காலச்சுவடு, காதுச்செவிடு, புண்ணாக்குத்தவிடு, அமெரிக்கப் படிப்பாளி, ‘இரண்டாம் எஸ்ரா’ அரவிந்தன்கண்ணையனார்

12/09/2019

சோகம். :-(

அதாகப்பட்டது… … = ‘ஆகவே கோந்து?’

“அல்லேலூயா, நான் மொழிபெயர்ப்பு ஊழியத்தில் இருக்கும் கூக்ள் அகராதி தேவனை உன்னுடைய பரிசுத்த ஸ்தலத்தில் வைத்துத் துதிப்பேன்; உன்னுடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப் பார்த்து, பராக்கிரமம் மிக்க உனக்குத் தப்புத்தப்பாக ட்ரேன்ஸ்லேஷன் பண்ணிக் கொடுப்பேன்.”

— சிங்கீதம் (3.142)

ஏனிப்படி இந்த அரவிந்தன்கண்ணையன், இரண்டாம் எஸ்ராவாக மாறி நம் கழுத்தைத் தனித்துவ ஜென்னாக அறுக்கிறார், சொல்லுங்கள்?

ஏதாவது பர்ஸ்பெக்டிவ் பிக்பாக்கெட் கியராஸ்குரொ அதுஇது என்று முகலாயர்களின் விதம்விதமான மகத்தான கொடைகள்(!) பற்றி, கலைவரலாற்று வல்லுநத்தன வன்முறையுடன் அட்ச்சிவுட்டுக் கொண்டிருந்தால் பரவாயில்லை – ஏதோ லிபரல்தன வியாதியுடன் அல்லாடிக்கொண்டிருக்கிறார், அவரவருக்கு அவரவர் கருத்துகள், கருத்தரிப்புகள், கருக்கலைத்தல்கள் என விட்டுவிடலாம்…

…ஆனால், லைக் டோட்டல்லி அன்ஸஹிக்கபிள் முழிபெயர்ப்பு எஸ்ராத்தனம்? தேவையா இவருக்கு, சொல்லுங்கள்?

-0-0-0-0-

சரி. அவ்வப்போது பிழியும் சோகத்தால் நான் பீடிக்கப்படும்போது – 100% கியாரண்டி நகைச்சுவைக்காக மட்டுமே, சிலபலரைப் படிக்கும் துர்ப்பாக்கிய நிலைக்கு என்னை ஆட்படுத்திக்கொள்ளும் பழக்கத்கை வைத்திருக்கிறேன்…

…ஆகவே, ரெண்டுமூன்று நாட்களுக்கு முன், ஒரு தொலைதூரப் பயணத்தின்போது, கொஞ்சம் வேலைவெட்டியில்லாமல் இருந்ததால், செல்ல அன்பர் அரவிந்தன் கண்ணையன் அவர்களின் லேட்டஸ்ட் அண்ட் க்ரேட்டஸ்ட் புலம்பலைத் தேவைமெனெக்கட்டுப் படித்தேன். ஆம், அவர் தம் வழக்கம்போலவே, துளிக்கூடச் சோடை போகவில்லை; அவருடைய அண்மைய காண்ட்-அறியன் வழமையான காட்டுரையின், நமக்கெல்லாம் பழக்கமான சாராம்சம்: “பாரதத்தில் அனைத்தும் குப்பை; குப்பைகளின்றி வேறில்லை; ஆனால் தப்பித் தவறி, அவற்றில் சில குப்பைகளல்லாதவை இருந்தால், அவற்றைப் பராமரிக்கும் துப்பும் அறிவும் அந்த தேசத்துக்கு இல்லை. USAland, USAland über alles, über alles in der Welt!”

பேரறிஞ ஐயா ஏகே47, தங்கள் கரிசனத்துக்கும் அறிவுரைக்கும் வழக்கம்போலவே நன்றி.

