மைக்கெல் என்ரய்ட், ஹாலிவுட் நடிகர் – தற்போது கர்டிஸ்தானில், இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிராக… (+இலவசை இணைப்பு: தமிழ்சினிமா எனும் அற்பம்)

18/05/2015

முதலில், இலவசை இணைப்பு:

தமிழகத்தின் ஏகோபித்த பெரும்பண்பாட்டு வீழ்ச்சிக்கான, அடிப்படை மானுட விழுமியங்களுக்கு எதிரான, தமிழகத்தின் தத்துவாதாரக் காயடித்தல்களுக்கான திராவிட இயக்கங்களின் – தமிழர்களுக்கான பெரும்கொடை – இந்த உதிரித்தமிழ் திரைப்பட இயக்கம். இந்தக்  கடும் விஷச்சூழலையும் மீறி அவ்வப்போது, படைப்பின் ஊற்றுக்கண்கள் அடைக்கப்படாமல், சில சமயங்களில் சொல்லிக்கொள்ளப்படும்படியான செயல்பாடுகளின் வெளிப்படல்களும் ஏற்படுகின்றன என்பது, எனக்கு மாளா ஆச்சரியம் தருவது…

ஆனால், பெரும்பான்மைத் திரைப்படச் சூழல்கள், அறவே ஒதுக்கப்படவேண்டியவை என்பதில் எனக்கு ஐயமேயில்லை.

ஏனெனில்…

நம்முடைய பெரும்பான்மைத் தமிழ்ச் சமூகத்துக்கு, கேளிக்கையை கேளிக்கையாகப் பார்க்கத் தெரியவில்லை. கேளிக்கைதான் வாழ்க்கை என திராவிட இயக்கங்களால் நம்பவைக்கப்பட்டு – வாழ்க்கையையே கேளிக்கையாக்கிவிட்டார்கள், நம் கோமாளிக் கோமகன்கள். கலைக்கும் திரைப்பட வெளிப்படல்களுக்கும் ஒரு சுக்கு சம்பந்தமுமில்லை எனவாக்கி விட்டார்கள் – நம் ஃபார்முலா அல்லது டெம்ப்லேட் திரைக்காரர்கள்… உள்ளீடேயில்லாமல் சோகங்களையும் பாட்டுகளையும் சண்டைகளையும் ‘லவ்வு’களையும் காமெடி ட்ராக்குகளையும் மட்டும் வைத்து, 2-3 மணி நேரத்துக்கும் மனிதமூளையை இயங்காமல் செய்துவிடுகிறார்கள்!

தமிழகத்தில் படிப்பறிவு ஏறஏற (அய்யா, நம்முடைய புள்ளியியல் விவரங்கள் அப்படித்தான் சொல்கின்றன!) திரைப்படங்களின் ஆதிக்கம்  குறையும் என்று பார்த்தால் – இந்தத் திரைப்படப் பிதாமகர்களின் பின்னால் அலையும் ரசிகக் குஞ்சாமணிகள் எண்ணிக்கையும் வீரியமும் அதிகமாகிக்கொண்டேதான் வருகிறது…

நமது சிங்காரச் செல்லட் டமிள் நடிகர்களின் வாய்ப்பேச்சு வீரத்தையும், அட்டைக்கத்தியைச் சுழற்றுதலையும்,  ‘டமில் ஈனமானத்துக்காக’ குத்தாட்டம் போட்டு அமோகமாகப் போராடும் தன்மையையும், ஒரு நாளில் ஒரேயொரு வேளை உண்ணா விரதமிருந்து – வெறும் கூலிங்க்லாஸ் போட்டுக்கொண்டு கால்மேல்கால் போட்டு ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு மட்டுமே படுஸ்டைலாக  ‘தமிழ்’ ஈழத்தை வென்றதையும், காவிரியைக் கொணர்ந்ததையும் நாம் கண்ணாரக் கண்டுக் களிப்புற்றுள்ளோம் அல்லவா?

விஜய் போன்ற அரைகுறைகள் – தெனாவட்டாகவும், ஆபத்தில்லாமல் ஜாக்கிரதையாகவும் தமிழகத்திலேயே உட்கார்ந்துகொண்டு, ராஜபக்ஷவுக்கு ரத்தத்தைச் சுண்டவைக்கும் மிரட்டலையும் வீராவேச சவால்களையும் விட்டதை நம்மால் எப்படி மறக்கமுடியும்?

