1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க ஆலோசனைகளை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது – சில குறிப்புகள்

11/03/2018

நம் பாரத அரசு – பலவிஷயங்களில் முன்னெடுக்கும் எத்தனங்களைப் பற்றி நேரடியாகவே ஓரளவு அறிவேன். அதில் இந்த விஷயமும் ஒன்று.

உங்களுக்கு பாரதக் கல்வியின் தரத்தைப் பற்றியும் அதன் மேம்பாடு/மறுமலர்ச்சி பற்றியும் கரிசனம் இருக்குமானால், தயை செய்து சிறிது நேரம் செலவழித்து தங்கள் மேலான (அல்லது நீங்கள் ஒரு விடலைத் திராவிடரானால் – கீழான) கருத்துகளை அளிப்பீர்களா?

“மாணாக்கரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்ய ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மாற்றி அமைப்பது குறித்த ஆலோசனைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்றுள்ளது. பள்ளிகளின் பாடத்திட்டத்தை நியாயப்படுத்தி மாற்றி அமைப்பதற்கு அவசர அவசியம் உள்ளது என்று தெரிவித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகர், கல்வியின் நோக்கம் கல்வி முறையின் மூலம் நல்ல மனிதர்களை தயார் செய்வது ஆகும் என்று கூறினார். ஏட்டுக்கல்வியுடன் வாழ்க்கைத் திறன்கள், அனுபவ கல்வி, உடற்கல்வி, திறன் உருவாக்கம் ஆகியனவும் அவசியம். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம், கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள், நிபுணர்கள், பொதுமக்கள், பிரதிநிதிகள் மற்றும் இந்தப் பிரச்சினையில் ஆர்வம் கொண்டவர்கள் ஆகியோரிடமிருந்து ஆலோசனைகள் வரவேற்கப்படுவதாக அமைச்சர் கூறினார்.

 
ஆலோசனை கூற விரும்புவர்கள் 2018 மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் 2018 ஏப்ரல் மாதம் 6-ம் தேதி வரை தங்களது ஆலோசனைகளை : http://164.100.78.75/DIGI என்ற முகவரிக்கு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கென நிறுவப்பட்டுள்ள படிவத்தில் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை சுருக்கமாக தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆலோசனைகள் தெரிவிப்போர் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டி ஆகியவற்றின் பாடத்திட்ட ஆவணங்கள் கீழ்கண்ட இணையதளத்தில் கிடைக்கின்றன.

http://www.cbseacademic.nic.in/curriculum.html

http://www.ncert.nic.in/rightside/links/syllabus.html

சிபிஎஸ்சி மற்றும் என்சிஇஆர்டி ஆகியவை வெளியிட்டுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான பல்வேறு பாடங்கள் சம்பந்தப்பட்ட பொருளடக்கத்தை சமநிலை கொண்டதாக மாற்றியமைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

—- (Release ID: 1522883)

(மேற்கண்ட தமிழ் வடிவம் அமைச்சகம், PIB அமைப்புகளுடையது)

ஆங்கில வடிவம்: HRD Ministry invites suggestions on rationalizing curriculum for class I to XII – Urgent need to rationalize school curriculum for all round development of students: Shri Prakash Javadekar

-0-0-0-0-

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், என்ஸிஇஆர்டி நிறுவனம், ஐஜிஸிஎஸ் இ/ஜிஸிஎஸ்இ புத்தகங்களை உபயோகித்திருக்கும் எனக்கு என்ன படுகிறது என்றால்,

0. என்ஸிஇஆர்டி புத்தகங்கள், தமிழகப் புத்தகங்களை விடப் பலமடங்கு செறிவாகவும், அழகுணர்ச்சியுடனும் பதிப்பிக்கப் பட்டுள்ளன.

1. தமிழ் நாடு பாடநூல் நிறுவனம் முழுவதுமாக என்ஸிஇஆர்டி புத்தகங்களையும், தமிழ் வழிக்கல்விக்கு என்ஸிஇஆர்டி புத்தகங்களின் தமிழாக்கத்தையும் உபயோகிக்கவேண்டும்.

2. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் – தமிழக வரலாறு, புவியியல் தொடர்பான விஷயங்களை மட்டும் – சுமார் 200-300 பக்கக் கையேடாக வெளியிடவேண்டும் – இது 9-12 வகுப்புகளுக்காக இருந்தால் போதுமானது; இதில் வெறியில்லாமல், என்னவிஷயங்கள் நம் பிள்ளைகளை அடையவேண்டுமோ அவற்றைக் குறிப்பிட்டால் போதுமானது.

4. தமிழக அரசு தண்டக் கருமாந்திரச் செலவுகளைக் குறைக்கவேண்டும்.

-0-0-0-0-0-0-

பின்குறிப்பு: ஆயிரம் விஷயங்களில் மூக்கையும் (பிற உடற்பாகங்களையும்) நுழைத்து அல்லாடிக்கொண்டிருக்கும் கிழவனும் அசக்தனுமான என்னை, சுட்டி கொடுத்தே, டேய் அதைப் படித்தாயா இதைப் பார்த்தாயா இவற்றைக் கேள்விப்பட்டாயா என்று கேட்டே, சிலர் படுத்தி எடுக்கின்றனர். எடுத்துக்காட்டாக, இந்தப் பதிவுக்கு இவர்தான் ஜவாப்தாரி. தொடர்ந்து படுத்தி எடுக்கவும். நன்றி. ;-)

2 Responses to “1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க ஆலோசனைகளை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வரவேற்கிறது – சில குறிப்புகள்”

  1. Sivaa Says:

    பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் குறித்த பாடங்களை மத்திய அரசு சேர்த்தால் உங்கள் சஜஷன் ஓகே… ஒரு 200-300 பக்க கையேடாக வெளியிடலாம்


    • அய்யா நன்றி.

      அப்படியே இருட்டறிவு இருளவனுக்கும் சேர்த்து இன்னொரு 2000-3000 பக்கத் தலையேடும் வரவேற்கத்தக்கதாகத்தானே இருக்கவேண்டும்?


மேற்கண்ட பதிவு (அல்லது பின்னூட்டங்கள்) குறித்து (விருப்பமிருந்தால்) உரையாடலாமே...

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s