…இத்தனைக்கும், பாருங்கள் – பாரதத்தில் அனாதரவாக, முட்டாள்தனமாக அல்லாடிக்கொண்டிருக்கும் நாங்களும், பொறுத்துக்கொள்ளவே முடியாத அனைத்துக் குப்பைகளையும் முடிந்தவரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்துகொண்டுதான் இருக்கிறோம்; எங்கள் தந்திரோபாயத்தினால், பலப்பல ஐடி குமாஸ்தாக்கள் அமெரிக்கா சென்று, மென்பொருள் வன்இருள் ஆகவேமருள் எனச் சேவையோதிசேவை செய்து அமெரிக்காவையே ஸி++ டி– ஈ+- எஃப்-+ ஜாவா சுமத்ரா பைதன் ராஜநாகம் கோபால் லவ்டே எனக் கதிகலங்க அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் முன்னேற்பாடுடன் நாங்கள் இருந்தாலும் பாரதத்தில் இப்படிச் சிலசமயங்களில் கந்தறகோளமாகிவிடுகிறது. என்ன செய்வது, சொல்லுங்கள். ஏதோ நீங்கள் அவ்வப்போது மாமாங்கத்துக்கு ஒருமுறை வந்து எங்கள் மண்டைமேல் தங்கள் திருக்காலடியைப் பதித்து உய்விக்கிறீர்களோ, நாங்கள் தப்பித்தோமோ!

-0-0-0-0-

சரி. முடிந்தால் சிரிப்பை அடக்கிக்கொண்டு அவருடைய முழுக்காட்டுரையையும் படியுங்கள்: A Fortnight in India: Lots of History, Architecture, Artless Cities and Reading Habits of Indians

அதில் ஒரேயொரு முத்தினை மட்டும் முத்தாய்ப்பாகக் கொடுக்கிறேன்.

அன்பர், காலச்சுவடு என்பதை ஃபுட்ப்ரின்ட்/Footprint என முழிபெயர்க்கிறார். கவனக்குறைவாக இல்லை – வெகு கவனத்துடன்தான் இதனைச் செய்திருக்கிறார்.

ஏனெனில் காலச்சுவடு என்பதை கால்சுவடு அல்லது காலடிச்சுவடு என்று மிகச் சரியாகவே மனனம் செய்துகொண்டிருக்கிறார். காலச்சுவடு என்றால் காலவெளியில் வெளிப்படுத்தப்பட்ட பாதை/குறிப்புகள், படைப்புரீதியில் நடந்த வழி, நிகழ்பதிவு, காலரீதியான நினைவுகள்/வழித்தடங்கள் என்றெல்லாம், பாவப்பட்ட நம்மைப்போல, ஒருமாதிரி குண்ஸாகவோ தப்பும்தவறுமாகவோ அவர் புரிந்துகொள்ளவில்லை. அவருடைய தமிழ்ப் புலமையும் ஆங்கிலமும், என்னை விடவும் அப்படியாப்பட்ட பராக்கிரமம் மிக்கவை, என்ன செய்ய…  ஆகவே காலடிச் சுவடு. Footprint! Footprints in Time என்றாவது எழுதியிருக்கலாமே, ஆனால் இல்லை. என்ன செய்வது சொல்லுங்கள். :-(

கால் + சுவடு = காலச்சுவடு. அவ்ளோதான். (டேய்! அங்கிட்டு யார்டா நாக்கப் புடுங்கிக்னு தூக்ல தொங்க்றது? வ்வோத்தா… தொல்காப்பியரா? ஸாவுக்கெராக்கி!)

இந்த அழகில் தமிழை வைத்துக்கொண்டு, நமக்கெல்லாம் படுதெகிர்யத்துடன், துளிக்கூடச் சளைக்காமல் அறிவுரையோதி அறிவுரை கொடுத்துக்கொண்டே இருக்கிறார். நாமெல்லாம் பாக்கியவான்கள். ஆனால், பரலோக USA ராஜ்ஜியம் மட்டும் அவருடையதுதானாம், வேறென்ன சொல்ல… இந்தக் கொடுமையைக் கேட்பாரில்லையா?

நல்லவேளை இந்தக் ‘காலச்சுவடு‘ வார்த்தையைக் கலைச்சுவுடு என மிகச்சரியாகவே புரிந்துகொண்டு, அபார்ட் இட், abort it, கருச்சிதைவு செய் என்றெல்லாம் முழிபெயர்க்காமல் இருந்தாரே என்பதற்கு நாமெல்லாம் அவருக்கு நன்றிக் கடன் பட்டிருக்கிறோம் அல்லவா?