எவ்வளவு முறை கூத்தாடித்தனமாக –  நம்மைப் போன்ற தமிழ்சாதாரணர்களின் வரிப்பணத்தை தமிழகத்தின் அவ்வப்போதைய திராவிட அற்பஅரசுகள் மூலம் பிச்சையாகப் பெற்றுக்கொண்டு  ‘தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில்’ இந்த நடிகநடிகை கும்பல்கள் அரங்கேற்றிய ஆபாசங்களைக் கண்டு இறும்பூதடைந்துள்ளோம் நாம்!

… விசிலடிச்சான் குஞ்சப்பர்களாகிய நமக்கு, திராவிட இயக்கத்தால் மழுங்கடிக்கப்பட்ட மூளைகளைக் கொண்ட நமக்கு – மேற்கண்டவற்றைத் தவிர வேறென்ன பேறு வேண்டும், சொல்லுங்கள்? அப்படியே புல்லரித்துப் புல்லரித்து மூளைகளெல்லாம் செல்லரித்துப்போகும் வரையில் அப்படியொரு புளகாங்கிதம்தான்!

வாழ்க்கையே திரைப்படம். பேசுவதெல்லாம் திரைப்படவசனம். எண்ணுவதெல்லாம் திரைப்படம் பற்றி. பாட்டென்றால் திரைப்படப் பாட்டு. விமர்சனம் என்றால் திரைப்பட விமர்சனம். இசை என்றால் திரைப்படப் பின்னணி இசை. வேறு ஏதாவது பேசலாம் என்றால் திரைப்படக் கிசுகிசுக்கள் இருக்கவே இருக்கின்றன – குட்டி நடிகர் குசுவிட்டார்! ரசிகர்கள் முகர்ந்துமுகர்ந்து பார்த்து, ஆவேச உச்சங்களை அடைந்து, அந்தக் குசுவுக்கும் ஃப்லெக்ஸ் பேன்னர் வைத்து பாலாபிஷேகம் செய்வார்கள்!  திரைப்படத் திணை என்பது தமிழமூளையின் சர்வவியாபி. தமிழன் இதிலிருந்து எழுந்து வர சுமார் 1000 ஆண்டுகள் ஆகும்! உலகத்தில் வேறெங்காவது இப்படியிருக்கிறதா, சொல்லுங்கள்? நாம் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்.

இந்த அழகில் – நம் தமிழ் குஞ்சப்பனார்கள் பொழுதன்னிக்கும் எங்கேபார்த்தாலும் அரங்கேற்றும் புனித ஜிஹாத்துகள்: இளையராஜாவா ஏஆர் ரஹ்மானா? கமலா ரஜினியா? விஜய்யா குஜய்யா? அஜித்தா பஜித்தா? சூர்யாவா கீர்யாவா?  லிங்குசாமியா லிங்கில்லாதசாமியா? தொப்புளின் ஆழம் யாருக்கு அதிகம்? யார் தோல்நிறம் அதிக வெள்ளை?  யார் யாரை  ‘லவ்வு’ பண்ணுகிறார்கள்? திரைப்படத்துக்குத் தமிழில் பெயரா ஆங்கிலத்தில் பெயரா? ஆங்கிலப் படக்காப்பியா ஜப்பானியப் படக்காப்பியா? தியேட்டருக்கு முதல்வார கும்பல், இரண்டாம் வாரம் வரவில்லை; ஆனால்  இன்னொரு படத்திற்கு அப்படியே தலைகீழ்! என்ன ஆச்சரியம்!

மேலதிகமாக — மிஷ்கின் பம்ப்கினைத் திருடி தேங்க்ஸ்கிவிங் கொண்டாடினாரா அல்லது பம்ப்கின் தன்னைத்தானே கிண்டிக்கொண்டு மிஷ்மேஷ் முறையில் பரங்கிப்பழ ஹல்வாவைச் செய்து தமிழருக்குக் கொடுத்ததா எனும் சுவையான ஆராய்ச்சி! யுவகிருஷ்ணா தெலெகுப் படவிமர்சனமா அல்லது தமிழில் யுவுகிருஷ்ணாரீல் பற்றிய விமர்சனமா?? நம் ஆரோக்கியமான, உரையாடல்களுக்கு, கருத்தாக்கங்களுக்கு அளவேயில்லை!

