ஷெல்டன் பொல்லக், பக்ஷிராஜன் அனந்தக்ருஷ்ணன், வித்யாகர்விகள், குமாஸ்தாக்கள், பாவப்பிரகாஷனம், அட்ச்சிவுட்டாலஜி – குறிப்புகள் (1/2)
18/09/2019
பெரியவர் பிஏகே இப்படியொரு குறிப்பை, ஃபேஸ்புக்கெழவில் எழுதியிருக்கிறார்.
இம்மாதிரி ஒரு அரைகுறை பகீர்ப் பதிவினை 102 பேர் சப்புக்கொட்டிக்கொண்டு ரசித்திருக்கிறார்கள் என்பது, எனக்கு, ‘தமிழில் அறிவியக்கம் எனவொன்றிருக்கிறதா என்ன‘ என்கிற என்னுடைய பெருஞ்சந்தேகத்துக்கு அணுக்கமான பதிலை அளிக்கிறது.
…ஏதாவது தமிழக அல்லது ஜேஎன்யு டிஸ் ஜாதவ்பூர் அலிகட் வகையறா தர சராசரிப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களோ மாணவஎழவாளர்களோ இப்படி எழுதியிருந்தால், என்ன, அவர்களுக்கு என்ன பெரிதாகத் தெரியும் குப்பைக்கூவான்கள், என அசிரத்தையாக விட்டுவிடலாம். ஆனால், இதனை எழுதியிருப்பது… …
-0-0-0-0-
சரி. எனக்கும் அதிதீவிர வெறித்தனம் – அது ஆக்கபூர்வமாக இருந்தாலொழிய (அதாவது, அது என்னுடையதாக ;-) இருந்தாலொழிய) – கொஞ்சம் ஒத்துவராது. அறிவியல்-தொழில் நுட்பப் புலங்களில் கொஞ்சமாவது பயிற்சி இருப்பவர்களுக்கு அப்படித்தான் இருக்கும் என நினைக்கிறேன். மாறாக ஸோஷியல்(!) ஸைன்ஸ்(?!), அந்தவியல் இந்தவியல் விந்துவியல் அலக்கியம் புடுக்கவிதை கலைவெமர்சனம் எனக் கண்டமேனிக்கும் திக்கெல்லாம் ஜல்லியடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, வாயோர நுரைதள்ளும் வெறி என்பது இல்லாமல் இருந்தால்தான் அதிசயம்.
ஆனால், கொஞ்சம் யோசித்தால் – நேரிடையாகவும்/எதிர்மறையாகவும் செயல்படும் நானாவித வெறியர்களால் தான் உலகம் தாவித்தாவி முன்னோபின்னோ முன்னுக்குப்பின் முரணாகவோ ஓடிக்கொண்டிருக்கிறது என்பது என் துணிபு.
சுழன்றும் வெறிப்பின்னது அண்டம்.
மாறாக – நிறமற்ற, சொந்தக் கருத்துகளை சமைத்துக்கொள்ள விரும்பாத, சொன்னசொல்படி ஓழுகும் 9-5 குமாஸ்தாக்களால் உலகத்துக்கு ஒரு ஸ்திரத்தன்மை வருகிறது, நிரவல்கள் நடக்கின்றன, உபரிகள் எதிர்பார்த்தவகையில் சேகரம் செய்யப்படுகின்றன, இன்னபிற லௌகீக விஷயங்கள் ஓரளவு ஒப்புகொள்ளும்படியாக நடக்கின்றன என்பதும் உண்மைதான்! ஆனால் குமாஸ்தாக்கள், தம்மைச் சான்றோர்களாக வரித்துக்கொண்டாலும், அல்லது சான்றோர்கள் தம்மை குமாஸ்தாக்களாக வரித்துச் சாதாரண விஷயங்களையும் அமோகமாகச் சொதப்பினாலும் பிரச்சினை, பிரச்சினை…
வெட்டிப்பரப்புரை வாயோர நுரைதள்ளும் வெறித்தனம் என்பது, ஒரு அதீத சோகம். ஆனால் நடைமுறை, எதிர்மறை உண்மை. எடுத்துக்காட்டு: உள்ளீடற்ற திராவிடமும் அதைச்சார்ந்த உணர்ச்சிக்குவியல் நுரையும். நன்றி.
…என்ன சொல்லவருகிறேன் என்றால் குமாஸ்தாவியம் (ஐடி தகவல்தொழில்(!)நுட்ப(!!) குமாஸ்தாவியம் தவிர – ஏனெனில் இது பெரும்பாலும் ஓள் பஜனை, ஒப்பேற்றுதல், தண்டச்சோற்றுத் தடிராமன்கள் உலவுமிடம் என்பது ஒரு பிரத்யட்ச உண்மை) எவ்வளவு உலகுக்கு முக்கியமோ அதேயளவு வெறித்தனமும் முக்கியம் என்பதுதான். வெறி என்பதும் Very goodஆக இருக்கலாம்.
ஆகவே நான், குமாஸ்தாக்களுக்கு உகந்த அடிப்படை மரியாதையைக் கொடுக்கிறேன்; மேலும், தரவுகளின் மீது தொழில்சுத்தத்துடன் கருத்தாக்கங்களைக் கட்டமைக்கும் கறார் வெறியர்களுக்கும் நான் ஓ போடுகிறேன். (சென்றவருடம் தவிர்க்கவியலாமல் மண்டையில் அடித்துக்கொண்டு, என் அம்மாவுக்காகப் போயிருந்த ஒரு திருமணத்தில்தான் சிலபல இளைஞக்குளுவான்களிடமிருந்து இந்த ஓ பற்றி அறிந்துகொண்டு இன்புற்றேன், மன்னிக்கவும், ஓ போட்டேன்!)
வித்யாகர்வம் (கல்விச் செருக்கு?) எனவொன்று இருக்கிறது. அது தெருவில் வருவோர்போவோரையெல்லாம் ஸோஷலிஸத்தனமாக விழுந்துபிடுங்கும் ஞமலித்தனமான வெறியல்ல. மாறாக, அது மாளா உழைப்பினால், ஜொலிக்கும் புடம்போடப்பட்ட அறிவினால் ஒருவர் அடைந்துள்ள உயரங்களை – அப்படி ஒன்றும் செய்திராத (ஏன் நினைக்கக்கூடச் செய்யாத) சோம்பேறிகள் உளறிக்கொட்டி கஷ்மீர் இஸ்லாமிய போராளித்தனம் போலக் கல்விட்டெறிந்து எதிர்க்கும்போது வெளிப்படும் ரௌத்திரச் செயல்பாடு. தாம் அறிந்துள்ள விஷயங்களைக் குறித்த பெருமிதம், அதனை மேன்மேலும் மெருகுபடுத்துக்கொள்ளும், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் மனப்பாங்கு, அர்த்தமோ தர்க்கமோ அற்று எதிர்ப்பவர்களை, அவர்களுக்கு உரிய இடத்தில், அதாவது அதலபாதாளத்தில் வைப்பது.
