அய்யாமார்களே! இது ஒரு துர்சொப்பனமும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்தெறிந்து யோசித்து, மண்டைகாய்ந்து, தருக்கபூர்வமாக அதி நுண்கணிதச் சமன்பாடுகளையும், குறியீட்டுப் படிமவியலையும் கலந்தடித்து, நான் அடைந்திருக்கும் மகாமகோ முடிவுதான் இது!

என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(

சரி.  இந்த முடிவுக்கு நான் எப்படி வந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும் இதனை விளக்கத்தான் போகிறேன். கவலை வேண்டேல்!
Read the rest of this entry »

Long ago, lost in the twirling mists of the memories past,  I wrote a series of rants on ‘talkers and doers‘ – more with a sense of disgust towards myself than with others… The links to the updated versions of the series are at the bottom of this offending post, for your edification.

…and pardon my soliloquy. (you can look at the other meanings/connotations too!)

JournalEntry# October 30, 2008 + updated on 28th September, 2015

I have long since come to the conclusions (not that they are a great revelation or whatever) that:
Read the rest of this entry »

புர்ராமகிருஷ்ண டாம் மாமா மஹாத்மியம் தொடர்கிறது.  ஆம், விடாது வெறுப்புக்கசப்பு! :-(

இஸ்லாமிக்ஸ்டேட் குண்டர்களின் கழுத்தறுப்புகளை விட மோசமான  மொழியறுப்புகளைச் செய்து தனித்துவம் மிளிரக் காட்சிதரும் பெருந்தகைகள், பலப்பலர், தமிழைக் கூறுபோடும் நல்லுலகில் இருக்கின்றனர்.  அவர்களை அவ்வப்போது படித்து, நான் புளகாங்கிதம் அடைவதும் உண்டு.

…ஆனால், இப் பெருந்தகைகளில், என்னுடைய தற்கால மகாமகோ செல்லம், மகாமகோ எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே! எனக்கு இதில் ஐயமேயில்லை என்றாலும் கொஞ்சம் பயமாகவே இருக்கிறது என்று தனக்குத்தானே நான் நினைத்துக் கொள்வதை ஆயிரம் ஆண்டுகளாக ஒத்திசைவு பார்த்து மௌனமாகச் சலித்துக்கொள்கிறது. அந்த எழவு இப்படிச் சலித்துக்கொள்வதைப் பார்த்து நான் எனக்கு நானே… !

Read the rest of this entry »

பாவிகளே! நீங்கள் நாசமாப் போக!!

என்னை நிம்மதியாகவே இருக்கவிடமாட்டீர்களா… :-((

Read the rest of this entry »

(அல்லது) ங்கொம்மாள, போட்றா ஸார்க்கு ஒரு புர்ராட்டா!
(அல்லது) புர்ராவும் டர்புர்ராவும்
(அல்லது) நவீன புர்ராணம்

நான்கைந்து வருடங்களுக்கு முன் நான் இந்தச் சிறுகதையைப் படித்த படுபாவத்தைச் செய்தவுடன், எனக்குக் கடும் இருதயவலி வந்து, நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வாசக மாக்களுக்கு நினைவில் இருக்கலாம்.

Read the rest of this entry »

(எச்சரிக்கை: கீழ்கண்ட சிறுகதையைக் குறித்த மிகமுக்கியமான குறிப்பு, கதையின்/தங்களது முடிவில் இருக்கிறது)

ஒரு பிற்பகலில் ஸஹாரா போய் இறங்கினேன். மணல் தெரியாத அளவு பகல் நிரம்பியிருந்தது. ஒளிரும் வெளிச்சங்கள் கூட மின்மினி பறப்பது போலதானிருந்தது. நல்ல வெயில்.  உள்ளாடையை மீறி உடம்பு வியர்த்த கொண்டது. பாலை வனங்கள் யாவும் ஒன்று போலவே இருக்கின்றன.
Read the rest of this entry »

சுமார் இரண்டரை  வருடமுன்பு எழுதிய பதிவைப் படித்தால், இதன் பின்புலம் கிடைக்கும்: களப்பணி மூலம் முஸ்லீம்களுக்கு வெறுப்பை (மட்டும்) ஊட்டுவது எப்படி? (26/02/2013)

அப்பதிவின் முடிவில் இப்படி எழுதியிருந்தேன்:

இந்த விஷயத்தில் மூன்று கேள்விகளை மட்டுமே நான் என் சொந்த அனுபவம் சார்ந்து, என்னால் இதுவரை செய்யமுடிந்த சில கோமாளித்தனமான விஷயங்கள் சார்ந்து எழுதலாம் என்றிருக்கிறேன். (வாழ்க்கையே ஒரு பெரிய நகைச்சுவைதான்!)

  1. முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி?
  2. முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?
  3. எதற்கெடுத்தாலும் முஸ்லீம் இளைஞர்களைக் குறி வைத்துத் தொந்திரவு செய்கிறார்களா, காவல் துறையினர்? அப்படியா என்ன? என்ன நடக்கிறது?

பின்னர், நேரம் கிடைக்கும் போது, என் அனுபவத்திலிருந்து, முஸ்லீம் சமூகத்துக்கு பிற சமூகத்தினர் ஆற்ற வேண்டிய, ஆற்றக் கூடிய கடமைகள் / விஷயங்கள் என்ன (= காதலிப்பது) என்பதையும், ஏன் அப்படிச் செய்யவேண்டும் என்பதையும், அச்சமூகம் எப்படிச் சில விஷயங்களை எதிர்கொள்ள வேண்டும் எனவும், ஒரு சமூக-மானுடவியல் மாணவனாக,  ஒரு காதலனாக (கொஞ்சம் அதிகப் பிரசங்கித்தனமாகவே) எழுதலாமென்றிருக்கிறேன். (எனக்கு வெறிதான், சந்தேகமே இல்லை)

-0-0-0-0-0-0-

இதில் முதலாவதை, சுமார் 1.5 வருடங்கள் முன் எழுதினேன்  ( = முஸ்லீம்களுக்கு வீட்டினை வாடகைக்கு விடுவது எப்படி? 10/02/2014 )

இதில் இரண்டாவதை இந்தப் பதிவு வரிசையில் எழுதுகிறேன்: முஸ்லீம்களுக்கும் மேலதிக வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்குவது?

Read the rest of this entry »