என்ன அருமையான நகைச்சுவை இது! :-))


-0-0-0-0-0-0-0-

மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s