ஒரு சலிப்புக் கோரிக்கை

17/09/2019

நான் பிரபலஸ்தனோ, என் பிம்பத்தைக் காத்துக்கொள்ளவேண்டி நாளுக்கு இருபத்தினாலுமணி நேரமும் இண்டர்நெட்டே கதி  அதுவும் பாழாப்போன பாழுங்கிணற்று தமிழலக்கியமே உலகம், அரசாங்கத்தை / அரசியல்வாதிகளைக்  கரித்துக்கொட்டிக் கொண்டே இருப்பதுதான் சரி, என்றிருப்பவனல்லன்.

சர்வ நிச்சயமாக அட்டைவாளைச் சுழற்றும் சாய்வு நாற்காலிப் போராளியுமல்லன்.

ஆனால் தமிழலக்கியம்(!) பற்றி ஏன் கொஞ்சம் அதிகமாகவே காட்டமாக எழுதுகிறேன்(!) என்றால் – ஒருசில விதிவிலக்குகளுக்கு அப்பாற்பட்டு, அலக்கியத் தொடர்பாக பலப்பலரை அவர்கள் எழுத்துகள் மூலம் மட்டுமே கொஞ்சம் அறிந்து பயந்துபோயிருக்கிறேன் – என் படுபயங்கர பீதிகளை, அடிவயிற்றுக் கலக்கங்களை, என் சக ஏழரைகளோடு பகிர்ந்துகொள்கிறேன், முடிந்தபோதெல்லாம் துக்கித்துச் சிரிக்கிறேன், அவ்வளவுதான்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் – எனக்கும் எவருக்கும் ஒரு மசுத்துக்கும் வாய்க்காத் தகராறு இல்லை; இவர்கள் நல்லவர்களா / கெட்டவர்களா போன்ற அகழ்வாராய்ச்சிகளின் எனக்குப் பிடித்தமும் இல்லை. தமிழலக்கியச் சிகாமணி எவருடனும் கொடுக்கல்-வாங்கல் கசப்புகள் இல்லை, ஒரு விதமான பின்புலமுமில்லை, சண்டை ‘வரலாறு’ம் கிடையாது; பெரியவர் பிஏகிருஷ்ணன், ஜெயமோகன், அரவிந்தன்கண்ணையன், மதிமாறன், பாராகவன், சாருநிவேதிதா, மணிகண்டன், எஸ்ரா, யுவகிருஷ்ணா இன்னபிறர் உட்பட… (இவர்கள் அனைவரையும் பொத்தாம்பொதுவாக ஒரே குவியலில் சேர்க்கமுடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அதேஅளவு பலசமயங்களில் அப்படித்தான் சேர்க்கவேண்டுமோ என எனக்குச் சந்தேகம் வருவதும் உண்மை)

…எல்லாரும் புகழ்கிறார்கள் என்பதற்காக நான் ஒருவரைச் சிலாகிக்கவும் முடியாது, எல்லாரும் வெறுக்கிறார்கள் என்பதற்காகக் கும்பலோடு சேர்ந்து ஒருவருக்கு ‘தர்ம அடி’ கொடுக்கவும் ஆசையில்லை. உங்களுடைய தனிப்பட்டமுறை வாய்க்காத்தகராறுகளை நீங்களே நேரடியாகத் தீர்த்துக்கொள்ளவும். நான் எந்த மசுத்துக்கும் மத்தியஸ்தமும் செய்யமுடியாது. உங்கள் சார்பாக இயங்கவும் முயங்கவும் முடியாது. மன்னிக்கவேண்டாம். போங்கடே!

என்னுடைய பிரச்சினை என்னவென்றால் – கடந்த பதினைந்து நாட்களில் ஜெயமோகன் இப்படிப்போய் டகீல்தனமாக எழுதியிருக்கிறாரே, பெரியவர் பிஏகே ஏன் அப்படிப்பட்ட கருத்துதிர்க்கிறார், எஸ்ரா (ஐயய்யோ! அம்மாடி! ஆத்தாடீ!!) எப்படி அட்ச்சிவுடுகிறார், சாரு உளறிக்கொட்டினார், அரவிந்தன் அமோகமான நகைச்சுவையாளர் (இவரைப் போய், ஏன் படுஸீரியஸ்ஸாக எடுத்துக்கொள்கிறார்கள், பாவிகள்?) போன்றவகை ஸ்க்ரீன்ஷாட்கள், சுட்டிகள் எனப் பலப்பல (=11, எண்ணினேன், துணிந்து இந்தக் கருமங்களை) வந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் எனக்குப் பலப்பல ஆண்டுகளாக (2011 வாக்கில் இந்த ஒத்திசைவு எழவை ஆரம்பிப்பதற்கு முன்பிலிருந்தே) தெரிந்தவர்களிடமிருந்துதான், 100% ஸர்ட்டிஃபைட் சககிழக்கோட்டான்களிடமிருந்துதான் வந்திருக்கின்றன. (அனுகூல சத்ருக்களே! உங்களை நான் எப்படி அன்ஃப்ரெண்ட் செய்வேன்!)

புதியவர்கள் அப்படியில்லை, அவ்வளவு மோசமில்லை – நான் எழுதுவதை(!) அவ்வப்போது படித்து பீதியிலும் பேதியிலும் பிய்த்துக்கொண்டு போய், தங்களை விட்டாற்போதும் என இருக்கிறார்கள் என நினைக்கிறேன். அவர்கள் பாக்கியவான்கள்.

பிரச்சினை – நானே எனக்கு உருவாக்கிக் கொண்டதுதான்! :-( – அது என்னவென்றால் – சிலபல முறை இப்படி வந்த ஸ்க்ரீன்ஷாட் பகீர்களுக்கும் சுட்டித் தூண்டில் கொக்கிகளுக்கும் பலியாகி, மனம்பேதலித்து, ஆகவே கதனகுதூகலத்துடன் அவற்றைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அதற்காக… ஆனால் நான் ஒருவன்தானா இந்த எழவையெல்லாம் தொடர்ந்து செய்யவேண்டும்? நீங்களே செய்துகொள்ளலாமே! தமிழலக்கியம் இருக்கும் அதலபாதாள ரெவலுக்கு அதன் செல்லரித்த பில்ட்-அப்களுக்கு, அவற்றை உலுக்க ஒரு பெரிய மசுறு தகுதியும் தேவையில்லை, நன்றி.

நான் என்னுடைய நேரத்தைச் செலவு (விரயம்?) செய்து என்ன எழுதவேண்டும் அல்லது வேண்டாம் என்பதை நானே முடிவு செய்துகொள்கிறேன். நீங்களும் தாராளமாக, நான் எழுதுவதை(!)  நேரத்தைச் செலவு (விரயம்?) செய்து படிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்து படிக்கலாம், அல்லது மிரண்டும் ஓடலாம். ஒரு பிரச்சினையுமில்லை. பின்னூட்டம் இடவேண்டிய அவசியமும் இல்லை. மின்னஞ்சல் குறுஞ்செய்தி எழவுகளை அனுப்பவேண்டியதும் இல்லை. நன்றி.

ஆனால்…

தமிழை ஓரளவு அறிந்தவன், அதன் காரணமாகவும் இறுமாப்புடன் இருப்பவன் என்று வெளியில் கூச்சமில்லாமல் இன்று நான் சொல்கிறேன் என்றால் அதற்குக் காரணம் –  சர்வ நிச்சயமாகத் தற்காலத் தற்குறித் தமிழலக்கியம் அல்ல என்பதை மட்டும் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன்.

ஏனெனில், தற்காலத் தமிழ் கலாச்சார-அலக்கியவுலகம் என்பது, நான் அறிந்தவரையில், சுமார் 95-99%% முழுக்குப்பை, அழுக்காறு, சகதி, அடிப்படை அறமற்றதன்மை, அற்பத்தனம், அயோக்கியத்தனம், அராஜகம், அட்ச்சிவுடல், அதிசராசரித்தனம், பரஸ்பரமுதுகுசொறிதல்… … அவ்வளவுதான். பாவப்பட்ட நாம்தான் அன்னபட்சிகளாக இருந்து விஷயங்களைப் பிரித்துப் பார்த்து மற்றபடி தூக்கில்தொங்கி ரத்தம்கக்கிச் சாகவேண்டும்.

இந்த துக்கத்துக்கு, கிட்டத்தட்ட இரண்டு தலைமுறைகளாகத் தமிழகத்தையே துப்புரவாகவும் வெற்றிகரமாகவும் காயடித்துள்ள திராவிடத்துக்கு நன்றி சொல்லவேண்டும். மதிப்புக்குரியவர்களாக இருந்தவர்களும், அம்மாதிரியான சொற்ப எண்ணிக்கைச் சான்றோர்களுமேகூட –  கேனத்தனமான திராவிடத்துடன் பொழுதன்னிக்கும் பொருதிப் பொருதி, அக்கழிசடைகள் அளவுக்கு இறங்கி, கடைசியில் ஒருவழியாக அவர்கள் போலவே ஏறத்தாழ ஆகிவிட்டார்கள்வேறு; கொடுமைதான், என்ன செய்ய! :-(

…இப்படியாப்பட்ட சோகச்சூழலில் தமிழ் அலக்கியவாசகனாக இருப்பது என்பதைப் போன்றவொரு தாங்கொணா தற்காலக்கொடுமையை விட மோசமான விஷயம் எனப் பிறிதொன்றில்லை. (ஐயய்யோ! இப்படியே நானும் ஒரு அலக்கியக்கூவானாக மாறிவிட்டேனே!) :-(

இந்த ஆசாமி டுபாக்குர்கள், விட்டேற்றி அழிச்சாட்டியத்துடன் எழுதுவதையெல்லாம் (அவர்கள் எழுதும் கட்டுரை, ஞானப் பொழிவுகள், பொருளாதார விளக்கங்கள், அறப் பிலுக்கல்கள், சுற்றுச்சூழல் வெட்டிக்கரிசனப் பீலாக்கள், அவர்கள் பதிக்கும் பிறருடைய கருத்தரிப்புகள் கற்பழிப்புகள் உட்பட)  – அவைகள் அனைத்தையும் புனைவுகள் மட்டுமே என்று கருதி ஆகவே அவற்றுக்கு ஒரு முகாந்திரமோ தரவோ இருக்கத் தேவையேயில்லை எனக்கு நானே சால்ஜாப்பு சொல்லிக்கொண்டாலும் – அந்தக் கதையாடல்களிலும் ஆயிரம் சொதப்பல்கள், விசித்திரங்கள், மொண்ணைத்தனங்கள்… Even, otherwise fine folks who did have a semblance of a balance are falling by the wayside. It is a real pity that things have come to such a pass.

ஆகவே.

(எனக்கு) இனியொரு விதியோ சதியோ செய்யாதீர்கள். நாத்தழுதழுக்க, கண்ணீர் மல்க, தொண்டை கம்ம, மூக்குச்சளியொழுக கோரிக்கை வைக்கிறேன். கண்டகண்ட தண்டக்கருமாந்திர சுட்டிகள்/ஸ்க்ரீன்ஷாட்கள் வேண்டவேவேண்டா. அனுப்பிவிட்டு ‘எப்போது அந்த உளறலைக் குறித்து கோபப்பட்டு ஊளையிடப்போகிறாய்’ எனப் பொழுதன்னிக்கும் ஃபால்லொஅப் செய்யவும் வேண்டா.

ஏனெனில் எனக்கு, நான் புரிந்துகொள்ளப் பிரயத்தனப்படாத விஷயங்களில், என் மேலான கருத்தை உதிர்ப்பது என்பது ஒவ்வாது. ஏனெனில் நான் தொழில்முறை அல்லது பொழுதுபோக்கு அட்ச்சிவுட்டாலஜிஸ்ட் தமிழ் எழுத்தாளன் அல்லன். கழிப்பறை விஷயங்களைப் பதவிசாகப் பதிவேற்றுபவன் அல்லன். ஆகவே, எழுதவேண்டிய அல்லது ஆசைப்படும் விஷயங்களை ஓரளவாவது அகழ்வாராய்ச்சி செய்துதான், அதுவும் அதற்கேற்ற பின்புலம் என்னிடம் திருப்திகரமாக இருந்தால்தான் என்னால் எழுதமுடியும். ஆனால் அம்மாதிரி அகழ்வாராய்ச்சிகளுக்கு, பழைய குறிப்புநோட்டுப்புத்தகங்களைத் தூசிதட்டிப் படித்து மேற்கோள் தரவு எனக் காட்டி,மேலதிகமாகப் படித்து சிரமமெடுத்துக்கொண்டு காலத்தையும் சிரத்தையையும் செலவழித்து எழுதுவதற்கு, பெரும்பாலான அலக்கியக்காரர்களும் அறிவுஜீவிகளும் அவர்களுடைய அமோகப் பொழிதல்களும் ‘வொர்த்‘ இல்லை. மன்னிக்கவும்.

Contemporary Tamil ‘avant garde’ literature / culture / criticism is grossly overrated. Um, actually they are more gross than overrated. As discerning Tamils, we are jinxed, royally screwed, like totally; sorry, it is blindingly obvious. Oh what to do.

சரி. எழுத ஆரம்பித்த, நிலுவையிலிருக்கும் அக்கப்போர் விஷயங்களை (இவற்றைப் பற்றி எழுதுகிறேன் என ஒப்புக்கொண்டதால்) முடித்துவிட்டு பின் ஏறக்கட்டி விடுகிறேன்.

அலுப்பு + நன்றி.

23 Responses to “ஒரு சலிப்புக் கோரிக்கை”

 1. K.Muthuramakrishnan Says:

  “போகாதே போகாதே என்கணவா ……” என்று பாடவா?


  • யோவ் கொங்கணவா, நீருமா?

   எனக்குத் தேவைதான்! ;-)

   • Kannan Says:

    பிரசவ வைராக்கியம்னு நெனைக்கிறேன் :(

     பாப்பம்.


    • யோவ்!  இது மசான வைராக்கியம், என்னை இன்னான்னு நெனெச்சுப்புட்டீர்!

     • Kannan Says:

      ஏற்கெனவே கார்ல் சகானின் படைப்புகள் என்னைக் கவரவில்லைன்னு 
      ஒருத்தர் எழுதிட்டார்.

      அடுத்து ஆர்தர் சி கிளார்க்கும் குப்பை, நாந்தான் பெஷ்டுன்னு எழுதுன்னாலும் எழுதுவாங்க.

      அதுனால அப்பப்ப ஒரு கிள்ளு நல்லதுதான்.


      • //ஏற்கெனவே கார்ல் சகானின் படைப்புகள் என்னைக் கவரவில்லைன்னு
       ஒருத்தர் எழுதிட்டார்

       ??

     • Kannan Says:

      வேற யார், அவரேதான், not his exact words but words to that effect, it was a long back.

      கீழே reply பட்டனை காணோம், ஒரு வேளை 
      ஆரிய,திராவிட மொசபடோமிய சதியாக இருக்குமோ ?


 2. Yo Muthoo, Do you know that there is an erudite scholar of TN who has claimed that:

  1. There is no history of ‘Modern’ science/medicine during or before 19th Century CE – all the knowledge of the past scholars is not even worth our current 8th Grade level curriculum; true of Sanskrit, Tamil & Latin – apparently!

  2. ‘Modern’ sciences began only after Galileo!

  …But, there is an incredible amount of calculus to computational astronomy to logic to algebra to chemistry.. … based ORIGINAL works in Sanskrit! And there have been most ‘modern’ medical achievements too, much before 19th century!

  Why does he write unadulterated nonsense like this!

  Am also told that nearly a HUNDRED lousy & lazy idiots have ‘liked’ the aforesaid scholar’s blather… This is even WORSE.

  What are you guys doing, without confronting such juvenile delinquents??

 3. Muthukumar Says:

  //மன்னிக்கவேண்டாம். போங்கடே!//
  …. போங்கடீ:-|


  • யோவ்! இருக்கும் ஒன்றிரண்டு அன்பிகளையும், தாங்கள் இப்படி ஆணாதிக்கத்தனமாக விரட்டியடிக்க வேண்டாம்!  (அந்த உரிமை எனக்கு மட்டுமே உண்டு, நன்றி!)

 4. Mammathan Pandiyan Says:

  //Why does he write unadulterated nonsense like this!//

  Who, Aravindan Kannaiyan? அவர் கிறிஸ்தவம் ஐரோப்பிய பாகனிய கலாச்சாரத்தை அப்படியே போற்றி பாதுகாத்து வந்து உள்ளது, இந்தியா (இந்துக்கள்) அவர்களிடம் பாடம் கற்று கொள்ள வேண்டும் என்று பொருள் வருமாறு ஒருமுறை எழுதினார். He almost hate everything belongs to India.


  • யார் இவர்? கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

   • ரிஷி Says:

    அந்தக் கிருஷ்ண பரமாத்மாவன்றி வேறு யார், வேறு யார்!. அவரே தான்!

    அந்தக் காலத்து எல்லாத் தமிழறிஞர்களும் மூடர்கள். சமஸ்கிருத அறிஞர்கள் நிர்மூடர்கள். இன்றைய எட்டாம் வகுப்புக் குழந்தைக்குத் தெரிந்தது கூட அவர்களுக்குத் தெரியாது. ஆனால், எட்டாம் வகுப்பிற்குத் தேர்வு என்றால் நாங்கள் அதை ஏற்க மாட்டோம் (என்பார்). குலக் கல்வி ஆதிக்கம் (என்பார்) மோடியை, தமிழக அரசை, ஹிந்துத்துவ வெறி பிராமணர்களை, திராவிட லும்பன்களையும் (போனாப் போகிறதென்று சேர்த்துக்) கரித்துக் கொட்டுவார்.

    புலிநகக் கொன்றையைத் தூண்டிலாக்கி கலங்கிய நதியில் மீன் பிடிக்கும் நவீன ரிஷி அவர். வாழ்க அவர்.

   • Mammathan Pandiyan Says:

    PAK அவர்களா இப்படி எழுதியது? ஆச்சரியமாக இருக்கிறது.


    • பாவம், அவருக்கு PEI பிடித்துவிட்டது. (அவர் இப்போதெல்லாம் இப்படியேதான் தவறாமல் அட்ச்சிவுட்டுக்கொண்டிருக்கிறார்.)

     “நீ என்னை லைக் பண்ணி ஸ்தோத்தரித்து ஜெபித்தால், நான் உனக்கு, தினமும் அட்ச்சுவுட்டாலஜி பஜ்ஜியும் அன்றன்றுள்ள அப்பமும் பண்ணிக்கொடுத்து ஆசீர்வதித்து உனக்கு சட்டினியும் டிகிரிகாப்பியும் பண்ணிப் போடுவேன்”

   • Muthukumar Says:

    ***
    Experimental observation and hence scientific method was first started by Galileo Galilei.
    R.Feynman quotes in his famous book (http://www.feynmanlectures.caltech.edu/I_05.html)
    Many people would like to place the beginnings of physics with the work done 350 years ago by Galileo, and to call him the first physicist. ….The way to measure a distance was well known long before Galileo, but there were no accurate ways of measuring time, particularly short times. Although he later devised more satisfactory clocks (though not like the ones we know), Galileo’s first experiments on motion were done by using his pulse to count off equal intervals of time…..
    ***
    Galileo may be the first Experimental physicist.
    ***
    முட்டாள் தனத்தை பரப்ப அவசியம் இல்லை என்று எழுதுவது ஊருக்கு மட்டுமா?

 5. Sachidanandam Says:

  பொட்ட குளத்தில் காக்கைகள் ஆயிரம் இருக்கும் ஆனால் மானஸ ஸரஸ்ஸில் அன்னப்பட்சிகள் ஒரு சில மட்டும் இருக்கும்…நொச்சூர் சொன்னது

 6. dagalti Says:

  /நீங்களே செய்துகொள்ளலாமே!/

  இங்கு இட்ட முதல் பாக்கமெண்டிலேயே
  சொன்னேன்: எங்களுக்கு ‘டென்மார்க் மாநிலத்தில் ஏதோ அழுகல்’ என்ற அளவில் குன்ஸா தான் தெரியும். ஆனால் அதாவது தெரியும். என்ன ஏது என்று
  வேலை மெனெக்கட்டு நீங்கள் எழுதினால் படிப்போம் (அரசப்பன்மை என்றும் பாடம்)

  தைத்திரிய உபநிஷதில் ஒரு வரி:
  *
  ஸப்தார்த்த ஹம்ஸ லக்‌ஷணம்
  க்‌ஷீரஜல வ்யத்யாஸ ஜிக்ஞாஸம்

  ருசிகர வ்யத்யாஸ ஸாஹித்யம்
  பரமஹம்ஸானி தர்மானாம்
  *

  ஏழரை அன்னங்களுக்கு பால்நீர் பிரித்தறியும் ஞானமுண்டு. ஆனால் அதைச் சுவையாக எடுத்துரைக்கும் வேலையோ…..

  அதுசரி, நீங்கள் எழுதினால் நாங்கள் படிப்போம்; நாங்கள் எழுதி நாங்களே
  படித்துக்கொள்ள இதென்ன இலக்கிய பத்திரிகையா?


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s