(அல்லது) ஒரு சுக்குத் தேவையுமில்லாமல், ஒரு சலிக்கவைக்கும் என்ஆர்ஐ(NRI)தனமான அரைகுறைப் பார்வையுடன் இந்தியாவைத் தொடர்ந்து மட்டம் தட்டுவது எப்படி…

முகாந்திரம்:  அக (=அரவிந்தன் கண்ணையன்) அவர்கள், என்னுடைய  இஸ்ரோ தொடர்பான குறிப்புகளின் மீது விமர்சனம் வைத்து ஒரு ஆங்கிலக் கட்டுரையை, சிலபல உள்முரண்களுடனும் விலாவாரியாக எழுதியிருக்கிறார்கள். அவருடைய பொன்னான நேரத்தைச் செலவுசெய்து அறிவுரைகள் பலவற்றையும் ஊக்கபோனஸாக வழங்கியிருக்கிறார்கள். கண்ணீர் மல்க முதற்கண், நாத்தழுதழுக்க முதல்நாக்கு, அவருக்கு நன்றி பலவற்றைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
Read the rest of this entry »

எனக்குப் பிடித்தமான – சுந்தர ராமசாமி அவர்கள் எழுதிய ஜேஜே: சில குறிப்புகள் எனும் புதினத்திலிருந்து:
1.3.1943: அறிய ஆவல் இல்லவே இல்லை. எட்டிப் பார்க்கிறார்கள். ஒட்டுக் கேட்கிறார்கள். எதை எதையோ. திருநக்கரை மகாதேவர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் திருவிழா வெகு சிறப்பாக நடை பெறுகிறது. எனக்குத் தெரிந்து ஒரு க்றிஸ்தவன் கூட ஆர்வத்தினாலோ, குறுகுறுப்பினாலோ, அறிந்துகொள்ளும் ஆவலினாலோ, அழகுணர்ச்சியினாலோ, அல்லது வேடிக்கையுணர்வினாலோ அங்கு போய் எட்டிப்பார்த்ததாகத் தெரியவில்லை. (பக்கம் 158, முதற் பதிப்பு 1981)

எனக்கு சமயம் வாய்க்கும்போதெல்லாம்,  குறிப்பிட்ட சில விஷயங்களை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்று தெரிந்துகொள்வதற்காகவும் அல்லது சிலவிஷயங்களை அனுபவித்தேயாகவேண்டும் என்ற பேராசை காரணமாகவும் – பலப்பலமுறை  சர்ச்களுக்கும் கோவில்களுக்கும் சென்றிருக்கிறேன். பலமுறை யூதர்களின் ஸினகாக்குகளுக்கும், பௌத்த விஹாரங்களுக்கும், மசூதிகளுக்கும், ஜைனக் கோவில்களுக்கும், குருத்வாராக்களுக்கும் – ஒரேயொரு முறை பார்ஸீகளின் நெருப்புக் கோவிலுக்கும் சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமான அழகு. சடங்குகள் வெவ்வேறு, பிரார்த்தனைச் சட்டகங்கள் வெவ்வேறு. ஆனால் எல்லாவற்றிலும் ஒருவிதமான திருப்தியளிக்கும் ஒத்திசைவு.

Read the rest of this entry »

ஒவ்வொரு முறை எம் இனமானத்தலைவர், சுயபச்சாதாபப் பிலாக்கணம் வைக்கும்போதும் – ஏதாவது அப்பட்டமான உண்மையை வாய் தவறிச் சொல்லிவிடுகிறார்.  ‘என் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல ஒருமாதிரித் தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, கல் நெஞ்சினனான என்னையேகூட திடுக்கிடச் செய்துவிடுகிறார்.

Read the rest of this entry »

(அல்லது) ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!

…நேற்று எனக்கு, அர்விந்த் கண் மருத்துவமனை செல்ல வேண்டியிருந்தது. இதன்குறிப்பாகவும் ஒரு பிரமிப்பில் மூழ்கிய நான், என் அனுபவங்களைச் சார்ந்து அதைப் பற்றி ஜொலிப்போதிஜொலிப்பாக எழுதலாம் என்று பார்த்தால், ‘எதிர்மறை உலகம்‘  புகழ் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் நினைவு வந்து பேதி பிடுங்கிக் கொண்டு விட்டது! :-(

ஏனெனில், இதற்கும் ‘ஒத்திசைவு ராமசாமியும், ஒத்திசையாத அரவிந்தும்: எப்படி இதைப் பற்றி எழுதக்கூடாது என்பதற்கான ஒரு பாலபாடம்‘ என்று ஒரு முழநீள ஆங்கிலக் கட்டுரையைப் படிக்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்படுமோ என்கிற ஒரு பாதுகாப்பு உணர்ச்சிதான்!

ஆகவே, என் அரைகுறைக் குறிப்புகளையும் அரவிந்தனைத்த எதிர்வினைகளையும் சேர்த்து, அவருடைய பாதார விந்தங்களில் சமர்ப்பித்து என்னை நானே உய்வித்துக்கொள்ள முயல்கிறேன்… நன்றி.

Read the rest of this entry »