…எது எப்படியோ, எஸ்ராவும் அக-வும் இப்படித் தொழில்முறையில் முழிபெயர்ப்புப் போட்டி போட்டால், நம்மைப் போன்ற கழைக்கூத்தாடிகளுக்குத் தானே கொண்டாட்டம்? :-)

-0-0-0-0-

மேலும் என்னுடைய அரைகுறை ஆங்கிலம் போலவே அவருடையதும் அரைகுறைதான் எனவும் அழகாகத் தெரிகிறது; ஆக, என் ஆங்கிலத்தின் தரம்(!) குறித்துத் தாழ்வு மனப்பான்மையால் வாடிக்கொண்டிருக்கும் எனக்கு, முட்டுக்கொடுத்தல் புளகாங்கிதத்துக்கும் அளவேயில்லை, போங்கள்!

எடுத்துக்காட்டாக, ‘few’ என்பதற்கும் ‘a few’ என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் அட்ச்சிவுட்டுருக்கிறார். முன்னால் a  இல்லாமல் வெறுமனே ‘few’ என்று எழுதினால் ‘ஒன்றுமேயில்லை’ எனத்தான் அர்த்தம் விரியும். ஆனால் ‘a few’ என்று எழுதினால் அது கொஞ்சம்/சில என விரியும். அதாவது, அவர் எழுத நினைத்தது: ‘நான் காலச்சுவடிலிருந்தும் இன்னும் சில பதிப்பகங்களிலிருந்தும் புத்தகங்கள் வாங்கினேன்.’ ஆனால், அதற்கு மாறாக, அவர் எழுதியதன் பொருள்: ‘காலச்சுவடுவைத் தவிர வேறெவரிடமிருந்தும் ஒரு மசுரும் வாங்கவில்லை.’

ஐயா, நன்றி. ஆங்கில அறிவைப்(!) பொறுத்தவரையாவது நாமிருவரும் ஒர்ரே கட்சிதான். :-)

-0-0-0-0-0-

அரவிந்தன் கண்ணையன் அவர்களை விட, அவர் கட்டுரைக்கு வந்திருக்கும் ஒரு பின்னூட்டம் (வைர+முத்தூ என ஒருவர் எழுதியிருப்பது) இன்னமும் ஸுப்பர் நகைச்சுவை. கீழே அது:

“When I read this I was transported. Much of the writing on the Internet is of poor quality, but yours is an example of someone who writes with erudition. Your grasp of arts and history needs a mention here as well. I love your blog, but this could easily have appeared in National Geographic.  Hope you get to travel more and write about your travels. Without a doubt, your travelogue should be in the top ten for anyone who is passionate about travel.”

பிரச்சினை என்னவென்றால், இந்த ‘இரண்டாம் வைரமுத்தூ’ அன்பர், travel writing எழவுக்கும் travail writing மகோன்னதத்துக்கும் ஆறு வித்தியாசங்களைக் கண்டுகொள்ளவே முடியாத கையறு நிலையில் இருக்கிறார் எனப் படுகிறது, பாவம். :-(  Notional Geographic??

…இது ஒருபுறமிருக்க — இம்மாதிரி யாரும் ஒத்திசைவுக்கு , ஏகத்துக்கும் புகழ்ச்சியாக பின்னூட்டம் எழுதமாட்டேனென்கிறார்களே எனக் கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிறது, என்ன செய்ய. :-(

சரி. நீங்களும் பாவிகள், கேட்பதாக இல்லை.

ஆகவே, இனியொரு விதி செய்வேன்! நானே எனக்கு, இப்படியாப்பட்ட கூச்சம்தரும் பின்னூட்டங்களைப் பெருந்தன்மையுடன் எழுதிக்கொள்வதாக இருக்கிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம். :-(

 

29 Responses to “காலச்சுவடு, காதுச்செவிடு, புண்ணாக்குத்தவிடு, அமெரிக்கப் படிப்பாளி, ‘இரண்டாம் எஸ்ரா’ அரவிந்தன்கண்ணையனார்”


 1. “உனக்கு நானே புகழ்ச்சியாக பின்னூட்டம் பண்ணிக் கொடுப்பேன்.”


  • “கிருபையும் வழியும் ஜீவனும் சத்தியமுமான ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக”


   • “உனது எதிரிகளைச் சந்திசிரிக்கப் பண்ணுவேன்.”


    • “உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.”

     எசேக்கியேல் 36:26

     • Kannan Says:

      பரிசுத்த ஆவியால் இட்லி சுட்டுக்கொடுபேன்.
      – 1.61 கீரமணி

  • somu Says:

   – சிங்கீதம் (2.718)

   Comment-க்கு சிங்கீதம் குறிப்பிட மறந்துவிட்டீர்களே.:-(

   (என்ன செய்வது. உங்களுக்கு வாய்த்த அடிமைகள் எல்லாம் இப்படி குறைகண்டுபிடிப்பதிலேயே இருக்கிறது)


   • யோவ் நக்கீரா கோங்கூரா! அவற்றையெல்லாம் சொன்னது அதே சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் தான். (‘மகளிர் மட்டும்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை எடுத்த ஆசாமி)

    …எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்துக்கொண்டேயிருக்க நான் என்ன கலங்கரையா?

    போங்கடே!

 2. A.Seshagiri Says:

  “நான் உன்னுடன் கூடவே இருந்து செய்யும் காரியங்கள் மிகப் பயங்கரமாக இருக்கும்”(போலிருக்கே!)-சுங்கீதம் 1:1

 3. K.Muthuramakrishnan Says:

  பரிகாசம் பண்ணுபவர்களுக்கு நான் பரிசம் போடுவேன்;– முத்தேயு 2:34

  (பரிசம் என்பது இங்கே தண்டனை என்று பொருள்படும்.)


 4. நல்லவேளை இந்தக் ‘காலச்சுவடு‘ வார்த்தையைக் கலைச்சுவுடு என மிகச்சரியாகவே புரிந்துகொண்டு, அபார்ட் இட், abort it, கருச்சிதைவு செய் என்றெல்லாம் முழிபெயர்க்காமல் இருந்தாரே

  Wonderfull. :-D
  LMAO


 5. சிங்கீதம் (3.142)

  எங்கேயோ பார்த்த மாதிரி இர்க்கேபா !!
  அட நம்ப “பை”யன்!!!

 6. Sridhar Tiruchendurai Says:

  நானே அழுகிய தக்காளியாகவும் முட்டையாகவும் அளிப்பேன். என்னைப் பின்பற்றி வருபவன் வெட்டியாக இருப்பான்.

  – விசனம் 7.5


 7. அடேய்களா! அடேய்களீ!!

  என்னைப் பற்றியோ ஒத்திசைவைப் பற்றியோ ஒரு வார்த்தைகூட புகழ்ச்சியாக எழுதாமல், மாறாக கனகம்பீரமான புத்தம்புதிய ஏற்பாட்டை உருவாக்குகிறீர்களே! இது நியாயமா?


  • “அவிசுவாசிகளான உங்களுக்குப் பேயோட்டாமல், உங்கள் அனைவர் மீதும் பரிசுத்த சாத்தானை ஏவி சீதபேதி ரத்தவாந்தி வரப்பண்ணுவேன்.”

 8. Anonymouse Says:

  1 கசப்பு ராமன் தம்முடைய எழரை சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார்.
  2 அத்தருணத்தில் காவலிலிருந்த அரவிந்தன் ராமத்தின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் வைர முத்துவை அழைத்து:
  3 பின்னுட்டமிட்டவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான்.
  4 ராமம் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் அரவிந்தனிடம் போய் அறிவியுங்கள்;
  5 குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள்; தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.


  • ஸப்பாஷ், ஸர்யான போட்டீ! அதிகப் பிரசங்கம் நன்றாகவே இருக்கிறது, எலியாரே! :-)

   மலையைக் கெல்லி எலிப் பிரசங்கம், ஏலீ ஏலீ லாமா ஸபக்தானீ என முடியாதவரை மகிழ்ச்சியே!


