ஜிட்டு ‘கே’ கிருஷ்ணமூர்த்தி – சில குறிப்புகள்

17/02/2015

29 வருடங்கள் முன் – இந்த ஃபெப்ருவரி 17 அன்று 1986ல், ‘கே’ போய்ச்சேர்ந்தார்.

‘கே’ அவர்களை நான் ஓரளவு படித்திருக்கிறேன். அவருடைய கருத்துகளைப் பற்றிப் பலருடன் விவாதமும் செய்திருக்கிறேன் – மகாமகோ தருமு ‘ப்ரமிள் பானுசென்ரென்’ சிவராமு அவர்கள் உட்பட!

இதில், எனக்கு நினைவிலிருக்கும் ஒரு சுவாரசியமான விஷயம் – ‘கே’ சென்னையில் ஆற்றிய அவருடைய கடைசிச் சொற்பொழிவில் (4, ஜனவரி, 1986), தருமுசிவராமு அவர்களால் தேவைமெனக்கெட்டு ஏற்படுத்தப்பட்ட,  நம்பவேமுடியாத ஒரு சிறு சலசலப்பும் அடங்கும். நானும் என்னுடைய சில நண்பர்களுடன் அந்தச் சொற்பொழிவுக்குச் சென்றிருந்தேன்.  விக்கித்துப் போனேன். (இது ஒரு தனிக்கதை)

-0-0-0-0-0-0-0-0-

இதற்குமுன் ‘கே’ அவர்கள் 1983 வாக்கில் (என நினைக்கிறேன்!) நான் படித்துத்கொண்டிருந்த கல்லூரிக்கு வந்திருந்தார்; பிரதி புதன் கிழமையும் விடாமல் நடந்து கொண்டிருந்த (இப்போதும் நடந்து கொண்டிருக்கும்!) எக்ஸ்ட்ரா ம்யூரல் லெக்சர் வரிசைக்காக – அதாவது படிப்பு, பரீட்சைகளுக்கு அப்பாற்பட்டு பலவிதமான, சுவாரசியமான, முக்கியமான, அடிப்படைவிழுமியங்களைப் பற்றிய என, பலப்பல விஷயங்களைப் பற்றிய சிந்தனைகளை உள்ளடக்கும் சொற்பொழிவு வரிசை. அக்காலத்தில், இவற்றை மாணவர் சமூகமே ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தது.

சொற்பொழியும் மனிதர்களில் பலவிதமான வெளியாட்கள்/வெளிநாட்டார்கள் – பெரும்பாலோர் தத்தம் தொழில்களில்/துறைகளில் விற்பன்னர்கள், அறிஞர்கள், சான்றோர்கள். மிகப்பல, அற்புதமான திறப்புகளை, நான் இவற்றிலிருந்து பெற்றிருக்கிறேன் என்பதையும் நான் இங்கு பதிவு செய்யவேண்டும்.

பார்வையாளக் கேள்விஞானிக் குளுவான்களில் என்போன்ற ஏட்டறிவு அபரிமிதமாக இருந்து – உலகஞானம், அனுபவஅறிவு என்பதெல்லாம் துளிக்கூட இல்லாத அகங்காரத்தினால் வீங்கிய, திமிரில் மிதந்துகொண்டிருந்த இளைஞர்கள். ஆக. இக்கூட்டங்களில் சுவாரசியமான விவாதங்களுக்குக் கேட்பானேன்!

ஆனால் – ‘கே’ அவர்களுடையது ஒரு சொற்பொழிவாக இல்லை. முதலில் இருந்தே அதனை அவர் ஒரு உரையாடலாகத்தான் நடத்திக்கொண்டு போனார்.

நானும் ‘கே’ அவர்களுடன் விடாமல் உரையாடினேன்; ஆனால், அடக்கத்துடன், பண்புடன் தான் – நான் அதற்காக மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. உங்களால் இதனைப் புரிந்துகொள்ளமுடியும் என நினைக்கிறேன்! ;-) சுற்றிச் சுற்றி அவரும் நானும் கேள்விகளைக் கேட்க, என்னுடன் பல சகோதரக் குளுவான்களும் சேர்ந்துகொள்ள – ‘கே’ அவர்கள் பொறுமையாகக் கேள்விகளை (கண்ணீரில்லாமல்) வெங்காயம் போல அடுக்கு அடுக்காக உரிக்க – கூட்டம் ஒரளவுக்கு இனிதாகவே முடிந்தது.

… அக்காலங்களில்,  என்னிடம் பதில்கள் எக்கச்சக்கமாக இருந்தன. தளும்பல்களில் அலைபாய்ந்துகொண்டிருந்தேன். பின்னர், சிலகாலம் முன்புவரை பலப்பல கேள்விகள் மட்டுமே — சுலபமான பதில்களே இல்லாத சிடுக்கல்தன்மை நிரம்பிய அடிக்கடுக்கான கேள்விகள், கூட்டம்கூட்டமான வந்து மூளையை மரத்துப் போகவைக்கும் கேள்விகள்.

இப்போது?

