திமுக வாரிசுப் பிரச்சினை தீர்ந்தது: முக அழகிரியின் மனைவியாகிவிட்டார் ஸ்டாலின்!

30/09/2015

அய்யாமார்களே! இது ஒரு துர்சொப்பனமும் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு தலைமுடிகளையும் பிய்த்தெறிந்து யோசித்து, மண்டைகாய்ந்து, தருக்கபூர்வமாக அதி நுண்கணிதச் சமன்பாடுகளையும், குறியீட்டுப் படிமவியலையும் கலந்தடித்து, நான் அடைந்திருக்கும் மகாமகோ முடிவுதான் இது!

என்னிடம் எல்லாவற்றுக்கும் பக்கா ஆதாரமிருக்கிறது, சரியா? கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைத்தால் நடத்திக்காட்டாத விஷயம் ஒன்றுமே இல்லைதான் – பலஹீனத்துடன் இதை ஒப்புக்கொள்வதை விட்டால் எனக்கு வேறுவழியேயில்லை! :-(

சரி.  இந்த முடிவுக்கு நான் எப்படி வந்தேன் என நீங்கள் கேட்காவிட்டாலும் இதனை விளக்கத்தான் போகிறேன். கவலை வேண்டேல்!

-0-0-0-0-0-0-

முக அழகிரி அவர்களின் மனைவி பெயர் = காந்தி  —  சமன்பாடு (1)

Screenshot from 2015-09-30 19:51:18ஆதாரம்: அழகிரி அவர்களின் வலதுபுறமிருப்பவர், அவரது மனைவி காந்தி

மோஹன்தாஸ் கரம்சந்த் அவர்களின் பொதுவாக அறியப் படும் பெயர் = காந்திசமன்பாடு (2)

Screenshot from 2015-09-30 20:03:02ஆதாரம்: மஹாத்மா காந்தி சிறு வயதில் வெறும் மோஹன்தாஸ்-ஆக இருந்தபோது எடுக்கப்பட்ட படம்.

சமன்பாடுகள்  1, 2 தீர்க்கப்பட்டால்,   எஞ்சுவது:

முக அழகிரி அவர்களின் மனைவி  = காந்தி   — சமன்பாடு (3)

ஸ்டாலின் அவர்கள் ஜீன்ஸ்,  சப்பளாங்கால், ஸ்னீக்கர் போட்டுக்கொண்டு சுற்றுவது = ராட்டை   — சமன்பாடு (4)

Screenshot from 2015-09-25 17:23:42ஆதாரம்: பதவி இல்லாததால் ஆட்டையைப் போடாமல், தமிழ் நாட்டையும்  ராட்டையையும் சுற்றும் ஸ்டாலின் படம்

இந்தியாவைச் சுற்றிச் சுற்றிவந்த  காந்தி சுற்றுவது = ராட்டை சமன்பாடு (5)
 Screenshot from 2015-09-30 20:13:47

ஆதாரம்: துளிக்கூட வெட்கமேயல்லாமல், ஜீன்ஸ் போட்டுக்கொள்ளாமல், ஏன், சட்டைகூடப் போட்டுக்கொள்ளாமல் மார்பகத்தை ஆபாசமாகக் காட்டிக்கொண்டு, சுதந்திரம் வாங்கித்தருகிறேன் என்று ரீல் சுற்றும் காந்தி படம்.

சமன்பாடுகள் 4, 5 – ராட்டை எனும் பொதுக்காரணி நீக்கப்பட்டுத் தீர்க்கப்பட்டால், எஞ்சுவது:

ஸ்டாலின் = காந்திசமன்பாடு (6)

இப்போது சமன்பாடு 3ஐயும் 6ஐயும் தீர்த்தால் கிடைப்பது:

முக அழகிரி அவர்களின் மனைவி  = ஸ்டாலின்

QED.

-0-0-0-0-0-0-

இப்போது அழகிரி-ஸ்டாலின் தம்பதிகளின் திருமணம்+மணவாழ்வு சார்ந்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் உள்ளபடியே எருமையடைகிறேன்.