 9. ஆழ்வார் பேட்டை ஆண்டவருடன் வெண்முரசாண்டவரும் இணைந்து, உங்கள்பேரில் மகிழ்ந்து, உங்களுக்கென்று அவர் வைத்திருக்கும் சந்தோஷத்தினால் உங்களை நிரப்புவார். உங்களைச் சுத்தம் பண்ணுவார். உடல் குளிரப் பண்ணுவார். குதூகலப்படுத்துவார். கேளுங்கள், அப்பொழுது நிரம்பி வழியத்தக்கதாய் அவர் உங்களை அபிரிமிதமாய் ஆசீர்வதிப்பார். கட்டியணைப்பார். கவலை நீக்குவார். சொட்டைத் தலையில் முடி வளரப் பண்ணுவார்.
  – யோவான் 16:24


  • யாரப்பா நீர்? இங்கு புதிதாக வந்து வீழ்ந்துவிட்டீர்? “பாவிகளுக்கு இங்கே ஸொஸ்தம் பண்ணுவேன்.”


   • அவர்கள் (அ.கனார், வெண்முரசார்) அமெரிக்கப் பட்டணத்திலிருந்து திரும்பி வந்த போது, இனிய ஜெயத்தார், நிசப்தமாய் மணியாட்டுவாரைப் பார்த்து, சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்கெரிய, “பரிசுத்த ஆவியர்களை நமக்கு முன்னே தலைதெரிக்க ஓடச் சொல்” என்றார்; அப்படியே அவர்கள் ஓடிப்போக; “இப்பொழுது நான் முரசு தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே கருத்தரித்துநில்” என்றார். பின் எட்டிப் பார்த்து எக்காளமிட்டபடியே ஆவிகளைப் பின் தொடர்ந்து ஒடி “பாவிகளே இங்கே வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் சமூகம் உங்களுக்கு முன்பாகச் செல்லும், இஷ்டப்படி யெல்லாம் அட்சுவுடுவேன். யாரும் கேள்வி கேட்க்கப்படாது. ஒத்திப்போ, ஒத்திசைவே” என்றார். – 1 அப்பாவி ரிஷி சாமிவேல் 10:43

 10. vijay Says:

  அறப்படித்தபல்லி விழுந்தஇடம் கூழ்பானை


 11. “அரவிந்தன் கணணையனார் அலக்கியவாதியாக ஜீவித்திருக்க இன்னொரு ஆத்தும சுகமளிக்கும் முழிபெயர்ப்பு ஐடியா பண்ணிக்கொடுப்பேன்.”

  காலச்சுவடு = 1/4 print baby mango

  QED. ஆமென்.


 12. […] புத்தம்புதிய, ந்யூ  & இம்ப்ரூவ்ட் ஏற்பாடு (வித் ஆக்டிவ் இன்க்ரெடியன்ட்ஸ்), […]

 13. எம்முடன் எட்டரையானோம் Says:

  மணிகொடி bellflag
  எழுது write!
  கணைஆழி arrowmoat
  மகள்குறள் daughter couplet

  என்று இலக்கிய சாத்தியங்கள் இதில் பலவுள.

 14. Anonymoose Says:

  ஒத்திசைவை புகழ்ந்து எழுத வேண்டும் என்றால் நீங்களும் படை சொறி எல்லாம் திரட்ட வேண்டும். பின்னர் அவர்களைப் புகழ்ந்து எழுத, அவர்கள் உங்களுக்கு பதில் மரியாதை செய்வார்கள். இப்படியே இதை ஒரு சைடு பிசினஸ் போல் பராமரிக்க வேண்டும். உங்களைப் படிக்கும் ஏழரைகளை வைத்துக்கொண்டு இதெல்லாம் பேராசை. பெஸ்ட் ஆப் லக். ஆமென்.

 15. parisutha aavi Says:

  தேவன் உங்களை மீண்டு மாக “சந்தோஷ + படுத்த” விரும்புகிறார்.
  http://contrarianworld.blogspot.com/2019/09/a-fortnight-in-india-what-i-learned.html


  • Sir, please! He has a right and left to his opinion. I fully support AK’s right to ‘freeya vudra thoughts.’

   One of my friends(!) tells me that he is even giving some interview (or already given) or something to Pothigai TV. O tempora, O mores…

   :-((

 16. ravi Says:

  ..ஒரே வழி அமாவாசை உபவாச ஜபம் தான் . பரந்தாமனுக்கு தோத்திரம் ஆண்டவரே..


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s