வாசகர்களுக்கு ஓர் நற்செய்தி!

ஒரு வழியாக, அட்டைப்படம் தயாராகி விட்டது – இதைச் சரி செய்வதற்குள் நான் உண்மையிலேயே நொந்து நூலாகிவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

இதோ அந்த அட்டைப்படம்:

Read the rest of this entry »

நானும் ஒரு ‘அக்கால’ தகவல்தொழில் நுட்ப வேலையாள் எனும் பின்புலத்தில் – மேற்கண்ட நான்கு பிரிவுகளிலும் இல்லாத ஐந்தாம் வர்ணத்தினரையும் அறிவேன். ப்ர்ஹ்மத்துக்கு, ப்ரபஞ்சத்துக்கு நன்றி.

இந்தப் பஞ்சமர்கள்தாம் ஐடி, இன்ஃபொர்மேஷன் டெக்னாலஜி கணினியியல் எனப் பலவாறு அழைக்கப்படும், ஆனால் தொடர்புள்ள துறைகளின் ஆதார சுருதிகள் – தொழில் நுட்ப நுண்மான் நுழைபுலம் காணல், தொடர்ந்து மகிழ்வுடன் மேம்படுத்திக்கொள்ளப்படும் அறிவுப்புலம், அயரா உழைப்பு, நேர்மை, மகத்தான குடிமை உணர்ச்சி, போற்றுதற்குரிய பொறுப்புணர்ச்சி, தொழில்தர்மம், விசாலமான பார்வை, விமர்சனங்கள் தாங்குதிறன், நேரமேலாண்மை, திட்டமிடுதல், தவறுகளைத் தொடர்ந்து திருத்திக் கொண்டுமேலெழும்புதல், தயாளகுணம், மற்ற துறைகளிலும் மேன்மையைப் பேணல், சுறுசுறுப்பு போன்றவை சார்ந்த பலகூறுகளில் ஜொலிப்பவர்கள்;  என் கணிப்பில், மொத்த ஐடி வேலையாட்களில், இவர்கள் அதிக பட்சம்,  5-8% இருந்தால் அதுவே மிகமிக அதிகம்.

இவற்றைச் சொல்வதில் எனக்குச் சந்தேகமோ தயக்கமோ இல்லவேயில்லை, மாறாக, பெருமை மட்டுமே! ஆம்,  இவர்களால்தான், இவர்களால் மட்டுமேதான் வண்டி ஓடுகிறது; காலாண்டுக்குக் காலாண்டு வளர்ச்சியில் வருமானம் தொடர்ந்து மேலெழும்பிக் கொண்டிருக்கிறது. இவர்கள் சராசரித்தனத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் குளுவான்கள் அல்லர்.

Read the rest of this entry »

இதன் முதல் பாகத்தில் (= நான் நாளொருபாகன், வேறொன்றுமில்லை) கீழ்கண்ட மூன்று விஷயங்கள் பற்றி எழுதப் பட்டன:

  • ஏன் நீங்கள்,  சென்னை புத்தகச் சந்தை தொடங்குவதற்கு முன்னால், என் புத்தகங்களில் ஒன்றையாவது  எரித்தேயாகவேண்டும்
  • எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் முன்னுரைதாங்கி வெளிவரும் ‘“உபபெருங்காயணம்” – சமையற்கலை நூல் பற்றிய குறிப்புகள்
  • சாரு நிவேதிதா அவர்களின் முன்னுரைகொண்டு வெளிவரும் – “பழைய இம்மைக்ரன்ட்” – புதினம் பற்றிய குறிப்புகள்

முதல் பாகம்.  இந்த இரண்டாம் பாகத்தில் –  என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஜெயமோகன், ஆஇராவேங்கடாசலபதி, யுவகிருஷ்ணா, வா மணிகண்டன், மருதன் ஆகியோரின் முன்னுரையோடு வெளிவர இருக்கும் மீதமிருக்கும் ஐந்து புத்தகங்களைப் பற்றிய விவரங்கள்… உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி.

ஆனால் மன்னிக்கவும். இந்த வருடம் கவிதைத் தொகுப்போ, சினிமா விமர்சனத் தொகுப்போ வெளியிடவில்லை.  என்னைப் போன்ற க்ரியாசக்தி ஊறிப்பொங்கும் ஒரு திராவிடப் படைப்பாளிக்கு இம்மாதிரி நிலை, மகத்தான வெட்கம் தரும் விஷயம்தான் – ஆனாலும், கவிதை, சினிமாவிமர்சனத் தொகுப்புகளையாவது – இவற்றை மட்டுமாவது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் எனப் பெரியமனதுடன் நினைக்கிறேன். ஆகவே மற்றவர்களின் கழுதைத் தொகுப்பு எதையாவது வாங்கிப் படித்தோ படிக்காமலேயோ, மகிழ்ச்சியாகத் தூக்கு மாட்டிக்கொண்டு சாகவும். Read the rest of this entry »