In other words, 1) Not suffering fools gladly 2) Having a zero tolerance for mediocrity. இம்மாதிரி வித்யாகர்வமுள்ள பெரியோர்களின் காலடியில் அமர்ந்து கற்றுக்கொள்ளவே எனக்கு ஆசை; அப்படி ஓரளவு செய்துமிருக்கிறேன். (வித்யாகர்வத்துக்கும், எனக்கும் மிகவும் உவப்பான மடாஜுரோவின் கதை – ஒரு உதாரணம்)
அதேசமயம், இம்மாதிரி வித்யாகர்விகள், சிலபல சமயங்களில் மிகையாகவும் தர்க்கரீதியற்றும் சிலசமயங்களில் போலியாகவுமேகூடச் செயல்படுகிறார்கள்; பொதுவாகவே ஜொலிப்பும் சமனமும் உடைய பலப்பல சான்றோர்களை அறிவேன் என்றாலும், விதிவிலக்குகளான எதிர்மறைச் செயல்பாடுகள் கொண்ட வித்யாகர்விகளை – என்னதான் உயரவுயரப் பறந்தாலும், அவர்களும் மானுடர்கள்தாம், ஆகவே மானுடவுணர்ச்சிக் குவியல்களுக்கும் ஆசாபாசங்களுக்கும் ரசக்குறைவுக்கும் பாற்பட்டவர்கள்தாமென, அவர்களுடைய முகம்சுளிக்கத்தக்க செயல்பாடுகளானவை லூஸ்ல வுடப்படவேண்டும் என்பதும் என் எண்ணம். இதற்குச் சில எடுத்துக்காட்டுகள், நோம் சாம்ஸ்கி, கார்ல் மார்க்ஸ், ரபீந்த்ரநாத் டாக்குர், தருமு ‘பிரமிள்’ சிவராமு, ஃப்ரான்ஸ் கஃப்கா போன்றவர்கள்.
என்னைப் பொறுத்தவரை, தமிழகத்தின் சாபக்கேடான மலட்டு அறிவுஜீவியச் சூழலில், பிஏகே அவர்களை, இப்படியொரு பிறழ் வித்யாகர்வியாகவே பார்க்கவே ஆசை. இருந்தாலும், அவர் விடவே மாட்டேனென்கிறார், தொடர்ந்து அழிச்சாட்டியம் செய்கிறார். அவரைத் தொடர்ந்து படித்து – புரிந்ததோ புரியவில்லையோ படித்தார்களோ படிக்கவேகூட இல்லையோ – அமோகமான புல்லரிப்புடன் ‘லைக்’ போட்டுச் சிலாகிப்பவர்களின் மௌடீக ரெவலைத்தாண்டி எதுவுமே சொல்ல, செய்யவேண்டிய அவசியம் தனக்கு இல்லை, என்பதை மிகச்சரியாகவே உணர்ந்திருக்கிறார். :-( என்ன செய்ய.
இச்சமயம், நான் என்ன குப்பைத்தனமாக எழுதினாலும் ஓடிவந்து ‘லைக்’ போடுபவர்களின் முட்டாள்கூட்டம் என ஒத்திசைவுக்கு ஒன்று இல்லை என்பது எனக்கு ஒரு வசதிதான் என்பதை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். சக ஏழரைகள் ஜொலிக்கிறார்கள். (மறக்காமல் இந்தப் பதிவை ‘லைக்’ பண்ணவும்!)
-0-0-0-0-
சரி. நான் ஷெல்டன் பொல்லக் அவர்களின், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை இருமுறையாவது படித்திருக்கிறேன்; அதில் ஒருமுறை, குறிப்பெடுத்துக்கொண்டு படித்திருக்கிறேன் – ஒருமாதிரி காமாலைக்கண் புத்தகமிது.
ஷெல்டன் போன்ற (பொதுவாக நான் மதிக்கும்) படிப்பாளிகள், விஷயங்களை நுண்மையாகத் திரிக்கக்கூடிய பராக்கிரமம் மிக்கவர்கள், நுணுக்கமாக அட்ச்சிவுடக்கூடியவர்கள் என்பதைப் பல மாமாங்கங்களாக அறிவேன் என்றாலும் – ‘பரவலாக மதிக்கப்படும் பேராசிரியர்’ ஒருவர் இப்படியெல்லாம் திரிப்பது என்பது மிகச் சோகமான விஷயம். (வரவர — ‘இந்த விஷயத்தைச் சொன்னது ஒரு அறிவாளி / சான்றோர், ஆகவே அதற்கேற்ற ஹோம்வர்க் எழவினை அவர் செய்திருப்பார், அதனாலேயே அது வேதவாக்கு‘ — எனும் சௌகர்யத்தையே விட்டுவிட்டேன்; பாரததத்துவம் / இன்டாலஜி என வந்துவிட்டாலே பலப்பல ஹீரோக்கள் ஸீரோக்களாகிவிடுவதைப் ப்ரத்யட்சமாகப் பார்த்திருக்கிறேன், சோகம்!)
…எது எப்படியோ, ‘பாவப்ரகாஷனம்’ நாடகக்கலை/சுவை/பாவம் குறித்த ஸம்ஸ்க்ருத புத்தகம் ஒன்றின் சில பகுதிகளையும் எழுத்துக்கூட்டிப் படித்திருக்கிறேன். அதன் க்ரிட்டிகல் எடிஷன் ஒன்றையும் புரட்டியிருக்கிறேன். (சுமார் 25-30 ஆண்டுகளுக்கு முன், ‘வெளி’ ரங்கராஜன் என்ற அக்கால ‘நாடக’ ஆசாமியொருவர் பத்திரிகையில், அஸ்வகோஷர் (அல்லது அபிநவகுப்தரின் அழகியல்?) நாடகக் கலை எழவுகள் பற்றி ஏதோ ஒரு கட்டுரை வந்திருந்தபோது அதற்கு மிகுந்தகோபத்துடன் எதிர்வினை எழுதுவதற்காகத்தான் அந்தப் புரட்டலைச் செய்தேன் என நினைவு; இல்லை, இது ஞானியின் ‘நிகழ்’ சஞ்சிகையில் வந்ததோ என்ன எழவோ!