(அப்போதைய என்னைப் பற்றி, இன்று நான் நினைத்தால், எனக்குக் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. அதேபோல, இப்போதைய என்னை, பலபத்து வருடங்களுக்குப் பின் வெட்கத்தோடு நினைவுகூறுவேனோ? அல்லது இதுதான் பரிணாம வளர்ச்சியென்பதா?)

-0-0-0-0-0-0-0-

பின்னர்,  அவருடைய பெரும்பாலான புத்தகங்களைப் படித்தேன். அண்மையில் கூட, சிலரிடம் இதுபற்றி விவாதித்தேன். தீப்பொறி பறக்க என்றெல்லாம் இல்லை – அமைதியாகத்தான். நல்லவேளை.

ஆனால், மகாமகோ தார்ஷ்டீன் வெப்ளன் அவர்களின் 1899 புத்தகமான ‘சொகுசு வர்க்கம் பற்றிய கோட்பாடு’  – The theory of leisure class எனக்கு அப்போதும் சரி, இப்போதும் சரி – மிகவும் பிடித்தமானது.  (இதன், ஒரு இலவச வடிவம் குடென்பர்க் தளத்தில் கிடைக்கிறது)

இதன் ஒரு இந்திய மறுபதிப்பு, வெறும் ரூ 225/-க்கு கிடைக்கிறது.

என்னுடைய செல்ல வினவு கும்பலில் இருந்து திராவிட இயக்கம் வரை பலரையும், இன்னும் பலவற்றையும், இதனூடே கொஞ்சம் அமோகமாகவே புரிந்துகொள்ளலாம்.

…அதனாலோ என்னவோ – பல வருடங்கள், எனக்கு, தத்துவம் ஆத்மவிசாரம் என்றாலே ஒரு ஒவ்வாமை, அலர்ஜி இருந்தது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். இந்த மனப்பான்மையிலிருந்து நான் பெரும்பாலும் மீண்டு வந்திருந்தாலும், இப்போதும் முருங்கைமரம் கிடைத்தால்…

‘கே’ அவர்கள், ஒரு ஒரிஜினல் தத்துவஞானி என்று அழைக்கப்படுவதில் எனக்குச் சில சங்கடங்கள் உண்டு. ஆனாலும் – எனக்கு அவரிடத்தில் பிடித்தது – எதையும் தொடர்ந்து, சுற்றிச் சுற்றிக் கேள்விகேட்கும் தன்மை, விடை கிடைக்கும் வரை ஓயாமல் பலதிசைகளிலிருந்தும் கேள்விகளை, அவற்றின் பின்புலங்களை  அணுகும் மனப்பான்மை.

மேலும் அவருடைய நேரிடைத்தன்மை வாய்ந்த, சிடுக்கலில்லாத எழுத்தும் எனக்குப் பிடிக்கும்.  ‘என்னை நீங்கள் பின்பற்றவேண்டாம்’  என நேரிடையாகச் சொன்னதும் பிடிக்கும்.

ஆனால், என்னால் புரிந்துகொள்ளவே முடியாதவை – பாபுஜி குறித்த அவருடைய கருத்துகளும், … இன்னமும் சிலவும். ஆனாலும் – இவை, ‘கே’ அவர்களின் அடிப்படைச் சிந்தனைகளின் நீட்டம்தான். அவருடைய எண்ணப்போக்குகளுடன் பெரும்பாலும் ஒத்திசைவுடன் இருந்தவைதான் இவை. அவை துருத்திக்கொண்டு நிற்கவில்லைதான்.

உலகத்தில் பல நல்ல விஷயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவருடைய வழிகாட்டுதலைக்கொண்டு, அவருடைய உலகப் பார்வையைச் சார்ந்து –  பல பள்ளிகள் – ஆழமான, அழகான மனிதர்களால் நடத்தப் படுகின்றன – ஒரு உதாரணம்.  ‘ரிஷி பள்ளத்தாக்கு’ அமைப்புகளில் ஒன்றான இன்னொன்று.

‘கல்வி’ என்பதன்  ‘குறிக்கோள்’ என்னவாக இருக்கக் கூடும்?

“One real goal of education is to leave a person asking questions.”

Max Beerhohm

ஹ்ம்ம்…

தொடர்புள்ள பதிவுகள்:

Advertisements

One Response to “ஜிட்டு ‘கே’ கிருஷ்ணமூர்த்தி – சில குறிப்புகள்”


  1. EML is a platform for the IIT Madras campus community to interact with speakers from diverse fields.

    The Extra Mural Lectures (EML) series was launched in the early 1980s by a group of enterprising students. EML sessions are in the form of lectures, debates and discussions around topics concerning the society and science. The series provides the students an opportunity to interact with highly accomplished and reputed speakers from diverse background, and hence promotes a culture of intelligent and thought-provoking discourse into matters relating to contemporary society.

    Over the years, the series has exposed the students of the Institute to lectures by extraordinary minds like A. P. J. Abdul Kalam, Y. V. Reddy, T. N. Seshan, V. S. Sampath, Montek Singh Ahluwalia, N. R. Narayanamurthy, Jeffrey Archer, and M. S. Swaminathan among many others

    Visit us at Facebook on : http://www.facebook.com/eml.iitm

    https://students.iitm.ac.in/eml/?page_id=31


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: