‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ குஞ்சாமணிகள்: ஜேஎன்யு சிறப்புப் பதிப்பு

20/02/2016

ஒரே நகைச்சுவைதான் போங்கள். :-(

ஆனால் பாவம், சில நண்பர்கள், இந்த கந்தறகோள நிகழ்வுகளைப் பார்த்து, மிகவும் கவலைப்பட்டு, ‘ஏன் இப்படியாகிறது’ என்று அங்கலாய்த்திருக்கிறார்கள். எனக்குப் போய் கடிதம்கிடிதம் எல்லாம் எழுதியிருக்கிறார்கள். தேவையா? நான் என்ன எல்லாம் தெரிந்த ஏகாம்பரனா? அல்லது ஞானிநியா? முற்றும் துறந்த அம்மணனா? திகம்பர சாமியாரா? எப்படி இருந்தாலும், எனக்கு என்னைப் பற்றியே கவலைப்பட நேரமில்லைவேறு. இருந்தாலும், ஏதோ ஜாலிலோஜிம்கானா எனத்தான் சலித்துக்கொண்டு வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருக்கிறேன்…

ஆனால் இவர்கள் பாவம், இந்த ப்ரொடெஸ்ட்களையெல்லாம் பெரிய விஷயம் போல நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்;  நம்முடைய செல்லங்களான (பெரும்பாலான) இளைஞர்களுக்கு – அவர்களுடைய பாவப்பட்ட தகப்பன் செலவில், நம் வரிப்பணத்தின் பிச்சையில், அவர்கள் உயிர்வாழ்ந்துகொண்டு இருப்பதால் –  நன்றி மறவாத தன்மையுடன்,  நம் சமூகத்தின்மீது கரிசனம் இருக்கவேண்டும் போலவும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்…  (இம்மாதிரி கவலைப் படுபவர்களுக்கெல்லாம் ஒரு உடனடி வேக்ஸிநேஷன் அருமருந்து – இம்மாதிரி இளைஞர்களுடன் கொஞ்ச நேரமாவது கழிப்பது, அவர்கள் பேசுவதைக் குறுக்கிடாமல் கேட்பது – முடிந்தால் ‘நேர்காணல்’ செய்கிறேன் என்று இம்மாதிரி ஆசாமிகளுடன் உரையாட முயற்சிப்பது இன்னபிற… அய்யா சாமீ! இதையெல்லாம் ஒருமுறையல்ல, பலமுறை செய்துவிட்டு பயங்கரமாக நொந்துபோனபின்னர்தான் இப்படி எழுதிக் கொண்டிருக்கிறேன், சரியா?)

சரி. இந்தப் பாவப்பட்ட ‘நாம் எங்கே போகிறோம்?’ ஜீவன்களுக்கெல்லாம் நம் செல்லத் தமிழகம் சார்ந்த நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நான் மறுபடியும் நினைவுறுத்தக் கடமைப் பட்டிருக்கிறேன்; அஃதாவது: தமிழக வார்ப்பு ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ குஞ்சாமணிகள் அனைவரும் ஒருங்கிணைந்து ஸ்ரீலங்கா பிரச்சினையை ஒரேவாரத்தில் (சுமார் மூன்று வருடங்கள் முன்) வீராவேசத்துடன், சுயஅர்ப்பணிப்புடன் சுமுகமாகத் தீர்த்ததைத்தான் குறிப்பிடுகிறேன்.  இதனைப் பற்றி நான்கூட மாங்குமாங்கென்று புகழ்ந்து எழுதியதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். (எப்படியும், மண்டையில் அடித்துக்கொண்டு அவற்றி சுட்டிகளைக் கொடுக்கிறேன் – இந்தத் தொகுப்புகளில், தமிழக ‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ குஞ்சாமணிகள் பற்றிய என் ஆச்சரியங்கள் இருக்கின்றன: 1)  தமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்? ஹ்ம்ம் ?? 2)  போங்கடா, இதுதாண்டா *&#@! பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை) 3)  திராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை!) )

இந்தியாவில் சமூக நிகழ்வுகள் என்பவை பெரும்பாலும் நகைச்சுவைகளின் தோரணம்தான். நமக்கு எல்லாமே கேளிக்கைதான் – இந்தப் பதிவு உட்பட; ஆனால் நகைச்சுவை இன்றேல், வாழ்க்கை மிகவும் வெறுத்துவிடும் என்பதும் (எனக்கு)உண்மைதான்!

…ஆக, நாளை நடக்கப்போகும் இன்னொரு போக்கத்த ப்ரொடெஸ்ட் என்பதும் முதல் நகைச்சுவை நிகழ்வல்ல. அதுதான் கடைசி என்று நம்மால் சோகப்படவும் முடியாது. அதேபோலத்தான் ஜேஎன்யு நகைச்சுவையும். கவலை வேண்டேல். நமக்கு இம்மாதிரி எதிர்மறை விஷயங்களிலெல்லாம், நெடிய போக்கத்த பாரம்பரியம் இருக்கிறது. (ஆனால் பிற நேர்மையான பாரம்பரியங்களும் இருக்கின்றன; ஒரு காலத்தில் பாபுஜி பல உண்மையான போராட்டங்களை நடத்தினார்; அண்மைய காலங்களில் (=’எமர்ஜென்ஸி’) அவற்றை ஜெயப்பிரகாஷ் நாராயணன் நடத்தினார்… அதற்குப் பிறகு திராவிடர்கழகக் காரர்கள் பூசாரி வேலை அனைவருக்கும் வேண்டும் எனத் தொடர்ந்து மெய் நோக்காமல், கண் குஞ்சாமல் போரோதிபோராடிக் கொண்டிருக்கிறார்கள்… சட்டென்று வேறெந்த திக போங்காட்டமும் நினைவுக்கு வரவில்லை, மன்னிக்கவும்!)