ஆனால் என் எதிர்வினை எங்கும் பிரசுரமாகவில்லை, கறுப்புமசியில் விலாவாரியாகவும் கத்தை கத்தையாகவும் இருந்த அதனை ‘ரெஜிஸ்டர்ட் போஸ்ட் வித் அக்னாலெட்ஜ்மெண்ட் ட்யூ’ என அதனை அனுப்பினேன் என்றாலுமிப்படி! எது எப்படியோ, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நிம்மதி! ஏனெனில், அந்த எதிர்வினையானது, மூல அஸ்வகோஷ(?) குறிப்புக் கட்டுரையை விட மும்மடங்கு நீளமாகவும், அதைவிடவும் ஏறத்தாழ நான்கு மடங்கு நீள அடிக்குறிப்புகளைக் கொண்டதாகவும் இருந்ததாலும் அப்படி ஆகியிருக்கலாம், என்ன செய்வது சொல்லுங்கள்… ஆனால், எப்படியெல்லாம் என் இளம்வயது சக்தியை திக்குதிக்காகத் திரும்பி விரயம் செய்திருக்கிறேன் என்பதை நினைத்தால்… … சோகம்! :-(
-0-0-0-0-0-
//இவர்களுக்கும் முன்னோடிகள் சமஸ்கிருத வெறியர்கள். திமிர் என்பதற்கே அடையாளமாக அவர்களைத்தான் காட்ட முடியும்.
இதை, பெரியவர் பிஏகே எப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. வெறுமனே ஷெல்டனார் பொல்லக்கார் சொல் வார்த்தை அமிர்தம் என இதனை அட்ச்சிவுடுகிறாரா? அல்லது திராவிட இயக்கக் கையேடுகளைப் படித்துப் படித்து ற்ற்றொம்ப ஹோம்வர்க் செய்ததால் இப்படியா?
//அப்பட்டமான சாதி, இனத்திமிரோடு இயங்கிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள்.
பொத்தாம்பொதுவாக இப்படி எழுதுவதற்கு அப்பாற்பட்டு, வில்லியம்ஜோன்ஸ்/ராம்மோஹன்ராய் அடியொழுகி, மிஷனரி பரப்புரைகள் பாற்பட்ட அல்லது காந்திய வகையறா தொடர்புள்ள ‘இந்திய வரலாறு’ போன்றவைகளைத்தாண்டி – அவரிடம் இதுகுறித்துச் சாட்சியங்கள், தரவுகள் இருந்தால் அவற்றைப் பார்த்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ள ஆசை.
இனத்திமிர் என்று சொல்கிறார். அப்போது பிஏகே அவர்கள் ‘இனம்’ என்ற விஷயத்தை அறிவியல் பூர்வமானது என்று ஒப்புக்கொள்கிறாரா? சில இனங்களுக்குத் திமிர் உண்டு என்கிறாரா? இப்படியொரு அறிவியல்பூர்வமான விஷயமும் கம்யூனிஸ்ம் ஸோஷலிஸ்ம் நேரூவிஸ்ம் போன்றவைமூலமாக அவரை வந்தடைந்திருக்கிறதா?? என்னவோ போங்க… கிண்டி குதிரை ரேஸ் எழவை, கிண்டி குதிரை இனம் என்றழைக்காதவரை நன்றே! அல்லது ஷெல்டனார் பொல்லக்காரின் ஹேஷ்யங்களே போதுமென்று கருதுகிறாரோ என்னவோ?
// இது சாரதாதனயா என்ற ஆசிரியர் –
அவர் பெயர், சாரதாதனயா அல்ல. சாரதாதனய. அவர் ஒரு இமயம். அவர் எழுதிய பாவப்ரகாஷனம், இலக்கியம் / நிகழ் / நாடகக் கலை குறித்த, குறிப்பிடத்தக்க ஒன்று. நான் அதனை நாடகக்கலை (dramaturgy) குறித்த உலகளாவிய ஐந்து-பத்து சமகால புத்தகங்களில் ஒன்றாக சர்வ நிச்சயமாக வைப்பேன். அவர் ஒரு, ஆழம்வாய்ந்த, தரமான அழகியல் இலக்கண வெறியர். அவர் எழுதியுள்ள இந்தப் பெரிய ஆக்கமானது, அக்குவேறு ஆணிவேறாக பாவத்தை, நிகழ்கலைக் கூறுகளை ஆராய்ந்து, பகுத்து, அதன் முற்கால, தற்காலத் தொடர்புகளைத் தெளிவுபடுத்தி விரித்திருக்கும் ஒரு மாபெரும் முனைவு.
ஆனால் – அவருடைய பெயரைக் கூடச் சரியாக உள்வாங்கிக்கொள்ள முனைப்பில்லாமல், ஏதோ ஒரு வெள்ளைக்காரப் புத்தகத்தைப் படித்துவிட்டு, அப்படியொரு அவசரம் அவசரமான கரித்துக்கொட்டல், எள்ளல் தேவைப்பட்டிருக்கிறது – நம் பெரியவருக்கு.
பரிந்துரை: இதே ரீதியில் போனால், எனக்கு ஒன்று தோன்றுகிறது. அரவிந்தன்கண்ணையன் அவர்களும், பெரியவரைப் போன்ற அமோக ஸ்காலர்ஷிப் உடையவர்தான், அட்ச்சிவுட்டாலஜிஸ்ட்தான்; ஆகவே – பெரியவர் அவர்கள், அமெரிக்க அரவிந்தன்கண்ணையனுடன் சேர்ந்து கொள்கைக் கூட்டணியமைத்து பின் ஒரு பரஸ்பர சொறிதல் கழகத்தையும் ஆரம்பித்து நடத்தினால் அதற்கு இன்னமும் அமோகமாக ‘லைக்’ எழவுகள் கிடைக்கும், நன்றி! நான் வேண்டுமானால், ஏதோ என்னாலானது, இருவரையும் சுக்குக்குக்கூடத் தெரியாது என்றாலும், பரஸ்பர அறிமுகம் செய்துவைக்கிறேன்; சுக்குக்கூடத் தெரியாமல் பெரியவர் சாரதாதனயர் பற்றி அட்ச்சிவுடும்போது, சுக்குக்குக் கூட இருவரையும் தனிப்பட்ட முறையில் அறியாத நான், பெரியமனது பண்ணி அவர்கள் இருவரையும் இணைக்கமுடியாதா என்ன? ஸப்பாஷ், ஸர்யான போட்டீ!!
// பன்னீரண்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் இதயம் என்று அறியப்படும் மதுரையில் இருந்து கொண்டு – எழுதியது. பாவப்பிரகாசனா என்ற நூலில் வருகிறது:
பாவப்பிரகாஷனம் சரி.
ஆனால் அவர் மதுரையில் இருந்தார் என்பதற்கு ஒரு சுக்குத் தரவும் இல்லை. ஷெல்டனார் பொல்லக்கார் அட்ச்சிவுட்டதுதான் இருக்கிறது. சொல்லப்போனால், ஷெல்டனார் ‘மோஸ்ட் லைக்லி‘ மதுரை என்றெல்லாம் எழுதியதை, நம் பெரியவர், மதுரைதான் என்றாக்கிவிட்டார். தேவையா? ஆனால் ‘தமிழ்நாட்டின் இதயம்’ இதயக்கனி கனிமொழி மொழிப்போர் போரும்சமாதானமும் டால்டாஸ்டால் என்றெல்லாம் எஸ்ராபோல அதனைக் குதித்துக் குதித்துக் கருத்துத்தொடர்புரீதியாக விஸ்தரித்து நம் உயிரை வாங்கவில்லை என்பது பெரியவிஷயம்!
(ஷெல்டல் பொல்லக் புத்தகத்தின் 95ஆம் பக்கம் மேலே; இதனை வைத்துத்தான் பெரியவர் ‘மதுரை’ மரிக்கொழுந்து வாசம் பண்ணி விட்டார்!)
ஷெல்டனார் எப்படி மருதை குருதை என எழுதினார் – என்பதற்கு அவரே (மூலத்தைப் படிக்காமல்; எனெனில் படித்திருந்தால் இப்படி அவர் அட்ச்சிவுட்டிருக்கமாட்டார்) கருத்துக்கடன் வாங்கிக் கொடுத்திருக்கும் அடிக்குறிப்பு கோனார் நோட்ஸ், கீழே.
ஆனால் உண்மை என்ன?
நமக்கு, சாரதாதனய அவர்கள் தன்னைக் குறித்துத் தன்னுடைய பாவப்பிரகாஷனம் நூலறிமுகம் வாயிலாக ஒரிரு வரிகளில் சொன்னதைத் தவிர, வேறொரு சுக்குக்கும் தரவுகளே இல்லை; சமகால வரலாறுகளானாலும் சரி, பொழிப்புரைகளானாலும் சரி, வேறுவிதமான கல்வெட்டுகள் வகைச் சான்றுகளும் சரி – ஒன்றுமேயில்லை.
சாரதாதனய அவர்கள், தான் பிறந்த பிரதேசத்தைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்? “தான் பிறந்தவூர் மாதரபூஜ்யம்; அது ஆர்யவர்த்தத்தின் தெற்கே, மேருத்திர ஜனபதத்தில் இருக்கிறது… …பாட்டனார் காசியில் வசித்தவர், படித்தவர்.” இம்மாதிரி விஷயங்கள். அவ்ளோதான்.
கீழே, பாவப்பிரகாஷனத்தின், மஹராஜா ஸாயாஜிராவ் பரோடா பல்கலைக்கழகத்தால் பதிப்பிக்கப்பட்ட, கெய்க்வாட் ஓரியன்டல் ஸீரிஸ் (1968) க்ரிட்டிகல் எடிஷன் (பக்கம் 104ல்) இருந்து எடுக்கப்பட்ட, இதற்கான தரவு.
இந்த மேருத்தரத்தை இரண்டு வகையாகப் புரிந்துகொள்ளலாம். 1) (அக்காலத்தில் மேருத்தரம் என அழைக்கப்பட்ட) இக்கால மீரட், உத்தரப்பிரதேச நகர் (தில்லிக்குத் தெற்கே இருப்பது) அல்லது 2) நம்மூர் உத்திரமேரூர்.
1)ன் படி மாதரபூஜ்யம் என்பது இக்காலத்து மதுரா. 2)ன் படி (பாவப்பிரகாஷனம் நூலின் கையெழுத்துப் பிரதிகள் என 1893ல் இருந்து கிடைத்த மூன்றே பிரதிகள் எங்கு அகப்பட்டன என்பதைக் கொண்டும், ற்ற்றொம்ப குண்ஸாக) அது நம்மூர் மாடபூசி (madabusi அல்ல, matapusi – ஆனால் இது சர்வ நிச்சயமாக மதுரையல்ல!) என்பதாக இருக்கலாம். அவ்ளோதான். இவையெல்லாமே ஹேஷ்யங்கள்தாம். முடிவாகச் சொல்வதற்கு என ஒன்றுமில்லை.
ஷெல்டனார், இதனை மதுரை (அதுவும் நம்மூர் மதுரை) என எப்படித்தான் புரிந்துகொண்டாரோ?
ஹ்ம்ம்… உண்மையில் இந்த டகீலை ஷெல்டனார் எந்த உளறலிலிருந்து எப்படி எடுத்தார் எனத் தெரியும்; மதுரை – தெற்கு – ஆரியவர்த்தம் –>> தென் மதுரை –>> தமிழ் நாட்டு மதுரை –>> ஆ! ஃபேமஸ்ஸான மதுரை –>> டட்டடா டட்டடா… … நாம் சொல்வதை, ங்கோத்தா, எவன் சரிபார்க்கப்போகிறான் என்கிற தமிழலக்கியவாத எண்ணம் போலும்… ஆனால் அது முக்கியமில்லை; எது முக்கியமென்றால், பெரியவர், தானே நேரில் பார்த்ததுபோல ‘மதுரை இதயம் குருதை என அட்ச்சிவுட்டு’ எழுதியது தவறு என்பதுதான்.
(வெள்ளைக்காரர்கள் என்றால் ஆராய்ச்சியில் வல்லவர்கள், தரவில்லாமல் அட்ச்சிவுடமாட்டார்கள், நேர்மையும் ஆழமும் மிக்கவர்கள் என்று நாம் பொத்தாம்பொதுவாக நம்புவது சரியில்லை; ஷெல்டன் பொல்லக் அவர்கள்கூட சுமார் 30 வருடங்கள் முன்பு, இவ்வளவு மோசமாக இருந்திருக்கவில்லை, என்ன செய்வது, எல்லாம் நம் காலத்தின் கோலம், வேறென்ன சொல்ல! ) :-(
சரி. பிறவற்றை, அடுத்த பதிவில் பார்ப்போம்.