மேற்கண்ட கழிசடை போக்குகளையாவது நாம் கண்டுகொள்ளாமல், ஒதுங்கிச் சென்று இகலோக வாழ்வில் உய்ய முயற்சிக்கலாம், ஆனால்…

இவற்றையெல்லாம் விட, என்னால் பொறுத்துக்கொள்ளவே முடியாத, நம் எதிர்காலத்தை நோக்கிய பயபீதி அளிக்கும்விஷயம் என்பது பொதுவாக ஊடகங்களினூடே தெரியவராத விஷயம்; நம் கிராமங்களில், சிறு நகரங்களில் அறியாப்பருவக் குழந்தைகளும், இளைஞர்களும், எதிர்காலப் பெற்றோர்களுக் – இந்த அயோக்கிய சினிமாக்காரர்களால், அவர்களை உருவாக்கும், உபயோகிக்கும் திராவிட இயக்கங்களால், அவற்றின் உறவுமுறைகளான தொலைக்காட்சிகளால் –  எப்படித் தொடர்ந்து துப்புறவாகக் காயடிக்கப் படுகிறார்கள் என்பதை நினைத்தால், கண்ணில் மட்டுமல்ல, என் ஆண்குறியிலும் உதிரம் சொட்டுகிறது…

மேற்கண்ட அனைத்துச் சிக்கல்களும், நம் கிராமப் புறங்களுக்கு என்றாகும்போது, மேலதிகமாக கனகோரத்துடன் வீரியம் கொண்டெழுகின்றன. மகத்தான சோகம் தான் இது.  நகர்ப்புறச் சமூகங்களில், சமூகப் பகுப்புகளில் சிறுகேடுகள் இருக்கின்றன என்றால், அவை கிராமப்புறங்களில் பெருங்கேடுகளாக உருமாறிவிடுகின்றன.  ஏனெனில் நகர்ப்புற அரைகுறைகளின் தாக்கத்து என்பது அப்படி – கிராமப்புற அரைகுறைகளுக்கு ஆதர்சம் இந்த முந்தையவர்கள்தாம்.

ஒரு எடுத்துக்காட்டாக – சீமான்சீமான் என்று ஒரு (இன்னொரு) எழுச்சித் தமிழர் இருக்கிறார் என்பதை – படுகேவலமான நான் முதற்கொண்டு பலரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.  ஆனால் அவருக்குக்கூட கனஜோராக வளர்ந்துவரும் பிராபல்யம் (அதாவது, எனக்குக் கொஞ்சமேனும் புரிபட்ட கிராமப் புறங்களில்) என்பது என்னைத் திகைப்படையவைக்கிறது. வெறும் வீராவேசப் பேச்சு (திராவிடத்தனம்) + திரைப்படப் பின்புலம் (தமிழத் தனம்) போன்றவற்றின் கூட்டணியால் எதுவுமே சாத்தியமாகுமோ? ஒரு விதமான ஆக்கபூர்வமான பணி செய்யவேண்டியதும் அவசியமேயில்லையோ?  ஒருவேளை என் பார்வைதான் சரியில்லையோ என்னவோ? அப்படியிருந்தால் எனக்கு மகிழ்ச்சிதான். (இப்போதைக்கு இவருடைய நீண்ட நாள்  நோக்கு வளர்ச்சியைப் பற்றி ஒன்றும் சொல்லமுடியாதென்றாலும், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என்றாலும் – இம்மாதிரி எதிர்மறைச் சக்திகளை உருவாக்க/ஊக்குவிக்க  திராவிடக் கருத்தாக்கங்களும், தமிழ்ச்சினிமா கந்தறகோளங்களும் ஆற்றும் பணி மகத்தானது என்பதில் எனக்கு ஐயமேயில்லை)

ஹ்ம்ம்… :-(((

எது எப்படியோ – நம் செல்லத் தமிழகத்தின் நெலிமி இப்டீ இருக்கையிலே… …

-0-0-0-0-0-0-0-

மைக்கெல் என்ரய்ட்  போன்ற ஹாலிவுட் நடிகர்கள்,  – வெறுமனே, நம் தமிழக நடிக/நடிகை/டைரடக்கர்களைப்போல தர்மாவேசப் பூச்சாண்டி காண்பிக்காமல் – தங்களுக்குப் பிடித்தைச் செய்வது பற்றிப் படிக்கவே அபூர்வமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.  இவர் டாம் க்ரூஸ், ஜாஹ்னிடெப் போன்ற முன்னணி நடிகர்களுடனெல்லாம் நடித்திருக்கிறார் போலிருக்கிறது.

