யுஃப்ரெடீஸின் சீற்றம் (Wrath of Euphrates) – இஸ்லாமிக்ஸ்டேட் பொறுக்கிகளுக்கு எதிரான குர்தி+அமெரிக்க+ஸிரிய வீரர்களின் முன்னெடுப்பு

17/01/2017

கடந்த அக்டோபர்2016லிருந்து இஸ்லாமிக் ஸ்டேட் வெறியர்களின் ‘தலை’நகரான ரக்கா-வைப் பிடிப்பதற்காகத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் யுத்தம்தான் இந்த ரேத் ஆஃப் யுஃப்ரெடீஸ்.  இதற்கு உலகம் கொடுக்கும் விலை மிக அதிகம் என்றாலும் (இதில் பெரும்பாலும் குர்திகளின் ரத்தம்தான் தியாகம் செய்யப் படுகிறது; மற்ற ‘இஸ்லாமிய’ தேசங்களெல்லாம், தங்கள் சொந்தச் சாக்கடையை  ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’  சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது, ஆனந்தமாகத் தம் பெண்பிள்ளைகளை ஒடுக்கிக்கொண்டு 1500ஆண்டுகளுக்கு முன் சென்று வாழ்வாங்குவாழ்வது எப்படி எனக் காலட்சேபம் செய்து கொண்டிருக்கிறார்கள்!) கொஞ்சம்கொஞ்சமாக அயோக்கியம் நசுக்கப்பட்டுகொண்டிருக்கிறது.

* இதில் ஜனநாயகத்துக்காகப் போராடுபவர்கள் பக்கம் – ஸிரியா நாட்டினுள் இருக்கும் பலப்பல ஜனநாயகவாதக்  குழுக்களின் கூட்டமைப்பு (இவற்றில் பெரும்பாலும் குர்திகள், அஸ்ஸீரியர்கள், சில அரேபியர்கள் என ஒரு ரேக்டேக் கூட்டணி) + குர்திஸ்தானின் பல அமைப்புகள் (பெரும்பாலும் பெஷ்மெர்கெ நீங்கலாக) +  அமெரிக்கத் தலைமையில் மேற்கத்திய நாடுகளின் கூட்டணி.

screenshot-from-2017-01-17-205355[ருடாநெட் தொலைக்காட்சி சேனலில் வந்த படம் – ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’ தலைவர்களில் சிலர் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றை அளிக்கும்போது எடுக்கப்பட்டது  (நன்றி: @vissergovert)]

* அயோக்கியத்துக்கு ஆதரவாக இயற்கையாகவே போராடுபவர்கள் – இஸ்லாமிக்ஸ்டேட் + அல்கைய்தா கய்தேகள் + (பணமும், ஊடக ஆதரவும், யுத்ததளவாடங்களும் கொடுக்கும்)ஸவுதிஅரேபியா & கத்தார் + கூச்சமே இல்லாத துருக்கியின் படைப்பகுதிகள்

என்னைப் பொறுத்தவரை, நான் அறிந்துகொண்டவரை, முன்னவர்கள் வெல்வார்கள் – அதாவது பின்னவர்களின் மிருகபலத்தையும், பணபலத்தையும், ரத்தவெறியையும் மீறி. நன்றி.

இந்த ‘யுஃப்ரெடீஸின் சீற்றம்’ எனும் முன்னெடுப்புக்கு —  இஸ்லாமிய வெறியர்களை ஒழிப்பது என்பது உடனடிக் குறிக்கோளானாலும் – அதனை விடப் பெரிய குறிக்கோளான – மதச் சார்பற்ற, வெறியற்ற தேசத்தை நிர்மாணிப்பது, அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைப்பது என்பதற்குள் அடங்குவதொன்று.   இந்த வகை அரசாங்கத்துக்கு ஒரு குர்தி மாடல் – ரொஜாவா.  நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு அற்புதம்.

1. லைவ்மேப் மூலம் – இந்தக் கருமாந்திரத்துக்கு எதிரான தர்மயுத்தத்தில் — இன்று, இப்போது எங்கெங்கே என்னென்ன நடந்துகொண்டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம் – http://isis.liveuamap.com/

2.  இந்த ரக்காவுக்கான போர் பற்றிய விவரங்கள் இந்த எழவெடுத்த விக்கிபீடியா பக்கத்தில் இருக்கின்றன; இதில் ஒரு சிலவிவரங்கள் சரியில்லை என்றாலுமே, இது பரவாயில்லைதான் – https://en.wikipedia.org/wiki/Raqqa_offensive_(2016%E2%80%93present)

3. இஸ்லாமிய கிலாஃபா குண்டர்களின் காட்டுமிராண்டிக் கழுத்தறுப்பு வீடியோக்களை, சிறுமிகளின்மீதான பாலியல்பலாத்காரங்களை, போர்க்கைதிகள் இரும்புக் கூண்டுகளில் அடைக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்படுவதை, அறியாக் குழந்தைகள் ஜிஹாதிக் கொலைகாரர்களாக ஆக்கப் படுவதை, பண்டைப் பாரம்பரியங்கள்-சின்னங்கள் அழிக்கப்படுவதையெல்லாம் பார்த்துப்பார்த்து மனம் பேதலித்திருக்கக்கூடும் உங்களுக்கு, இந்த சிறு நான்கு நிமிட விடியோ சிறிதாவது ஆசுவாசம் தரலாம். நன்றி. Wrath of Euphrates

இது அவசியம் பார்க்கப்படவேண்டியதொன்று. ரத்தக் களறியுமில்லை, கவலை வேண்டேல்!  ஸர்வைவர் எனும் ராக் க்ரூப் ஒன்றினுடைய பாடல் – புலியின் கண் (Eye of the Tiger – Survivor) என்பது பின்னணியில் ஒடுகிறது. எனக்குப் பிடித்தமான இந்தப் பாடலில் இருந்து சில வரிகள்:

Risin’ up, back on the street,
Did my time, took my chances,
Went the distance, now I’m back on my feet,
Just a man and his will to survive…

:-) …இந்தப் பாடல் ஏதோவொரு அந்தக்காலத்து ஸில்வெஸ்டர் ஸ்டேல்லன் படத்தில் வந்தது என்று நினைவு. இது தவறாகவும் இருக்கலாம்.

screenshot-from-2017-01-17-210652[இஸ்லாமிக்ஸ்டேட் ரத்தவெறியர்களிடமிருந்து ஸிரியக் குழந்தைகளையும் தாயையும் காப்பாற்றும் குர்திப் போர்வீரர்கள்]

சரி. கர்டிஸ்தான் அல்லது குர்திஸ்தான்  (அதன் ரொஜாவா உட்பட), இஸ்லாம் தொடர்புள்ள பிற பதிவுகள்:

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s