:-(
18/09/2019 at 21:56
Dear Sir,
Not only Pollock, but 90% of Western writings has this finite “poison pills” & undercurrent biases (modelled after, of course, Christian evangelism). To identify you need a third eye reading, but our people only have 1.5 eye!!
More dangerous are these half-baked scholars followers !
Do you know? Pollock is heading “Murthy Sanskrit Library” (Infosys) to translate Indian Sanskrit Literatures in other languages?
(he is also Padma Sri !! in 2010)
Soon we will have many more PakshiRajan’s in the market.
BTW, do you have more details about Matapusi?
https://rajivmalhotra.com/books/the-battle-for-sanskrit/why-sheldon-pollock-is-a-very-important-indologist-to-engage/
https://trueindology.wordpress.com/2016/07/09/sheldon-pollock-an-analysis-of-scholarship-and-activism-2/
Regards
Gopi
19/09/2019 at 06:00
Sir, thanks. I am aware of these takes. Also Murty lib background.
The struggle against charlatans (there are entrenched folks much, much worse than Sheldon, but sadly, we are a ‘white’ and ‘coconut’ worshipping people, especially our so-called public intellectuals) and their agendafied ideologies will be long, and things have to be ‘won’ back inch by inch.
Thanks again, for sharing your consternation.
I do not know anything else beyond the fact that there was NO Madabusi (village) as claimed in the name of TM Krishna, the Magsaysay awardee – but there was one Matapusi. Nothing more.
Another day begins.
19/09/2019 at 05:55
/சக ஏழரைகள் ஜொலிக்கிறார்கள். (மறக்காமல் இந்தப் பதிவை ‘லைக்’ பண்ணவும்!)/
கொம்மாள , யாருக்கிட்ட மோதுற. எங்க தல சிங்கம்ல, அவரு படிக்காத பொஸ்தகமே இன்னம் பிரின்ட் அடிக்கலலே.இணமான தல ராமையா வால்க, வெர்ரிவேல் வீரவேல் ….எடுறா கட்டிங்க. மடக், மடக் … ங்கோத்தா….. pig பாஸ் போட்டாச்சா.சொத்…….கொர் கொர்.
19/09/2019 at 06:49
//அமெரிக்க அரவிந்தன்கண்ணையனுடன் சேர்ந்து கொள்கைக் கூட்டணியமைத்து பின் ஒரு பரஸ்பர சொறிதல் கழகத்தையும் ஆரம்பித்து நடத்தினால்//
19/09/2019 at 07:31
நன்றி, இன்னொரு ‘காந்திய’ அன்பர் வழியாகவும் இந்தச் சுட்டி கிடைத்திருக்கிறது; அவரும் பயந்துகொண்டே பார்த்துவிட்டு நன்றாகவே இருந்தது என்கிறார். சமயம் வாய்க்கும் போது பார்க்கிறேன்.
நல்ல விஷயங்களை யார் சொன்னால் என்ன? நானே சொன்னால்கூட அதனைக் கேட்டுக்கொள்வதில் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை; ஆனால், இந்தவொரு பிஏக்ருஷண சிலாகிப்பை வைத்துக்கொண்டு, அவர்கள் கொள்கைக்கூட்டணி அமைத்துவிட்டார்கள் என்று நம்மால் மகிழ்ச்சியடைய முடியுமா, சொல்லுங்கள்?
19/09/2019 at 08:44
ராம் சார், நானும் மற்றும் என் அக்காவும் கல்லூரி மாணவிகள். நாலு வருடங்களா தொடர்ச்சியா ஒத்திசைவு படிக்கிறோம். உங்க பதிவுகளை ஒருமுறைக்கு பலமுறை படிச்சா புரிகிறது. உங்க கருத்துக்கள் பிடிக்கிற மாதிரிஉங்க வசைச்சொல் நிரம்பிய, கூசுற வரிகள்நிரம்பிய எழுத்துக்கள் பிடிக்கல. கெட்டவார்த்தைகள் திடீர்னு ஒவராய்டுது.உங்களைத் திருத்த எங்களுக்க்கு வயசில்ல. ஆனா வசைச்சொல்களை தவிர்த்தா நிறைய இன்னமும் பலர் படிப்பார்கள்.அம்மா அப்பாவுக்கு அனுப்பலாம்
தப்பா நினைக்கமாட்டீங்கன்னு நம்புகிறேன் . கொட்டிட்டேன், அப்புறம் உங்க விருப்பம்
சாரி
19/09/2019 at 11:49
ஐயய்யோ! சின்ன வயதிலேயே இப்படிக் கெட்டுப்போய்விட்டீர்களே அம்மணிகளே! இந்த அலக்கிய அரசியல் அக்கப்போர் எழவெல்லாம் தேவையா உங்களுக்கு? அதுவும் ஒருமுறைக்குப் பலமுறை சிலபல பதிவுகளைப் படித்திருப்பதால் ஒருமாதிரிவேறு ஆகிவிட்டிருப்பீர்கள்கூட!
எது எப்படியோ, சில விஷயங்கள்: (நான் எதையும் தாங்கும் இதயம் கொண்டவன், கோபித்துக்கொள்ள மாட்டேன், ஃரீயா பேசலாம், நோ பிரச்சினை, சரியா?)
1) விரசமாக எழுதுகிறேன் என்பது உண்மை. ஆனால் வெகு சுலபமாக வாட் த ஃபக், பாஸ்டர்ட், ஆஸ்ஹோல் என்றெல்லாம் ஆங்கிலத்தில் சொன்னால் அது சரியாகிவிடுகிறது, என்ன செய்ய. பொதுவழக்கில் சாதாரணமாகப் பேசுவதைப் போலத் தமிழில் எழுதினால் அசிங்கம். நம் பாவனைகள் இருக்கின்றனவே! (இச்சமயம், நான் மிகவும் மதிக்கும் நாஞ்சில் நாடன் அவர்களின், அழகான, வசைச்சொல் பற்றிய கட்டுரையைச் சுட்டவேண்டும், பிடித்துக்கொடுக்கிறேன்)
2. ஆனால் நீங்கள் சொல்வதும் பரிசீலனைக்குரியது. நன்றி. அதே சமயம், உங்கள் பெற்றோர்களைக் குறைத்து மதிப்பிடாதீர்கள். 18+ வயதாகியிருக்கும் உங்களுக்கு, உங்கள் பெற்றோர்கள் தோழர்களே – அவர்களும் அலக்கிய அகலாச்சாரத் தமிழெழவுகளைப் பார்த்துச் சிரிக்கட்டுமே, பாவம்.