Screenshot from 2015-09-25 17:24:48ஆட்டோவில் மருமகள் அழைப்பு: சந்தோஷத்தில் டாடா காட்டும் மணமகள்!

Screenshot from 2015-09-30 19:56:52

மருமகன் அழைப்பு: மாலை அணிவிப்பவர் நெப்போலியன். மற்றபடி, பிற விருந்தினர்கள் – சர்ச்சில், ஹிட்லர், ஸ்டாலின்(ஒரிஜினல்), ஐஸன்ஹோவர், ஹிரோஹிடோ, லெனின், அம்பேட்கர், புத்தர், மஹாவீரர், ராஜராஜசோழன் போன்றவர்கள் பின்னால் நின்றுகொண்டிருக்கிறார்கள்; உற்றுப் பார்க்கவும்.

Screenshot from 2015-09-30 20:47:09காசி யாத்திரை: குடையுடன் கிளம்பும் மணமகன்!

Screenshot from 2015-09-30 19:54:23கன்னத்தில் முத்தமிட்டால்: மணப்பெண் கன்னத்தைத் தடவிக்கொண்டும், மாப்பிள்ளை உதட்டைக் குவித்துக்கொண்டும் இருக்கும் அன்னியோன்னியமான படம். ஆ பாசம்!

Screenshot from 2015-09-30 19:54:50புதுப் புடவையில் மினுக்கும் மணப்பெண். பக்கத்தில் புது மாப்பிள்ளை!

Screenshot from 2015-09-30 19:57:48

ஒரே சமயத்தில் மணமகனுக்கும் மணமகளுக்கும் –  ஒரு சேர,  தகப்பனாகவும் மாமனாராகவும் இருக்க, ஒரு மனிதன் எவ்வளவு புண்ணியம் செய்திருக்கவேண்டும்!

ஆனால் ஒரே சமயத்தில் பல படங்களுக்குத் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டே, முழு நேர முதலையமைச்சராகவும் இருந்த கருணாநிதி அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்லை என, இதயம் இனிக்க, கண்கள் பனிக்கச் சொல்லிக் கொள்கிறேன்.

வாழ்க மணமக்கள்!

வாழ்க களவுடன்!!

-0-0-0-0-0-0-

திமுகவின் வாரிசுப் பிரச்சினை இவ்வளவு புத்திகூர்மையுடன் தீர்க்கப்பட்டுவிட்டதால் (என்னே கலைஞரின் அரசியல் சாணக்கியம்!) சர்வ நிச்சயமாக அடுத்த முதலையமைச்சர் திருமதி ஸ்டாலின் அழகிரி அவர்கள்தான் என்பதை நினைத்தால், திராவிட இயக்கம் பெண்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து புளகாங்கிதத்தை அடைவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை!

திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!)
Advertisements

5 Responses to “திமுக வாரிசுப் பிரச்சினை தீர்ந்தது: முக அழகிரியின் மனைவியாகிவிட்டார் ஸ்டாலின்!”

  1. shiva Says:

    Sir,

    For your safety I kindly request you to remove this post.
    Though it seems you are not scared of maniac DMK goondas, sometimes they can be extremely unpredictable.
    “அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்”.

    In these days of extreme scarcity of rational people in Tamil Nadu,
    we don’t want you to fight with idiots.

  2. A.Seshagiri. Says:

    சிவா சார் கருத்துதான் எனது கருத்தும்.நீங்கள் தேவையே இல்லாமல் சில சமயங்களில் எல்லை மீறுகிறீர்கள் எனத்தோன்றுகிறது.கவனம் (தங்கள் நலன் கருதி.)

  3. Anonymous Says:

    Ram, don’t wrestle with pigs

  4. ஆனந்தம் Says:

    மாய யதார்த்தவாதம்ங்கிறாங்களே, அது இதானா நைனா?

  5. பொன்.முத்துக்குமார் Says:

    ஐயோ கடவுளே, விழுந்து புரண்டு சிரிக்க தோணுவதை ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: