அரவிந்தன் கண்ணையன் அவர்கள் எழுதிய, முகாந்திரமேயில்லாத, அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவே முயற்சிக்காத ஆங்கில மேட்டிமைதொனி முன்முடிவுக் கட்டுரைக்கு பதிலாக – லாவணித் தமிழ்க் கட்டுரையொன்றை எழுதலாமா வேண்டாமா, எழுதினாலும் (எனக்கேகூட!) ஏதாவது உபயோகம் இருக்குமா என யோசித்துக்கொண்டிருந்தேயிருந்தாலும், குறிப்புகளையும்  எடுத்துக்கொண்டிருக்கிறேன்.

என் நண்பர் ஒருவரிடமும் இதன் அவசியமின்மை/அவசியம் பற்றி அறிவுரை கேட்டிருந்தேன். அவர் பதில் எப்போதும்போலவே சமனத்துடன் இருந்தது = ‘எழுதவேண்டுமென்றால் இப்படி எழுதலாம், ஆனால் அப்படி வேண்டாம்!’ அய்யா, நன்றி! :-) Read the rest of this entry »

இரண்டுமூன்று தினங்களுக்கு முன் பத்ரி அவர்களின் முக்கியமான, சரியான நேரத்தில் வெளிவந்த பதிவில் (= விண்வெளிப் பயணங்கள்) – அதன் பின்னூட்டங்களுக்கும் சேர்த்து – ஒரு விஸ்தாரமான பின்னூட்டமிட்டிருந்தேன். ஆனால் அது வெளிவரவில்லை/பதிக்கப்படவில்லை; ஏதாவது ஸ்பேம் முடக்கம் போன்ற காரணங்கள் இருக்கும். அல்லது ஐபி பேக்கெட்டுகளை, ஏதாவது வழித்தடப் பிசாசு (=டீமன்) உண்டு ஏப்பமும் விட்டிருக்கலாம்!

ஆனால் – அதற்காக,  என் மேலான கருத்துகளைத் தெரிவிக்காமல் இருக்க முடியுமா, சொல்லுங்கள்? ;-) Read the rest of this entry »

எஸ்ராபீடித்து ஜுரம் வந்தால்… … க்க்… தண்ணீர்… தண்ணீர்…. க்க் க்க்

விக்குபீடியனான எனக்கு இப்படித் தொண்டை வறண்டு விக்குகிறதே! யாராவது குடிப்பதற்கு நீர் கொடுத்துத் தொலைக்க மாட்டார்களா? க்க்…  க்க்

…வேதாளராமசாமியாகித் திரும்ப எஸ்ராமுருங்கமரம் ஏறினால்தான் தாகம் தீருமோ? விக்கல் போகுமோ?? எம்குறை அகலுமோ??? பிறவிப் பயனை அடைவேனோ????

…நண்பர் மொஹெம்மத் அவர்கள், கீழ்கண்ட பின்னூட்டத்தை இட்டிருக்கிறார்:

ராமசாமி சாருக்கு மிக்க நன்றி.மிக விரிவான சிந்திக்க வைக்க கூடிய பதிவு.நான் நீங்கள் சொல்வது போல் அரைகுறைதான்.போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம் தான்.கேள்விப்பட்ட சில விசயங்களையும் சொல்லிவிட்டேன்.முழுக்க நம்பிக்கை சார்ந்தவன் தான்.ஆனால் இஸ்லாமை அறிந்து கொள்ளவும் முயன்று கொண்டிருக்கிறேன்.

Read the rest of this entry »

அதாவது: மொஹெம்மத் நபி அவர்களின் வழி நடத்தலில் ஒரு ‘சிங்கப்பூர்’ மொஹெம்மத் போன்ற மனிதரெல்லாம் உருவாக முடியும்  என்றால் ராமசாமியாக நான், வெறும் ஒரு அப்துல்லாவாகப் பதவியிறக்கம் பெறமுடியாதா என்ன?  :-)

இது சென்ற பதிவின் (=இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (6/n) 18/08/2015) தொடர்ச்சி. அதாவது – இஸ்லாம் வரலாற்றுச் சூழல், ஒரு எதிர்வினை: சில விரிவான குறிப்புகள் (7/n) Read the rest of this entry »

இந்தப் பகுதி: இந்திய முஸ்லீம் சமூகத்தின் ஏகோபித்த சுயலாபபழமைவாத அரசியல்/சமூக/மதத் தலைமை, அது எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்: சில குறிப்புகள்  (6/n) என்றறிக. இந்த வரிசையில் முதற் பகுதி: 1/n; இரண்டாம் பகுதி: 2/n; மூன்றாம் பகுதி: 3/n; நான்காம் பகுதி: 4/n. ஐந்தாம் பகுதி: 5/n.

கொர்-ஆன், இஸ்லாம் மத ஸ்தாபகர் மொஹெம்மத் நபி அவர்கள், அக்கால அரேபியச் சூழ்நிலை போன்ற விஷயங்கள் பற்றிய என் குறிப்புகளுக்கு ‘மொஹெம்மத்’ எனத் தன்னை அழைத்துக்கொள்ளும் அன்பர் ஒருவர் பின்னூட்டம் இட்டிருக்கிறார். ஆனால், என் வழக்கம்போல அங்கேயே பதிலிடாமல், உரையாடலின் அவசியம் கருதி,  தனியாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.

Read the rest of this entry »

இன்று ஆகஸ்ட் 16 –  சரியாகப் பதினொன்று வருடங்களுக்கு முன், மனித நேயம் மிக்கவரும், பண்பாளரும் ஆன ‘சின்ன பாலா‘ அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட தினம்.

Read the rest of this entry »