3. உங்களைப் போன்ற இளைஞர்கள்/இளைஞிகள் இப்பதிவுகளைச் சிரமப்பட்டுப் படிப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எதற்கும் மனநல மருத்துவர் எவரிடமாவது இந்தப் பிரச்சினையை விவாதிக்கவும்.
இருந்தாலும் நீங்கள் பொலிகபொலிக என வாழ்த்துகிறேன். (முடிந்தால் தொடர்ந்து படிக்கவும், தொடர்பிலும் இருக்கலாம் – நான் சிலபல தமிழ் அலக்கியக்காரர்களைப் போல காமாந்தகனோ, திராவிடனோ அல்லன் – கவலை வேண்டேல்.)
ஆச்சரியத்துடன்,
__ரா.
19/09/2019 at 16:14
அன்பு ஐயா,
நாஞ்சிலின் கட்டுரை சுட்டி –
https://solvanam.com/2019/06/30/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%b5%e0%af%81-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d/
19/09/2019 at 16:24
அருமை ஆர்ஸி, நன்றி! 8-)
மதியம் கொஞ்சம் தேடிப்பார்த்தேன் – எனக்கு அகப்படவில்லை. இரவு மறுபடியும் பார்க்கலாம் என விட்டுவிட்டேன்…
நன்றி! நன்றி!! நன்றி!!!
இளம் பெண்களே, நாஞ்சில் நாடன் அவர்களின் முழுக்கட்டுரையையும் படியுங்கள். பின்னர் உங்களுக்குள் விவாதித்து (உடனடியாக ஒரு முடிவுக்கு வராமல்) ஊறப்போடுங்கள். சரியா?
சொல்வனம், ஒரு அழகான இணையதளம். அவர்களும் நீங்களும் (+ஆர்ஸியும்) பொலிய வாழ்த்துகள்.
19/09/2019 at 18:41
நன்றிகள் பல, படிக்கிறொம். தவறுதலாகச் சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க.
19/09/2019 at 19:13
ஒரு பிரச்சினையும் இல்லை. பொலிக.
19/09/2019 at 19:05
Wow, Nanjilar covered all the bases :) I couldn’t help notice some similarities between Aasan’s recent article on the same subject and this.
Wonder which came first ?
19/09/2019 at 19:12
Sir, I haven’t read Jeyamohan in a while. So your take please. But I would say that, among many many shortcomings of his – this may only be a minor one – this ‘writing under influence!’
19/09/2019 at 09:43
வடா = வடை
மதுரா = மதுரை
ஒரு குழப்பமும் இல்லையே ? :)
19/09/2019 at 11:52
மீனாட்சியும் முருகன் இட்லியும்தான் என்னை, உங்களைப் போன்ற எதிரிகளிலிருந்து காப்பாற்றவேண்டும்.
ஆளை விடும். பிஏகே ஏற்கனவே என்னைத் தாளித்துக்கொண்டிருக்கிறார். ஒர்ரே சூடுசூடாக இருக்கிறது.
19/09/2019 at 11:26
My face book entry
பெரியவர் பி ஏ கே அவர்களின் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டுள்ளவன் நான். எல்லார்க்கும் நல்லனாய்,எல்லார்க்கும் பொல்லனாய் முகநூலில் வலம் வந்துகொண்டிருக்கிறார். அவர் எழுத்துக்களை தவறாமல் படிப்பவன் நான். எல்லாவற்றிற்கும் சகட்டுமேனிக்கு ‘லைக்’
போடமாட்டேன். ஆலிவர் கோல்டுஸ்மித் எழுதிய வில்லேஜ் ஸ்கூல் மாஸ்டர்போல அவரும் அவரின் பின் தொடர்புவர்களையும் பார்த்துச் சிரித்துக் கொள்வேன்.பெரியவர் ஆங்கில நூலாசிரியர்களை பெரும்பாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்கிறாரோ என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. “John De Bluff; “Goerge Je Dupe” (chummaa..HI HI HI)
போன்ற பெயர்களைப் பார்த்தவுடனேயே இவர்கள் அனைத்தையும் ஆராய்ச்சி செய்து தரவுகளுடன் எழுதுபவர்கள் என்ற முடிவுக்குப் பெரியவர் வந்துவிடுகிறாரோ என்று நினைப்பேன். ஆனால் என் குறைந்த படிப்புக் காரணமாக அவரை மறுத்துக்கூற திறனும் இல்லை ,தரவுகளும் இல்லை.
ஆனால் ஒத்திசைவு ராமசாமி அவர்கள் தரவுகளுடன் பெரியவரை எதிர் கொள்கிறார்.அவரை மட்டுமல்ல யார் ‘அடிச்சுவிடும் “போக்குக் கொண்டவர்களானலும் அவர்களை கடும் விமர்சனத்திற்கு ஆளாக்குகிறார். பிம்பம் உடைப்போரின் பிம்பத்தை உடைக்கிறார். கட்டுடைப்போரின் கட்டுக்களை அவிழ்க்கிறார்.
ஒத்திசைவாரின் மொழி பல நாசுக்குக்காரர்களையும் முகம் சுளிக்க வைப்பதுவே. என்னையும் சேர்த்துத்தான். அவர் மொழியைக் கடந்து சென்றால் அவர் கூறும் செய்தி சரிதான் என்று தோன்றுகிறது.நான் அதிகம் படிக்காதவன். மெத்தப் படித்தவர்கள் என்னுடன் மாறுபடலாம்.இன்று ஒத்திசைவார் பி ஏ கே அவர்களுக்கு எழுதிய ஒரு ‘கண்டனம்” சுட்டி கீழே; இதற்குக் கண்டன கணடனம் எழுதினால் அதையும் வாசிக்கிறேன்.
https://othisaivu.wordpress.com/2019/09/18/post-1039/…
19/09/2019 at 12:02
நன்றி. தலை உருட்டப்படும் ஓசை நன்றாகவே இருக்கிறது.
// கட்டுடைப்போரின் கட்டுக்களை அவிழ்க்கிறார்
என்னை விடவும் விரசமாக எழுதுகிறீரே! தகுமா? ஏற்கனவே சிறுமிகள் புகார் பிராது ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள்வேறு. :-(
19/09/2019 at 19:22
இந்நிலையில் பெரியவர் பிஏகே அவர்களின் தன்னிலை விளக்கம் (?) அவரின் முகநூல் பக்கத்தில் இன்று வந்துள்ளது தங்களின் பார்வைக்கு
https://m.facebook.com/story.php?story_fbid=3568648069828018&id=100000485801824
19/09/2019 at 19:24
அவர் சொல்லியிருப்பதில் இது சர்வ நிச்சயமாகத் தவறு: “I don’t think I have ever committed a very serious error which presents things upside down “
19/09/2019 at 20:20
இந்த சுட்டியை சூட்டினால் ‘NOT FOUND’என்று வருகிறதே ?