இன்னொரு விஷயம் என்னவென்றால், நாம் அப்பாவித்தனமாக – நம்முடைய செல்ல இளைஞர்கள் அனைவரும் கல்லூரிகளுக்குப் போவது கல்விக்காக, ஒரு தேர்ச்சி பெற்ற குடிமகனாக உருவாவதற்காக எனவெல்லாம் ஒரு பிரமையில் இருக்கிறோம். அவர்கள் அரசியலில் ஈடுபட்டால் அரசியல் மேன்மையடையும் எனவொரு மனப்பிறழ்வில் இருக்கிறோம்.  இப்படிப்பட்ட பிரமைகள் இல்லாவிட்டாலும்,  ஜேஎன்யு போன்றவை நம்மூர் பச்சையப்பன்,  நியூகாலேஜ், நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ், ப்ரெஸிடென்ஸி காலேஜ் போல ரவுடிக்கும்பல்களால் ஆக்கப்பட்டவையல்ல என இன்னொரு பிரமையில் இருக்கிறோம். ஆனால் உண்மையென்னவென்றால் – ஜேஎன்யு குளுவான்களில் பலரும், நம்மூர் ப்ரெஸிடென்ஸி கல்லூரி மாணவகுண்டர்கள் போல ‘ரூட் பஸ்’ வ்கையறா புற நானூற்று வீர விஷயங்களில் ஈடுபடும் அளவினர்தான் – ஆனால் அவர்களுடைய மேற்பூச்சு என்பது வேறு. பொதுவாக நன்றாக ஆங்கிலம் பேசுவார்கள் – ஊடகப்பேடிகளுக்கு ஏற்ப நடனமாடுவதும் அவர்களுக்கு வெல்லம்.

மேலும் புர்ச்சி கிர்ச்சி போராட்டம் என்றெல்லாம் வக்கணையாகப் பேசிவிட்டு, ஏதாவது பெரிய பன்னாட்டு நிறுவன வேலைகீலை கிடைத்தால், போராட்டத் தட்டிகளைக் கடாசிவிட்டு, சோறுகண்ட இடமே சொர்க்கலோகம் என ஆனந்தமார்க்கத்தில் ஈடுபடுவார்கள்; ஆகவே, ஒப்புக் கொள்ளவேண்டும் – ஜேஎன்யு பையன்களின் திரியாவரம், பச்சையப்பன்களை விடக் கொஞ்சம் அதிகமே!

-0-0-0-0-0-

எப்படா எந்தக் கேவலம் நடக்கும் என நாய்கள் போல (என்னருமை நாய்களே, என்னை மன்னித்து விடுங்கள் – ஒரு பேச்சு வழமைக்காக இப்படி எழுதிவிட்டேன்! எனக்கு உங்கள் மேல் மிக்க மதிப்பும் மரியாதையும்உண்டு! LOL! )  அலையும் ஊடகங்களால் ஊதி ஊதிப் பெருக்கவைக்கப்பட்ட, கொம்பு சீவிவிடப்பட்ட நிகழ்வுகளில், அவற்றின் தொடரும் அவலங்களில் ஒன்றுதான் இந்த ஜேஎன்யு நிகழ்வுகளும். கேமரா எதிரில் வந்தால் எவனுமே நடிகன்தாண்டா!

இந்த ஊடகப்பேடிகள் – இதைச் செய்தால், ஏன் அதைச் செய்யவில்லை என்பார்கள். ஆனால், அதைச் செய்தேனே என்றால் ஏன் அதனை  முன்னமே செய்யவில்லை எனக் கேள்வி கேட்பார்கள். எல்லாவற்றையும் செய்தால், அதெல்லாம் சும்மா, ஏன் எதிர்காலத்தில் இந்த இன்னொரு விஷயத்தைச் செய்யத் திட்டமேயில்லை என்று மடக்குவார்கள்! அடப் பாவிகளா, முன்னமே அதையும் செய்திருக்கிறேனே என்றால், இல்லை அது பொய் என்பார்கள்; அய்யய்யோ, இதோ இருக்கிறதே அதற்கான ருசு என்றால், அதைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். ருசுவா முக்கியம் அவர்களுக்கு? அந்த அயோக்கியர்களுக்கு ஊடகக் குசுதானே முக்கியம்? மேலும் அவர்கள் படுபிஸியாக அடுத்த அக்கப்போருக்குப் போகவேண்டுமே ஐயா! நீங்கள் தரும் தருக்க ரீதியான விளக்கங்களை அறிந்துகொள்ளக்கூட, அவர்களுக்கு ஏது நேரம்! வேகமய்யா வேகம்! ப்ரைம் டைம் அய்யா, ப்ரைம் டைம்! டிஆர்பி அய்யா, டிஆர்பி ரேட்டிங்!!

பப்பரப்பா அலைகளில் நம் கூறுகெட்ட ‘காமன் மேன்’களைத் தத்தளிக்க வைப்பதையே, தலையாய பணியாகக் கொண்டுள்ளவர்கள்தாம் இந்த ஊடகப் பேடிகள்.

ஆகவே.

நாட்டில் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கின்றன; அவற்றில் ஒன்றையாவது ஓரளவுக்காவது புரிந்துகொண்டு, அதன் ஒரு சதவீதத்தையாவது நம்மால் ஒரு நேனோமீட்டராவது அசைக்க முடியுமா எனப் பார்க்காமல், அரைகுறை முதிராவிடலைகளின் – அவர்கள் ஜேஎன்யு காரர்களாக இருந்தாலும் சரி, அல்லது ஐஐடிகாரர்களாக இருந்தாலும் சரி – அவர்களுடைய அடாவடித்தனங்களின் மீது நம் கவனத்தைக் குவித்தல் சரியேயில்லை என நினைக்கிறேன். இப்படிக் குவிப்பதற்கு மேற்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு – இந்த பக்கம்தான் சரி, அந்தப் பக்கம் சரியில்லை, அந்தப் பக்கம் ரொம்ப ஒழுங்கா, நீ ரொம்ப யோக்கியமா என்றெல்லாம் கேட்டு நமது முடை நாற்றமெடுக்கும் அழுக்குத் துணிகளை ஆனந்தமாக மற்றவர்கள் மேல் வீசியெறியவேண்டிய அவசியமேயில்லை எனவும்தான்!

என்னை உடனடியாகக் கரித்துக்கொட்டி, ஒரு அவநம்பிக்கைவாதி எனச் சட்டகமொன்றில் அடைத்தாலும் பரவாயில்லை. நான் சொல்கிறேன், இந்த ஜேஎன்யு அலையும் கடந்துவிடும். கவலை வேண்டேல்.

அவசரமாகக் கருத்துதிர்த்து (சகிப்புத்தன்மை, மனிதவுரிமை, தேசபக்தி, சுதந்திரம், தந்திரம் என்கிற ரீதியில் – கண்ணையாக்களை ஆதரித்தோ காதைய்யாக்களை கரித்துக்கொட்டியோ, மூக்கையாக்களுக்கு முட்டுக்கொடுத்தோ, வாயைய்யாக்களுக்காக வாய்தா வாங்கியோ) நம்  நேரத்தை வீணாக்கவேண்டிய அவசியமேயில்லை.

என்னைப் பொறுத்தவரை – நாம் இந்த போராட்ட வகையறாக்களை அளவுக்கு மீறி பொருட்படுத்தி, ஊடகப் பேடிகளின் பப்பரப்பாக்களிடம் நம்மை அறியாமலேயே, மூளையை அடகு வைத்துவிட்டுச் சரணடையும் மனப்பான்மையை விட்டொழித்தால்தான் நமக்கு விமோசனம். பரந்த படிப்பறிவோ, சமூகத்தின்மீது அக்கறையோ, தம் குடும்பங்களின்மீது கரிசனமோ இல்லாத ஸெல்ஃபி தலைமுறையிடம், ‘ஏனப்பா, உருப்படியாக எதையாவது செய்யக்கூடாதா?’ என்று கேட்பது நம்மை மூளையற்றவர்கள் என நமக்குநாமே சொல்லிக்கொள்வதற்கு ஒப்பானது.  அதாவது – பர்க்காதத், ராஜ்தீப் ஸர்தேஸாய், அனன்யா வாஜ்பேயி, தீஸ்தா சீதளவாத், மல்லிகா ஸாராபாய் போன்ற அறிவுலகப் போராளிப்போலிகளிடம், அடிப்படை நேர்மையை எதிர்பார்ப்பது போன்றது.

அவர்களுக்கு இந்த போராட்டம் இல்லையேல் இன்னொரு போராட்டம். அந்தப் போராட்டத்துக்கு எதிர்ப் போராட்டம். எதிர்ப் போராட்டத்துக்குச் சதிர்ப் போராட்டம். சதிர்ப் போராட்டத்துக்கு ஊடகக் குதிர் குட்டிச்சுவர்கள் போராட்டம் எனத் தொடரும்… இவற்றையெல்லாம் நாம், இடக் கையால் புறமொதுக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். நம்மை முன்னேற்றிக் கொள்ளவேண்டும்…

இல்லாவிடில், நாம் தொடர்ந்து இந்த வியாதியால் (=JNUtitis) பீடிக்கப்பட்டு அல்லாடினால் – நேரவிரயத்தால் நம் வாழ்க்கையும் வீண்; ஊக்க போனஸாக, நம் ஆரோக்கியமும் பாதிக்கும். நமக்கு இது தேவையா?

-0-0-0-0-0-0-

சரி. ஜேஎன்யு தொடர்பான நகைச்சுவை (=அனைத்து)  நிகழ்வுகளிலேயே, எனக்குத் தெரிந்தவரை, தலைசிறந்த (=Head specialized ©எஸ்.ராமகிருஷ்ணன்) நகைச்சுவை (=Jewelry taste ©எஸ்.ராமகிருஷ்ணன்) என்பதை நான், என் தோழியும் முழுநேரத் தொழில்முறை ப்ரொடெஸ்ட்வாலாவுமான ஸாகரிகா கோஷ் அவர்களின் ட்வீட் ஒன்றுக்குத் தான் கொடுப்பேன்.

Inline image 1

என்னுடைய வரைமுறையேயற்ற மரியாதைக்குரிய மகாமகோ ஸாகரிகா அம்மணியின் வளமான கற்பனைக்கு அளவேயில்லை. அம்மணியார் அவர்கள், இந்த எல்எஸ்இ (லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்) நிறுவனத்தையும் ஸர்பான் (இது பொதுவாக, ஒரு பாரிஸ் நகரக் கட்டிடத்தையும், அதிலிருந்து பணிபுரியும், (எனக்குத் தெரிந்தே)ஆறேழு பல்கலைக் கழக அலுவலகங்களையும் குறிக்கிறது; பலவாண்டுகளுக்கு முன்னர் பாரிஸ் பல்கலைக்கழகமாக இருந்ததின் பேரக் குழந்தைகள் இவைகள்!) ஒன்றே போலக் கருதுவதையே விடுங்கள் – பலப்பல பத்தாண்டுகளாகத் தரம் வாய்ந்த கல்விசாலைகளாக இருக்கும் இவை இரண்டையும், போயும்போயும் இந்த ஜேஎன்யு-வுடன் பொருத்திப் புளகாங்கிதம் அடைவதைப் பார்த்தால் எனக்குச் சகிக்கமுடியவில்லை. Sorry.  #IndianIntolerance, what else!

இந்த வெள்ளைக்காரக் கல்விச்சாலைகளின் ஆழமும், வீச்சும் வேறு. அதில் உள்ள பேராசிரியர்களின் நிலையும் வேறு. அவைகளில் வலதுசாரி, இடதுசாரி என்றெல்லாம் முத்திரை குத்தப்பட்டு, தொழில்முறை அறிவுஜீவிகளால் உளறிக்கொட்டப்படும் அனைத்து வகையறா குருக்களும் இருக்கிறார்கள். ஆனால் அப்பிரிவினைகள், நம்மூர் போலவேயல்ல. போராட்டம் என்றாலே முத்திரை குத்திக்கொண்டு மினுக்கும் சிவப்பும் அல்ல. அதற்கு எதிராட்டம் என்றாலே, பழமைவாதம் எனப் புளுகப்படும் காவியும் அல்ல. (நான் வெள்ளைக்காரர்களையும், அவர்களுடைய நிறுவனங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆராதிக்கும் மூடனல்லன்;  கடந்தகாலங்களில் எல்லாவிதமான அயோக்கியத்தனங்களையும் அவர்கள் செய்திருந்தாலும் – அவர்களுடைய தற்கால குடிமைப் பண்பை, உரையாடல்களை வளர்த்தெடுக்கும் தன்மையை நான் மிகவும் மதிக்கிறேன் – ஆனால் புல்லுருவிகள், அரைகுறைகள் அங்கும்தான் இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான்! எது எப்படியோ, ஒருவேளை, அங்கு பின்னவர்களின் விழுக்காடு கொஞ்சம் குறைவோ?)

…ஆகவே, என் துணிபு என்னவென்றால் – இந்த மகாமகோ பேரண்டத்திலேயே, ஜேஎன்யு-வுக்கு இணை என்பது ஜேஎன்யு தான்; அது மட்டமேதான்! இதுவும் நம் பாரதத்தில்தான் இருக்கமுடியும் – ஆகவே இருக்கிறது என்பதில் எனக்கு அளவிலா மகிழ்ச்சியே!  ஆனால் – என் மார்பு விம்மிப் புடைத்து எழவு, சாதாரண நிலைக்கு வராமல், நேற்றிரவெல்லாம் ஒரே வலி. :-(

…விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே, இந்த ஸாகரிகா ட்வீட்டின் சுட்டியை எனக்கு அனுப்பியவன் – 1979ல் படிப்பை முடித்த பழைய ஜேஎன்யு ஆளும், இப்போது உயர்பதவி  ஐஏஎஸ் அதிகாரி ஒருவனாகவும் இருக்கும் ஒரு துரோகி. இவனைப் போன்றவர்கள், அக்கால ஜேஎன்யு நிகழ்வுகளையும் இக்கால நடப்புகளையும் (=’one day in the life of JNUprotestwallah’) பகடி செய்து நடித்துக்காட்டும்போது சிரிப்புசிரிப்பாக வரும். :-((

ஆனாக்க பஸ்ங்க்ளா… ஸுஸ்ஸீல் ஆரனோட அவ்ளோ பெரீய்ய கட்ரைல, அம்ணிக்கு இந்த ப்ரேன்ட் எழவு வெவகாரம் தாண்டா கண்ல பட்ருக்கு டா!

Inline image 2

ஸிர்ச்சி, ஸிர்ச்சி வவுறு வெலிக்குதேடா! B-) ஸாகரிக்கா கோஸ்டம் தாங்க முடிய்லயேடா!

இந்த ஜேஎன்யு அமர்க்களங்கள், ஊடகங்களினால், ஊடகங்களுக்காக, பப்பரப்பாவுக்காக, ப்ரேன்ட் எழவுக்காகத்தான் நடத்தப்படுபவை என்பதற்கு ஒரு தன்னிலை வாக்குமூலம்தான் மேற்கண்ட காட்டுரை!

-0-0-0-0-0-0-0-

…நான் மிகவும் மதிக்கும் அம்மணிகளில் ஒருவரான மதுகிஷ்வர் (மது பூர்ணிமா கிஷ்வர் – சில குறிப்புகள் 15/07/2013) போன்றவர்களெல்லாம் படித்த ஜேஎன்யு-வின் வீழ்ச்சி சாமானியமானதல்ல. கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்டிருக்கும் இந்த வீழ்ச்சிக்கு, படிப்பறிவற்று, பொழுதன்னிக்கும் போராட்டத்தைத் தேடியலையும் கம்யூனிஸ்ட் வகையறா தொழில்முறை ஆர்பாட்டக்குளுவான்களும், அதன் பெரும்பாலும் கூறுகெட்ட பெத்தபேராசியர்களும்தாம் பொறுப்பு என்பதில் எனக்கு ஐயமேயில்லை. (தற்போது, இந்த ஜோதியில், பொறுத்தது போதும் பொங்கியெழு மகனேயென்று சிலபல ‘ஹிந்துத்துவ’ அமைப்புகளும் ஐக்கியமாகியிருக்கின்றன. நமது மேலதிகக் கேளிக்கைக்குக் கேட்பானேன்!)

சரி. நம் வரிப்பணம் பலவழிகளில்  வியர்த்தமாகிறது, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஃபார் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் (MIDS=கஞ்சா கடை) என்றெல்லாம் பம்மாத்துகள் நடக்கின்றன. அதன்கூட இந்த ஜேஎன்யுவும்  பத்தோடு பதினொன்று, என விட்டுவிடவேண்டியதுதான்.

கவலை வேண்டேல். இன்னிக்கு போராட்டம்னா நாளக்கி டீவி. நாளக்கி டீவின்னாக்க, நாளன்னிக்கு ஸோஷியல்மீடியா பொங்கல். நாளன்னிக்கு சமூகவலைத்தளப் பப்பரப்பா என்றால் அப்பால, இன்னொரு எடத்துல இன்னொரு #பிரச்சின, அத்தொட்டு அங்க போராட்டம்…

டேய் போராட்டக் குளுவான்களா, ஏதாவது ஒண்ணையாவது உருப்படியா பண்ணுங்கடா… வொங்க்ளோட கோமாளித்தனத்த பாத்து ஸிர்ச்சி ஸிர்ச்சி வவுறே வலிக்குதுடா, ஸோமாறீங்க்ளா…

வாழ்க போராட்டம், வளர்க போங்காட்டம்!

வீழ்க கல்வி, ஓங்குக ஊடகப்பேடித்தனம்!!

நன்றி.
Advertisements

15 Responses to “‘ஸ்டூடென்ட் ப்ரொடெஸ்ட்’ குஞ்சாமணிகள்: ஜேஎன்யு சிறப்புப் பதிப்பு”

  1. gopi Says:

    nirmala sitharaman is also a jnu alumni

  2. kavi Says:

    அன்புள்ள ராம்,
    கடைசி வரை எது பிரச்சனையோ அதை விடுத்து , வேறு எல்லாவற்றையும் பற்றி எழுதுகிறீர்கள் :(

    கோர்ட் வாசல்ல வச்சி அடிச்சு இருக்காங்க…இது வரை அவர் செய்த குற்றம் என்ன? Protest செய்வது குற்றமா?

    <<நம் வரிப்பணத்தின் பிச்சையில், அவர்கள் உயிர்வாழ்ந்துகொண்டு இருப்பதால்
    சுத்தமா புரியல.. Students படிப்பது தவிர வேறு எதுவும் செய்ய கூடாதா ?

    Protest செய்வது மூலம் பிரச்சனைகள் உடனே தீரப் போவது இல்லை.. ஆனால் அதன் மூலம் குறைந்த பட்சம் ஒரு விவாதம் நடக்குமே.
    பாபுஜி சுதந்திரம் கிடைத்து ஒரு பத்து வருடம் உயிரோடிருந்தால் , அந்த கால கட்டத்தில் கூட அவர் ஏதாவது போராட்டத்தில் ஈடுபட்டிருப்பார். Freedom alone is not his destination.


    • அய்யா, எனக்கு இம்மாதிரி ப்ரொடெஸ்ட்களில் நம்பிக்கையே இல்லை; சொல்லப்போனால் இவற்றை வெறுக்கிறேன். ஆனால் அவர்கள் பாணியில் ப்ரொடெஸ்ட் கேளிக்கைகள் செய்துகொள்வதில் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.

      சர்க்கஸ்களில் கோமாளிகள் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துகொள்வார்கள். போராடுவார்கள். பொளேர் என்று அடித்துக்கொள்வார்கள். குட்டிக்கரணம் அடிப்பார்கள். நாமெல்லாம் சிரிப்போம். அவர்கள் அடிவாங்குவதற்கு நான் ப்ரொடெஸ்ட் செய்யமாட்டேன் – ஏனெனில் அவர்கள் நம் கேளிக்கைக்காகத்தான்அதனைச் செய்கிறோம் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள், பாவம். அந்த அளவில் தான் இந்த ஜேஎன்யு நடவடிக்கைகளைப் பார்க்கிறேன். மேலும் இந்த கேளிக்கைகளின் பின்னுறைந்திருக்கும் arrogant sense of entitlement என்பதையும் unlimited sense of irresponsibility என்பதனையும் பார்க்கிறேன்.

      நான் ஜேஎன்யு பற்றி ஓரளவுக்கு அறிவேன். எனக்கு அதன் இக்கால (~கடந்த 15-20 ஆண்டுகளாக) மாணவர்களிடம் மதிப்பே இல்லை. மன்னிக்கவும்.

      இதுவும் கடந்துவிடும். நன்றி.


    • இன்னொரு விஷயம்; நானும் ப்ரொடெஸ்ட் (குடிக்கு எதிராக, ரௌடிகளுக்கு எதிராக, தேர்தல் நாள் ஊழல்களுக்கு எதிராக, ஜாதிவெறிக்கு எதிராக) என்றெல்லாம் பலமுறை செய்திருக்கிறேன். நன்றாக அடி உதையும் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறேன். நான் அஹிம்ஸாவாதியும் அல்லன் – எனக்கு அநீதியாக உதை கொடுக்கப்பட்டபோது பதிலளிக்கவும் முயன்றிருக்கிறேன்.

      ஆனால், எனக்கு இவற்றால் கொஞ்சம் வருத்தமும் உடல்வலியும்தான் மிஞ்சியதே தவிர, கழிவிரக்கம் இல்லை. என்னை யாரும் ஆதரித்து அறிக்கை விடவேண்டும் என்று அலறவில்லை. இது ஒரு பெரிய விஷயமும் இல்லை. புலம்பவேண்டிய அவசியமும் இல்லை.