நான் இவருடைய ஒரு படத்தையுமோ ஸீரியலையுமோ பார்த்தவனல்லன் என்றாலும் – இவருடைய சில ‘தொழில்முறை ரஷ்ய குண்டர்’ நடிப்புகளைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன்;  திரைப்பட ஆர்வல நண்பர் ஒருவர்,  இந்த மைக்கெல் ஒரு குறிப்பிடத்தக்க நடிகர் என்று சொல்லியும் ஏதோ சாக்குபோக்கு சொல்லி, இவர்  நடித்த ஒரு படத்தையும் பார்க்க முயற்சிக்கவில்லை. (இருக்கிற அற்புதங்களையே சுவைக்க நேரம் போதவில்லை, ஒரு பொழுதன்னிக்கும் நீண்டுகொண்டிருக்கும் நீளமான ஜாபிதா இருக்கிறது; இந்த அழகில் இதனையும் ஏன் சேர்த்திக்கொள்ள வேண்டும்?​)

ஆனால், வரும் நாட்களில்,  மைக்கேல் அவர்களின்  படங்களில் ஒன்றையாவது நான் பார்க்கலாமென்றிருக்கிறேன் – வான்டட் ஸ்ரியல் (2005)

ஏன்?

-0-0-0-0-0-

51 வயதான மைக்கேல் முன்பின் நிஜத் துப்பாக்கியைத் தொட்டிருக்காவிட்டாலும்  – மிகுந்த யோசனைக்குப் பிறகு, ஒரு நாள் ஹாலிவுட் திரைப்பட அண்டத்திற்கு டாட்டா சொல்லிவிட்டு கிளம்பி ஸிரியா போய் அங்கு கர்டிஸ்தானின் வைபிஜி வீரர்களுடன் சேர்ந்து – ஸுன்னிமுதல்வாத  இஸ்லாமிக்ஸ்டேட் அயோக்கியர்களை ஒழிக்கப் போய்விட்டார்.

டாம்க்ரூஸ் அவர்களுடன் மைக்கெல்

டாம்க்ரூஸ் அவர்களுடன் மைக்கெல்

இவரை உந்தியிருப்பது – மதவெறியோ, ரத்தக்களறியில் பங்கேற்கும் குரூர மனப்பான்மையோ அல்ல. ஸுன்னிமுதல்வாத  இஸ்லாமிக்ஸ்டேட்  கும்பலுக்கும் எதிராகப் போராடும் வைபிஜி தொழிலாளர் முன்னணியுடன் சேர்ந்து – அடிப்படை மானுடவிழுமியங்களுக்கு எதிராக மினுக்கிக் கொண்டலையும் மதவெறியர்களுடன் பொருதுவது மட்டுமே!

வேறெந்த சுயப் பிரகடங்களோ வீங்கடிக்கப்பட்ட பிம்பங்களோ இல்லை. ஒரு சாதாரண போர்வீரராக, தம் அடிப்படை மானுடக் கடமையையாற்றத்தான் சென்றிருக்கிறார்…

இவர் குறித்த முழுச் செய்தி இங்கே – ஆங்கிலத்தில் இருக்கிறது; அவசியம் படிக்கவும். மேற்கண்ட படங்கள் – அங்கிருந்து எடுத்தவைதான்!

இவர் சும்மனாச்சிக்கும் நம் திராவிடத்தமிழ் நடிகர்கள் போல ‘பிலிம்’ காட்டுகிறாரா, என நம்பகத்தன்மை மிக்க சில கர்ட் அறிமுகங்களிடம் (இருவர்) கேட்டேன்; அவர்கள் சொல்படி பார்த்தாம் மைக்கெல், நிஜமாகவே இன்னமும் கர்டிஸ்தானில் போரில் ஈடுபட்டவண்ணம்தான் இருக்கிறார்; ஒரு சாதாரண மனிதன் போல, அடிப்படை மானுட விழுமியங்களுக்காக விழைபவராகத்தான் – ஆகவே இஸ்லாமிக் ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிராகத்தான்.  தன்னை முன்னெடுத்துக்கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளவோ, சினிமா அதிமனிதர்கள் போல அசகாய சூரத்தனம் செய்து 1000 பேரே ஒரேசமயத்தில் மாய்க்கவோ முயலவில்லை என்பது எனக்கு ஊக்க போனஸ்!

இன்னொன்று: அவருடைய போர்முனையிலிருந்து அவர் உயிர்திரும்புவது ஒரு கேள்விக்குறியே. ஏனெனில், அவர் அணியினர் (எண்ணிக்கையில் அதிகமில்லை), ஒருசேர — இஸ்லாமிக் ஸ்டேட் + சுதந்திரஸிரிய ராணுவம் + ஸுன்னிகுறுங்குழுக்களை எதிர்த்துப் போராடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் இவர்களுக்கு துருக்கி தேசத்திலிருந்து கெடுபிடி, தினக் கொலைகள். தளவாடங்கள் வருவது தடைபடுவது என, பல பிரச்சினைகள்…

… கர்ட்கள் வெற்றிபெறவேண்டுமென்பது என் அவா. ஆனால் வெறும் வீரமும் தியாகமும் சுயஅர்ப்பணிப்பும் மட்டுமே – ஒரு அயோக்கிய மதவெறித்திரளுக்கெதிராக, வஹ்ஹாபிய நிதிவளமும், தளவாடபலமும் வெறியும்கொண்ட கும்பலுக்கெதிராகப் போதுமா என்றும் தோன்றுகிறது. :-(

எனக்குக் கடவுள் நம்பிக்கை வந்துவிடுமோ? :-((

-0-0-0-0-0-0-0-0-
தொடர்புள்ள கர்டிஸ்தான்/இஸ்லாம் பதிவுகள்:
Advertisements

One Response to “மைக்கெல் என்ரய்ட், ஹாலிவுட் நடிகர் – தற்போது கர்டிஸ்தானில், இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிராக… (+இலவசை இணைப்பு: தமிழ்சினிமா எனும் அற்பம்)”

 1. vijayaraghavan Says:

  அய்யா,
  நீர் வளர்ந்த விதம் எப்படியோ எனக்குத்தெரியாது. ஆனால் நான் பிறந்ததிலிருந்து, தாலாட்டும் சினிமா தான். ரோட்டில் சினிமா, பள்ளியில் சினிமா, கல்யாண வீட்டில் சினிமா, எழவு வீட்டில் சினிமா, அவ்வளவு ஏன் கண்ணடிப்பதிலிருந்து, காதலிப்பதிலிருந்து, ஒவ்வொரு உணர்ச்சியையும் எப்படி வெளிக்காட்டுவது என்பதை சினிமா மூலமாகத்தான் அறிந்தேன். சினிமா இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே அஞ்சுகிறேன். தமிழ்நாட்டில் சினிமாவைப் பார்த்து தான் சுதந்திரப் போராட்டமே தீவிரமடைந்தது என்ற உண்மை (?) யையும் நீர் மறப்பது சரியல்ல.
  இப்படி பிறப்பிலிருந்து ,இறப்பு வரை டமிளர் வால்வில் பின்னி பெடலெடுக்கும் அட்டைக் கத்தி ,
  வீரவஜன, டுப்பாக்கி புகழ் கீரோக்களை சர்வ சாதாரணமாக ,துச்சமாக, எச்சமாக நீர் இடையில் கட்டும் கச்சமாக, (கோவணம் என்றும் பாடம்), நினைப்பது தகுமா?
  சினிமா இல்லாத தமிழ் நாட்டை நினைத்துப் பாரும். சேது” படக் கதாநாயகனைப் போல (கடவுளே , உமக்குப் பிடிக்காத சினிமா உதாரணம் தான் வந்து தொலைக்கிறது) டமிளர் வாழ்வது தான் உன் விருப்பமோ? நீர் புத்தகம் படித்து பொழுது போக்குகிறீர். டாஸ்மாக் போகவும் , அரசியல் செய்ய (?) வும் தெரியாத என் போன்றோருக்கு சினிமாவை விட்டால் வேறு என்ன கதி? சொல்லும்………… சான்றோரே.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s