19/09/2019 at 20:22
? Which??
19/09/2019 at 20:57
https://othisaivu.wordpress.com/2019/09/18/post-1039/%E2%80%A6
20/09/2019 at 05:21
Sir, in this url, please remove stuff after 1039/ and the link content will load. Thanks.
19/09/2019 at 22:18
அன்பு ஐயா,
நீங்கள் இருவர் புழங்கும் தளம் வேறு வேறு.அவ்வளவே எனக்கு தோன்றுவது.
அவரைத் தொடர்ந்து படிப்பதால் தரவுகள் தாண்டி அவரை படிக்க கற்றுள்ளேன்.நான் அவர் சொல்ல ஆசைப்பட்ட அல்லது சொன்ன / சமஸ்கிருத வெறியர்கள் தமிழ் வெறியர்களுக்கு முன்னோடிகள் மற்றும் தமிழை மிலேச்ச பாஷை என்று சில பிராமண சமஸ்கிருத வெறியர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்/ என்ற வரிகளை மட்டுமே எடுப்பேன்.
நான் ‘ஓ’ போடா விட்டாலும் என் குறைந்த பட்ச அனுபவத்தில் அதற்கு வாய்ப்பு உண்டெனவே நினைக்கின்றேன்.
நீங்கள் மறுத்தது அவரின் தரவை மட்டுமே, மேற்சொன்ன கருத்து மறுக்கப்படாமல் அந்தரத்தில் நிற்கிறது, கீழே விழவில்லை என்றே புரிந்துள்ளேன்.தவறெனில் திருத்திக்கொள்கிறேன்.
தரவு இல்லையெனில் அது ‘அட்ச்சிவுடுதல்’ என்று ஒதுக்குவது எனக்கு கடினம் அவ்வளவே.தரவுகள் ஏதுமில்லையெனினும் ஒரு கருத்து நிற்க அனுமதியுண்டு என்பதே எனது புரிதல் ஏற்பவர் ஏற்கட்டும் அவ்வளவே.
நிறுவன ஆலை இயக்க செயல்முறை தவறுகளை ஆராயும் போது சுத்த தொழில்நுட்பக் காரணிகளை மட்டுமே தேடுவதில்லை, நடந்த வரலாறை நோக்குவதும், காரணி கண்டுபிடிக்கப்பட்டும்/ கண்டுபிடிக்கப்படாமல் பூசி மொழுகப்பட்டதையும் கணக்கில் கொள்வது உண்டு..எனக்கு கொஞ்சம் குமாஸ்தாவியல் பழக்க தோஷம் மன்னிக்க
அப்பனே முருகா காப்பாத்தப்பா :-)
20/09/2019 at 05:43
ஐயா, தாங்கள் சொன்னதும் சொல்லவருவதும் நன்றாகப் புரிகின்றன. வழக்கம்போலவே உங்கள் சமனத்துக்கும் ‘இருபக்கங்களையும் பார்க்கும்’ பண்புக்கும் நன்றி. :-)
நான் செய்திருப்பது பூர்வபக்ஷம். அவர் பக்கத்து குறைந்த பட்ச லாஜிக்கைப் புரிந்துகொள்ள முயற்சிப்பது. அதனால் தான் அவர் எப்படி ஒரு பிறழ்பார்வைக்கு வந்திருக்கலாம் என்பதை அனுமானமும் செய்திருக்கிறேன். (வெறி கிறி என்றெல்லாம் எழுதியது அதற்காகவும் + பின் சாரதாதனயரின் பார்வையைப் புரிந்துகொள்வதற்காகவும்)
ஆனால் அவருக்கு விஷயங்கள் வரவர அவற்றின்மேல் தன்னுடைய மேலான கருத்துகள் சொல்லிக்கொண்டே போகவேண்டிய அவசியமிருப்பதையும் உணர்கிறேன். வேகமய்யா வேகம்! ஸ்டாலின் (ஒரிஜினல்) குசுவைப் பலூனில் பிடித்தடக்கி அதனை வைத்து, ஸோஷலிஸ உச்சத்திற்கு ஃபேஸ்புக்கைக் கொண்டு செல்லவேண்டும்… புரிகிறது.
1. இக்கட்டுரையின் இரண்டாவது பாகமும் வருகிறது.
2. பெரியவர் ஒரு விஷயத்தைத் தவிர பிறவற்றில் தரவுகளின் படி பேசுபவரல்ல.
3. பிராம்மணர்களில் (எந்த ஜாதியிலுமே) தர்க்கமற்றுப் பேசுபவர்களும் தர்க்கரீதியாகப் பேசுபவர்களும், அயோக்கியர்களும் அற்புதமானவர்களும், பொதுவாக நிசப்த ‘நமக்கெதுக்கு வம்பு’ என்ற ஸாத்வீகி மனப்பான்மையாலும், அல்லது ‘deer in the headlights’ விளைவின் காரணமாகவும் அமைதியாக இருக்கிறார்கள். அதற்காக அனைவரையும் மோசம் என்று சொல்லமாட்டேன். ற்றொம்ப நல்லவர்கள் என்றும் சொல்லமாட்டேன். எந்த ஜாதியிலுமே மதப்பிரிவிலுமே இத் உண்மை. உங்களை எனக்குப் பிடிக்காது என்பதால் (உங்கள் ஜாதி எனக்குத் தெரியாது, அப்படித் தெரிந்திருந்தாலும்) உங்கள் ஜாதிப்பெயரைக் கூறித் திட்டமாட்டேன். (அவர் அப்படிச் செய்கிறார், ஆனால் அது அவர் கருத்து; செய்யப்பட்டது, அடாவடி பொதுமைப்படுத்துதல்)
என்னைப் பொறுத்தவரை யார் எந்தப் பின்புலம் என்றெல்லாம் பார்த்து ‘பாதுகாப்பாக’ பேசவராது. எளியோரை மட்டும் சொகுசாக இலத்தலும் முடியாது. (ஆனால் எவ்வளவு நாட்களுக்கு இப்படி என்பதையும் பார்க்கவேண்டும்)
4. நான் ஜாதிகள் எனும் பகுப்பை ஹிந்தவ சமுதாயத்தின் முக்கிய அங்கமாகவும் உயிரியல்/சமூகப் பரிணாம அமைப்பாகவும் பார்க்கிறேன். எல்லா மானுடச் சிருஷ்டிகளிலும் இருக்கும் சிடுக்கல்களும் மேன்மைகளும் இவற்றிலும் உண்டு. அபிமானம் வேறு, நுரைதள்ளும் வெறி வேறு என்பதையும் உணர்ந்திருக்கிறேன்.
5. பாவப்ரகாஷனத்தை – துளிக்கூடப் படிக்காமல் (அவர் அதற்கான பெயரளவு ‘அறிமுக’த்தையே ஷெல்டனாரிடமிருந்துதான் பெற்றுக் கொண்டிருக்கவேண்டும்), பின்புலத்தையும் பாடுபொருளையும் அறிந்துகொள்ளாமல், குறிப்பிட்ட விஷயங்கள் எங்கு வருகின்றன என்றுகூடத் தெரியாமல்தான் அட்ச்சிவுட்டிருக்கிறார். பெரியவர் தகுதிக்கும் ஆகிருதிக்கும் இதெல்லாம் தேவையே இல்லை என்பது என் கருத்து.
அறச்சீற்றம் எனச் சீறவேண்டுமானால், ஒருவருக்கு அடிப்படை அறம் வேண்டும். கொஞ்சமாவது வேண்டும். ஆனால் ‘லைக்’ வாங்க அல்லது ‘போடப்பட’ இவையெல்லாம் தேவையில்லை என்பதும் சரியே.
6. சான்றோர்களின் சிலபல விஷயங்களை லூஸ்லவுடவேண்டும் எனக்கருதுபவன் நான். (ஏன் எனக் கொஞ்சம் கோடி காட்டியிருக்கிறேன்)
ஆகவே பெரியவரையும் விடலாம் என்றால்… … (நான் ஊழியோ கல்கியோ விகடனோ நக்கீரனோ இல்லையென்றாலும்…)
நன்றி.
22/09/2019 at 11:54
Ye repeat offender:
/என்னைப் பொறுத்தவரை யார் எந்தப் பின்புலம் என்றெல்லாம் பார்த்து ‘பாதுகாப்பாக’ பேசவராது/
தங்களைப் பொறுத்தவருக்குக் கூட எதுவும் concessionம் கிடையாதுங்களா?
ஒரே வரியில் பூர்வ’க்குப்பின் ‘அப்படியே சாப்பிடு’றீங்க, குறைந்த’க்குப் பின் ‘ஒரீஇ’ட்றீங்க. ஏன்?
22/09/2019 at 17:42
தவருகளைத் திருத்திக்கொல்கிரென். நன்ரீ. பொருத்துக் கொல்லுங்கல்.
21/09/2019 at 01:22
அன்பு ஐயா
தற்போதுள்ள தரமற்ற தமிழ் வெறியர்களை போலவே பல சமஸ்கிருத வெறியர்கள் இருந்தனர்/இருக்கின்றனர்
இக் கருத்தை ஒப்புக் கொள்கிறிர்களா அல்லது மறுக்கின்றிர்களா
21/09/2019 at 06:50
(ஒரு மாதிரி) ஆம். விரிவாக விடை கொடுக்கிறேன்.
கேட்டதற்கு நன்றி.
10/10/2019 at 01:47
தேவநாகரி லிபியில் பார்க்கும் வரை அது என்ன பாவப்ரகாஷனம்? ஏதாவது பாவம் செய்தவர்கள் செய்யும் ப்ராயச்சித்தமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். :)..
10/10/2019 at 05:32
ஹ்ம்ம். :-(
என்ன செய்வது, நம் தமிழ் மொழியின் கொடூரப் பிரச்சினைகள் பலப்பல, இதில் எல்லாவற்றையும் முந்திக்கொண்டு இருப்பது திராவிடம்.
பிற பிரச்சினைகளில் ஒன்றுதான் இந்த உச்சரிப்பு வரிவடிவம்/சின்னம்/அடையாளம் என்பதில் உள்ள தேவையற்ற சிடுக்கல். இதனால் இதைப் பேசுபவர்களுக்கும் பிரச்சினை, கற்றுக்கொள்பவர்களுக்கு பெரும் இடியாப்பச் சிக்கல்கள் வேறு!
இந்த ஒரு காரணத்துக்காகவே, நம் வரிவடிவத்தை நாகரி வரிவடிவ வழித்தோன்றல் ஒன்றுக்கோ, இல்லை ஆங்கில/ரோம/மசுர் வரிவடிவத்துக்கோ மாற்ற வேண்டும். (ஜெயமோகனின், நான் வரவேற்கும் ஆஹா சொல்லும், பரிந்துரைகளில் இதுவும் ஒன்று)
10/10/2019 at 22:03
வேறு வரிவடிவம் வந்தால் அடுத்த தலைமுறைக்கு அனைத்து இலக்கியத்தையும் “Transliterate” செய்ய வேண்டிய தலைவலி இருக்கும். தமிழின் ‘ழ’ கரம் – “zh” என்று எழுதப்படும். ஒலி வடிவமும் வரி வடிவமும் மாறி விடும்.
இதற்கு பதிலாக :
1. LIFCO பதிப்பக ஸ்லோக நூல்கள் போல 1,2,3,4 என்று எண்கள் கொடுக்கலாம்.
2. ஷ, க்ஷ, ஜ போல ஏதேனும் வேறு எழுத்தை இறக்குமதி செய்யலாம்.
3. எழுத்தின் கீழே புள்ளி , மேலே பிறை என்று ஏதாவது diacritical mark சேர்த்து எழுதலாம்.
11/10/2019 at 06:22
ஐயா,
1. தமிழில், அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவேண்டியவை எனக் குவியல் குவியலாக இல்லை. (சாரு எஸ்ரா உட்பட அனைத்துக் குப்பைகளையும், குறுந்தொகை போன்ற பெருமை மிக்கவைகளையும் ஒன்று சேர்த்தால்கூட! கடந்த 40-50 ஆண்டுகளை ஒதுக்கித் தள்ளினால், இந்த எண்ணிக்கை இன்னமும் ஏகத்துக்கும் குறைந்துவிடும்!) – ஆகவே இது பிரச்சினை இல்லை. ஆட்டோமேட் செய்யலாம் என்பதும் ஒரு வசதி.
2. இது அரசியல் தோய்க்கப்பட்ட விஷயம். உணர்ச்சிக் குவியல்; ஜெர்மனியில்கூட கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குமுன் இது நடந்ததே என்றால் கேட்கமாட்டார்கள்; ஆனால் உங்கள் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்.நன்றி.