      ஆனால், நான் பிரபலமாகவேண்டும், ஊடகங்களுக்கு முன் உளறவேண்டும் என்று ஒரு எழவையும் செய்ததில்லை. மன்னிக்கவும்.

  3. nparamasivam1951 Says:

    என்ன சார், பாதி படிக்கவே முடியவில்லை. எந்த ஊர் தமிழ் சார்? ஆயினும் ஒருவாறாக புரிந்த வரையில், ஜேஎன்யூ மிக படு பாதாளத்திற்கு சென்று விட்டது, இதில் இடதுசாரிகள் பங்கு மிக மிக அதிகம், என தெரிகிறது. ஆசிரியர்கள் மாற்றம், வயதான மாமா மாணவர்கள் வெளியேற்றம், ஓசியில் தங்கி இருக்கும் அரசியல்வாதிகள் வெளியேற்றம்…..என சிலவற்றை செய்யலாம் என்பது என் எண்ணம். சரியா தவறா…தெரியவில்லை.

  4. poovannan73 Says:

    நமக்குள்ள விட்ட குறை தொட்ட குறையா இருக்குதே சார் ஸ்டுடென்ட் protest

    ஏதோ என் பங்குக்கு.பல ஹிந்துத்வா வாதிகள் கிட்டே கேட்டேன்.பதிலே கிடைக்கல.நீங்களாவது………

    தேசபக்தி பொங்கி வழியும் மனிதர்களை கொண்ட கட்சி மத்தியில் ஆட்சியில் இருப்பதால் நாடெங்கும் மாணவர்களுக்கு பல பிரட்சினைகள் உருவாகி இருப்பதை பார்க்கிறோம். எது தேச பக்தி என்று முடிவு செய்யும் அதிகாரம் (ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சியோ )எப்போதும் சங்க பரிவாரங்கள் இடமே இருப்பதால் பரிவாரங்களை நோக்கி சில கேள்விகள்.

    அரசியல் சட்டத்தில் இருக்கும் எவற்றை எதிர்த்தால் தேச துரோகம்.எவற்றை எதிர்த்தால் தேச பற்று. 370 ஐ எதிர்த்தால் தேச துரோகமா தேச பற்றா

    அரசியல் சட்டத்தில் இருக்கும் இட ஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் போராடினால் தேச பற்றா தேச துரோகமா

    அரசியல் சட்டத்தை மாற்ற கோருவது,திருத்தங்கள் செய்வது தேச பற்றா தேச துரோகமா

    தனி மாநிலம் கோரி போராட்டங்கள் செய்வது தேச பற்றா தேச துரோகமா (உத்தர்காந்து டெலெங்கானா போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள் தேச துரோகிகளா ,தேச பற்று பொங்கி வழிபவர்களா )

    தங்கள் தாய் மொழியில் கல்வி,வினாத்தாள்கள் வேண்டும் என்று போராடுபவர்கள் தேச துரோகிகளா

    அரசியல் சட்டம் அனுமதித்த art 29 மைனோரிட்டி கல்வி நிலையம் நடத்தும் உரிமைகளை நீக்க வேண்டும் என்று போராடுவது தேச துரோகமா

    அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு தரும் அதிகாரமான கோவில்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் அறநிலையத்துறை உருவாக்கத்தை எதிர்ப்பது தேச துரோகமா

    அரசியல் சட்டத்தில் இருக்கும் எதையும் யாரும் எதிர்க்க கூடாது எனபது பரிவாரங்களின் கருத்தா.இது இதை எதிர்க்கலாம் ,இதை எதிர்க்க கூடாது என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறதா அல்லது பரிவாரங்களிடம் எதை எதிர்த்தால் தேச துரோகம் என்று தீர்ப்பு சொல்லும் அதிகாரம் /உரிமை /கடமை இருக்கிறதா

    காஷ்மீரை பற்றிய முடிவை காஷ்மீரிகள் எடுப்பார்கள்.அது தான் சரி,ஞாயம் எனபது தேச துரோகமா

    தவறான தீர்ப்பு,அநியாயமாக ஒரு நிரபராதி தண்டிக்கபட்டான்/முக்கிய குற்றவாளிகள் சிக்காததால் அகப்பட்ட ஒருவனுக்கு ,குற்றவாளிகளுக்கு சிறு உதவிகள் செய்த காரணத்துக்காக குற்றத்துக்கு தகுந்த தண்டனை தரும் தீர்ப்பாக இல்லாமல் வேறு யாரும் மாட்டாததால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று சொல்வது தேச துரோகமா

    • க்ருஷ்ணகுமார் Says:

      \\ ஏதோ என் பங்குக்கு.பல ஹிந்துத்வா வாதிகள் கிட்டே கேட்டேன்.பதிலே கிடைக்கல.நீங்களாவது………\\

      ஸ்ரீமான் பூவண்ணன் அவர்களுக்கு ஸ்வாகதம். ஸுஸ்வாகதம்.

      இன்னிக்கி காத்தால காக்கா கத்தின போதே நெனச்சேன். பூவண்ணன் சார் வரணுமேன்னு. இப்படி நிராயுதபாணியா வரது மட்டும் சரியில்ல. அவ்வளவு தான்.

      ராம் கேக்க மறந்தாலும் நான் நிச்சயமா கேப்பேன். இந்த ஸ்டூடெண்ட் வார் டேன்ஸ் (= போர் + ஆட்டம்) பற்றி நீங்கள் ஒரு வ்யாசம் எழுதுவதாக ப்ரதிக்ஞை செய்திருந்தீர்கள். அது எங்கே எங்கே என்று அலுக்காம நிச்சயமா கேழ்ப்பேன்.

      வார் டேன்ஸாய ஸ்வாஹா. ஃப்ளெக்ஸ் தட்டியாய ஹும்பட். இப்படி ஸ்டூடண்ட்ஸை (= அப்பன் பணத்தில் குத்தாட்டம் போடும் தமிழக மக்கு மாணவர்களை) நீங்கள் அம்போன்னு விட்டு விடுவது நெசமாலுமே ந்யாயமில்லை.

      \\ அரசியல் சட்டத்தில் இருக்கும் எவற்றை எதிர்த்தால் தேச துரோகம். \\

      விவாதத்திலேயே இல்லாத விஷயத்தை விவாதத்தில் இருப்பது போல் பாசாங்கு செய்வதும் முக்யமாக விவாதிக்கப்பட வேண்டிய விஷயத்தை நைஸா சாய்ஸ்ல விடுவதும் பூவண்ணன் சாருக்கு புதுசா? என்ன கொஞ்சம் மாட்டுக்கறி கோத்ரம் நு உங்கள் ரெகுலர் ஃபார்முலா சேத்திருந்தா கொஞ்சம் காரம் சரியா இருந்திருக்கும்.

      தேவரீர் முன்வைக்கும் பல விஷயங்கள் ஜே என் யூ விவாதத்தில் இல்லை ஸ்வாமின்.

      ஹிந்துஸ்தானத்தை சுக்கு நூறாக உடைப்பது (டுக்டே டுக்டே கரேங்கே) என்று மாணவக் குஞ்சாமணிகள் கோஷம் போட்டது தேச பக்தியா இல்லையா என்று ராணுவ மேஜராகிய நீங்கள் தான் சொல்லுங்களேன்.

      அஃப்ஸல் தேரே காதில் ஜிந்தே ஹைன் (அஃப்ஸல் உன்னுடைய கொலையாளிகள் இன்னமும் உயிருடன் இருக்கிறார்கள்) என்று மாணவக் குஞ்சாமணிகள் கோஷம் போட்டது தேச பக்தியா இல்லையா என்று நீங்கள் சொல்லுங்களேன். அஃப்ஸலுக்கு தண்டனை கொடுத்தது தேசத்தின் ந்யாயாலயங்கள். கொடுத்தவர்கள் ந்யாயாதிபதிகள். கொடுக்கப்பட்டது சட்டத்தின் வாயிலாக.

      சட்டத்தின் வாயிலாக தண்டனை கொடுத்த ந்யாயாதிபதிகள் கொலையாளிகள் என்று மாணவக் குஞ்சாமணிகள் பேத்துவது சரியா என்று சொல்லுங்களேன்.

      இடஒதுக்கீடு, அரசியல் சட்டத்தில் மாற்றம், தனிமானிலம், தாய் மொழியில் வினாத்தாள் என்று ஜக ஜகான்னு யாரும் பெருசா விவாதிக்கவே விவாதிக்காத விஷயத்தை ஏதோ பெருசா விவாதத்தில் இருக்காப்போல பாசாங்கு செய்வதும் அதுவும் தேச பக்தி அல்லது தேச விரோதம் என்ற அலகீட்டில் அதைக் கொணர முயல்வதும் ………….. நெம்ப டமாஸ் பண்றீங்க சார்.

      \\ அரசியல் சட்டத்தை மாற்ற கோருவது,திருத்தங்கள் செய்வது தேச பற்றா தேச துரோகமா \\ அரசியல் சட்டம் அனுமதித்த art 29 மைனோரிட்டி கல்வி நிலையம் நடத்தும் உரிமைகளை நீக்க வேண்டும் என்று போராடுவது தேச துரோகமா \\ அரசியல் சட்டம் மாநிலங்களுக்கு தரும் அதிகாரமான கோவில்களை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரும் அறநிலையத்துறை உருவாக்கத்தை எதிர்ப்பது தேச துரோகமா \\

      சேர்த்து படிச்சா வடிவேலு காமெடி மாதிரி இருக்கு சார் :-)

      அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான முயற்சிகளை யாரும் தேச பக்தி அல்லது தேச விரோதம் போன்ற அலகீடுகளில் நிறுத்திப்பார்க்க விழையவில்லையே. அஃதாகப்பட்டது தேவரீரை விடுத்து.

      \\ அரசியல் சட்டத்தில் இருக்கும் எதையும் யாரும் எதிர்க்க கூடாது எனபது பரிவாரங்களின் கருத்தா \\

      இல்லீங்க்ளே சார்.

      \\ இது இதை எதிர்க்கலாம் ,இதை எதிர்க்க கூடாது என்று அரசியல் சட்டத்தில் இருக்கிறதா அல்லது பரிவாரங்களிடம் எதை எதிர்த்தால் தேச துரோகம் என்று தீர்ப்பு சொல்லும் அதிகாரம் /உரிமை /கடமை இருக்கிறதா \\

      பரிவாரங்களிடம் இல்லை. ஆனால் செங்கொடியாளர்களிடம் மட்டிலும் இதற்கு ஏகபோக குத்தகை இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ?

      \\ காஷ்மீரை பற்றிய முடிவை காஷ்மீரிகள் எடுப்பார்கள்.அது தான் சரி,ஞாயம் எனபது தேச துரோகமா \\

      இல்லாங்காட்டி என்னன்னு ராணுவ மேஜராகிய நீங்கள் சொல்லுங்களேன்.

      \\ தவறான தீர்ப்பு,அநியாயமாக ஒரு நிரபராதி தண்டிக்கபட்டான்/முக்கிய குற்றவாளிகள் சிக்காததால் அகப்பட்ட ஒருவனுக்கு ,குற்றவாளிகளுக்கு சிறு உதவிகள் செய்த காரணத்துக்காக குற்றத்துக்கு தகுந்த தண்டனை தரும் தீர்ப்பாக இல்லாமல் வேறு யாரும் மாட்டாததால் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது என்று சொல்வது தேச துரோகமா \\

      சார் சொல்லக்கூடாது உங்களுக்கு ரொம்பவே ஹாஸ்ய ரஸம் ஜாஸ்தி. இதப் படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சேன். இப்படியெல்லாம் எப்புடி சார் யோஜனை செய்கிறீர்கள். எந்த நாடாக இருந்தாலும் சண்டை சச்சரவுகள் ஏதோ ஒரு கோர்ட்டில் முடிவுக்கு வந்து விடும் சார். என்னவோ போங்க………………………………….


      • அய்யா க்ருஷ்ணகுமார் அவர்களுக்கு…
        நன்றி! நன்றி!! நன்றி!!!

        (உங்கள் உதவியால் கொஞ்சம் தெம்பு வந்தது!)

  5. A.Seshagiri. Says:

    பாவம் சார் நீங்கள்! பூவண்ணன் திரும்ப வந்தே விட்டார்!! வெயில் வேறு கொளுத்த ஆரம்பித்து விட்டது!.எவ்வளவு தெளிவாக,வசதியாக அவர் தரப்பு அயோக்கியதனங்களையெல்லாம் சுத்தமாக மறந்து விட்டு இப்படி காற்றில் சிலம்பாட இவரை போன்றவர்களால் முடியும். வாழ்க பாரதம்?

  6. ravi Says:

    வலதுக்கும்,இடத்துக்கும் நடக்கும் அதிகார சண்டை , இதில் வலதுக்கு தேசபக்தி , இடத்துக்கு பேச்சு உரிமை .. அவ்வளவே..
    சரி, ரோஹித் பிரச்சனையில் நம் அரசியல்வியாதிகள் சவுண்டு விட்டது , அவருடைய சாதியினால் தான் ..
    இப்போது மாட்டி கொண்டு இருக்கும் கண்ணையா , பூமிகார் சாதி. அதான் , எல்லாரும் கப்சிப் .
    எல்லா பாசத்தையும் விட பெரியது பிள்ளைபாசம்.அதான் நம் டி.ராஜா பதை பதைபதைகிறார் (அவர் மகள் இந்த பல்கலையில் படிக்கிறார் )
    நம் பல்கலைகழகம் ,எல்லா வேண்டாத விஷயங்களிலும் முதலிடம், பாலியல் தொந்தரவுகளில் முதலிடம் ,
    சமீபத்தில் ஒரு ஆசிரியர் நீக்கபட்டார் ,பாலியல் பிரச்சனையில் மாட்டி,
    நம்முடைய போராட்ட திலகம்கள் ,இந்த விஷயத்தில் கப்சிப், ஏனென்றால் , இந்த ஆசிரியரும் இந்த போராட்ட அமைப்பை சேர்ந்தவர் ,,
    நம் ஊர் ஆட்களை மிஞ்சி விடுவார்கள் போல இவர்கள் .. !!

  7. ravi Says:

    our communist friends will never answer….
    1)
    http://www.thenewsminute.com/article/you-point-fingers-hindutva-wadi-politics-why-whitewash-communist-brutalities-kerala-39225
    2) our tn friends will never answer on
    TN law college riots and murder of annamalai students .
    3) all will be trailblazing on prof.sabharwal murder because it is by abvp!!

    நீ ஒடச்சா தங்க குடம், நான் ஒடச்சா மண் குடம்..
    thats it!!

  8. ravi Says:

    All Comrades !! just visit ..

    http://swarajyamag.com/politics/jnu-diary-part-1

    http://adarshliberal.blogspot.in/

    அம்புட்டு தான் அய்யா !! ஒன்னியும் சொல்றதுக்கு இல்லை . இதுக்கு தான் இத்தினி அலப்பரை

  9. Venkatesan Says:

    இது போன்ற ஒரு விவாத சமயத்தில் வேலை மெனக்கெட்டு அப்சல் குரு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை படித்திருக்கிறேன். குரு மீது அரசு தரப்பு வைத்து நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட குற்றங்கள் “குற்றம் செய்தோருக்கு அவர் செய்த சிறு உதவிகள்” என்ற வகையில் வராது. பெரும் உதவிகள் அவை. நரோடா பாட்டியாவில் இந்துத்வ வெறிக்கும்பல் படுகொலைகள் செய்தபோது மாயா பென் கோட்னானி சும்மா மேற்பார்வைதானே செய்தார் என்றா சொல்லமுடியும்!

    எங்கும் பொய்மை
    மண்டிக்கிடக்குதைய்யா
    இறைவா
    எங்கும் பொய்மை
    மண்டிக்கிடக்குதைய்யா

    • ravi Says:

      //குரு மீது அரசு தரப்பு வைத்து நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட குற்றங்கள் “குற்றம் செய்தோருக்கு அவர் செய்த சிறு உதவிகள்” என்ற வகையில் வராது. பெரும் உதவிகள் அவை. நரோடா பாட்டியாவில் இந்துத்வ வெறிக்கும்பல் படுகொலைகள் செய்தபோது மாயா பென் கோட்னானி சும்மா மேற்பார்வைதானே செய்தார்//
      இது கள்ள ஆட்டம் .. உம்மை போன்ற பார்பன வெறியர்களின் சதி .. அப்சல் குரு சும்மா கடலை மிட்டாய் வாங்கி கொடுத்தார் .. அம்புட்டு தான் ..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: